கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான 25.10.2023 தேதியிட்ட அறிவிப்பு எண். 3/2023க்கு கூடுதல் காலியிடங்கள் குறித்த அறிவிப்பு எண் 3A/ 2023, நாள்: 15-11-2023 (The details of distribution of additional vacancies to the Notification No. 3 / 2023, dated 25.10.2023 for direct recruitment to the post of Graduate Teacher / Block Resource Teacher Educators (BRTE) in School Education and other Department included in the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service for the year 2023 – 2024)...

 

பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் 2222 பட்டதாரி ஆசிரியர் / வட்டாரவள மைய பயிற்றுநர் தெரிவிற்கான அறிவிக்கை 03/2023 நாள் : 25.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

 இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்ககம் , தொடக்ககல்வி இயக்ககம் மற்றும்  சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் நிரப்பப்படவேண்டிய 360 பணியிடங்களுக்கான  கூடுதல் காலிப்பணியிட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

 (அறிவிக்கை எண் 3A/ 2023 )👇


பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான 25.10.2023 தேதியிட்ட அறிவிப்பு எண். 3/2023க்கு கூடுதல் காலியிடங்கள் குறித்த அறிவிப்பு (The details of distribution of additional vacancies to the Notification No. 3 / 2023, dated 25.10.2023 for direct recruitment to the post of Graduate Teacher / Block Resource Teacher Educators (BRTE) in School Education and other Department included in the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service for the year 2023 – 2024 is as follows: -



>>> அறிவிப்பு எண் 3A/ 2023, நாள்: 15-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 25.10.2023 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்: 03 / 2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TNPSC Group IV போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு 13.11.2023 முதல் தொடங்கியுள்ளது - செய்தி வெளியீடு எண்: 2282, நாள்: 15-11-2023 (TNPSC Group IV Competitive Examination Online Training Courses Tamil Nadu Government has started from 13.11.2023 - Press Release No: 2282, Dated: 15-11-2023)...


TNPSC Group IV போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு 13.11.2023 முதல் தொடங்கியுள்ளது - செய்தி வெளியீடு எண்: 2282, நாள்: 15-11-2023 (TNPSC Group IV Competitive Examination Online Training Courses Tamil Nadu Government has started from 13.11.2023 - Press Release No: 2282, Dated: 15-11-2023)...



>>> செய்தி வெளியீடு எண்: 2282, நாள்: 15-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2023 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வாய்மை


குறள் :298


புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்


விளக்கம்:


புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.


பழமொழி :

Faith is the force of life


நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.


இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.



பொன்மொழி :


உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்து விடும். ஜவஹர்லால் நேரு 


பொது அறிவு :


1. ஈராக் நாட்டின் தலைநகரம்?


விடை:பாக்தாத்


2. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் என்று பாராட்ட பெறுவர் யார்?

விடை:  பாரதிதாசன்



English words & meanings :


 whisker -a projectiing hair or britsle from the face or snout of many mammals.(விஸ்கர்ஸ்). 

withdraw-remove or take away (something) from a particular place or position திரும்பப் பெறுங்கள்.


ஆரோக்ய வாழ்வு : 


தாமரைப் பூ : கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களுக்கு, தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன....


நவம்பர் 16


உலக சகிப்புத் தன்மை நாள்


உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.


நீதிக்கதை


 தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார். பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறது. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.


நீதி : தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.


இன்றைய செய்திகள்


16.11.2023


*தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.


*தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.


* 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


*சச்சின் டெண்டுல்கரின் இரண்டு சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி.


*  உலக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் இந்திய அணி  70  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


Today's Headlines


*Chance of rain with thunder and lightning in Tamil Nadu.


 * No. 1 storm warning flag hoisted out of 9 ports in Puducherry and Tamil Nadu.


 * It is expected that the public examination table for class 10, 11 and 12 will be released today.


 *Virat Kohli broke two records of Sachin Tendulkar.


 * In the Cricket  world cup semi finals between New Zealand & India , team India  won by 70 runs  and qualified for the final.

 

01-08-2023 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48800/ சி3/ இ1/ 2023, நாள்: 15-11-2023 (Surplus of B.T.Assistants (Graduate Teachers) working in Government Schools on the basis of student strength as on 01-08-2023 - Director of School Education Proceedings Rc.No: 48800/ C3/ E1/ 2023, Dated: 15-11-2023)...

 

01-08-2023 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48800/ சி3/ இ1/ 2023, நாள்: 15-11-2023 (Surplus of B.T.Assistants (Graduate Teachers) working in Government Schools on the basis of student strength as on 01-08-2023 - Director of School Education Proceedings Rc.No: 48800/ C3/ E1/ 2023, Dated: 15-11-2023)...



>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48800/ சி3/ இ1/ 2023, நாள்: 15-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning - Directorate of Government Examinations Press Note)...


2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை  வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning  - Directorate of Government Examinations Press Note)...



>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு...


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு - சிசிடிவி காட்சி (Student fainted in Perungadu Government High School near Aranthangi, Pudukottai district- CCTV footage)...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு - சிசிடிவி காட்சி (Student fainted in Perungadu Government High School near Aranthangi, Pudukottai district- CCTV footage)...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


தேர்தலில் போட்டியிட அரசு ஊழியருக்கு நீதிமன்றம் அனுமதி - தோல்வியடைந்தால் மீண்டும் பணியில் தொடரலாம் (Court allows govt employee to contest elections - if he fails, he can resume work)...



தேர்தலில் போட்டியிட அரசு ஊழியருக்கு நீதிமன்றம் அனுமதி - தோல்வியடைந்தால் மீண்டும் பணியில் தொடரலாம் (Court allows govt employee to contest elections - if he fails, he can resume work)...


ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட அரசு மருத்துவருக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது. தோ்தலில் அவா் தோல்வியடைந்தால் மீண்டும் அரசுப் பணியில் தொடரலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ராஜஸ்தானில் நவம்பா் 25-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாரதிய பழங்குடியினா் கட்சி சாா்பில் துா்காபூா் தொகுதியில் போட்டியிட அரசு மருத்துவா் தீபக் கோக்ரே (43) முடிவு செய்தாா். இவா் பாரதிய பழங்குடியினா் கட்சியின் மாநிலத் தலைவா் வேலராம் கோக்ரேவன் மகன் ஆவாா்.


அரசுப் பணியில் இருப்பதால் தோ்தலில் போட்டியிடவும், தோல்வியடைந்தால் மீண்டும் பணியில் சேரவும் அனுமதி கோரி தீபக் சாா்பில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தோ்தலில் போட்டியிடுவதற்காக அவா் அரசு மருத்துவா் பணியில் இருந்து விலகிக் கொள்ளவும், தோ்தலில் தோல்வியடைந்தால் மீண்டும் அரசுப் பணியில் இணையவும் அனுமதி அளித்தது.


இது தொடா்பாக தீபக் கூறுகையில், ‘இதுபோன்ற தீா்ப்பை உயா்நீதிமன்றம் வழங்குவது இதுவே முதல்முறை. இதன் மூலம் மேலும் பல அரசு மருத்துவா்கள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். நான் 10 ஆண்டுகளாக துா்காபூரில் பணியாற்றி வருகிறேன். எனவே, மக்களுடன் நெருங்கிப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. தோ்தலில் போட்டியிடும் எனது முடிவை மக்கள் வரவேற்றுள்ளனா்’ என்றாா்.


துா்காபூா் தொகுதியில் இப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் கோக்ரே, பாஜக சாா்பில் பன்சிலால் கட்டாரா ஆகியோா் போட்டியிடுகின்றனா்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...