கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஈகை


குறள் :221


வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.


விளக்கம்:


இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.


பழமொழி :

After a dinner sleep a while


உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.


2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்


பொன்மொழி :


ஒரு புத்திசாலி பிரச்சினையைத் தீர்க்கிறான். ஞானமுள்ளவன் அதைத் தவிர்க்கிறான். --ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்


பொது அறிவு :


1. எகிப்தின் தலைநகர் எது?


விடை: கெய்ரோ


2. பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?

விடை: ராஜஸ்தான்


English words & meanings :


 overseas - going to a foreign country especially across the sea, கடல் கடந்த வெளி நாட்டு பயணம் செய்வது. 

pamper – give more attention and comfort to a person, செல்லம் கொடுப்பது


ஆரோக்ய வாழ்வு :


கருணை கிழங்கு,அதீத உடல் எடை கூடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கருணை கிழங்கு உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது.


நீதிக்கதை


ஒற்றுமையே வலிமை

வயது முதிர்ந்த விவசாயி ஒருவருக்கு  நான்கு மக்கள் இருந்தனர். அந்த நால்வரும் ஒற்றுமை இல்லாமல், எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர்.

இவர்கள் இப்படியே இருந்தால், குடும்பம் சிதறிப் போகுமே என்று வருந்தினார் வயதான தந்தை.

அவர் கூறிய புத்திமதிகளை மதிக்காமல் திரிந்தனர்.

ஒருநாள் மக்கள் நால்வரையும் அழைத்தார் தந்தை அவர்கள் வந்து கட்டிலைச் சுற்றி நின்றனர்.

தன் காலடியில் கிடந்த மூங்கில் கட்டு ஒன்றை மூத்த மகனிடம் கொடுத்து, “இதை முறி” என்றார்.


தன் பலம் முழுவதையும் பயன்படுத்தினான். ஆனால், முறிக்க முடியவில்லை.


அடுத்து இரண்டாவது மகன், மூன்றாவது மகன், நான்காவது மகன், மூவரும் முயன்று பார்த்தனர், ஒருவராலும் முறிக்க இயலவில்லை.


பிறகு, கட்டைப் பிரித்து ஆளுக்கு ஒரு குச்சியைக் கொடுத்தார்.


நால்வரும் சுலபமாக முறித்து விட்டு நின்றனர்.


“இப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும், நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருப்பீர்களானால், உங்கள் வாழ்க்கை உறுதியாக விளங்கும். எவரும் உங்களை ஏமாற்ற முடியாது. சண்டைசச்சரவு செய்து, தனித்தனியாக ஆளுக்கு ஒரு பக்கமாக இருப்பீர்களானால், சிதறிப் போவீர்கள். ஒற்றுமையே வலிமை அளிக்கும்” என்றார் தந்தை.


இன்றைய செய்திகள்


21.07. 2023


*இரயிலில் பொதுப்பெட்டி பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு குடிநீர் வழங்க ஏற்பாடு - இரயில்வே துறை.


*குறைந்த வருமானம் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏசி அல்லாத சிறப்பு ரயில்கள் -  இரயில்வே துறை திட்டம்.


*கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர் நீதிமன்றங்களுக்கு நான்கு தலைமை நீதிபதிகள் நியமனம்.


*ஆஷஸ் நான்காவது டெஸ்ட் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்.


*தேசிய டைவிங் - வாட்டர் போலோ : சென்னை வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்.


Today's Headlines


 *Arrangement to provide food and drinking water at low cost to general coach passengers in trains - Railway Department.


 *Non-AC Special Trains for Low Income Migrant Workers - Railway Department Scheme.


 * Appointment of four Chief Justices to High Courts of Kerala, Telangana, Gujarat and Odisha.


 *Ashes Fourth Test - Australia all out for 317 in first innings.


 *National Diving - Water Polo: Silver medal for Chennai player.

 

தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல் - PDF... (WP.6945/2022 - (No deduction or re-fixation of additional pay after 5 years even if wrongly fixed wages - Madras High Court Order - Copy of High Court Judgment - PDF) R.Soundararajan Vs. Deputy Director - Dated : 26/06/2023 - Hon`ble Mr. Justice M.S.RAMESH)...


