ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அதிமுக MLAக்கள் ராஜினாமா
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
தாராபுரம் எம்எல்ஏக்கள் சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ராஜினாமா
3 பேரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர்
மூவரும் தவெக சார்பில் அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டம்
வானிலை ஆய்வு மையத்தின் தகவல் கிடைத்தவுடன் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
வானிலை ஆய்வு மையத்தின் தகவல் கிடைத்தவுடன் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என சொல்லி இருந்தோம்; அதனை மறுஆய்வு செய்யுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன; ஒரு வாரத்திற்கு வெப்ப அலை, மழை இருக்குமா என வானிலை மையத்திடம் கேட்டுள்ளோம்; அங்கிருந்து தகவல் வந்ததும் முதலமைச்சருடன் கலந்து பேசி ஆலோசிக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
தேங்கிய மழைநீர்: காரில் வந்த தம்பதி உயிரிழப்பு
தேங்கிய மழைநீர்: காரில் வந்த தம்பதி உயிரிழப்பு.
சேலம் ஓமலூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி தம்பதி உயிரிழப்பு.
உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு காரில் திரும்பியபோது விபரீதம்.
மழைநீரில் கார் மிதப்பதை பார்த்து கிராம மக்கள் இருவரின் உடலை மீட்டுள்ளனர்.
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
10th Standard Supplementary Exam Timetable Released
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு :
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77க்கு விற்பனை.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55க்கு விற்பனை
மே மாதம் 14ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்களுக்குள் பெட்ரோல், டீசல் இரண்டின் விலையும் லிட்டருக்கு 7 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
Students Promotion தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான தகவல்
EMIS Websiteல் Students Promotion தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான தகவல்
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு.
* STUDENTS PROMOTION -REG
🎯தற்போது STUDENTS PROMOTION OPTION ENABLE செய்யப்பட்டுள்ளது.
🎯 தங்கள் பள்ளியில் Terminal class ல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் TC Generation செய்து Common pool க்கு அனுப்பிய பிறகே Students Promotion செய்ய வேண்டும்.
🎯தொடக்கப்பள்ளியாக இருந்தால் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC எடுத்தப் பிறகு 4th to 5th, 3rd to 4th, 2nd to 3rd, 1st to 2nd என்ற வரிசையில் Promotion வழங்க வேண்டும்.
🎯நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC எடுத்தப் பிறகு 7th to 8th, 6th to 7th, 5th to 6th, 4th to 5th, 3rd to 4th, 2nd to 3rd, 1st to 2nd என்ற வரிசையில் Promotion வழங்க வேண்டும்.
🎯உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாக இருந்தால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC எடுத்தப் பிறகு மற்ற வகுப்புகளுக்கு Promotion வழங்க வேண்டும்.
🎯ஒரு வகுப்பில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை 2025-2026 ஆம் கல்வி ஆண்டைவிட 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருந்தால் அதனை Add/Delete செய்வதற்கு School➡️Class&Section என்ற option ல் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
🎯அனைத்து வகுப்புகளுக்கும் Promotion வழங்கியப்பிறகு Class Teacher மாற்றுவதாக இருந்தால் மீண்டும் Class Teacher Assign செய்ய வேண்டும்.
🎯 மேற்கண்ட Promotion பணியினை முடித்த பிறகு 2026 - 2027 கல்வியாண்டு புதிய மாணவர்கள் சேர்க்கையினை பதிவு செய்ய வேண்டும்.
பள்ளி திறப்பதற்கு முன்னர் புதிய மாணவி உள்ளீடு செய்தால் மட்டுமே அன்றைய தினம் மாணவர்களின் வருகையினை TNSED ATTENDANCE செயலியில் பதிவு செய்ய இயலும்.
🎯 School reopen ஆன முதல் நாளிலிருந்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தவறாமல் 100% Attendance Mark செய்ய வேண்டும்.
எனவே TC updation, Students Promotion, Class Teachers Assigning Work and school medium ஆகிய பணிகளை 30.05.2026 க்குள் முடித்திடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 60 சதவீதம் உயர்வு
