கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Proceedings of the Joint Director of Elementary Education seeking full details of teachers who have pursued higher education without obtaining Departmental Permission Rc.No: 023458/ E1/ 2024, Dated: 24-09-2024...



துறை அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரம் கோரி தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 023458/ இ1/ 2024, நாள்: 24-09-2024...


Proceedings of the Joint Director of Elementary Education seeking full details of teachers who have pursued higher education without obtaining Departmental Permission Rc.No: 023458/ E1/ 2024, Dated: 24-09-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


No order issued to deduct one day salary in connection with one-day symbolic strike by primary teachers - WhatsApp information of Joint Director, Elementary Education (Administration)...

 

 டிட்டோஜாக் - தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மேற்கொண்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக ஊதியம் நிறுத்தம் சார்ந்து எந்த ஆணையும் வழங்கப்படவில்லை - தொடக்கக்கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களின் வாட்ஸ் அப் தகவல்...


One day salary deduction for teachers who went on strike on September 10 - Daily News...


 செப்டம்பர் 10ல் வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் - நாளிதழ் செய்தி...



TETOJAC announces temporary postponement of siege strike - TETOJAC high level committee members interview...

 டிட்டோஜாக் அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...



>>>> TETOJAC அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளதாக டிட்டோஜாக் உயர் மட்ட குழு உறுப்பினர் காமராஜ் பேட்டி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



டிட்டோஜாக் அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - டிட்டோஜாக் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பேட்டி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24-09-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24-09-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் பொருட்பால்

அதிகாரம் :நட்பு ஆராய்தல்

குறள் எண்:792

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

பொருள்: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.


பழமொழி :
தவளையும் தன் வாயால் கெடும்.

Know when to keep quiet.


இரண்டொழுக்க பண்புகள் : 

* தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.                             

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும்.  எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.


பொன்மொழி :

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வது தான் உங்கள் வளர்ச்சியின் அடையாளம். ----காமராஜர்


பொது அறிவு :

1. இலங்கையின் புதிய ஜனாதிபதி யார்?

விடை : அநுர குமார திஸ்ஸநாயக.

2. இந்தியாவின் மிக பெரிய நதி எது.?

விடை : கங்கை


English words & meanings :

aching-வழியேற்படுத்தும்,

arduous- கடினமான


வேளாண்மையும் வாழ்வும் :

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்.


செப்டம்பர் 24

2014 – மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.


நீதிக்கதை

கஷ்டம்

பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா  தன்னுடைய முதுமையின் காரணமாக ஒரு நாள் உடல் வலியால் அவதிப்பட்டபோது தன்னுடைய மருத்துவருக்கு போன் செய்தார்.

தனக்கு உடலின் வலி மிகவும் அதிகமாக இருப்பதாகவும், விரைவாக தனது வீட்டிற்கு வரும்படியும் அழைத்தார்

மருத்துவர், தனது மருத்துவமனையில் நிறைய நோயாளிகள் இருப்பதாகவும் அதனால் தன்னால் தற்போது வர இயலாது என்றும் கூறினார்

மேலும், பெர்னாட்ஷாவை தன்னுடைய மருத்துவமனைக்கு வருமாறு  கூறினார்

அதற்கு பெர்னாட்ஷா "தன்னால் எழுந்து நிற்க கூட முடியவில்லை, தனக்கு ஒரு காபி கூட தயாரிக்க இயலவில்லை,  சிறிது தூரம் கூட நடக்க முடியவில்லை" என்று கூறினார்.

எனவே மருத்துவரும்  வீட்டிற்கு வந்தார். வீட்டின் மேல் மாடியில் இருந்த பெர்னாட்ஷாவை பார்க்க மாடிப்படி ஏறி வந்து சேர்ந்தார். முதியவர் ஆன மருத்துவருக்கு மூச்சிரைக்க,நெஞ்சை பிடித்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

அதை பார்த்த பெர்னாட்ஷா உடனடியாக மருத்துவதற்கு காப்பி தயாரித்துக் கொண்டு வந்து பருக கூறினார்.

காபியை பருகிய  மருத்துவர் தன்னுடைய பில் புத்தகத்தை எடுத்து 300 ரூபாய்க்கு பில் எழுதி பெர்னாட்ஷாவிடம் கொடுத்தார்.

அதைப் பார்த்த பெர்னாட்ஷாவிடம்  "எனக்கு மருத்துவம் பார்க்க வந்த தங்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட நான்தான் பணிவிடை செய்தேன் தற்போது எனக்கே பில்  கொடுக்கிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர் தங்களுக்கு வைத்தியம் பார்த்ததற்கான தான் இந்த தொகை என்றார்.

மேலும் மருத்துவர் தொடர்ந்து  "போனில் தங்களால் என்னென்ன செய்ய இயலாது என்று கூறினீர்களோ அதெல்லாம் தற்போது செய்தீர்கள் அல்லவா? தங்களால் நடக்க முடியாது என்றீர்கள் எனக்காக நடந்து சென்றீர்கள். தங்களால் காபிக்கு போட்டு குடிக்க  முடியவில்லை என்றீர்கள்.ஆனால் எனக்காக காபி தயாரித்து கொண்டு வந்தீர்கள் மேலும் சிறிது நேரம்  நிற்க முடியவில்லை என்றீர்கள். ஆனால் தற்போது  அரை மணி நேரமாக நின்று கொண்டு தான் இருக்கிறீர்கள் என்று கூறினார்.

மேலும் மருத்துவர்,"அப்போது தங்களுடைய கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள் உங்களால் முடியவில்லை தற்போது என்னுடைய கஷ்டத்தை பார்க்கும் பொழுது உங்களுடைய கஷ்டம் குறைந்து விட்டது" என்றார். 


இன்றைய செய்திகள்

24.09.2024

* மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வங்கி சார்பில் ஆயுள் காப்பீட்டுதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

* இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினாவில் அக்டோபர் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச காட்சி நடைபெற உள்ளது.

* பண்டிகைக் காலம் நெருங்கி வருகிற நிலையில், ரயில்களில் டிக்கெட் சோதனைக்கு என்று சிறப்புக் குழுவை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவு.

* இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திஸ்ஸநாயக

* கலப்பு தற்காப்பு கலை போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங்.

* நியூசிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி: பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக புகார்.


Today's Headlines

* The bank has introduced a life insurance scheme for the employees of the Municipal Transport Corporation.

* Light tremors were felt in Tirunelveli and Tenkasi districts along the Western Ghats.

* To celebrate the 92nd anniversary of the Indian Air Force, a grand air show will be held at the Chennai Marina on October 6.

* The festive season is approaching Meanwhile, the Ministry of Railways has ordered the formation of a special committee to check tickets in trains.

* Anura Kumara Dissanayake was sworn in as the 9th President of Sri Lanka.

* Sangram Singh is an Indian wrestler who  won the mixed martial arts competition.

* New Zealand women's team fined by ICC for taking too long to bowl.

Prepared by

Covai women ICT_போதிமரம்


TETOJAC talks in the morning - One day salary deduction announcement in the evening video meeting - Can the primary education sector turn into a riot sector? - What is the Honorable Minister of Education going to do? - Teacher's Federation Report...


காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை - மாலையில் காணொளி கூட்டத்தில் ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு - தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா? - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்? - ஆசிரியர் கூட்டணி அறிக்கை...


 *மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்?..*


*காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை!.. மாலையில் காணொளி கூட்டத்தில் வேலைநிறுத்தம்.. ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு!.. தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா?..*


*AIFETO...23.09.2024.*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண் 36/2001.*


 *மாண்புமிகு பள்ளிகளுக்குறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 23.9.2024 இன்று நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு தலைவர்கள் கருத்தொருமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.*



 *இன்று காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்துப் பதிவினை நாளை மாலை விரிவாக  வெளியிட இருக்கிறோம்!..*



 *இன்று மாலையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற காணொளி கூட்டத்தில் பத்தாம் தேதி டிட்டோஜாக் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியப் பிடித்தத்தை இந்த மாதமே பிடித்தம் செய்து அறிக்கை அளித்திட வேண்டும் என்று அழுத்தமான குரலில் தெரிவித்துள்ளார்.*



 *பேச்சுவார்த்தையில் விவாதம் செய்தவாறே தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் காணொளிக் கூட்டத்திலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ₹5400/- தர ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடை இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரெல்லாம் ₹5400/-  தர ஊதியம் பெற்றிருக்கிறார்களோ அவர்களுடைய பணிப்பதிவேட்டை எடுத்துக்கொண்டு நாங்கள் வரச் சொல்கின்ற நாளில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.*



 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழுத்தத்தின் பெயரில்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பதை நாம் அறிகிறோம்!..  சென்ற வாரம் வரை அரசாணை 243 இல் திருத்தம் செய்ய முடியாது என்று கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தேவையான திருத்தத்தை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் வெளியிட  உள்ளதாக தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களும் 100% அதில் உறுதியாக உள்ளார் என்பதை அறிகிறோம்.*


 *இன்றைய பேச்சுவார்த்தையில் நடைபெற்ற எல்லாவற்றையும் தனிப்பதிவாக இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு வெளியிட உள்ளோம்.  போராட்டத்தினை ஒத்தி வைத்தது தவறு என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் நினைக்கிறாரா? இல்லை அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்று நினைக்கிறாரா?..*


 *பரிந்துரை செய்ய வேண்டிய தொடக்கக் கல்வி இயக்ககம்  எதிர்க்கட்சி வழக்கறிஞர்களைப் போல் செயல்படுவது முறையுமல்ல; மாண்புமல்ல; என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.*



 *அவரவர்களுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை எல்லாம் மனம் போன போக்கில் பதிவு செய்திட வேண்டாம்!.. 100% உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதை உங்கள் மீது கொண்டுள்ள உரிமை உறவுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.*



 *சில நேரங்களில் கூட்டமைப்புகள் எடுக்கிற முடிவுகள் பாதுகாப்பான முடிவாகத்தான் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். வெளிப்படையாக எல்லாவற்றையும் பதிவு செய்ய இயலாது!.*


 *தனிப்பதிவில் நடந்தவற்றை தொகுத்து வெளியிட உள்ளோம். அதுவரை பொறுத்திருப்போம்!..*



*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் தனிக்கவனம் மேற்கொண்டு தொடக்கக்கல்வி இயக்ககத்தின் முடிவுக்கு தீர்வு காண வேண்டுகிறோம்!..*



*இயக்கத்தின் மூத்தத் தலைவர்...*


*அண்ணன் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com. தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5.*


TETOJAC Talks - Hon'ble School Education Minister's facebook post...


டிட்டோஜாக் பேச்சுவார்த்தை - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் முகநூல் பதிவு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...