கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (28-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 28, 2022



குழந்தைகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். பலவிதமான குழப்பங்களுக்கு முடிவு எடுப்பீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. நுணுக்கமான விஷயங்களை கற்று கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 




அஸ்வினி : முடிவு எடுப்பீர்கள். 


பரணி : சிந்தித்து செயல்படவும். 


கிருத்திகை : போட்டிகள் குறையும். 

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 28, 2022



வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய துறைகள் சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரோகிணி : முடிவு கிடைக்கும். 


மிருகசீரிஷம் : தேடல் அதிகரிக்கும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 28, 2022



முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. மனதில் நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மிருகசீரிஷம் : கருத்துக்களை தவிர்க்கவும்.


திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.


புனர்பூசம் : ஆர்வமின்மை உண்டாகும்.  

---------------------------------------



கடகம்

நவம்பர் 28, 2022



உடல் தோற்றப்பொலிவு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். வியாபாரம் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபகரமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும். 


பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.


ஆயில்யம் : லாபகரமான நாள்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 28, 2022



உத்தியோகத்தில் சக ஊழியர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : செல்வாக்கு அதிகரிக்கும். 


பூரம் : அனுகூலமான நாள்.


உத்திரம் : உதவி கிடைக்கும். 

---------------------------------------



கன்னி

நவம்பர் 28, 2022



புதிய முயற்சிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவுபெறும். செய்கின்ற செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூக வலைதளங்களில் புதிய வாய்ப்பும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




உத்திரம் : இழுபறிகள் குறையும். 


அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------



துலாம்

நவம்பர் 28, 2022



உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கற்றலில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். வெளியிலிருந்து வர வேண்டிய தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தனம் சார்ந்த செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




சித்திரை : பிரச்சனைகள் குறையும். 


சுவாதி : தனவரவு கிடைக்கும்.


விசாகம் : திருப்திகரமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 28, 2022



தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். சாதுர்யமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து முடிவெடுப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோகத்தில் உள்ள சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : நம்பிக்கை மேம்படும்.


கேட்டை : விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 28, 2022



அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வெளிநாடு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உங்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மூலம் : மந்தத்தன்மை குறையும். 


பூராடம் : ஆதாயம் அடைவீர்கள். 


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 28, 2022



உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மனதில் எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : துரிதம் உண்டாகும்.


திருவோணம் : பிரச்சனைகள் நீங்கும். 


அவிட்டம் : சோர்வு உண்டாகும். 

---------------------------------------



கும்பம்

நவம்பர் 28, 2022



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : எண்ணங்கள் கைகூடும். 


சதயம் : முன்னேற்றம் ஏற்படும். 


பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 28, 2022



உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.


ரேவதி : பிரச்சனைகள் குறையும்.

----


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2022 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்: இல்லறவியல் 


அதிகாரம்: மக்கட்பேறு 


குறள்: 69 


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாய். 


பொருள்: 

தன்மகன் ' சான்றோன் 'என பிறரால் பாராட்டப்படும் போது அவனை பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட கூடுதலான மகிழ்ச்சியை அந்தத்தாய் அடைவாள்.


பழமொழி :

chew your food well and live a long life.

நொறுங்க தின்றால் நூறு வயது வாழலாம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.


 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது. --நெல்சன் மண்டேலா.


பொது அறிவு :


1. வெண்மை புரட்சி எதைக் குறித்து உருவானது? 


பால் வளத்தைப் பெருக்குதல். 


2. நீலப் புரட்சி எதைக் குறித்து உருவானது? 


கடல் வளத்தைப் பெருக்குதல்.


English words & meanings :


buy - purchase. verb. வாங்குவது. வினைச் சொல். by - through. preposition.மூலமாக. முன்னிடை சொல். bye - goodbye. noun. விடை பெறுவது. all homonyms


ஆரோக்ய வாழ்வு :


ஆரஞ்சு வைட்டமின் சி இன் மிகவும் வளமான மூலமாகும். மேலும் இது இயற்கையாகவே கொழுப்பை எரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. வைட்டமின் சி உடலின் வளர்சிதை மாற்றம் நன்றாக செயல்பட உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கான சிறந்த பழமாக உள்ளது. அவை நீர்ச்சத்து அதிகம் மற்றும் உங்கள் ஒழுங்கற்ற பசி உணர்வை குறைக்க உதவும்.


NMMS Q


மஞ்சு 29 2 1984 இல் பிறந்துள்ளார் எனில் அவர் 2020 வரை எத்தனை பிறந்த நாள்களை கொண்டாடி இருப்பார்? 


விடை : 9 


விளக்கம்: 1984 முதல் 2020 வரை உள்ள லீப் வருடங்களை கணக்கில் கொண்டு கணக்கிடலாம்.


நீதிக்கதை


பொய்


மேட்டுக்குப்பம் என்ற ஊரில் சுதன் என்பவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள். தினந்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் அளிக்கிறேன் என்று பொய் சொல்லி காசுகளை வாங்குவான் சுதன். 


ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறு கூட போட மாட்டான். அன்னதானம் வாங்குவதற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஐயா! இப்பத்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள் வயிறார சாப்பிடலாம், என்று இனிமையாகப் பேசி அனுப்பிவிடுவான். 


பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். இவன் யாரையும் ஏமாற்றி விடுவான். சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன். சுதன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்று மகேன் சுதன் வீட்டிற்கு சென்றான். ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன், என்றான். 


ஆமாம், உண்மைதான். தினந்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர். ஆனால், உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை, நாளை வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் சென்ற சுதனிடம், யார் வந்தது? என்று மனைவி கேட்டாள். 


நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். நாளை வா! என்று சொல்லி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான், என்று சொல்லிச் சிரித்தான் சுதன். 


மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், கதவை திறந்தான். ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள், என்று சொல்லி அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான் மகேன். 


உள்ளே வந்த சுதன், மனைவியிடம், நேற்று வந்த வெளியூர்காரன் இன்று விடிகாலையிலேயே வந்து நம் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது, என்று கவலையுடன் சொன்னான். 


கவலை வேண்டாம், அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, என்று சொல்லி அனுப்பி வையுங்கள், என்றாள் அவள். மனைவி சொல்படி, பொழுது விடிந்ததும் மகேனிடம் சோகமான முகத்துடன் வந்த சுதன், என் மனைவிக்குக் காய்ச்சல் படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் சமைக்க முடியாது. நாளை வாருங்கள் கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம், என்றான். 


மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன், என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்று, சமைக்கத் தொடங்கினான். இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர். 


சிறிது நேரம் சென்றது. சுதனுக்கும், மனைவிக்கும் ஒரு யோசனை வந்தது அதன்படி, மகேன் சமையலை முடித்தான். அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழை இலைகளை அரிந்து எடுத்து வாரும், என்றான் சுதன். 


அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான். அவன் வருவதை இருவரும் பார்த்தனர். உரத்த குரலில் அவள், வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது என்று கோபத்துடன் கத்தினாள். நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன், என்று கத்தினான் சுதன். 


இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே பார்த்தனர். இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் அங்கே அவனைக் காணவில்லை. இவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம், என்றாள் சுதனின் மனைவி. 


இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், அவர்கள் முன் குதித்தான். தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்து, அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர். 


நீதி :

ஏமாற்றுபவர்கள் ஒருநாள் ஏமாறுவார்கள்.


இன்றைய செய்திகள்


28.11.22


* கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலையில் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை கண்டு  ரசித்தனர்.


* தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு  ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* அறிவியல் மனப்பான்மையை 6 முதல் 8 வரை உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் மேம்படுத்த 'வானவில் மன்றம்' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 


* மெரினாவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள

 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன நிரந்தர நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது


* ரயில் வேகத்தை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பம்: 2025-ல் அறிமுகம்- இந்திய ரயில்வே நிர்வாகம்   அறிவித்துள்ளது.


* புரோ கபடி லீக்கில் இன்று நடைபெறும் முக்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Today's Headlines


* Kanyakumari is crowded with tourists during the Sabarimala season.  In the morning they gathered on the beach and enjoyed the sunrise.


*  Chennai Meteorological Center has said that light to moderate rain may occur at a few places in Tamil Nadu from today for the next 3 days.


 * Rainbow forum' to develop scientific attitude among students in 6th to 8th government schools: Chief Minister M.K.Stalin inaugurates.


* A permanent footpath for the disabled is coming into use today Developed under the 'Singara Chennai 2.0' project at the Marina.


*  New technology to increase train speed: Introduction by 2025- Indian Railways has announced.


* Tamil Thalaivas will face Gujarat Giants in today's main match of the Pro Kabaddi League.


2021-22ஆம்‌ ஆண்டுக்காக புத்தாக்க அறிவியல்‌ ஆய்வு விருதுக்குத் ‌(INSPIRE MANAK AWARD) தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சிகள் இணைய வழியில் MANAK Competition APP மூலம் நடைபெறுதல் - செயல் இயக்குநர் அறிவிப்பு (District level exhibitions for students selected for INSPIRE MANAK AWARD for the year 2021-22 will be held online through MANAK Competition APP - Announcement by Executive Director)...


