கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Education Officers impose lorry rent on Teachers' - Daily News




லாரி வாடகையை ஆசிரியர்கள் தலையில் கட்டும் கல்வி அதிகாரிகள் - நாளிதழ் செய்தி 


Education Officers impose lorry rent on Teachers' - Daily News


அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை வினியோகம் செய்ய லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை அரசு ஒதுக்குகிறது.


எனவே, *ஆசிரியர்கள் சொந்த செலவில் பாடப்புத்தகம் எடுக்க வேண்டாம் என, ஆசிரியர் சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த உண்மை தெரியாமல், பல இடங்களில் ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் கல்வி அதிகாரிகள், பாடப் புத்தகங்களை எடுத்துச் செல்ல வலியுறுத்துகின்றனர்.*


தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்குகிறது. 


*நேரடியாக அந்தந்த பள்ளிகளுக்கே வழங்க லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை, மாவட்ட வாரியாக அரசு ஒதுக்கீடு செய்கிறது.*


*தற்போது, 2024- - 25ம் கல்வி ஆண்டுக்குரிய மூன்றாம் பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் லாரி வாடகைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.*


ஆனால், *பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர்கள் சொந்த செலவில் வாகனத்துடன் வந்து புத்தகத்தை எடுத்துச் செல்லுமாறு கல்வி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.* 


இது, ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


*லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியாக மாவட்டத்திற்கு, 15 லட்சம் ரூபாய் வரை அரசு ஒதுக்கியுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட புத்தக வினியோகத்திற்கும், 12 - 15 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.*


ஆனால், *கல்வி அதிகாரிகள் இந்த செலவை ஆசிரியர்கள் மீது சுமத்துகின்றனர். எனவே, கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களிடம் தங்களது சொந்த செலவில் புத்தகம் எடுக்குமாறு சொன்னால் புறக்கணிக்குமாறு தெரிவித்துள்ளோம்.*


இவ்வாறு அவர் கூறினார்.






State Level Thirukkural Quiz Competition Results

 

 மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி முடிவுகள்


State Level Thirukkural Quiz Competition Results


முதலிடம் - திருப்பூர் 


 இரண்டாம் இடம் - தர்மபுரி


மூன்றாமிடம் - திருநெல்வேலி


நான்காம் இடம் - விருதுநகர் 


 ஐந்தாம் இடம் - தேனி மாவட்டம்


  ஆறாம் இடம் - கரூர் மாவட்டம்


விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் 28-12-2024 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் திருப்பூர் மாவட்டம் கோடாங்கி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு. கணேசன், கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு ஆனந்த், கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் திரு. சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவானது மாநில அளவில் முதலிடம் பெற்று ரூபாய் 2 லட்சம் ரொக்க பரிசினைப் பெற்றுள்ளனர். வாழ்த்துகள் 💐💐💐 

முதன்மைக்கல்வி அலுவலர், திருப்பூர்



January 2025 - School Calendar



ஜனவரி 2025 - பள்ளி நாட்காட்டி


January 2025 - School Calendar


01-01-2025 - புதன் - ஆங்கில புத்தாண்டு


02-01-2025 - வியாழன் - மூன்றாம் பருவம் வகுப்புகள் தொடக்கம்


04-01-2025 - சனி - வார விடுமுறை


05-01-2025 - ஞாயிறு வார - விடுமுறை


11-01-2025 - சனி - வார விடுமுறை


12-01-2025 - ஞாயிறு - வார விடுமுறை


14-01-2025 செவ்வாய் - அரசு விடுமுறை (பொங்கல் விடுமுறை)


15-01-2025 புதன் - அரசு விடுமுறை (திருவள்ளுவர் தினம்)


16-01-2025 வியாழன் - அரசு விடுமுறை (உழவர் திருநாள்)


18-01-2025 - சனி - வார விடுமுறை


19-01-2025 - ஞாயிறு - வார விடுமுறை


25-01-2025 - சனி - வார விடுமுறை


26-01-2025 - ஞாயிறு  (குடியரசு தினம்)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-10-2024...



Revised Calendar for Academic Year 2024-2025 - Proceedings of Director of School Education, Dated : 10-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




TETOJAC State General Body Meeting Resolutions held at Chennai on 28.12.2024

 

28.12.2024 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக்  பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்


TETOJAC State General Body Meeting Resolutions held at Chennai on 28.12.2024


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில்  (28.12.2024 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது கூட்டத்தில் மார்ச் மாதம் ஏழாம் தேதி (07.03.2025) வெள்ளிக்கிழமை கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும்  சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிப்ரவரி 1, 8, 15 போராட்ட ஆயத்த கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


An Aeroplane carrying 181 people crashed in South Korea




 தென் கொரியாவில் 181 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது


An Aeroplane carrying 181 people crashed in South Korea



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



தென் கொரியாவில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.


