கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாதிரி பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாதிரி பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Deputation Order issued for teachers to work in government model schools | DSE Proceedings

 



அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு ஆணை வழங்கி இணை இயக்குநர் உத்தரவு


Deputation Staff List 2026 - District wise


Order issued for teachers to work on deputation in government model schools - DSE Joint Director's Proceedings 


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள், சென்னை-6


ந.க.எண்.31064/டபிள்யு2/இ1/2026, நாள்.13.07.2026


பொருள் : பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணி மற்றும் பணி மாறுதலில் பணிபுரிந்த முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்/கணினிப் பயிற்றுநர் நிலை 1 பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்றது - மீண்டும் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்ந்து


பார்வை


1. அரசாணை நிலை எண் 176 , பள்ளிக் கல்வித் (பக 5(1)) துறை, நாள் 17.12.2021


2. G.O(Ms)No.138 School Education (SSA1) Department, dated 08.08.2022


3. G.O.(Ms) No.224 School Education (SSA1) Department, dated 23.12.2022.


4. G.O.210, School Education Department, Dated 18.11.2023.


5. சென்னை 06, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிக் குழு உறுப்பினர் செயலாளர் கடிதம் ந.கஎண் 1559/ஆ1/மா.ப/2026 நாள் 09.07.2026.


38 மாவட்டங்களில் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டதில். தமிழ்நாடு மாதிரி குழுமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரிந்து வரும் மற்றும் பணிமாறுதலில் நிரந்தர பணியிடத்தில் பணிபுரிந்து வரும் பட்டியலில் கண்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்றுநர் நிலை 1ல் உள்ளவர்கள் 08.07.2026 அன்று நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தமிழ்நாடு மாதிரி பள்ளி குழுமத்திலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை தெரிவு செய்து மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். மாதிரிப் பள்ளிகளின் நிர்வாக காரணங்களுக்காகவும், ஏற்கனவே ஆசிரியர்களுக்கு மாதிரிப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாலும் மற்றும் மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் அவ்வாசிரியர்கள் தொடர்ச்சியாக மாதிரிப் பள்ளிகளில் பணிபுரிவது அவசியமாக கருதப்படுகிறது என்பதால் அவரவர் பணியாற்றிய மாதிரிப் பள்ளியில் மாற்றுப் பணியில் பணிபுரிய மாற்றுப்பணி புரிதலுக்கான ஆணை (Deputation Order) வழங்கிடுமாறு பார்வை (5)ல் காண் கடிதம் வாயிலாக கோரப்பட்டுள்ளது.


எனவே பார்வை (5)ல் காண் கடிதத்துடன் பெறப்பட்ட 91 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்றுநர் நிலை 1 ஆசிரியர்களும் 08.07.2026 ல் நடைபெற்ற மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி மாறுதல் பெற்று சார்ந்த பள்ளியில் பணியேற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் பணிபுரியவில்லை என்பதை உறுதி செய்த பின்பு, அவ்வாசிரியர்களுக்கு தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் குழுமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மறு உத்தரவு வரும்வரை மாற்றுப்பணியில் பணிபுரிதல் பொருட்டு பணிவிடுவிப்பாணை வழங்கிடுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப் பணிக்கு செல்வதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணியை தொடர பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் அதற்கான ஊதியம் மாதிரிப் பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என்றும் மாதிரிப் பள்ளிகள் குழும உறுப்பினர் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலும் பட்டியலில் கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்/ கணினி பயிற்றுநர் நிலை 1 பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்ற அறிக்கையினை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைத்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு : முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்


இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)


பெறுநர் சார்ந்த ஆசிரியர்கள் (உரிய வழியாக)


நகல் 

1. சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வாயிலாக)

2. சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் (முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக) 

3. உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் குழுமம், சென்னை-6 (தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது)



மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMISல் பதிவு செய்திட பள்ளி கல்வித் துறை உத்தரவு



3 ஆண்டுகள் உயர் கல்வி வழிகாட்டி Career Guidance ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMIS தளத்தில் புதுப்பித்து பதிவு செய்திட தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுகள் எழுதாத 32014 மாணவர்களை தொடர்பு கொண்டு, துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வழங்க தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் உத்தரவு


+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வுகள் எழுதாத 32014 மாணவர்களை தொடர்பு கொண்டு, துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வழங்க தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் செயல்முறைகள் வெளியீடு


Class-12 District Wise Board Exam Fail & Absent Students Abstract



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள், சென்னை-600 006


உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்


ந.க.எண்:1623/L1/CG4/MS/2026, நாள்:19.05.2026


பொருள்:


உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் கடந்த மார்ச்2026 இல் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வெழுதாத மாணவர்களை தொடர்பு கொண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து.


உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 2026 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத/ தேர்வெழுதாத மாணவர்கள், துணைத்தேர்விற்கு 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026(சனிக்கிழமை ) வரையிலான நாட்களிலும், மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணபிக்க தவறும் மாணவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் 01.06.2026 (திங்கட்கிழமை ) மற்றும் 02.06.2026 (செவ்வாய்க்கிழமை ) ஆகிய நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 வரை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பள்ளி தேர்வுகள் இயக்ககத்தின் தரவின் படி, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் 26,846 மாணவர்களும், தேர்வெழுதாத 5168 மாணவர்களும் உள்ளனர். இம்மாணவர்கள் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறுகிய கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில், இணைப்பில் மாவட்ட வாரியாக வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்கிட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை தலைமையாசிரியர்களின் வாயிலாக EMIS இணைய தளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளி வந்த பிறகு, அந்த மாணவர்களுக்கும் வழிக்காட்டுதல்கள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. 


இணைப்பு:


1 மாவட்ட வாரியாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத/ தேர்வெழுதாத மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்.


2. துணைத்தேர்வு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணைகள் அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006.


உறுப்பினர் செயலர்


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


நகல்


இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை



Celebrating 100 Years of Government Schools Centenary Festival - Proceedings of Tamil Nadu Model Schools Member Secretary

 


💯 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடுதல் - தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்


TN Govt Schools Centennial Celebration


Celebrating 100 Years of Government Schools Centenary Festival - Proceedings of Tamil Nadu Model Schools Member Secretary



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு மாதிரிப் பள்ளிகளில் பணிபுரிய 36 ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி (Set 5 - For Deputation) நியமன ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 028328/ டபிள்யு2/ இ1/ 2023, நாள்: 08-08-2023(Joint Director of School Education issued Deputation appointment order for 36 teachers to work in Government model schools (Set 5 - For Deputation) JD Proceedings Rc.No: 028328/ W2/ E1/ 2023, Dated: 08-08-2023)...


>>> அரசு மாதிரிப் பள்ளிகளில் பணிபுரிய 36 ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி (Set 5 - For Deputation) நியமன ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 028328/ டபிள்யு2/ இ1/ 2023, நாள்: 08-08-2023(Joint Director of School Education issued Deputation appointment order for 36 teachers to work in Government model schools (Set 5 - For Deputation) JD Proceedings Rc.No: 028328/ W2/ E1/ 2023, Dated: 08-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

38 மாவட்டங்களின் மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பட்டியல் (TRB Teachers - Proposed Posting in District Model Schools)...


>>> 38 மாவட்டங்களின் மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பட்டியல் (TRB Teachers - Proposed Posting in District Model Schools)...



>>> தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்