>>> 2021-22ஆம்‌ ஆண்டுக்காக புத்தாக்க அறிவியல்‌ ஆய்வு விருதுக்குத் ‌(INSPIRE MANAK AWARD) தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சிகள் இணைய வழியில் MANAK Competition APP மூலம் நடைபெறுதல் - செயல் இயக்குநர் அறிவிப்பு (District level exhibitions for students selected for INSPIRE MANAK AWARD for the year 2021-22 will be held online through MANAK Competition APP - Announcement by Executive Director)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 தமிழ்நாடு அறிவியல்‌ தொழில்‌ நுட்ப மையம்‌, சென்னை-25


2021-22ஆம்‌ ஆண்டுக்காக புத்தாக்க அறிவியல்‌ ஆய்வு விருதுக்குத் ‌(INSPIRE MANAK AWARD)  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல்‌ ஆய்வு விருதுக்கான மாவட்ட அளவிலான கண்காட்சிகள் ‌(DISTRICT LEVEL EXHIBITION AND PROJECT COMPETITION) நடத்தப்பட நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்‌ பட்டுள்ளது. அது குறித்து ஒன்றிய அரசின்‌ அறிவியல் ‌ தொழில்நுட்பத்‌ துறை (Department of Science and Technology)  மற்றும்‌ தேசிய புத்தாக்க நிறுவனம்‌(NIF INDIA) ஆகியவை அனுப்பிய சுற்றறிக்கையின்படி  மாவட்ட அளவிலான கண்காட்சிகள்‌ இணைய வழியில்‌ நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட அளவிலான கண்காட்சிகளை இணைய வழியில்‌ நடத்த தனிப்பட்ட கணினி அல்லது செல்பேசி மென்பொருள்‌ இப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. MANAK Competition APP  என்ற இதனை  Google Play Store மூலம்‌ பதிவிறக்கிக்‌ கொள்ளலாம்‌.


புத்தாக்க அறிவியல்‌ ஆய்வு விருதுக்குத்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்‌ (1506) மட்டுமே தங்களது அறிவியல்‌ காட்சிப்பொருள்‌ குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும்‌. அவர்கள்‌ விருதுக்கான குறியீட்டு எண்‌ (Award Code Number (எடு 2171713104433) ஒவ்வொரு மாணவருக்கான Used ID(Reference Code) ஆகும்‌. இந்த எண்ணைப்‌ பதிவிட்டு Get Password  என்பதை அழுத்தினால்‌ அவர்கள்‌ முன்னரே பதிவு செய்துள்ள செல்பேசி எண்ணுக்கு OTP வாயிலாகக்‌ கடவுச்‌சொல்‌ அனுப்பப்படும்‌.


இதற்கான வழிமுறைகள்‌ www.youtube.com/watch?v=vlleWTYBe8o என்ற காணொளி இணைப்பில்‌ வழங்கப்பட்டுள்ள. இணைப்பில்‌ குறிப்பிட்டுள்ளபடி மாவட்ட அளவில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்‌ தங்களுடைய அறிவியல்‌ செயல்முறைகளை ஒளி, ஒலி காட்சிகள்‌ மூலம்‌ தயாரித்து செல்பேசி அல்லது இணையதளம்‌ மூலமாக அனுப்ப வேண்டும்‌. காட்சிப்பொருள்‌ குறித்த விளக்கக் குறிப்பையும்‌ 1000 வார்த்தைகளுக்கு மிகாமல்‌ இணைக்க வேண்டும்‌.


இம்முறையில்‌ தமிழகத்திற்கான பதிவேற்றம்‌ செய்யும்‌ வாய்ப்பு 2022, டிசம்பர்‌ 4- ந்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன்‌ பின்‌ இணையம்‌ பதிவுகளை ஏற்காது. எனவே டிசம்பர்‌ 4-ந்தேதிக்குள்‌ பதிவுகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்‌.


23-11-2022                                    செயல்‌ இயக்குநர்‌



மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள வானவில் மன்றம் (STEM ON WHEELS - Vaanavil Mandram) தொடக்க விழாவினை நேரலையில்(Live) காண Link(Link to watch the opening ceremony of STEM ON WHEELS to be inaugurated by Hon'ble Chief Minister of Tamil Nadu)...

 


வானவில் மன்றம் தொடக்க விழா...


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில்  இணையுங்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த link-ஐ பகிருங்கள்.


https://linktr.ee/tnsedtraining


நாள் : 28.11.2022 | நேரம் : காலை 10.20  மணி |  இடம் : திருச்சி



>>> எளிய வழி அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் - 30 சோதனைகள் - PDF...



>>> வானவில் மன்றம் காணொளிகள் - அறிவியல் & கணிதம் -  பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...



>>> அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் (13210 பள்ளிகள்) 28-11-2022 திங்கள் 2மணிக்கு வானவில் மன்றம் தொடங்குதல் -  ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், STEM கருத்தாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே சரிபார்க்கலாம் - சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் மாணவர்கள்/கல்வி நிறுவனங்கள்/ நோடல் அதிகாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு (9th & 10th Standard Students only eligible under Pre Matric Scholarship Scheme - Important Notice for Students/institutes/Nodal Officers on Pre Matric Scheme of Ministry of Minority Affairs)...

 



>>> பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே சரிபார்க்கலாம் - சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் மாணவர்கள்/கல்வி நிறுவனங்கள்/ நோடல் அதிகாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு (9th & 10th Standard Students only eligible under Pre Matric Scholarship Scheme - Important Notice for Students/institutes/Nodal Officers on Pre Matric Scheme of Ministry of Minority Affairs)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அறிவிப்பு

கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) சட்டம், ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை) வழங்குவதை அரசு கட்டாயமாக்குகிறது. அதன்படி ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் மெட்ரிக்-க்கு முந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். அதேபோல் 2022-23 முதல், சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கவரேஜ் IX மற்றும் X வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை பெற இயலும். சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் IX மற்றும் X வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை மட்டும் இன்ஸ்டிடியூட் நோடல் அதிகாரி (INO)/மாவட்ட நோடல் அதிகாரி (DNO)/மாநில நோடல் அதிகாரி (SNO) சரிபார்க்கலாம்.

