கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Vande Bharat Express doors not open, passengers shocked

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கதவுகள் திறக்கப்படாததால் பயணிகள் அதிர்ச்சி


Vande Bharat Express doors not open, passengers shocked



நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கதவு திறக்கப்படாததால், திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் பயணிகள் பெரிதும் தவித்தனர். 


கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, வேறொரு ரயில் மூலம் திண்டுக்கல் அனுப்ப ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 08-12-2024 அன்று ரெயில் திண்டுக்கல் வந்தபோது சி4, சி5 பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்தப் பெட்டியில் வந்த திண்டுக்கல் சேர்ந்தவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் இறங்க முடியாமல் தவித்தனர். அதற்குள் ரயிலும் புறப்பட்டு சென்றது.


இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாயசங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். அதற்குள் ரெயில் நீண்ட தூரம் சென்று விட்டது. இதையடுத்து பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரி அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறினார்.



வேறு வழியின்றி பயணிகளும் சம்மதித்தனர். இதையடுத்து கொடைரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ரயில் கிளம்பி சென்றது. கொடைரோடு ரெயில் நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயணிகளை துாத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற ரெயிலில் ஏற்றி திண்டுக்கல் அனுப்பி வைத்தனர்.


Accused in financial fraud cases may be allowed to travel abroad with conditions - High Court



நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம் - உயர் நீதிமன்றம்


Accused in financial fraud cases may be allowed to travel abroad with conditions - High Court 


வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில், பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி சேஷசாயி, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமை என்பது வளத்துடன் வளர்வது.


விடுமுறை தொடங்கி தொழில் மேம்பாடு, கல்வி, புனிதப் பயணம் ஆகிய காரணங்களுக்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு. குற்ற நீதி பரிபாலனம், குற்றம்சாட்டப்பட்டவரின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டுமே தவிர, அவரது தனிப்பட்ட வாழ்வுரிமையை பாதிக்க்கக் கூடியதாக இருக்கக் கூடாது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்ற அச்சம் சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகளுக்கு வரக்கூடாது. அவர்கள் நாடு திரும்பக் கூடிய அளவில் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை இருக்க வேண்டும்.


ஒரு சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்து விட்டதால் தான் ஒவ்வொரு வழக்கிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வெளிநாடு செல்லும் உரிமையை வழங்குவதுடன், அவர் நாடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் நிபந்தனைகளை விதிக்கலாம். லுக் அவுட் நோட்டீசுக்கு மாற்று நடவடிக்கைக்கு இறுதி வடிவம் வழங்கும் வரை, தனி நபரின் பயண உரிமையை பாதிக்காத வகையில் லுக் அவுட் சுற்றறிக்கை நீடிக்கலாம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால், தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.



இந்த மனுக்களை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள், குறிப்பிட்ட தொகையையோ, அல்லது அதற்கு ஈடான சொத்துக்களை டெபாசிட் செய்யும்படி நிபந்தனை விதிக்கலாம். உறவினர் அல்லது தொழில் பங்குதாரர்களின் பாஸ்போர்ட்டை விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் நாடு திரும்பிய பிறகு அதை திருப்பிக்கொடுக்கலாம். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைத்து வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் இருவரும் தலா 10 லட்ச ரூபாய்க்கு சொந்த பிணையும், அதே தொகைக்கு இரு நபர் பிணையும், உறவினரின் பாஸ்போர்ட்டை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென நிபந்தனை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைத்து இருவரும் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


New features introduced in WhatsApp

 

வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்கள்


New features introduced in WhatsApp


வாட்ஸ்ஆப்பில் 3 புதிய அம்சங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் வசதிக்காக சாட் செய்யும்போது கூடுதல் அம்சமாக ‘டைப்பிங் இண்டிகேட்டர்’ என்ற வசதியை மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்ஆப்பில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.


வாட்ஸ்ஆப் குரூப்கள் மற்றும் தனி நபர்கள் இடையேயான உரையாடல்களின்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் டைப் செய்து கொண்டிருந்தால் அதை அறிந்துகொள்ளும் விதமாக, டைப் செய்யும் நபரின் முகப்பு படம் “ ... ” என்ற அடையாளத்துடன் காண்பிக்கப்படும். இதன்மூலம் வாட்ஸ்ஆப் குழுக்களில் டைப் செய்யும் நபரை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.


