கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025ஆம் நிதியாண்டிற்கான TPF / GPF Account slip வெளியீடு


2024-2025ஆம் நிதியாண்டிற்கான ஆசிரியர் சேமநல நிதி / வருங்கால வைப்பு நிதி கணக்கீட்டுத் தாள் TPF / GPF Account slip வெளியீடு


வலைதள முகவரி: 

 https://www.agae.tn.nic.in/onlinegpf/





தற்போது வெளியாகி உள்ள 2024-2025ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை (How to Download Teacher Provident Fund Account Slip (TPF Account Slip) / General Provident Fund Account Slip (GPF Account Slip) for the financial year 2024-2025)...


 TPF / GPF Account Slip 


2024-2025ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.


ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை: 


* கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய https://www.agae.tn.nic.in/onlinegpf/ (என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்... 


* தங்களது GPF/ TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்யவும்.


* ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும்.


* அதனை உள்ளீடு செய்தால் தோன்றும் திரையில் Download Account Slip என்பதை Click செய்யவும்.


* Year என்பதில் 2024-2025 தேர்ந்தெடுப்பதன் மூலம் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.



Cut-off மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?



 உயர்கல்வி - கட்-ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?


Higher Education - How to calculate cut-off marks?


மாணவர்கள் அதிகமும் சேரும் பொறியியல் படிப்புக்கு பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு, இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.


இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதுதான் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவு (Vocational) மாணவர்களுக்கு, தொடர்புடைய பாடத்திற்கு நூறு மதிப்பெண்களும் தொழிற் பயிற்சிப் பாடத்திற்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வைச் சேர்த்து 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தனியே கவுன்சலிங் நடைபெறும்.


பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கு நேட்டா (National Aptitude Test In Architecture- NATA) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200க்கு எவ்வளவு எடுத்துள்ளர்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுத் தனியே கவுன்சலிங் நடைபெறும்.


கால்நடை மருத்துவப் படிப்புகள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் கால்நடை மருத்துவப் படிப்பில் (BVSc) சேர விரும்புபவர்கள் உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) படிப்பில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் சேர்த்து 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் பார்க்க வேண்டும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதை வைத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.


தொழிற் பயிற்சி பாடப்பிரிவு மாணவர் களைப் பொறுத்தவரை உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) படிப்பில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவுகளில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் பார்க்க வேண்டும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதை வைத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.


கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் ஃபுட் டெக்னாலஜி, பவுல்ட்ரி டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் பிடெக் படிப்பில் சேர விரும்புவோர் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய நான்கு பாடப்பிரிவு களிலும் தலா 50 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்த்து, 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பது கணக்கிடப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.


மீன்வளப் படிப்புகள்: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளுக்கு உரிய நான்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் கணக்கிடப்பட்டு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப் பட்டு (Aggregate Mark Calculation) தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.


BFSc படிப்பில் சேர விரும்பும் தொழிற்பயிற்சிப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இதே போல 200 மதிப் பெண்களுக்குக் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். B.Voc. பட்டப்படிப்பில் பிளஸ் டூ மாணவர்கள் மட்டுமல்ல பட்டதாரி மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். ஆனால், பிளஸ் டூ தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இப்படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.


அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.லிட். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். பிளஸ் டூ தேர்வில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப் படும் தரவரிசைப் பட்டியல் மூலம் பி.ஏ. ஆங்கிலப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


பிளஸ் டூ தேர்வில் மொழிப்பாடங்கள் நீங்கலாக மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்களின் (400 மதிப்பெண்கள்) அடிப்படையில் தயாரிக்கப்படும் பொதுத் தரவரிசைப் பட்டியல் மூலம் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்டபிள்யூ ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


வேளாண் படிப்புகள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளுக்கு உரிய நான்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் கணக்கிடப்பட்டு, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டு வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். எடுத்துக்காட்டாக, பிஎஸ்சி அக்ரி (ஆனர்ஸ்) படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்கள் கருத்தில் கொள்ளப்படும். இதேபோல மற்ற பாடங்களுக்கும் கணக்கிடப்படும்.


சட்டப் படிப்புகள்: நேஷனல் லா ஸ்கூல் என்று அழைக்கப்படும் தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு கிளாட் (Common Law Admission Test - CLAT) என்கிற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதன் அடிப்படையில் நேஷனல் லா ஸ்கூல்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வில் மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடங்களில் எடுத்த ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுச் சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


IFHRMSல் DA நிலுவை கணக்கீடு விளக்கம்

 


IFHRMSல் அகவிலைப்படி  நிலுவை கணக்கீடு DA Arrear Calculation  விளக்கம்


அனைவருக்கும் வணக்கம்!! 

