கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டுப் பள்ளிக் கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தியவர் கலைஞர் - அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்...

 1  கி.மீக்கு ஒரு ஆரம்பப்பள்ளி, 3 கி.மீக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கி.மீக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கி.மீக்கு ஒரு மேல்நிலைப்பள்ளினு தமிழ்நாட்டுக்கு பள்ளிக் கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தியவர் கலைஞர் - அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் "யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்" & தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் அழகுக்கலை பயிற்சி" குறித்த மூன்று நாள் பயிற்சி...


 உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் "யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்" & தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் அழகுக்கலை பயிற்சி" குறித்த மூன்று நாள் பயிற்சி...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1988ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை...

1988...ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை...


1988..ல்...  

அரசு ஊழியர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டீ  (Confederation ) பேரமைப்பு சார்பாக


22-06-1988 முதல் 23-07-1988 வரை


31 நாட்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது.


40 ஆயிரம் பெண் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மாநில அளவிலான தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


வேலை நிறுத்தத்தின் உச்சகட்டமாக சென்னை முற்றுகை அறிவிக்கப்பட்டது.


வேன் மற்றும் பேருந்தில் வந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்திலேயே கைது செய்யப்பட்டு மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டனர்.


காவல்துறையின் தடையை மீறி சென்னை எழும்பூர் சென்டரல், பாரிமுனைக்கு அரசு ஊழியர்  ஆசிரியர்கள் வந்தனர்.


வேஷ்டி உடுத்தியவர்கள் ஆசிரியர்கள் பேன்ட் சட்டை போட்டவர்கள் அரசு ஊழியர்கள் என சந்தேகப்பட்டவர்களை எல்லாம் காவல்துறை கைது செய்தது.


ரயில் நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும்


காவல்துறை கைது செய்கிறது...


எனவே, கூட்டமாக செல்லாதீர்கள் ...


பேனர் பிடிக்காதீர்கள்.,


கொடி பிடிக்காதீர்கள்..,


கோசம் போடாதீர்கள்


என தோழமைச் சங்க தலைவர்கள் ரகசியமாக தகவல்களை பகிர்ந்து சென்றனர்.


காவல் துறையின் அனைத்து தடைகளையும் மீறி சென்னை அண்ணா சாலையில் 22 -7 - 1988 அன்று 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


தலைவர் யார் ? தொண்டர் யார்? என்று யாருக்கும் தெரியாது.


போராட்ட கோசங்கள் மட்டுமே அனைவரையும் இணைத்தது.


யாரும் கலைந்து செல்லவில்லை.


கைது செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.


போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முடியாததால் லத்தி சார்ஜ் செய்யப்பட்டது.


ஆசிரியர் சங்க தலைவர் வீரையன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டதால்


மண்டை உடைந்து ரத்தம் ஆறாக ஓடியது.


போராட்ட வீரர்களை கலைக்க  காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசியது.


கண்ணீர் புகை குண்டு


ஈரத் துண்டால் பிடிக்கப்பட்டு காவல்துறை மீது திருப்பி வீசப்பட்டது.


குதிரைப் படை வீரர்கள் மூலம் போராட்டக்காரர்களை கலைக்க  முயற்சி செய்தனர்.


குதிரைப் படை தாக்குதலை எதிர்கொண்டு குதிரைப் படை திருப்பி குதிரை லாயத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது.


கூட்டத்தை கலைக்க முடியாமல் தோல்வி கண்ட அன்றைய ஆளுநர் அரசு சென்னை சிறையில் இருந்து மாநிலத் தலைவர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமரச தீர்வை உருவாக்கியது.


பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதால்...


முற்றுகையை கைவிட்டு கலைந்து நேரு ஸ்டேடியம் செல்லுமாறு காவல்துறை முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் அறிவித்தது.


காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது..,


எங்கள் சங்க தலைவர்கள் நேரில் வந்து சொன்னால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர்.


வேறு வழியில்லாமல் காவல்துறையினர் தோழர். M.R.அப்பன் அவர்களை காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர்.


காவல்துறை வாகனத்தின் மேலே ஏறி நின்று காவல்துறை ஒலிபெருக்கியில் M.R. அப்பன் அவர்கள் முற்றுகையில்  ஈடுபட்டபவர்களிடம் பேசினார்.


பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது...,


அனைவரும் நேரு ஸ்டேடியம் வாருங்கள் பேசுவோம் என்று அறிவித்தார்.


M.R. அப்பன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முற்றுகையை கைவிட்டு நடை பயணமாக நேரு ஸ்டேடியம் சென்றனர்.


அரசு செலவில் நேரு ஸ்டேடியத்தில் பேச்சுவார்த்தை ஒப்பந்த விளக்க கூட்டம் நடைபெற்றது.


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கொள்கை அளவில் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது...


அதனால் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறோம் என்று மாநிலத் தலைமை அறிவித்தது.


வேலைநிறுத்தத்தின் விளைவாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றோம்.


அனுபவமே நல்ல ஆசான்





TRUST Exam December 2023 Results - Selected Students List - PDF Copy...


TRUST Exam December 2023 Results - Selected Students List - PDF Copy...



ஊரகத் திறனாய்வு தேர்வு - டிசம்பர் 2023 - தேர்வு முடிவுகள் - தேர்வான மாணவர்கள் பெயர்ப் பட்டியல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்று (16-02-2024) CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம்...

இன்று (16-02-2024) CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - திரு. தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வேண்டுகோள்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - திரு. தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வேண்டுகோள்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம்...


 தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம் எண்: 11100/ தொ.க.1(1)/ 2023-1, நாள்: 15-12-2023...


தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு நிலைக்கு ரூபாய் 5400 தர ஊதியம் பெறும் நிலையில் அவரே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நேர்வில் ஊதிய நிர்ணயம் குறித்து அரசு விளக்கக் கடிதம்...


இக்கடிதத்தின் அடிப்படையில் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் 31.05.2006 க்கு முன்னர் தேர்வு நிலை ஊதியம் ₹5400 வழங்கியது சரியானது என்றும், அவரே நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் போது தர ஊதியம் ₹ 4700 நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது...



>>> தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...