>>> தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல் - PDF... (WP.6945/2022 - (No deduction or re-fixation of additional pay after 5 years even if wrongly fixed wages - Madras High Court Order - Copy of High Court Judgement - PDF) R.Soundararajan Vs. Deputy Director - Dated : 26/06/2023 - Hon`ble Mr. Justice M.S.RAMESH)...


மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 'பஞ்சாப் மாநிலம் Vs. ரஃபிக் மாசிஹ்''(2015) 4 SCC 334' இல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக துறையின் தவறு காரணமாக, வழங்கப்பட்ட அதிகப்படியான ஊதியத்தை திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது. பிரதிவாதிகள் ஆகஸ்ட் 2010 முதல் மீட்டெடுக்க முற்பட்டதால், அது சட்டத்தில் அனுமதிக்கப்படாது (Hon'ble Supreme Court in the case of 'State of Punjab Vs. Rafiq Masih (White Washer)' reported in '(2015) 4 SCC 334', has held that recovery of any excess payment made, owing to the mistake of the Department for over a period of 5 years, cannot be made. Since the respondents have sought to make recovery from August 2010 onwards, the same is impermissible in law)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 6 - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 6 - Tamil & English Medium Lesson Plan)...

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 6 - தமிழ் வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 6 - Tamil Medium Lesson Plan )...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 6 - ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 6 - English Medium Lesson Plan)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 6 - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு - மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 6 - Tamil & English Medium Lesson Plan - Model 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 6 - தமிழ் & ஆங்கில வழி (Term 1 - Unit 6 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium)...

 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 6 - தமிழ் வழி (Term 1 - Unit 6 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 6 - ஆங்கில வழி (Term 1 - Unit 6 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - English Medium)...



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 6 - தமிழ் & ஆங்கில வழி - மாதிரி 2 (Term 1 - Unit 6 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium - Model 2)... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான SCERT வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - SCERT Guidance on conducting FA (b) - Formative Assessment (b) for 1, 2 and 3rd Standard)...

 

எண்ணும் எழுத்தும் - 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான SCERT வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - SCERT Guidance on conducting FA (b) - Formative Assessment (b) for 1, 2 and 3rd Standard)...


 ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்🙏. 


ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க,

   1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம் -4 க்கான வளரறி  மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (27-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம் கட்டகம் - 5 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே  வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (21-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும். இனி வரும் வாரங்களில் மீதமுள்ள அனைத்து கட்டகங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வார காலத்திற்கு நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும்.


கட்டகம்  - 6 க்கு வளரறி மதிப்பீடு ஆ இல்லை.


ஜூலை மாதம் 31 ஆம் தேதி முதல் கட்டகம் - 3, கட்டகம் - 4 ,கட்டகம் - 5,கட்டகம் - 6 ஆகிய நான்கு கட்டங்களுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு - எழுத்துத் தேர்வாக வைக்க வேண்டும். இதற்கான வினாத்தாள் நம்முடைய செயலியில் ஜூலை மாதம் 30-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் pdf வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.


அதை நகல் எடுத்துக்கொண்டு  ஜூலை 31ஆம் தேதி முதல் மாதாந்திர எழுத்துதேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

                        நன்றி.

                                              SCERT


TNSED Schools App New Version: 0.0.74 - Updated on 20-07-2023 - Schemes tracking & View video changes. Bug fixing & Performance improvements....

            



🛑🛑🛑🛑🛑🛑


TNSED schools App


What's is new..?


*🎯 Schemes tracking & View video changes...

🎯  Bug fixing & performance improvements...


*_UPDATED ON  20 JULY 2023


*_Version: Now 0.0.74


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


PROSPECTUS FOR DIPLOMA IN NURSING COURSE FOR WOMEN 2023-2024 SESSION (As per G.O. (D) No. 742, Health and Family Welfare (PME-1) Department, Dated : 28-06-2023 and as amended from time to time) LAST DATE FOR SUBMISSION OF APPLICATION 26-07-2023 UPTO 5.00 P.M...



>>> PROSPECTUS FOR DIPLOMA IN NURSING COURSE FOR WOMEN 2023-2024 SESSION...


(As per G.O. (D) No. 742, Health and Family Welfare (PME-1) Department, Dated : 28-06-2023 and as amended from time to time) 


LAST DATE FOR SUBMISSION OF APPLICATION 26-07-2023 UPTO 5.00 P.M...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...