DA நிலுவை தவறாக இருப்பின் Pay Sevice இல் Element Delete இல் Retro dearness allownce -M என்று உள்ள நான்கையும் Delete கொடுத்து விட்டு Approve செய்து விடுங்கள்!! 

பின்னர் Dues and deduction மூலம் Retro dearness allowance-M என ஒவ்வொரு மாதத்திற்கும் அந்த மாத கடைசி தேதியை Earned கொடுத்து உரிய தொகையை உள்ளீடு செய்து விட்டு அதையும் Approve செய்து விட்டு Mark For Recalculation கொடுத்தால் உரிய தொகை வந்து விடுகிறது!! 

CPS பிடித்தம் இருப்பின் அதையும் மேற்கண்டவாறு சரி செய்திட வேண்டும்!!

நன்றி 


அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்கியது - நீதிமன்றத் தீர்ப்பாணையின் படி ஊதிய மறு நிர்ணயம் செய்ய வெளியிடப்பட்டுள்ள தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை இரத்து செய்ய ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்கியது - நீதிமன்றத் தீர்ப்பாணையின் படி ஊதிய மறு நிர்ணயம் செய்ய வெளியிடப்பட்டுள்ள தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை இரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ஐயா மதிப்புமிகு. செ.முத்துசாமி Ex. MLC அவர்கள் வலியுறுத்தல்



Incentive pay for pursuing higher education in subjects other than the approved subjects - Tamilnadu Teachers' Federation General Secretary Mr. S.Muthusamy Ex.MLC Urged to quash the Proceedings of the Director of Elementary Education issued to re-fix the pay as per the court order





High School HM promotion case adjourned - Supreme Court


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு


Hearing of High School HeadMaster promotion case adjourned - Supreme Court


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் அடுத்த விசாரணை 17.07.2025 அன்று நடைபெறும் என இந்திய உச்சநீதிமன்றம் அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - மாநகரக் காவல் ஆணையர்



5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு


• ஒரு வாகனத்தில் 3 நபர்கள் பயணித்தல் 


• தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்


• தவறான திசையில் செல்வது (WRONG SIDE)


• மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்


• அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்


போக்குவரத்துப் போலீசார் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு


Incentive for higher education other than the approved subjects - DEE Proceedings to re-fix Salary to implement judgment

 

 

அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர் கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்கியது - நீதிமன்ற இறுதித் தீர்ப்பாணையை செயல்படுத்த ஊதிய மறு நிர்ணயம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


Incentive pay for pursuing higher education in subjects other than the approved subjects - Director of Elementary Education orders to re-fix Salary to implement the final court order


நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ், ஆங்கிலம், கணிதம் , இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் என அனுமதிக்கப்பட்ட  பாடங்களைத் தவிர M.Com., , M.A., (Economics) போன்ற பிற பாடங்களில் படிப்புகளை முடித்து ஊக்க ஊதியம் பெற்ற தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியங்களை மறு நிர்ணயம் செய்ய தொடக்கக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு- இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது . உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையினை 05.2025 - க்குள் சமர்பிக்க கோரல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு - இணைப்பு : சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பாணை நகல்


BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 21.01.2025

CORAM:

THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI

WP(MD). No.22704 of 2018 and

WMP(MD) Nos.21662 & 20596 of 2018


S.Thaha Mohamed ... Petitioner

Vs

1.The State of Tamil Nadu,

 Rep. by its Secretary to Government, 

 School Education Department, 

 Secretariat, Chennai.

2.The Director of Elementary Education,

 O/o the Director of Elementary Education,

 College Road, 

 Chennai-6.

3.The District Educational Officer,

 O/o. the District Educational Office,

 Ramanathapuram,

 Ramanathapuram District.

4.The Block Educational Officer,

 O/o. the Block Educational Office, 

 Thiruvadanai,

 Ramanathapuram District. ...Respondents



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hi-tech labs in 6,990 middle schools to become operational on July 15

தமிழ்நாட்டில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஜூலை 15-ல் செயல்பாட்டுக்கு வருகின்றன தமிழ்நாட்டில் உள்ள 6,990 அரசு நடுந...