கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு...

 


தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு...



>>> தலைமைச் செயலாளர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு...



 TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 

அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி 627 012 

மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்)-2024 

அறிவிப்பு எண்.01/2024 

திருத்தம் 

அரசாணை (நிலை) எண்.5 , உயர்கல்வித் (H1) துறை,  நாள்:  11.01.2021 & அரசாணை (நிலை) எண்.163 உயர்கல்வித் (H1) துறை,  நாள்:  27.08.2021 இன் படி, 5% மதிப்பெண்கள் தளர்வு அனுமதிக்கப்படும். (55% லிருந்து 50% மதிப்பெண்கள்) பட்டியல் சாதி (SC)/பட்டியலிடப்பட்ட சாதி (A)/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC)/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)/ சீர்மரபினர் சமூகங்கள் (DNC) ஆகியவற்றைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதுநிலை மட்டத்தில்) மற்றும் மாற்றுத் திறனாளிகள். 

TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.05.2024 அன்று மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

விவரங்களுக்கு: www.musuniv.ac.in 

பதிவாளர்/ உறுப்பினர் செயலாளர் 

TNSET 2024 

பதிவாளர்



MANONMANIAM SUNDARANAR UNIVERSITY

Abishekapatti, Tirunelveli 627 012

STATE LEVEL ELIGIBILITY TEST (SET)-2024

Notification No.01/2024

CORRIGENDUM

As per the G.O. (Ms) No.5 Higher Education (H1) Department dated 11.01.2021 & G.O.(Ms) No.163 Higher Education (H1) Department dated 27.08.2021, a relaxation of 5 % marks shall be allowed( From 55% to 50%of the Marks) at the Master's level for the candidates belonging to Scheduled caste (SC)/Scheduled Caste (A)/ Scheduled Tribe/Backward Class (BC)/Most Backward Class (MBC)/ Denotified Communities (DNC)and Differently Abled. Last date for online submission of application for TNSET Exam 2024 is extended up to 5.00 p.m. on 15.05.2024.

For details: www.musuniv.ac.in

Registrar/Member Secretary

TNSET 2024

REGISTRAR


EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் / மாற்றுதல் - DEE செயல்முறைகள்...


 EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் / மாற்றுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 009350/ ஜெ2/ 2024, நாள்: 09-05-2024...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 009350/ ஜெ2/ 2024, நாள்: 09-05-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




>>> EMIS வலைதளத்தில் மாணவர்களின் அலைபேசி எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?


கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? - கவனம்! - தென்னிந்திய கடற்பரப்பு கள்ளக்கடல் ஆகலாமென INCOIS ஆரஞ்சு எச்சரிக்கை...

கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? - கவனம்! - தென்னிந்திய கடற்பரப்பு கள்ளக்கடல் ஆகலாமென INCOIS ஆரஞ்சு எச்சரிக்கை...


 விடுமுறையைக் கடலில் கழிக்கத் திட்டமா? தென்னிந்திய கடற்பரப்பு கள்ளக்கடல் ஆகலாமென INCOIS ஆரஞ்சு எச்சரிக்கை...


கடல் பரப்பின்மீது காற்று வீசும்போது நீரில் சலனம் ஏற்படும். காற்று அதிகமாகும்போது இந்தச் சலனங்கள் அதிகரித்து நகரத் தொடங்கும். சில சமயம் கடுங்காற்று / புயலின்மூலம் உருவாகும் சலனங்கள் தொடங்கிய இடத்திலிருந்து விலகி வெகுதூரம் பயணிக்கும்.  அவற்றை Swell waves என்பார்கள். இதுபோன்ற அலைகள் வரக்கூடிய சாத்தியம் இருந்தால்  அந்தக் கடற்பகுதியை "கள்ளக்கடல்" என்று அழைப்பார்கள். கள்ளத்தனமாக வந்து திடீரென்று பெரிய அலையாக மாறி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு என்ற பொருளில் உருவான மலையாளப் பதம் இது.


காற்று எவ்வளவு வலுவானதாக இருக்கிறதோ அதைப் பொறுத்து இந்த அலைகளின் ஆற்றல் அதிகரிக்கும். இந்த வகை அலைகள் எளிதில் உடைந்துவிடாமல் நெடுந்தூரம் பயணிக்கும் ஆற்றல் உடையவை. இவற்றின் ஆற்றலும் அலைநீளமும் மிக அதிகம்.


இந்த ஸ்வெல் அலைகள் நீண்ட தூரம் பயணிப்பதால் அதிகமான வண்டலையும் மணலையும் இழுத்து வரக்கூடியவை, இவற்றில் ஆற்றலும் வேகமும் அதிகம். ஆகவே இவற்றில் மாட்டிக்கொண்டால் எளிதில் தப்பிக்க முடியாது. 


 இந்தியப் பெருங்கடலில் சில சமயம் இந்த ஸ்வெல் அலைகளும் கள்ளக்கடல் நிகழ்வுகளும் ஏற்படுவதுண்டு. 


ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5, 2024) கடல்சார் தகவல்களுக்கான தேசிய அமைப்பான INCOIS (தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம்) ஒரு ஆரஞ்சு அலர்ட் அறிக்கை விடுத்திருந்தது.


"கேரளா, தெற்கு தமிழ்நாடு, லட்சத்தீவு, கர்நாடகா, கோவா, ஆந்திரா, ஒடிஷா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் ஸ்வெல் அலைகளோடு கூடிய கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படலாம். மறு அறிவிப்பு வரும்வரை ஆரஞ்சு எச்சரிக்கை தொடரும்" என்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


ஏப்ரல் 26ம் தேதி இந்தியாவிலிருந்து பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட காற்றின்மூலம் இந்த ஸ்வெல் அலைகள் தோன்றியிருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்துக்கு வங்காள விரிகுடா பகுதி சீற்றம் கொண்டதாக இருக்கும் என்றும் INCOIS அமைப்பு தெரிவித்திருக்கிறது.


அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் எந்த கடற்பகுதியிலும் கடலுக்குள் இறங்குவது, நீச்சலடிப்பது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும். அதுவே கள்ளக்கடலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் வழி.



Picture : Thomson Learning Inc. 

🌊


EMIS வலைதளத்தில் மாணவர்களின் Mobile எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?

EMIS வலைதளத்தில் மாணவர்களின் அலைபேசி எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?



 How to Verify / Change Students Mobile Number in EMIS Website?




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...




  +2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...


 அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.  +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.


இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்


https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e   


பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை அன்று நடைபெறும்.


நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:

• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)

• ஆதார் அட்டை ((Original + Xerox copy)

• Transfer Certificate – TC (Original + Xerox copy).        


மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக நடைபெற்ற ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டத்தின் முக்கிய விவரங்கள்...

 

மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக நடைபெற்ற ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டத்தின் முக்கிய விவரங்கள்...


 இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது..


 முக்கிய விவரங்கள்:


1. ஓய்வூதியம் மாதம் 62500 கீழ்.... வருடத்திற்கு 7 லட்சத்து ஐம்பதாயிரம்  ரூபாய்க்கு கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு... புதிய திட்டத்தின் கீழ் வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

2. மாதம் ரூபாய் 62501 க்கு மேல்... வருடத்திற்கு ஏழு லட்சத்தி 50 ஆயிரத்து ஒன்றுக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.

3. இதன்படி மூன்று லட்சத்திற்கு மேல் ஆறு லட்சத்திற்குள் 5%

4. ஆறு லட்சத்துக்கு மேல் 9 லட்சம் வரை 10%

5. ஒன்பது லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீதம்

6. 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 சதவீதம்

7. இவ்வாறு கூடிக்கொண்டே போகும்

8. அனைத்து ஓய்வூதியம் பெறும் அலுவலர்களும்.. பான் நம்பர்... ஆதார் நம்பர்.. ரேஷன் கார்டு.. உடனடியாக இணைக்கப்பட வேண்டும்.

9. இணைக்கவில்லை எனில் இந்த மாத ஓய்வூதியம் கிடைக்கப் பெறாது.

10. அனைவரும் "களஞ்சியம் ஆப்" டவுன்லோட் செய்து ஓய்வூதிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

11. மேலும் பான் நம்பரும் இணைத்துக் கொள்ளலாம்.

12. தெரியாத அலுவலர்கள் மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூல அலுவலகத்தை அணுகி பான் நம்பரை இணைத்துக் கொள்ளலாம்.

13. குடும்ப ஓய்வூதிய காரர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

14. பான் எண் இணைக்க இந்த மாதம் பத்தாம் தேதி கடைசி நாள் ஆகும்..

15. வருமான வரி பிடித்தல் செய்வதற்கு இரண்டு முறைகள் உள்ளன ஒன்று  பழைய முறை.

16. புதிய முறை இரண்டாவது முறையாகும்.

17. புதிய முறையில் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியம்.+ அகவிலைப்படி + மருத்துவ படி.. இதன் கூட்டுத்தொகை மாதம் ஒன்றிற்கு ரூபாய் 62,500  க்கு மேல் இருப்பின் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.. வேறு எந்த கழிவுகளும் கிடையாது..

18. ரூபாய் 62,500 க்கு கீழ் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் இரண்டாவது முறையே சிறப்பானதாகும்...

19. மாதம் ரூபாய் 62,500 க்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் பழைய முறையா புதிய முறையா என்று ஆலோசித்து அதற்கேற்ப வருமான வரி பிடித்த முறையில் தேர்வு செய்து கொள்ளலாம்..

20. இந்த செய்தியை படிக்கும் ஓய்வூதியதாரர்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ பான் எண்ணை இணைக்காவிடில் உடனடியாக இணைக்க செய்யுங்கள்...


          நன்றி..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...