 ***


Important Notice for Students/institutes/Nodal Officers on Pre Matric Scheme of Ministry of Minority Affairs


N O T I C E

The Right to Education (RTE) Act, 2009 makes it obligatory for the Government to provide free and compulsory elementary education (classes I to VIII) to each and every child. Accordingly only students studying in classes IX and X are covered under the Pre-Matric Scholarship Scheme of Ministry of Social Justice & Empowerment and Ministry of Tribal Affairs. Likewise from 2022-23, the coverage under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs shall also be for classes IX and X only. The Institute Nodal Officer (INO)/District Nodal Officer (DNO)/State Nodal Officer (SNO) may accordingly verify applications only for classes IX and X under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs.

 ***


இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இட ஒதுக்கீடு நாயகன் வி.பி.சிங் - நினைவு தின சிறப்பு பகிர்வு (V.P.Singh - Hero of OBC Reservation - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)



 வரலாற்றில் இன்று - நவம்பர் 27 - "ஒரு தலைவன் இருந்தான்!" - வி.பி. சிங் ஏன் கொண்டாடப்படுகிறார்? - நினைவு தின சிறப்புப் பகிர்வு (Today in History - November 27 - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)...


வி.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்தது வெறும் 11 மாதங்கள் 8 நாள்கள் மட்டுமே. ஆனால், காலத்துக்கும் ஏன் அவர் நினைவுகூரப்படுகிறவராக இருக்கிறார்?


வி.பி.சிங் முதலமைச்சராக இருந்தபோது, தன் சொந்த மாநிலத்தில் கொள்ளைச் சம்பவங்களை ஒழிக்க முடியவில்லை என மனம் வருந்தி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர். இன்றைய சூழலில் அப்படியொரு முதலமைச்சரை நம்மால் கற்பனைசெய்து பார்க்க இயலுமா? 


முன்னர், ராஜீவ் காந்தி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், அப்போதைய பிரபலங்களான திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் ஆகியோர்மீது எழுந்த புகார்களுக்கு தைரியமாக நடவடிக்கை எடுத்தார். 


ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இந்தியா ஆயுதம் வாங்குவதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்கினார்கள் எனப் புகார் எழுந்தது. இச்செய்தி பரவலாக ஆரம்பித்தபோது, யாருடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக வி.பி.சிங் இருந்தாரோ, அதைப் பற்றி கவலைப்படாமல் விசாரணைக் கமிட்டிக்கு உத்தரவிட்டார். அதன் விளைவாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து வி.பி.சிங் நீக்கப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகூட அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதற்காகவெல்லாம் அவர் சோர்ந்துவிடவில்லை. 


காங்கிரஸுக்கு எதிராக தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டார். அப்போது, வலுவாக இருந்த காங்கிரஸை எதிர்க்க வேண்டுமென்றால், சில கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென முடிவுசெய்தார். அதன்படி ஜன் மோர்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை இணைத்து, 1988-ல் ஜனதா தளத்தை உருவாக்கினார். இந்தியா முழுக்க சுற்றுப்பயணம்செய்தார். 


1989-ல் மக்களவைத் தேர்தல் நடக்க இருந்தது. தமிழ்நாட்டுக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார், வி.பி.சிங். தி.மு.க, ஜனதா தளம், தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து, 'தேசிய முன்னணி' என்கிற கூட்டணியை உருவாக்கி, அந்தத் தேர்தலைச் சந்தித்தார். அவருடைய கூட்டணிக் கட்சி 143 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும், அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பி.ஜே.பி கட்சி மற்றும் இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததால், வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்றார். 


வி.பி.சிங்கிடம் உள்ள சிறப்புக் குணமே, யாரிடமும் எதற்காகவும் தன்னை அவர் சமரசம் செய்துகொண்டதில்லை என்பதை அவர் வாழ்க்கைப் பயணத்தைக் கவனித்தாலே புரிந்துவிடும். 


அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெறுவதற்காகக் காலம்சென்ற முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு 'பாரத ரத்னா'விருது கொடுத்தார். நாட்டுக்காக மிக முக்கியப் பணிகள் செய்த அம்பேத்கர் போன்றோருக்கே பாரத ரத்னா கொடுக்காதபோது, ஏன் எம்.ஜி.ஆருக்கு இத்தனை அவசரமாக பாரத ரத்னா விருது என காங்கிரஸை விமர்சித்த வி.பி.சிங், தன்னுடைய ஆட்சியில் அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கினார். அது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம்பெறவும் வைத்தார். 


ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையை, தான் பிரதமராக இருந்தபோது நாட்டுக்குத் திரும்பி வரச் சொன்னார் வி.பி.சிங். காவிரி நதிநீர் பங்கிடுதலில் இனியும் பிரச்னை வரக்கூடாது என்று முதன்முதலில் காவிரி நடுவர் மன்றம் ஆரம்பித்தார். 


இத்தகைய தருணத்தில் வி.பி.சிங்'கிற்கு ஆதரவு கொடுத்ததை அறுவடைசெய்யும் விதமாக, பி.ஜே.பி கட்சி தனது இந்துத்துவா பரவலாக்கத்தை அவர்மூலம் சாத்தியப்படுத்த நினைத்தது. ஆனால் வி.பி.சிங், அதற்கு இசைந்துகொடுக்காததனால் அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும், வி.பி.சிங் எதற்கும் அஞ்சவில்லை. 


''பிற்படுத்தப்பட்ட மக்களின் பட்டியல் இந்தியாவிடம் இல்லை. அரசாங்கம் அம்மக்களைக் கண்டறிந்தால் மட்டுமே அவர்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கும்'' என்றார் அண்ணல் அம்பேத்கர். அவர் கூறி 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற மொரர்ஜி தேசாய், பி.பீ.மண்டல் என்கிறவர் தலைமையில் ஓர் ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் சுமார் இரண்டு வருடங்கள் நாடு முழுவதும் மாநில அரசுகளின் உதவியுடன் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. 


ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு அந்த அறிக்கையின்படி இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தத் தயங்கியது. ஏறத்தாழ பத்தாண்டுகள் மக்களின் உரிமைகள் கிடப்பில் கிடந்தன. அத்தகையதொரு சூழலில்தான் நீண்டகாலம் கிடப்பில் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரை செய்ததை, மக்களின் உரிமைக்கான திட்டத்தைத் தைரியமாக அமல்படுத்தினார் வி.பி.சிங். 


வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால், இந்தியா முழுக்க பெரிய அளவில் போராட்டங்கள் நிகழ்ந்தன. ஒருபக்கம் நெருக்கடி அதிகரித்துக்கொண்டுபோனது. மறுபக்கம், காங்கிரஸ் கட்சியும் அவர் ஆட்சியிலிருந்து வெளியேறுவதற்கான வேலையை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது; தனக்கு ஆதரவு வழங்கிய பி.ஜே.பி-யும் தன் பங்குக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்தது. வி.பி.சிங் எதற்கும் அசரவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை மேற்கொண்ட பி.ஜே.பி தலைவர் அத்வானி கைதுசெய்யவும் வாரன்ட் பிறப்பித்தார். இதனால் வெகுண்டெழுந்த பி.ஜே.பி, தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டதால், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சியை இழந்தது. 


அதற்குப் பிறகு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய முன்னணியின் ஆட்சி அமைத்தபோது, வி.பி.சிங் பிரதமர் பதவி வகிக்க வேண்டுமெனத் தலைவர் சிபாரிசு செய்தார்கள். ஆனால், வி.பி.சிங் மறுத்துவிட்டார். சிறுநீரகக் கோளாறு, ரத்தப் புற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வி.பி.சிங், வேறு வழியின்றி பொது வாழ்க்கையில் இருந்து தன்னை துண்டித்துக்கொண்டு, நோயினால் அல்லலுற்றார். 2008-ம் ஆண்டு, டெல்லியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் இறந்தார். இன்றோடு அவர் இறந்து 14 வருடங்கள் நிறைவுறுகிறது.


ஒரு நல்ல தலைவன் ஆட்சிபுரிந்த காலங்கள் குறைவெனினும், தன் குடிமக்களால் அவன் என்றென்றும் நினைவுகூரப்படுவான் என்பதற்கு நித்திய உதாரணம் வி.பி.சிங்.

நன்றி: விகடன்


இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் இறந்த தினம் - நவம்பர் 27, 1940


1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.


வி.பி.சிங்



1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.


வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பை தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி.யும் படித்தார்.


அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.


1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த வி.பி.சிங், தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.


1969-ம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார்.


இவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார்.


பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார். 1980 ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது, இந்திரா காந்தி இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். தென் மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வரானதும் வழிப்பறி & கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளையை தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார், இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் பெயர் பெற்று தந்தது. 1983 ல் இவரின் மேற்பார்வையில் சில பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.


1984ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியதுவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார். இராஜீவ் நினைத்தபடி லைசன்ஸ் ராஜ்' முறையை சீராக தளர்த்தி வந்தார். இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்க கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியை குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்க கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார். அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி சோதனைகளை நடத்தியது. குறிப்பாக திருபாய் அம்பானி , அமிதாப் பச்சன் போன்ற அதிகாரவட்ட செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர். பலர் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தவர்கள் ஆனதால் வேறுவழியின்றி இராஜீவ் காந்தி இவரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு விலக்காமல் அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது.


பாதுகாப்பு துறை அமைச்சரானதும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் முறையை ஆய்வு செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் வைத்திருப்பதாகவும் அவை பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தகவல்கள் என்றும் செய்திகள் வர தொடங்கியது. அதைத்தொடர்ந்து இவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரிலிருந்து இவர் விலகிக்கொண்டார், மக்களவை உறுப்பினர் (அலகாபாத் தொகுதி) பதவியையும் இராஜினாமா செய்தார்.


மக்களவையிலிருந்து விலகியதும் அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் பதவி விலகியதால் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கடும் போட்டிக்கிடையே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்தார். ஜனதா கட்சியின் குருவான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது, இதற்கு என்.டி.இராமா ராவ் தலைவராகவும், வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.


காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னனி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது. தேசிய முன்னனி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. கம்யூனிஸ்டுகளும், பாரதிய ஜனதா கட்சியும் அரசில் பங்கேற்க மறுத்துவிட்டு அரசில் பங்குபெறாமல் வெளியிலிருந்து தேசிய முன்னனி அரசை ஆதரிப்பதாக கூறின.


ராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரசுக்கு எதிர் அணியினர் வி. பி. சிங்கையே தூய்மையான மாற்று பிரதம வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் அரியானாவின் ஜாட் தலைவரான தேவி லால் பிரதமர் பதவியை ஏற்க்க மறுத்து பெருந்தன்மையாக வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் ஜனதா தளத்தின் கட்சிக்குள்ளயே வி.பி.சிங்கின் பிரதமர் பதவிக்கு போட்டியாளராக விளங்கிய தேவிலாலின் நெருங்கிய நண்பரான சந்திரசேகர்க்கு பிரதமர் பதவியை தர மறுத்ததை பல கட்சியினருக்கு நடுவே ஆச்சரியத்ததை ஏற்படுத்தியது. ஏனென்றால் கருத்தொருமித்த பிரதம வேட்பாளராக தேவிலால் வருவார் என சில தலைவர்கள் அவரிடம் கூறியதே. அவர் காங்கிரசில் பல பதவிகளில் நேர்மையாக செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியின் அரசின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து எதிர்த்த அமைச்சர் வி. பி. சிங்கை பிரதமருக்கான தகுதியுடைய வேட்பாளராக அறிவித்துவிட்டு நாடாளமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிய தேவி லால் அமைச்சரவையிலும் பங்கு பெறவும் மறுத்து விட்டார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சிக்கு பிறகு இரண்டாவது முறை கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி.சிங்குக்கு உண்டு.


டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.


பதவியேற்ற சில தினங்களிலேயே அரசு நெருக்கடியை சந்தித்தது. காஷ்மீர் தீவிரவாதிகள் அப்போதய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதின் மகளை கடத்திச்சென்றனர். தீவிரவாதிகளின் நிபதனைக்கிணங்க சில தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்து அமைச்சரின் மகளை மீட்டது. மாநில பிரிவினைவாதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என கருதிய பாஜகவின் வற்புறுத்தலினால் சர்ச்சைக்குரிய முன்னால் அதிகாரியான ஜக்மோகனை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனராக நியமித்தார். அதிகாரபூர்வமற்ற காஷ்மீர் இஸ்லாம் தலைவரான மிர்வாச்சின் மரண ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு நடத்த ஜக்மோகன் உத்தரவு கொடுத்ததன் விளைவாக காஷ்மீர் தீவிரவாதம் மேலும் பரவகாரணமாக இருந்தார்.


பஞ்சாபில் கடும் போக்குடைய சித்தார்த்த சங்கர் ரேவை நீக்கிவிட்டு மித போக்குடைய முன்னால் அதிகாரி நிர்மல் குமார் முகர்ஜி அவர்களை ஆளுனராக நியமித்தார். இவர் புது தேர்தல் நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றார். வி.பி.சிங் பொற்கோவிலுக்கு சென்று இந்திரா காந்தி அரசில் நடைபெற்ற புளுஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிக்கும் படி வேண்டிக்கொண்டார்.


இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை வி.பி.சிங் விலக்கிக்கொண்டார்.


பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு


இதற்கு முன்பு காங்கிரசின் எமர்ஜென்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயணனின் ஜனதா கட்சி ஆட்சியில் அக்கட்சி பிரதமர் மொரார்ஜி தேசாய் கொண்டு வந்த மண்டல் ஆணைக்குழுவை அவர் பரிந்துரை செய்து நடைமுறை செய்வதுக்குள் கட்சியில் ஏற்பட்ட ஒற்றுமை இல்லாமையால். பிரதமர் தலைமை சரண் சிங் வசம் வந்து விட சிறிது காலத்திலேயே ஜனதா கட்சி ஆட்சி 1980 ஆம் ஆண்டு கவிழ்ந்ததால். 1990ல் 10 வருடங்களுக்கு பிறகு ஜனதா கட்சி நீட்ச்சியாக மாறிய ஜனதா தளம் ஆட்சியில் வி.பி.சிங் தலைமையில் மண்டல் கமிஷன் பரிந்துரை உயிர்பெற்றது. தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும், பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். இத்திட்டமானது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொதுத்துறை அமைப்பு மத்திய அரசாங்கம் சார்ந்த வேலை வாய்ப்புகள் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு திட்டம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகையாகவும், சாதகமாகவும் இருந்தாலும். உயர் சாதி மக்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டில் எந்த பலனும் இல்லாததால் கடும் எதிர்ப்பு நிலை ஏற்பட்டு வட இந்தியாவில் நகர்புறங்களில் போராட்டங்களும், கலவரங்களும் நடைபெற்றது.


