கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி நியமனத்தில் முறைகேடு விவகாரம் - பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 254 பேர் பணி நீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - நாளிதழ் செய்தி (Appointment malpractice issue - 254 Assistant Professors of Pachaiyappan College dismissed by Madras High Court - Daily News)...



 பணி நியமனத்தில் முறைகேடு விவகாரம் - பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 254 பேர் பணி நீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - நாளிதழ் செய்தி (Appointment malpractice issue - 254 Assistant Professors of Pachaiyappan College dismissed by Madras High Court - Daily News)...


பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்...


2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.


பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெறவில்லை எனக்கூறி, 152 பேருக்கும் அறக்கட்டளையை நிர்வகித்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார்.


மேலும், உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ஆர்.பிரேமலதா, எஸ்.சாந்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வக்கீல் ரவிச்சந்தர், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வக்கீல் எம்.பழனிமுத்து, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சந்திரசேகர், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் திலகவதி, வக்கீல்கள் எம்.ரவி, ஜி.சங்கரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.


இதையடுத்து, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும். இவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.



இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனர், 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் பணி அனுபவத்துக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ''தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது. உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த பதவிக்கான தேர்வும், அதை தொடர்ந்த நடந்த நியமனமும் செல்லாது" என்று கூறியுள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசுப் பணியாளர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி பஞ்சாப் மாநில அரசு நிதித்துறை அறிவிப்பு வெளியீடு, நாள்: 18-11-2022 (Punjab State Government Finance Department Notification Dated: 18-11-2022 to cancel CPS scheme for Government Employees and implement Old Pension Scheme)...



>>> அரசுப் பணியாளர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி பஞ்சாப் மாநில அரசு நிதித்துறை அறிவிப்பு வெளியீடு, நாள்: 18-11-2022 (Punjab State Government Finance Department Notification Dated: 18-11-2022 to cancel CPS scheme for Government Employees and implement Old Pension Scheme)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



19-11-2022 காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்பட்டன - செய்தி வெளியீடு எண்: 2078, நாள்: 19-11-2022 (Very Heavy Rain Warning issued by Department of Revenue and Disaster Management withdrawn - Press Release No: 2078, Dated: 19-11-2022)...


>>> 19-11-2022 காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்பட்டன - செய்தி வெளியீடு எண்: 2078, நாள்: 19-11-2022 (Very Heavy Rain Warning issued by Department of Revenue and Disaster Management withdrawn - Press Release No: 2078, Dated: 19-11-2022)...



>>> 19-11-2022 காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் (Very Heavy Rain Warning issued by Department of Revenue and Disaster Management)...



>>> மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் - செய்தி வெளியீடு எண்: 2077, நாள்: 19-11-2022 (Very Heavy Rain Warning - Press Release No: 2077, Dated: 19-11-2022)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாளில் கணக்கு பாடத்திலிருந்து கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் உத்தேச விடைகள் (Maths Related Questions in TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...

 



தனியார் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்...


5% விடை மாற்றங்கள் இருக்கலாம்...


>>> 19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாளில் கணக்கு பாடத்திலிருந்து கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் உத்தேச விடைகள் (Maths Related Questions in TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...



>>> 19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு முழுமையான வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (20-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 20, 2022



கல்வி சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். சுபச்செய்திகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




அஸ்வினி : சாதகமான நாள்.


பரணி : மாற்றம் உண்டாகும். 


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 20, 2022



சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை உண்டாகும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.


ரோகிணி : மாற்றமான நாள்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 20, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் தனவரவு மேம்படும். தந்தையை பற்றிய சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் வித்தியாசமான அணுகுமுறைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும். 


திருவாதிரை : தனவரவு மேம்படும்.


புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 20, 2022



நெருங்கிய நண்பர்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் அமையும். நரம்பு தொடர்பான இன்னல்கள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : தடுமாற்றம் உண்டாகும். 


ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 20, 2022



எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகமான செயல்பாடுகளால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். வெளிவட்டாரங்களில் நட்பு அதிகரிக்கும். பணி சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : நட்பு அதிகரிக்கும். 


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 20, 2022



உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். செய்தொழிலில் மேன்மைக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. மனதில் துறை சார்ந்த புதிய தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில செயல்பாடுகளால் திருப்பம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5 


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சித்திரை : திருப்பம் உண்டாகும். 

---------------------------------------



துலாம்

நவம்பர் 20, 2022



சிகை அலங்கார பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். முதலீடு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


சுவாதி : சிந்தித்து செயல்படவும். 


விசாகம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 20, 2022



சமூக பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். உள்ளுணர்வு சார்ந்த சிந்தனைகளின் மூலம் புதிய முடிவு எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழல் அமையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு உயர் பொறுப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும். 


அனுஷம் : லாபகரமான நாள்.


கேட்டை : பொறுப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 20, 2022



வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் அமையும். உங்களின் மீதான கருத்துக்களில் மாற்றம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். மறைமுகமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு தொடர்பான சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : உழைப்பு அதிகரிக்கும். 


பூராடம் : மாற்றமான நாள். 


உத்திராடம் : ஆதாயம் ஏற்படும். 

---------------------------------------



மகரம்

நவம்பர் 20, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6 


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும். 


திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.


அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும். 

---------------------------------------



கும்பம்

நவம்பர் 20, 2022



கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பகைமையை தவிர்க்க முடியும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




அவிட்டம் : சிந்தித்து செயல்படவும். 


சதயம் : ஏற்ற, இறக்கமான நாள். 


பூரட்டாதி : விவேகம் வேண்டும்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 20, 2022



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...



தனியார் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்...


5% விடை மாற்றங்கள் இருக்கலாம்...


>>> 19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தானியங்கள் சேமிப்பு முறை (Grains storage Procedure @ Belapu Hosamane)...

 


>>> தானியங்கள் சேமிப்பு முறை (Grains storage Procedure @ Belapu Hosamane)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...