சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்...
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு.
சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்...
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு.
குடமுழா Kudamuzhaa - தமிழர்களின் அழிந்து போன இசைக் கருவி!!
கி.பி 1-ம் நூற்றாண்டு.
இந்த குடமுழுவம் இசைக் கருவி, தேவாரத்தில் "குடமுழா" என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து. ஒரு காலத்தில் சோழ மண்டலத்தில் பெருவாரியாக இந்த அரிய இசைக் கருவி பாவனையில் இசைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது..
தேவாரத்திற்கு முந்திய கி.பி முதலாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்திலும் இந்த "கடமுழுவம்" இசைக்கருவி இசைக்கப்பட்டிருக்கிறது...
இந்த இசைக் கருவி தற்போது,
ஈழம் மற்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது!!திருவாரூர் தியாகராசர் மற்றும் திருத்துறைபூண்டி மருந்தீசுவரர் கோயில்களில் மட்டுமே இந்த அரிய இசைக்கருவியான குடமுழுவத்தை காண முடியம்.
வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமான குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும்.
வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வாயிலிலும் வெவ்வேறு விதமான பண் (இசை) எழுப்பப்படும்.
சங்க இலக்கியங்கள்
குடமுழுவத்தை பற்றி ஏராளமான பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.
மேலும், பாேர் வீரர்களின் தோல் வலிமைக்கும், பலாப்பழத்திற்கும், பனைமரத்தின் அடிக்கும் இக் கருவியை ஒப்பிட்டு பல சங்ககால பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
மறந்துபோன இசைக்கருவிகள் - பஞ்சக குடமுழா
மறந்துபோன இசைக்கருவிகள்
பஞ்சமுக வாத்தியம் (அ) பஞ்சக குடமுழா
பஞ்சக குடமுழா (அ) பஞ்சமுக வாத்தியம்
பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழரின் வாழ்வியல் முறைமை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் இசையுடன் பிணைந்தே இருந்து வந்துள்ளது.பல்வேறு வகை இசைக்கருவிகளை நம்மவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.தோல்,நரம்பு,காற்று என அவற்றின் இயக்க முறைமை பொறுத்து வகைப்படுத்துவர். பஞ்சக குடமுழா ஐந்து முகங்களைக் கொண்ட ஒருவகை தோல் இசைக் கருவியாகும்.இதன் அடிப்பாகம் தகுந்த சீரிசை உருவாக்கும் வண்ணம் தாமிரம் மற்றும் வெண்கலம் கலந்த கலவையினால் உருவாக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முகமும் வெவ்வேறு ஒலியெழுப்புவது சிறப்பு. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு ஒரு பக்கம் திறந்த ஆர்கன் குழாய் போன்று செயல்படும்.கழுத்தின் உயரத்திற்கேற்ப சப்தத்தின் அதிர்வெண் வேறுபடும்.
கோவில்களில் சிவபெருமானின் நிருத்த சிற்பங்களுக்கு கீழமர்ந்திருக்கும் பூத கணங்களில் ஒன்று குடமுழா வாசித்துக் கொண்டிருக்கும்.ஐந்திணைகளில் மருத நிலத்திற்குரிய கருப்பொருளாக குடமுழா உள்ளது.
நிருத்தம் -ஒரு வகை நடனம்
இவ்விசைக்கருவி பற்றிய குறிப்புகள் சங்ககாலந் தொட்டே இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் மாதவியின் நடனத்தின் போது யாழ், குடமுழா,மத்தளம் ஆகியவை இசைத்ததாக கூறப்பட்டுள்ளது. இன்றளவும் திருவாரூர் கோவிலில் பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்படுகிறது.
சிவபெருமானே இவ்விசைக்கருவியை வாசிப்பதாய் அமைந்த சிற்பம்.
சிவபெருமான் கரங்களில்
இடம்: சிதம்பரம்
1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2ஆம் பருவத்திற்கான இணையவழி பயிற்சி குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்...
எண்ணும் எழுத்தும் - 1 - 5ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் (14.10.2024 முதல் 18.10.2024 வரை) பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்...
Ennum Ezhuthum - Term 2 Online Training to 1 - 5th Standard Handling Teachers - SCERT Director's Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
👆👆👆👆👆👆
* எண்ணும் எழுத்தும் பயிற்சி
* பருவம் 2 ( 2024 )
* 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்!
* இப்பயிற்சியானது 14.10.2024 முதல் 18.10.2024 முடிய
https://tntp.tnschools.gov.in/login
இணையதளத்தின் மூலம் நடைபெறும்.
கன மழையை முன்னிட்டு அனைத்து துறை அரசுப் பணியாளர்களுக்கும் 15-10-2024 மாலை 4 மணிக்கு அலுவலகத்தை விட்டுச் செல்ல முன் அனுமதி - தலைமை செயலாளர் கடிதம்...
In view of heavy rain, all department government employees are given advance permission to leave the office at 4 pm on 15-10-2024 - Chief Secretary's letter...
>>> தலைமைச் செயலாளரின் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக் கல்வி - 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் - விருப்பம் தெரிவித்த 409 ஆசிரியர்கள் மற்றும் 131 உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 15.10.2024 அன்று நடைபெறுதல் - முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-10-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவரகள் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன? 👇
▪️ வரும் 18ம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்
▪️ தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
▪️ வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
▪️ மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
▪️ பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
▪️ உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
▪️ தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
▪️ முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும்.
▪️ நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
▪️ ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
▪️ மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
▪️ அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
▪️ மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
▪️ முட்டுக்காடு, பக்கிங்ஹாம் கால்வாய் - கலைஞர் கருணாநிதி பாலம் அருகில், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர்வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும்.
▪️ மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.
▪️ பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
▪️ மீட்புப் பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள் JCB இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
▪️ தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.
▪️ பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய அறிவுரைகள்
▪️ விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
▪️ தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
▪️ முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
▪️ கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.
▪️ அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
▪️ கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் 25.10.2024 வரை நீட்டிப்பு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...