கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021) பயிற்சியில் பங்கேற்க EMIS Websiteல் ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள்(Self Registration Process)...



 HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021) பயிற்சியில் பங்கேற்க EMIS Websiteல் ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள்(Self Registration Process)...


ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்க EMISல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும்...


அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு : 

* Android கைப்பேசியில் TN EMIS App யினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 


* TN EMIS App யில் Teacher ID ( 8 digit ) மற்றும் password யினை பயன்படுத்தி login செய்ய வேண்டும் . Password: EMIS யில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியின் முதல் நான்கு இலக்கங்கள் @ பிறந்த வருடம்.


* Login செய்ததும் click Teacher Training Module  Select training யினை Click செய்யவும். அதில் தற்பொழுது கலந்துக் கொள்ளும் பயிற்சியின் தலைப்பினை ( ICT Training ) தெரிவு ( Select ) செய்ய வேண்டும்.


* பின்பு பயிற்சி மையத்தினை ( Training venue ) Click செய்யவும் . ஒன்றியத்திலுள்ள ( Block ) அனைத்து உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் உள்ள ( Hi - Tech Lab ) பள்ளியின் பெயர்கள் காட்சிபடுத்தப்படும் . அதில் பயிற்சியில் கலந்துக் கொள்ள தங்கள் பள்ளி மையமாக இருப்பின் அப்பள்ளியினை தெரிவு ( select ) செய்து submit / save செய்ய வேண்டும் . தங்கள் பள்ளி பயிற்சி மையமாக இல்லை எனில் அருகிலுள்ள பள்ளியின் பெயரை தெரிவு ( select ) செய்து submit / save செய்ய வேண்டும்.


 * அவ்வாறு submit /save செய்யும் பொழுது அம்மையத்தில் பயிற்சியில் கலந்துக் கொள்ள காலியிடம் இருக்கும் பட்சத்தில் Registered successfully என காண்பிக்கப்படும்.


* இவ்வாறு ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையங்களை தெரிவு செய்து வரும் பொழுது அம்மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரும்.


 * எனவே ஆசிரியர்கள் login செய்யும் பொழுது உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலியாக இருக்கும் பயிற்சி மையங்களின் பெயர் மட்டுமே காண்பிக்கப்படும்.


>>> இந்த தகவலை PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இன்றைய (21-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 21, 2021



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய எண்ணங்கள் மற்றும் இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். முயற்சிக்கேற்ற அங்கீகாரங்களும், பாராட்டுகளும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : லாபம் அதிகரிக்கும்.


கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 21, 2021



குடும்ப பிரச்சனைகளில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : நிதானம் வேண்டும்.


ரோகிணி : திருப்தியான நாள்.


மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 21, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். வியாபாரம் தொடர்பான எண்ணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


திருவாதிரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : மாற்றமான நாள்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 21, 2021



மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.


பூசம் : முன்னேற்றமான நாள்.


ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 21, 2021



தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், விடுதலையும் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றியும், உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மகம் : முயற்சிகள் ஈடேறும்.


பூரம் : தீர்வு கிடைக்கும்.


உத்திரம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 21, 2021



நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குழந்தைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



உத்திரம் : மனம் மகிழ்வீர்கள்.


அஸ்தம் : முன்னேற்றமான நாள்.


சித்திரை : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 21, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய செயல்திட்டங்களை அமைத்து அதை செயல்வடிவில் மாற்றுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



சித்திரை : மனவருத்தங்கள் நீங்கும்.


சுவாதி : சாதகமான நாள்.


விசாகம் : மந்தநிலை நீங்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 21, 2021



கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் விருப்பங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அனுஷம் : திருப்தியான நாள்.


கேட்டை : விருப்பங்கள் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 21, 2021



மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. மற்றவர்களின் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 21, 2021



நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எண்ணிய காரியங்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


திருவோணம் : விழிப்புணர்வு வேண்டும்.


அவிட்டம் : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 21, 2021



கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் புரிதலும், தெளிவும் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் மேம்படும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : தெளிவு பிறக்கும்.


சதயம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.


பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 21, 2021



கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புத்துணர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 



பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.


ரேவதி : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

---------------------------------------


கியூசெட்(CUSET 2021) நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு – செப்டம்பர் 17,18 தேதிகளில் தேர்வு...

 


நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழங்க நடத்தப்படும் “கியூசெட்” நுழைவு தேர்வு தமிழக மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கியூசெட் நுழைவு தேர்வு:

மத்திய அரசு சார்பில் தமிழகம், கேரளா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கியூசெட் என்ற மத்திய பல்கலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



>>> திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு (Common Entrance Test) குறித்த அறிவிக்கை வெளியீடு...


மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...

 மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 


ஒன்றை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திடீரென பள்ளிக்கு செல்வதால் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 


மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



1-12 வகுப்புகளுக்கான சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான(Minority Language Subjets) குறைக்கப்பட்ட பாடத்திட்டம்(Reduced Syllabus)...



 1-12 வகுப்புகளுக்கான சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...


>>> Click here to Download Urdu Prioritized Syllabus - PDF...


>>> Click here to Download Arbic Prioritized Syllabus - PDF...

நியாயவிலைக் கடைகளில்(Ration Shop) பொருட்கள் வாங்க சிரமப்படுவோர், வேறொரு நபர் வாயிலாக வாங்குவதற்கான அங்கீகார படிவம்(Authorization Format)...



 ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சிரமப்படுவோர், வேறொரு நபர் வாயிலாக வாங்குவதற்கான அங்கீகார படிவத்தை, உணவு வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், கடைக்கு செல்ல முடியாத நிலையில், தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பி, பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.


இதற்கு, கார்டுதாரர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ரேஷன் கடையில் வழங்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை ஊழியர்கள் பணத்திற்கு விற்பதாகவும், வட்ட வழங்கல் அதிகாரிகள் ஒப்புதல் தர தாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுகின்றன.


உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள், அதற்கான அங்கீகார சான்று ஒப்புதல் படிவத்தை, 'www.tnpds.gov.in' என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த படிவத்தை உரிய முறையில் சரிபார்த்து, விரைந்து ஒப்புதல் தர, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


>>> அங்கீகார சான்று ஒப்புதல் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மகப்பேறு விடுப்பு(Maternity Leave) அனுமதிக்கும் பொழுது பாரபட்சம் கூடாது - உயர்நீதிமன்றம்...

 மகப்பேறு விடுப்பு அனுமதிக்கும் பொழுது பாரபட்சம் கூடாது - உயர்நீதிமன்றம்...


மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது-தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.


பணிவரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், பணிவரன்முறைப் படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்ட கூடாது.


அனைவருக்கும் ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...