கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நவம்பர் 13, 14, 27, 28ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் - தேர்தல் ஆணையம் (Special camp to Correct Voters List on November 13, 14, 27, 28 - Election Commission)...

 நவம்பர் 13, 14, 27, 28ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் - தேர்தல் ஆணையம் (Special camp to Correct Voters List on November 13, 14, 27, 28 - Election Commission)...


ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் ஆணையம்...




EMIS - Category wise Check List...




>>> Click here to Download EMIS - Category wise Check List...

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் (Illam Thedi Kalvi Scheme) குறித்து தமிழ்நாடு முதல்வர் அவர்கள் விளக்கம்...

 இல்லம் தேடிக் கல்வித் திட்டம் (Illam Thedi Kalvi Scheme) குறித்து தமிழ்நாடு முதல்வர் அவர்கள் விளக்கம்...


அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதி -முதல்வர்


மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை -முதல்வர்



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-10-2021 - வெள்ளி - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.10.21

  திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்: அரசியல்


அதிகாரம் 45:பெரியாரைத் துணைக் கோடல்.


குறள் எண் : 450


குறள்:

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.


பொருள் :

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.


பழமொழி :

Change is the law of nature.

 மாற்றமே இயற்கையின் நியதி.



இரண்டொழுக்க பண்புகள் :


1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 


2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்


பொன்மொழி :


அகங்காரம் மக்களின் உள்ளத்தில் பலவித அழகிய மாயத் தோற்றங்களை உருவாக்கும். ஆகவே அகங்காரத்தை தவிர்த்து வாழ்வது தான் சான்றோர் இயல்பு.....ரமண மகரிஷி



பொது அறிவு :


1.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் உள்ளன? 


மூன்று. 


2.சர்வதேச உணவுப்பொருள் எது? 


முட்டைகோஸ்


English words & meanings :


Hit the books - study hard, 


feel blue - feeling sad

ஆரோக்ய வாழ்வு :


ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள்


எதைச் சாப்பிட்டு எதைத் தவிர்க்க வேண்டும்?

1. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.


2. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.


3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.


4. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.


5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.


6. உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.


7. உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.


8. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.


9. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.


10. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.


11. காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.


12. அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.


13. பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.


14. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.


15. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.


16. மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.


கணினி யுகம் :


Shift + H - Add rhomb, 


Shift + T - Add text



நீதிக்கதை


அம்மா சொல் கேள்!


ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். 


புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது. 


வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. 


ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. 


சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. 


உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது. 


நீதி :

அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.



இன்றைய செய்திகள்


29.10.21


★8-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.


★அரசுப் பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என, முதல்வர்  அறிவித்துள்ளார்.


★இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுக்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணையவழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் நிகழ்வை தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.


★கிராமப்புற மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு அளிப்பதற்கான பிரச்சார ஊர்தியின் பயணம் தொடக்கம்: திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு ஏற்பாடு.


★மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.


★4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு, பி.எட். படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு அவசியம்.


★மீண்டும் லாக்டவுன்: ரஷ்யாவை உலுக்கும் கரோனாவால் மாஸ்கோவில் கடும் கட்டுப்பாடு.


★வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் 2025-ம் ஆண்டு வரை மக்கள் குறைவாக உணவு சாப்பிட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


★நீரஜ் சோப்ரா, மிதாலிராஜ், சுனில் சேத்ரி உள்பட 11 பேருக்கு கேல்ரத்னா விருது வழங்கும்படி விருது கமிட்டி விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.


★பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் லட்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.






Today's Headlines


🌸Hall tickets for 8th class individual selectors are released today.


 🌸  Chief Minister has announced that the government will pay the tuition fees for Arunkumar, a  government school student and got selected in the IIT entrance examination.


 🌸 The Minister of Tamil Nadu School Education yesterday launched the 'Clean Health' e-Health Awareness Series organized by the "Hindu Tamil Direction daily." 


 🌸 Launch of the campaign vehicle to provide legal awareness to the rural people: Organized by the Tiruvallur District Legal Services Commission.


 🌸 The Supreme Court has quashed the ban imposed by the Mumbai High Court, allowing the National Examinations Agency to publish the results of the undergraduate NEET examination across the country.


