கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி...


தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி...


மத்திய அரசில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?


மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்ற வகையில் வரவேற்கத்தக்கது.


தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியில் சேர்ந்த சுமார் 23 லட்சம் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, மத்திய அரசுப் பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பிற படிகளில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும். மத்திய அரசும் அதே தொகையை செலுத்தும். மத்திய அரசு ஊழியர் 60 வயதில் ஓய்வு பெறும் போது, அவரது கணக்கில் உள்ள முதிர்வடைந்த தொகையில் 40 விழுக்காட்டையும், 60 வயதுக்கு முன்பாக ஓய்வுபெறுவோர் 80 விழுக்காட்டையும் காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தி ஓய்வூதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் எவ்வளவு ஊதியம் வழங்கப் படும்? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தான் புதிய ஓய்வூதிய முறையின் பெரும் குறையாகும்.


• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!

• https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29


ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுவோர் அனைவருக்கும் அவர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சாராசரி ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஊதியமாக வழங்கப்படும். குறைந்தது பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு  மாதம் ரூ.10,000 உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியர்கள் உயிரிழ்ந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது வாழ்விணையருக்கு வழங்கப்படும். அதே நேரத்தில்  பணியாளர்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றாக முடியாது. ஆனால், புதிய ஓய்வூதியத்துடன் ஒப்பிடும் போது சிறந்தத் திட்டம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது தான் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.


மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்ட நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? என்பது தான் எனது வினா. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. அதன்பின் 03.08.2017-ஆம் தேதி அமைக்கப் பட்ட டி.எஸ்.ஸ்ரீதர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது.  ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதியைக் கூட மதிக்காமல், கடந்த 2022&ஆம் ஆண்டு மே 7&ஆம் நாள் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி,ஆர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த  வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார். அதன்பிறகு வந்த நிதியமைச்சரோ, தமிழகத்தின் நிதிநிலைமை மேம்பட்ட பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வோம் என்று  கூறி வருகிறார். இது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்றழைக்கலாம் என்பதற்கு ஒப்பானதே.


தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ&ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போதிலும் அசைந்து கொடுக்க தமிழக அரசு  மறுக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது அல்ல. கடந்த இரு ஆண்டுகளில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாலயப் பிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம். ஆனால், அதை செய்ய திமுக அரசுக்கு மனம் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களில் அரசு ஊழியர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாது.


வாழ்நாளில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை அரசுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசு ஊழியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும்  திமுக அரசுக்கு உண்டு. இந்த இரண்டையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.




01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...



மத்திய அரசால் 01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...



>>> PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த தகவல்கள்...


ஒருமித்த ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...


25 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% மாத ஓய்வூதியமாக வழங்கிடும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்...


புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு


கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு.


25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்,  ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாகப் பெற முடியும்


ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.


இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு..


50% ஓய்வூதியத்தை உறுதி செய்தது மத்திய அரசு...


ஒருமித்த ஓய்வூதிய திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...


25 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% மாத ஓய்வூதியமாக வழங்கிடும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்...


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில் ‛‛ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு'' மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், நட்டா, அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியது, ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டம் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஒய்வூதியத் திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் ஒய்வுக்கு முன்பாக சிறு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.


மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகப் பெற்றுக்கொள்ளலாம். பணியின் போது மத்திய அரசு ஊழியர்கள் இறந்து விட்டால், குடும்ப ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 சதவீத ஒய்வூதிய பலனை அடைய முடியும். இதன் மூலம் 23 லட்சம் ஒய்வூதியர்கள் பலனடைவர்.


தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்பையும், மத்திய அரசு 14 சதவீத பங்களிப்பையும் வழங்குகிறது. புதிய ஒய்வூதிட்டத்தின் கீழ் மத்திய அரசு பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் . இத்திட்டம் 2025 ம் ஆண்டு ஏப்ரல் 01ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



UPS - Unified Pension Scheme -  Government of India - Press Information Bureau - செய்தி வெளியீடு...


>>> Government of India - Press Information Bureau - செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



.



>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வெழுத வாய்ப்பு - சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரின் அறிவிப்பு, நாள் : 23-08-2024...



15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வெழுத வாய்ப்பு - சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரின் அறிவிப்பு, நாள் : 23-08-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம் - 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்கள் கூட தேர்வெழுத வாய்ப்பு அறிவிப்பு....



அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி கேன்சல் ஆகிவிடும் எனும் நடைமுறை பின்பற்றப்படும் சூழலில், தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கும் வாய்ப்பு...



வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்...



வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்...




The application will soon be launched with modern features for parents to know all the details of students including attendance, exam results...





22-08-2024 (வியாழன்) அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த HIGH SCHOOL HM (1212) TO PG CONVERSION வழக்கின் விவரம்...

 


HIGH SCHOOL HM (1212) TO PG CONVERSION CASE:-

(இது TET பதவி உயர்வு வழக்கு அல்ல)


22-08-2024 (வியாழன்) அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


புதியதாக வழக்கில் இணைந்தவர்களின் பெயர்களை, அதாவது அவர்களின் இடையீட்டு மனுவை ( Interlocutory application- IA ) MAIN CASE ல் இணைத்து வழக்கமாக விசாரித்து வந்த CHAMPER BENCH ல் இல்லாமல் REGULAR BENCH ல் இணைத்து விசாரிக்கும்படி ஒரு ஆணையை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள். மற்றபடி வேறு எந்த விசாரணையும் நடைபெறவில்லை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் வழக்கும், வழக்கின் தன்மையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


வழக்கு மீண்டும் 9/9/2024 அன்று விசாரணைக்கு வருகிறது.




தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - பத்திரிகை செய்தி...

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - பத்திரிகை செய்தி...



கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1276, நாள் : 23-08-2024...



கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை – பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விளக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1276, நாள் : 23-08-2024...



>>>  தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1276, நாள் : 23-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Disciplinary action against panchayat union middle school teacher engaged in political party work

அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை... அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட சேலம் அரியா...