பாங்காக்கில் இருந்து தென் கொரியா சென்ற விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. 


உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்.


சியோல்,


தென் கொரிய நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்ததில் பயணிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறாது. பாங்காக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் நோக்கி சென்ற போது இந்த விபத்து ஏற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாங்காக்கில் இருந்து 181 பேருடன் புறப்பட்ட விமானம், தென்மேற்கு கடற்கரை விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் இருந்து விலகி வேலியில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


விமானத்தில் இருந்து பயணிகளை அகற்ற மீட்பு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யோன்ஹாப் செய்தி நிறுவனம் இறப்புகளை உறுதி செய்துள்ளது. ஆனால் அவசர அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. மற்ற தென் கொரிய ஊடகங்களும் இதேபோன்ற உயிரிழப்புகளை தெரிவித்துள்ளன.


உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் விமானத்தில் இருந்து அடர்த்தியான கறுப்பு புகையின் வெளியாவதையும், விமானம் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் காட்சிகளை ஒளிபரப்பின.


தென் கொரியா விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: தென் கொரியா விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதை அடுத்து, 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.


தென் கொரியா விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: தென் கொரியா விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதை அடுத்து, 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.


தென் கொரியா விமான விபத்து செய்தி நேரலை புதுப்பிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை காலை தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரைத் தவிர மற்ற 181 பேரில் பாங்காக்கில் இருந்து ஜெஜூ ஏர் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் இறந்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். 


தென் கொரியா விமான விபத்து

தென் கொரியா விமான விபத்து நேரலை: தலைநகர் சியோலில் இருந்து சுமார் 288 கிமீ தொலைவில் உள்ள தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது காலை 9 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்து ஏற்பட்டது. (X/Yonhanp செய்தி நிறுவனம்)


தென் கொரியா விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்திற்கு பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் இரண்டு பணியாளர்களைத் தவிர விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 120 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல என்று விமான நிலைய தீயணைப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ்  தெரிவித்துள்ளது. அமைச்சின் தரவுகளின்படி, ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில் தென் கொரிய விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.


தென் கொரியா விமான நிலையத்தில் நடந்தது என்ன?  விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கிய ஜெஜு ஏர் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, விமான நிலையத்தில் உள்ள சுவரில் மோதியதால் தீப்பந்தமாக வெடித்தது. உள்ளூர் செய்தி நிறுவனங்களால் பகிரப்பட்ட வீடியோக்களில், இரட்டை என்ஜின் விமானம் வெடிப்பில் சுவரில் இடிப்பதற்கு முன், வெளிப்படையான தரையிறங்கும் கியர் இல்லாமல் ஓடுபாதையில் சறுக்குவதைக் காணலாம்.


விமானத்தில் இருந்த அனைவரும் யார்? 

175 பயணிகளில் இரு தாய்லாந்து பிரஜைகளும் அடங்குவதாகவும், மீதமுள்ளவர்கள் தென் கொரியர்கள் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெஜு ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 737-800 ஜெட் விமானம். விபத்தின் உயிர்கள் மற்றும் காரணம் உள்ளிட்ட விவரங்களை விமான நிறுவனங்கள் தேடி வருவதாக விமானச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தென் கொரியாவின் செயல் தலைவர் சோய் சாங்-மோக் முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.


தென் கொரியா பட மூலாதாரம்,Reuters

தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார்.


"இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார்.


உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.


செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார்.


மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது.


முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.


ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


முன்னதாக அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து கடந்த 25-ந்தேதி ரஷியாவின் குரோஸ்னி நகருக்கு 67 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் கஜகஸ்தான் நாட்டின் அக்தாவ் நகரில் அவசரமாக தரையிறங்கும்போது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 38 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 29 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிலையில் அடுத்த சில தினங்களிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Procedure for Downloading and Verification of Teachers' eSR on IFHRMS Website - Proceedings of BEOs, Dated : 26-12-2024

 

 ஆசிரியர்களின் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ IFHRMS இணையதளத்தில் தரவிறக்கம் செய்தல் மற்றும் சரிபார்த்தல் வழிமுறை - வட்டாரக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள், நாள் : 26-12-2024



Procedure for Downloading and Verification of Teachers' Electronic Service Register eSR on IFHRMS Website - Proceedings of Block Education Officers, Dated : 26-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Pongal Gift Package Notification 2025 - TN Government Order


2025-ஆம் ஆண்டிற்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு - ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு


Pongal Gift Package Notification for 2025 to All Rice Family Card Holders - Government of Tamil Nadu orders to provide one kg of rice, one kg of sugar and one whole sugarcane - Press Release No. 2354, Dated: 28-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

  மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...