பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-12-2025 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 12.12.2025
கிழமை:- வெள்ளிக்கிழமை
திருக்குறள்:
குறள் 1032:
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து.
விளக்க உரை:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.
பழமொழி :
Every ending starts a new life page.
ஒவ்வொரு முடிவும் புதிய வாழ்க்கைப் பக்கத்தைத் தொடங்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.
பொன்மொழி :
தனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி வேலையில்லாமல் சோம்பி இருக்கும்போது ஏற்படுவதில்லை. ஜோ.கிப்ஸன்
பொது அறிவு :
01.குஜராத்தில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள முக்கியமான நகரம் எது?
அகமதாபாத்-Ahmedabad
02.இந்தியாவில் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படும் நகரம் எது?
புவனேஸ்வர்-ஒடிசா
Bhubaneswar, Odisha,
English words :
accelerator-increase in speed
tranquil -peaceful
தமிழ் இலக்கணம்:
வினா எழுத்துகள் 5
அவை எ, யா, ஆ, ஓ, ஏ
எ, யா மொழிக்கு முதலில் வரும்
எங்கு?, யார்?
ஆ,ஓ மொழிக்கு இறுதியில் வரும்
பேசலாமா? தெரியுமோ?
ஏ முதலிலும் இறுதியிலும் வரும்
ஏன்? நீதானே?
அறிவியல் களஞ்சியம் :
அறிவியல் விந்தைகள்
* புவிக் கோளில் ஒரு நிமிடத்தில் 6000 தடவைகள் மின்னல் தோன்றுகிறது
* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைப் போல இரண்டு மடங்கு நீளம் உடையது.
* உலகில் 10% பேர் இடது கை பழக்கம் உள்ளவர்கள்.
* மரம் கொத்தி ஆனது ஒரு வினாடியில் 20 முறை மரத்தைக் கொத்தும்
நீதிக்கதை
மரங்கொத்தியின் தன்னம்பிக்கை
சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.
அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்.
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா? என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பறவை, மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்... என்றது.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.
தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும் என்றது.
கதையைச் சொல்லி முடித்த மகான், நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும் என்றார்.
இன்றைய செய்திகள்
12.12.2025
⭐ தமிழக சட்டசபை தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது.
⭐இந்தியாவில் உள்ள கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்த ரூ.
183248.54 மத்திய அரசு விடுவித்துள்ளது.
⭐ தாய்லாந்து-கம்போடியா எல்லையில் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் தாய்லாந்தின் எல்லையிலிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀2 முறை சாம்பியனான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் முறையாக வெண்கலம் பதக்கம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
இந்தியாவின் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது.
Today's Headlines
⭐Tamilnadu Assembly Elections, Verification of Electronic Voting Machines has begun.
⭐The Central Government has released Rs. 183248.54 for the development of Gram Panchayats in India.
⭐ More than 400,000 people on the Thailand border have been evacuated and placed in camps as the two sides engage in renewed clashes on the Thai-Cambodian border.
🏀The two-time champion Indian junior hockey team won the bronze medal for the first time. They defeated Argentina 4-2 in the third-place match. This victory for India is more impressive.














