கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு...

 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தனியார் பள்ளிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசாணையும் வெளியிடப்பட்டது.



ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப்பட்டு உள்ளதால், அதற்கான பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, ஆண்டு இறுதித்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. தற்போது 9 முதல் 11ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டு உள்ளதால், அதே முறை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பின்பற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெறும் வகையில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ எனும் சிறப்பு கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இது தேர்வு எழுதாத காரணத்தால் ஏற்படும் குறைபாட்டை சரிசெய்யும் என கூறப்படுகிறது.


இந்த முறையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை கொண்டு 30 நாட்கள் சுழற்சி முறை பயிற்சி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த கல்வியாண்டில் தொடக்கத்திலோ வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை...

 


பகுதிநேர பயிற்றுநர்களது (PART TIME TEACHERS ) வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 


கூட்டுறவு நிறுவனங்களில் 31-01-2021 அன்றைய தேதியில் பொது நகைக் கடன் நிலுவை - விவரங்கள் கோருதல் - பதிவாளர்...

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் 

ந.க 30340/ 2020 / மவகொ2, நாள்: 02-03-2021 



ஐயா / அம்மையீர், 


பொருள்: 


கூட்டுறவு - பொது நகைக் கடன்கள் - கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்றைய தேதியில் பொது நகைக் கடன் நிலுவை - விவரங்கள் கோருதல் - தொடர்பாக 


கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்று நிலுவையில் உள்ள பொது நகைக் கடன் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (excel sheet) அனுப்புமாறு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்டம் வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களும் ; தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாரியான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களும் உரிய படிவத்தில் (excel sheet) குறுந்தகட்டில் பதிந்தும், பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




பொதுத் தேர்தல்கள் - தமிழ்நாடு சட்டமன்றம் 2021 - வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி தொடர்பான அறிவுறுத்தல்கள்...

 


General Elections toTamil Nadu legislative Assembly 2021 - Training for Polling Personnel - Instructions regarding - Tamilnadu Chief Electoral Officer Letter No.3044/ Ele-VII/ 2021-1, Dated: 03-03-2021...

>>> Click here to Download Tamilnadu Chief Electoral Officer Letter No.3044/ Ele-VII/ 2021-1, Dated: 03-03-2021...



கற்போம் எழுதுவோம் திட்டம் - மாதிரி வினாத்தாள் PDF...



>>> கற்போம் எழுதுவோம் திட்டம் - மாதிரி  வினாத்தாள் (Model Question Paper) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்காளர் பட்டியலில் முதல்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் - வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளல் சார்ந்து சிறப்பு முகாம்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...