மேலும் இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டு திட்டத்தை வி. பி. சிங் அமல் படுத்த முற்பட்டபோது ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளபடும். என்று கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய தலைவரான அத்வானி எச்சரிக்கை விடுத்தார். இத்திட்டத்தை அமல் படுத்த கூடாதொன்று அத்வானி தலைமையில் வட இந்தியாவில் பல மதகலவரங்களும், தீ குளிப்பு உயிர் பலி போராட்டங்களும் நடந்தேறியதால். வி.பி.சிங் ஆட்சியை பல எதிர்கட்சி தலைவர்களால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் இந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதாலும், அப்போது வட இந்தியாவில் நடந்த ராமர் யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்யப்பட்டதால் ஜனதா தளம் ஆட்சிக்கு பாஜக அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் வி.பி.சிங் பிரதமர் பதவியை இழந்து ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் மண்டல் கமிஷன் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கிரீம் லேயர் முறையில் வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது பல்லாண்டுகளாக மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் சுரண்டப்பட்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரும் சவுக்கடி என்று கூறினார்' வி.பி.சிங் தனது முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று மகிழ்ச்சி தெரிவித்து கொண்டார்.


1989ல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 ல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு- தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இந்திய ஸ்டேட் வங்கியின் டி.என்.கோஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.


வி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது.வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.வி.பி.சிங்குக்கு சீதா குமாரி என்ற மனைவியும், அஜய் சிங், அபய்சிங் என்னும் இரண்டு மகன்களும் உள்ளனர்.மூத்த மகன் அஜய் சிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்து அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இளைய மகன் அபய் சிங் டாக்டர் ஆவார். மனைவி சீதாகுமாரியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.

நன்றி : விக்கிபீடியா...



வி.பி.சிங் வெறும் பெயர் மட்டுமல்ல; இந்திய வரலாற்றின் தொடக்கம்...


வரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எஞ்சி நிற்பதில்லை. அவை, பெரும் வரலாற்றின் சாட்சியங்களாக, நீண்டதொரு கனவின் தொடக்கமாக உருப்பெற்று நிற்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங்கின் பெயர், அப்படியான பெயர்களில் ஒன்று. இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர் வி.பி.சிங். இன்று அவரது நினைவு தினம்.


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர், வி.பி.சிங். ஆனால், அவரது பிறப்பும் வாழ்வும் நேரெதிரானவை. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய வி.பி.சிங், அணுசக்தி விஞ்ஞான பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.


அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்கு தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார்.


எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969-ல் தேர்தல் அரசியலில் வென்றார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் என்னும் பரமபதத்தை வி.பி.சிங் தனது நேர்மையாலும் திறமையாலும் திறம்பட எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். எம்.எல்.ஏ-வாகத் தேர்வான அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார்.



எமர்ஜென்சி காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்கு வி.பி.சிங்கின் பங்கு உண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பர். குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் வி.பி.சிங்கின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றானது.


1980-ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திரா காந்தி, வி.பி.சிங்கை உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். உத்தரப்பிரதேசத்தின் தென்மேற்கு மாவட்ட மக்கள் வழிப்பறி, கொள்ளை இவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். முதல்வரானதும் வழிப்பறி, கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார் வி.பி.சிங். முழுவதுமாக கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாததற்குத் தானே பொறுப்பேற்றுக்கொண்டு, பதவி விலகவும் முன்வந்தார்.


அவருடைய சகோதரர் கொலைசெய்யப்பட, உத்தரப்பிரதேச முதல்வர் பதவியை, பதவியேற்ற இரண்டு வருடங்களில் ராஜினாமா செய்தார் வி.பி.சிங். அவரின் இந்தச் செயல், அப்போதைய இந்தியா முழுக்க வி.பி.சிங்கின் பெயரை உச்சரிக்க வைத்தது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சர் ஆனார் வி.பி.சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் எனப் பலரும் அவரது நடவடிக்கைக்குத் தப்பவில்லை. 


அவரின் நேர்மையான செயல்பாடுகள், பல முக்கியப் புள்ளிகளுக்கு அழுத்தம் தரவே, நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வி.பி.சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார் ராஜீவ் காந்தி. இந்த நேரத்தில், ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில், பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், இம்முறை துறைமாற்றத்திற்குப் பதில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உடனே வி.பி.சிங், தனது எம்.பி பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.