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 60% உயர்வு
கர்நாடகாவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு
கர்நாடக அரசு குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தியதன் மூலம், திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பின் கீழ் பெங்களூருவில் உள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.23,376 ஆக உயர்ந்துள்ளது.
திருத்தப்பட்ட கட்டமைப்பின்படி, பெங்களூருவில் உள்ள திறன்மிகு தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ.31,114 பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். அதேசமயம், கர்நாடகாவின் பிற பகுதிகளில் குறைந்தபட்ச ஊதியம், இடம் மற்றும் பிரிவைப் பொறுத்து ரூ.19,300 முதல் ரூ.21,251 வரை இருக்கும்
கர்நாடக அரசு சனிக்கிழமையன்று தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தியது. திருத்தப்பட்ட இந்த ஊதியக் கட்டமைப்பின் கீழ், பெங்களூருவில் உள்ள தொழிலாளர்கள் இனி குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக ரூ.23,376 பெறுவார்கள்.
இந்த முடிவை அறிவித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் என்றும் கூறினார்.
இதை ஒரு பெரிய தொழிலாளர் சீர்திருத்தம் என்று குறிப்பிட்ட லாட், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
"தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தி எங்கள் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்ள தொழிலாளர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை எங்கள் அரசு நிறைவேற்றியுள்ளது," என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார் லாட்.
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை நிறுத்தக் கோரி முதலமைச்சருக்கு மனு
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை நிறுத்தக் கோரி முதலமைச்சருக்கு மனு
ஆதி திராவிட நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை நிறுத்தக் கோரி முதலமைச்சருக்கு மனு - நாளிதழ் செய்தி
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மிக இளம் வயதில் அமைச்சராக பதவி ஏற்றவர் யார்?
மிக இளம் வயதில் அமைச்சராக பதவி ஏற்றவர் யார்?
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க., அரசில், இளம் வயது அமைச்சர்கள் ஏராளமானோர் உள்ளதால், 'இந்தியாவில் இளம் வயதில் அமைச்சரானது, த.வெ.க.,வை சேர்ந்தவர் தான்', என கூறப்படும் நிலையில், அது தொடர்பான தகவல்கள் தொகுப்பு
த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய் அவர்கள், மே 10ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். இரண்டு முறை விரிவாக்கம் செய்யப்பட்ட அவரது அமைச்சரவையில், மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர்.
அவர்களில், மிகவும் இளையவர், கால்நடைத் துறை அமைச்சர் கமலி ஆவார். அவருக்கு வயது 28;
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் வயது 29 வயது.
அமைச்சர்களில், 10 பேர், 31 -40 வயதுக்கு உட்பட்டவர்கள்;
13 பேர், 41 - 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.
1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த விஜயசாரதி அவர்கள் பதவியேற்ற பொழுது அவருக்கு வயது 26.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தித்தாளின் புகைப்படம்
இதுபோல, இந்தியாவிலேயே இளம் வயதில், மாநில அமைச்சரானவர் சுஷ்மா ஸ்வராஜ். இவர், ஹரியானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சராக கடந்த 1977ல் பதவியேற்ற பொழுது, அவருக்கு 25 வயது.
பின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர், டில்லி முதல்வர் என, இந்திய அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தவர்.
2009ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அமைச்சரவையில், 29 வயதான அகதா சங்மா இடம் பெற்றார். மத்திய அமைச்சர்களில், மிகவும் இளையவர் இவர்தான்.
முதலமைச்சர்களை பொறுத்தவரை, 1985ல் அஸாம் முதல்வராக, 33 வயதில், பிரபுல்லா குமார் மொகந்தா பதவியேற்றார்.
1967ல், 29 வயதான எம்.ஓ.எச்.பாரூக், புதுச்சேரி முதலமைச்சரானார்.
தமிழ்நாட்டில் இளம் வயதில் முதலமைச்சர் பதவியேற்றவர் ஜெயலலிதா அவர்கள். 1991ல் முதலமைச்சராக பதவி ஏற்ற பொழுது அவரது வயது 43.
இந்தியாவின் மிக இளம் வயது பிரதமர் ராஜீவ் காந்தி ஆவார். 1984ல் பிரதமரான பொழுது அவரது வயது 40.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்




.jpeg)


.jpg)

%20(1).png)