 🌸 Undergraduate degree in 4 years with B.Ed.  The Central Ministry of Education will introduce an integrated teacher education program from the next academic year.  A national-level entrance examination is required to join this course.


 🌸 Lockdown again: Tight control in Moscow due to the outburst of Corona in Russia, which was shaken by this deadly virus. 


 🌸 North Korea's government has ordered people to eat less until 2025 as food shortages loom large.


 🌸 The award committee has recommended to the Sports Ministry that to give Kelratna award to 11 persons including Neeraj Chopra, Mithaliraj, and Sunil Chhetri.


🌸 Indian player Lakshya Sen has advanced to the next round of the French Open badminton men's singles tournament.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ₹.15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் (Employee Co-operative Credit and Thrift Monetary Societies raising the personal Loan ceiling to ₹ 15 lakhs - Letter of Registrar of Co-operative Societies ) ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...

 


பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை  ₹.15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் (Employee Co-operative Credit and Thrift Monetary Societies raising the personal Loan ceiling to ₹ 15 lakhs -  Letter of Registrar of Co-operative Societies ) ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...


>>> கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...

01.08.2021 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் நிர்ணயம் - EMIS Portal -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 039965/டபிள்யு2/இ3/2021, நாள்: 25-10-2021...



 01.08.2021 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் நிர்ணயம் - EMIS Portal -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 039965/டபிள்யு2/இ3/2021, நாள்: 25-10-2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 039965/டபிள்யு2/இ3/2021, நாள்: 25-10-2021...


இன்றைய (28-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 28, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும், கலகலப்பான சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். இன்பமான நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் :  4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



அஸ்வினி :  கலகலப்பான நாள்.


பரணி :  எண்ணங்கள் மேம்படும்.


கிருத்திகை :  ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 28, 2021



சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கம்பீரமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை :  மேன்மை உண்டாகும்.


ரோகிணி :  ஒத்துழைப்பு கிடைக்கும்.


மிருகசீரிஷம் :  இழுபறிகள் குறையும்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 28, 2021



வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான அணிகலன்கள் செய்வது மற்றும் அது தொடர்பான விருப்பங்கள் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மைகள் ஏற்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : விருப்பங்கள் மேம்படும்.


திருவாதிரை :  ஏற்ற, இறக்கமான நாள்.


புனர்பூசம் :  பயணங்கள் கைகூடும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 28, 2021



இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வுகளும், காலதாமதமும் உண்டாகும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் :  வாய்ப்புகள் கிடைக்கும்.


பூசம் :  புரிதல் மேம்படும்.


ஆயில்யம் :  கருத்துக்களில் கவனம் வேண்டும்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 28, 2021



உடனிருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் சிறு சிறு ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மறதி உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் :  அனுகூலமான நாள்.


பூரம் :  பொறுப்புகள் குறையும்.


உத்திரம் :  வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 28, 2021



சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் திடீர் மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உயர்வு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : அபிவிருத்தியான நாள்.


அஸ்தம் :  பிரச்சனைகள் குறையும்.


சித்திரை :  ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 28, 2021



வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புத்திரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : லாபகரமான நாள்.


சுவாதி :  சுபச்செய்திகள் கிடைக்கும்.


விசாகம் :  இழுபறிகள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

அக்டோபர் 28, 2021



திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். உறவினர்களின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 



விசாகம் :  திருப்தியான நாள்.


அனுஷம் :  மேன்மை உண்டாகும்.


கேட்டை :  மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 28, 2021



எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சோர்வான நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : விரயங்கள் உண்டாகும்.


பூராடம் :  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.


உத்திராடம் :  முதலீடுகளை தவிர்க்கவும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 28, 2021



மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிக்கல்கள் நீங்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.


திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அவிட்டம் :  ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 28, 2021



மனதில் நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவுகளை எடுக்கவும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து சிந்தித்து செயல்படுதல் நன்மையளிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். புரிதல் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு 



அவிட்டம் :  ஆலோசனைகள் வேண்டும்.


சதயம் :  சிந்தித்து செயல்படவும்.


பூரட்டாதி :  பொறுப்புகள் குறையும்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 28, 2021



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான செயல்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அமைதி பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.


உத்திரட்டாதி :  புரிதல் ஏற்படும்.


ரேவதி :  பிரார்த்தனைகள் நிறைவேறும்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...