மக்களவையிலிருந்து விலகியதும், அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து, 'ஜனமோர்ச்சா' என்ற கட்சியைத் தொடங்கினார். இவர் பதவி விலகியதால், அலகாபாத் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பைக்கில் பயணம், தலையில் கட்டப்பட்ட துண்டு என மக்களோடு மக்களாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, வெற்றி வி.பி.சிங்கின் வசம் வந்தது. கடும் போட்டிக்கிடையே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியைத் தோற்கடித்தார். அக்டோபர் 11 அன்று 1988-ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து, ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கன பரிஷத் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. அப்போது நிலவிய அரசியல் சூழலில், வி.பி.சிங் ஒரு முக்கியத் தலைவரானார்.


1989-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியைக் கட்டமைத்து, ஆட்சியையும் அமைத்துக் காட்டினார், வி.பி.சிங். டிசம்பர் 1, 1989 அன்று, வி.பி.சிங் நாடாளுமன்ற அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். இந்திய அரசியலின் மிகச் சிறந்த தருணங்களில் அதுவும் ஒன்று. பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.


இந்திய அரசியலில் மிக முக்கிய சீர்திருத்தத்தை அப்போது நிகழ்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் வி.பி.சிங். அவரின் இந்த செயல், இந்தியாவின் அசமன்பாடுகளைத் தவிடுபொடியாக்கி, பல எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது. இடஒதுக்கீடு, வி.பி.சிங் ஆட்சிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. தொடர்ச்சியாக அத்வானியின் கைது போன்ற சம்பவங்கள் வி.பி.சிங்கின் அரசியல் அஸ்திவாரத்தை அசைத்தன. பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.



அவர் ஆட்சி செய்தது என்னவோ வெறும் 11 மாதங்கள்தான். அந்த 11 மாதங்களில், 'இந்திய அரசியலில் தன்னிகரற்றவர் வி.பி.சிங் ' என்ற பெரை அவருக்குப் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். பிரதமர் பதவியைவிட்டு விலகும்போது, "பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை" என முழங்கிய வி.பி.சிங், கடைசி வரை அதுபோல வாழ்ந்தும் காட்டினார். ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன் எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். அவரது பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. 


நன்றி : விகடன்...





இன்றைய (27-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 27, 2022



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புண்ணிய தலங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


பரணி : அனுசரித்து செல்லவும்.


கிருத்திகை : வாய்ப்புகள் அமையும். 

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 27, 2022



எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பிரச்சனைகள் தோன்றி மறையும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். சிந்தனைகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். சொத்துக்கள் தொடர்பான வீண் விரயங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


ரோகிணி : விட்டுக்கொடுத்து செயல்படவும். 


மிருகசீரிஷம் : சோர்வு ஏற்படும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 27, 2022



வியாபாரத்தில் உள்ள மறைமுகமான போட்டிகளை எதிர் கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நண்பர்களிடத்தில் உங்களின் மீதான முக்கியத்துவம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.


திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும். 


புனர்பூசம் : முக்கியத்துவம் அதிகரிக்கும்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 27, 2022



சுபகாரியம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உறவினர்களிடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்




புனர்பூசம் : தடைகள் குறையும். 


பூசம் : புரிதல் உண்டாகும்.


ஆயில்யம் : முயற்சிகள் ஈடேறும். 

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 27, 2022



மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான இலக்கினை நிர்ணயம் செய்வீர்கள். சமூக பணிகளில் வித்தியாசமான சூழ்நிலைகள் ஏற்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் சாதகமாக அமையும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


பூரம் : வித்தியாசமான நாள்.


உத்திரம் : லாபம் மேம்படும்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 27, 2022



போட்டிகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தெய்வ தரிசனம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : தெளிவு ஏற்படும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 27, 2022



விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் நம்பிக்கை உண்டாகும். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்





சித்திரை : அனுபவம் கிடைக்கும். 


சுவாதி : நம்பிக்கை உண்டாகும்.


விசாகம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 27, 2022



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : மாற்றம் உண்டாகும்.


அனுஷம் : திருப்திகரமான நாள்.


கேட்டை : மந்தத்தன்மை குறையும். 

---------------------------------------



தனுசு

நவம்பர் 27, 2022



இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். கோப்புகளை கையாளும் பொழுது கவனம் வேண்டும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் சாதகமாக அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகளால் அலைச்சல்கள் உண்டாகும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். சிரமம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


பூராடம் : இடமாற்றம் உண்டாகும். 


உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 27, 2022



பிள்ளைகளின் வழியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். அசதி குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திராடம் : ஆதாயம் உண்டாகும். 


திருவோணம் : பொறுப்புகள் குறையும்.


அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 27, 2022



வியாபாரத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து மகிழ்ச்சி மேம்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : மரியாதை மேம்படும்.


சதயம் : பிரச்சனைகள் நீங்கும். 


பூரட்டாதி : மேன்மையான நாள்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 27, 2022



வியாபாரத்தில் வேலையாட்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். செய்கின்ற செயல்பாடுகளில் மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும். 


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...