வாட்ஸ் ஆப்பில் டிராஃப்ட் மெசேஜ் என்கிற வசதியும் வர உள்ளது. இதன் மூலம், ஒருவர் டைப் செய்து முடித்தும், அதை உடனடியாக அனுப்பாமல் பின்னர் அனுப்ப வசதியாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்சன் வசதியும் வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. இதன்மூலம், வாட்ஸ் ஆப்பில் ஒலி வடிவில் அனுப்பப்படும் மெசேஜ்களை, எழுத்து வடிவில் மாற்றி பயனர்கள் படித்துக்கொள்ள முடியும்.


Sanjay Malhotra appointed as RBI Governor for next 3 years


ஆர்.பி.ஐ. ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்


Sanjay Malhotra appointed as Governor of Reserve Bank of India for next 3 years


இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவு; சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11 முதல் 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார்.


இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை, இப்பதவியில் நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாசின் பதவிக்காலம் வரும் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைய உள்ள நிலையில், புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.


1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, ராஜஸ்தான் கேடர் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தானில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். வருவாய் மற்றும் வரி சார்ந்த துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா, ஐஐடி கான்பூரில் படித்தவர். அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் (Public Policy) முதுகலை பட்டம் பெற்றவர்.


மேலும், அவர் வருவாய்த் துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, நிதி சேவைகள் துறை செயலாளராக இருந்தார். குறிப்பாக, கடந்த 30 ஆண்டுகளாக மின்சாரம், நிதி, வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளில் கொள்கைகளை வடிவமைத்து, மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் நற்பெயரை பெற்றவர்.



School Working day on Next Saturday (21.12.2024) - Revised Calendar for the 2024-2025 Academic Year - Director of School Education Proceedings


 வருகிற (14.12.2024) சனிக்கிழமை அன்று விடுமுறை. அடுத்த சனிக்கிழமை (21.12.2024) அன்று பள்ளி வேலை நாள் - 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


School Working day on Next Saturday (21.12.2024) - Revised Calendar for the 2024-2025 Academic Year - Director of School Education Proceedings 


 


2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு - இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளும் (21.12.2024 & 22.03.2025 தவிர) விடுமுறை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-10-2024...



Release of Revised Calendar for Academic Year 2024-2025 - All Saturdays (Except 21.12.2024 & 22.03.2025) Holiday - Proceedings of Director of School Education, Dated : 10-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Students who have lost their mark certificates due to Fengal storm can apply for certificates free of cost - School Education Department Notification - Application Format


 ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் சான்றிதழ் கோரி அரசு தேர்வுகள் இயக்ககத்தில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - விண்ணப்ப படிவம் வெளியீடு



Students who have lost their mark certificates due to Fengal storm can apply for certificates free of cost - School Education Department Notification - Application Format 


 மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம்  மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.


ஃபென்சல் புயலின் காரணமாக மதிப்பெண் சான்றிதழ்கள் இழந்த மாணவ / மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி குறிப்பு & விண்ணப்பப் படிவம் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





TAMIL NADU STATE COMMISSION FOR SCHEDULED CASTES AND SCHEDULED TRIBES - APPOINTMENT

 TAMIL NADU STATE COMMISSION FOR SCHEDULED CASTES AND SCHEDULED TRIBES - APPOINTMENT


பட்டியல் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மாநில ஆணையம் - வேலைவாய்ப்புகள்


Press Release No: 2171

PRESS RELEASE

Date:09.12.2024

TAMIL NADU STATE COMMISSION FOR SCHEDULED CASTES AND SCHEDULED TRIBES

APPOINTMENT

Applications are invited from the eligible candidates for the below posts in the Tamil Nadu State Commission for Scheduled Castes and Scheduled Tribes for a tenure of three years;

A .Vice Chairperson-

Prominent person belonging to Scheduled Castes or Scheduled Tribes,who has worked for the welfare of Scheduled Castes and Scheduled Tribes.

The age should not exceed 65 years.

B.Four Members

(1) Two shall belong to any of Scheduled Castes,

(2) One shall belong to Scheduled Tribes,

(3) One shall be a prominent person having special knowledge in matters

relating to Scheduled Castes and Scheduled Tribes.

The age should not exceed 65 years

Note - The eligible candidate should submit their applications (with details of their bio data, achievements and nature of works done for welfare of Scheduled Castes and Scheduled Tribes on or before 24.12.2024 addressed to:

The Secretary to Goverment,

Adi Dravidar and Tribal Welfare Department,

Secretariat, Chennai -600 009.

(Email:adisec@tn.gov.in)

Secretary to Government

Adi Dravidar & Tribal Welfare Department

Issued By: - DIPR, Secretariat, Chennai-9



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...