கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோயம்புத்தூர் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு 22-04-2022 மற்றும் 23-04-2022 தேதிகளில் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் கடிதம் ( Coimbatore Zonal wise review meeting - to be held for Erode, Karur, Coimbatore, Nilgiris and Tirupur districts on 22-04-2022 and 23-04-2022 - Proceedings letter of the Commissioner of School Education) ந.க.எண்: 59699/ பிடி1/ இ1/ 2021, நாள்: 11-04-2022...



>>> கோயம்புத்தூர் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு 22-04-2022 மற்றும் 23-04-2022 தேதிகளில் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் கடிதம் ( Coimbatore Zonal wise review meeting - to be held for Erode, Karur, Coimbatore, Nilgiris and Tirupur districts on 22-04-2022 and 23-04-2022 - Proceedings letter of the Commissioner of School Education) ந.க.எண்: 59699/ பிடி1/ இ1/ 2021, நாள்: 11-04-2022...

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 15 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களில் முதற்கட்டமாக 9,494 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்(9,494 teachers to be recruited in the first phase out of 15,000 vacant government school teacher posts in Tamil Nadu - Minister Anbil Mahesh Poyyamozhi)...

 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 15 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களில் முதற்கட்டமாக 9,494 ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.





>>> பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2022-2023 - மானியக் கோரிக்கை எண்: 43 - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...



>>> பள்ளிக்கல்வித்துறை -  மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023...



இன்றைய (12-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஏப்ரல் 12, 2022




குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். 


பரணி : லாபம் மேம்படும். 


கிருத்திகை : சுறுசுறுப்பான நாள். 

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 12, 2022




நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உறவினர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். அறிமுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : இன்னல்கள் குறையும். 


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 12, 2022




மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இன்னல்கள் குறையும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும். 


திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும். 


புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 12, 2022




புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தனவரவு எதிர்பார்த்த அளவில் இருந்தாலும் அதற்கேற்ற செலவும் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான விளைச்சலில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். மாற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். 


பூசம் : விரயம் உண்டாகும். 


ஆயில்யம் : ஆலோசனை வேண்டும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 12, 2022




உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 12, 2022




உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் கிடைக்கும். போட்டி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.  கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



உத்திரம் : முன்னேற்றமான நாள். 


அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.


சித்திரை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 12, 2022




மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். சிக்கல் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


சுவாதி : தீர்வு கிடைக்கும். 


விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஏப்ரல் 12, 2022




அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவி சாதகமாக அமையும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புரிதலை ஏற்படுத்தும். தொழில் சார்ந்த கருவிகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : உதவி கிடைக்கும். 


அனுஷம் : புரிதல் உண்டாகும். 


கேட்டை : மாற்றமான நாள். 

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 12, 2022




புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மூலம் : ஆதரவு கிடைக்கும். 


பூராடம் : முன்னேற்றமான நாள். 


உத்திராடம் : ஆசைகள் பிறக்கும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 12, 2022




எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். தொழில் நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவி காலதாமதமாகவே கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



உத்திராடம் : செலவுகள் ஏற்படும்.


திருவோணம் : ரகசியங்களை தவிர்க்கவும்.


அவிட்டம் : தாமதமான நாள். 

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 12, 2022




உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களின் உதவியால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : ஆதரவான நாள். 


சதயம் : இழுபறிகள் குறையும்.


பூரட்டாதி : ஆர்வமான நாள். 

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 12, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத திடீர் தனவரவு சிலருக்கு கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 


உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.


ரேவதி : மேன்மை உண்டாகும்.

--------------------------------------

பத்தாம் வகுப்பு - அறிவியல் - அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டி கையேடுகள் (10th Standard - Science - Guidebooks to Get Higher Marks )...



 பத்தாம் வகுப்பு - அறிவியல் - அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டி கையேடுகள் (10th Standard - Science - Guidebooks to Get Higher Marks )...


>>> சிவகங்கை மாவட்டம்...


>>> தஞ்சாவூர் மாவட்டம்...


>>> ஒரு மதிப்பெண் வினா விடைகள் தொகுப்பு (பாடங்களின் பின்புற வினாக்கள்)...


>>> Dixdar Guide...



பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023 (School Education Department - Grants Request No: 43 - New Announcements 2022-2023)...

 


>>> பள்ளிக்கல்வித்துறை -  மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023 (School Education Department - Grants Request No: 43 - New Announcements 2022-2023)...


பள்ளி கல்வித் துறை புதிய அறிவிப்புகள்:

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது, 47 லட்சத்தில் இருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது.

6 லட்சம் பேர் கூடுதலாக அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்; 

மாணவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 4.8 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க 9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம்.

அரசுப் பள்ளிகளில் ரூ.25 லட்சம் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்; 

பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோர் கூட்டம்.

கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை;

15 லட்சம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் 56.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 

அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.

பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2022-2023 - மானியக் கோரிக்கை எண்: 43 - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (School Education Department - Policy note 2022-2023 - Grant request number: 43 - Minister Anbil Mahesh Poyyamozhi)...

 


>>> பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2022-2023 - மானியக் கோரிக்கை எண்: 43 - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (School Education Department - Policy note 2022-2023 - Grant request number: 43 - Minister Anbil Mahesh Poyyamozhi)...


பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்...
➖➖➖➖➖➖➖➖➖
🎯1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது

🎯100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்

🎯9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%

🎯11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% - 

🎯பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை

🎯அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் - 

🎯பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை (16-04-2022) அரசு விடுமுறை அறிவிப்பு -Government holiday announcement for all schools in Tamil Nadu next Saturday (16-04-2022) ...

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை.


தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து 16-ம் தேதியும் விடுமுறை.



18 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - தமிழக அரசு.









இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள...