கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 07.03.2021 (ஞாயிறு)...

 


🌹நமக்கு ஒருவரிடம் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.                                                           நாமே தீர்மானித்து விட்டால் பிறகு அவமானங்களும் இழப்புகளும் தான் மிஞ்சும்.!

🌹🌹அடிச்சா தான் வலிக்கும்னு இல்ல நமக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட நடிச்சாக் கூட வலிக்கத் தான் செய்கிறது.!!

🌹🌹🌹யாரையும் காயப்படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ கூடாது.ஏனெனில் இன்று நாம் பலம் மிக்கவராக இருக்கலாம் .

ஆனால் காலம் நம்மை விட பலம் வாய்ந்தது என்பதை மறந்து விடக்கூடாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈ஆல் பாஸ் அறிவிப்பால்  மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை.

🌈🌈இரட்டை பட்டங்களை வழங்கும் இந்திய, சா்வதேச உயா் கல்வி நிறுவனங்கள்: மக்களிடம் யுஜிசி கருத்துக் கேட்பு.

🌈🌈தேர்தல் முடிவு வெளியாவதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியை மாற்ற தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

🌈🌈ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான சில சேவைகள் முழுவதுமாக ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமலேயே இந்த சேவைகளை தற்போது பெற முடியும்.

🌈🌈ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த CBSE தேர்வு தேதியில் மாற்றம் : MP சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதியை மாற்றி CBSE அறிவிப்பு.

🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை ; அவர்கள் விருப்பப்பட்டால், முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் 10-03-21க்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - தருமபுரி CEO உத்தரவு.

🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை 

🌈🌈உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய அளவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது

🌈🌈ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டு  உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கு வருகிற ஜூன் 27ம் தேதி முதல்நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு வருகிற 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

🌈🌈ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, 'ஆல்பாஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது - நாளிதழ் செய்தி

🌈🌈ஊக்க ஊதிய உயர்வுக்கான நிதித்துறை ஒப்புதல் எப்போது கிடைக்கும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

🌈🌈வாக்குப்பதிவு அலுவலர் களுக்கு அடுத்த வாரம் தேர்தல் பணி ஆணை- தேர்தல் ஆணையம் உத்தரவு.                                                   

🌈🌈தமிழகம் முழுவதும்  பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தமிழகம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

🌈🌈கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா

🌈🌈ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 வரை உயர்வு.

கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்.

🌈🌈தமிழக அரசு கல்வி, வேலை வாய்ப்பு 10.5% இட ஒதுக்கீடு பெற்றதற்கு ராமதாஸ்தான் காரணம் என்று உண்மைக்கு மாறாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

🌈🌈4 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33,728-க்கு விற்பனை.

🌈🌈எடப்பாடி பழனிசாமி வன்னியர் சமூகத்தையும், கவுண்டர் சமூகத்தையும் கையில் வைத்துக் கொண்டு முக்குலத்தோர் சமூகத்தினை புறந்தள்ளுகிறார். 

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை. 

-கருணாஸ்

🌈🌈மூன்றாவது அணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே  இருக்கும்.

தேர்தலுக்கு பிறகு நீடித்து இருப்பதில்லை 

- திருமாவளவன்

🌈🌈கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி: பாஜக தலைமை அறிவிப்பு

🌈🌈பாஜக பெற்ற 20 தொகுதிகளில் இருந்து தனது வெற்றி கணக்கை துவங்கி விட்டது திமுக

- திருமாவளவன்

🌈🌈ஜாதி ரீதியாக சமுதாயங்களை பிரித்து ஜாதி கலவரம் மூண்ட முயற்சிக்கிறது இந்த எடப்பாடி அரசும் அமைச்சர்களும்.

வடமாவட்டத்தில் அதிமுக தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும்

- கருணாஸ் பேட்டி

🌈🌈பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதலை எதிர்த்து, மார்ச் 15,16 ஆகிய தேதிகளில்  அகில இந்திய அளவில் போராட்டத்தினை அறிவித்துள்ளது. 

- AINBOF

🌈🌈இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

🌈🌈மகிழ்ச்சியும் இல்லை, சோகமும் இல்லை: அதிமுக 20 இடங்களை ஒதுக்கியது குறித்து பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

🌈🌈ரூர்கேலா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 வயதாகும் மருத்துவர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டு மூன்று வார காலம் ஆகும் நிலையில் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

🌈🌈மார்ச் 8ம் தேதி முதல், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மார்ச் 8ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

🌈🌈திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 10ம் தேதி வெளியிடப்படும்; திருச்சி பொதுக்கூட்டத்தில் லட்சியப் பிரகடனம் வெளியிடப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

🌈🌈 "மழலையர் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்" ; பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு.

🌈🌈மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி -ஆந்திர அரசு.

🌈🌈கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 93.1கோடி டன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக உணவுக்கழிவு குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌈🌈கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

🌈🌈ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியன் நிறுத்திவைத்தது.

🌈🌈ஜப்பானின் டோக்கியோ பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த கொரோனா நெருக்கடி நிலையை அந்த நாட்டு அரசு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.

🌈🌈பாஜக தமிழர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கிறது.

மாநிலம் என்கிற அமைப்பையே சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், மாநில உரிமையை காக்கும் விதமாக  சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு

கொளத்தூர் மணி

🌈🌈மதிமுக 6 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டி

கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி

அனைத்து தகுதிகளையும் கொண்ட முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை பார்க்கிறேன்

வைகோ

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF...

 


>>> 1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF...


தேர்தல் 2021 - நான்கு கட்ட பயிற்சி வகுப்புகள் - தேர்தல் கமிஷன் உத்தரவு...

 


தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அனைத்து பணியாளர்களுக்கும், நான்கு கட்ட பயிற்சி அளிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில், சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்க வேண்டும்தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ளது. அதற்கு முன், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, நான்கு கட்டமாக, பயிற்சி அளிக்க வேண்டும்.


மார்ச், 18க்குள், ஓட்டுச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, முதல் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின், மார்ச், 26க்குள் இரண்டு நாட்கள்; ஏப்ரல், 3க்குள் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க வேண்டும்; ஏப்., 5ல், நான்காம் கட்ட பயிற்சி அளிக்க வேண்டும்.


வகுப்பறையில், 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் எவ்வளவு தேர்தல் பணியாளர்கள் தேவையோ, அவர்களுடன் கூடுதலாக, 20 சதவீத பணியாளர்களுக்கு, பயிற்சி அளிக்க வேண்டும். ஓட்டுச்சாவடியில் பின்பற்ற வேண்டிய, கொரோனா விதிமுறைகளையும், தெரியப்படுத்த வேண்டும்.


ஓட்டுச்சாவடியில் ஒவ்வொரு அலுவலர்களும், என்ன செய்ய வேண்டும் என்பதை, தனித்தனியே விளக்க வேண்டும். செயல் விளக்கம் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல் பாஸ் அறிவித்ததால் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை...

 


தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் மாநிலம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை...







இன்றைய (07-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைப்பது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.


பரணி : புரிதல் உண்டாகும்.


கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை பற்றி குறை கூறுவதை குறைத்து கொள்ளவும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முக்கியமான முதலீடுகளில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நன்மையை அளிக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

வாழ்க்கைத்துணைவரிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மிருகசீரிஷம் : வாக்குவாதங்கள் நீங்கும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களை சந்திப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்துக்கொள்வீர்கள். வாரிசுகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். எண்ணங்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.


பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


ஆயில்யம் : மாற்றமான நாள்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் உங்களின் ஆலோசனைகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் லாபமும், அனுபவமும் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் பொருள் வரவுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : அறிமுகம் கிடைக்கும்.


பூரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


உத்திரம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

வேலையாட்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதுவிதமான முயற்சிகளின் மூலம் லாபம் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்ல வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவுகளினால் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : அனுகூலமான நாள்.


அஸ்தம் : இன்னல்கள் குறையும்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.


சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


விசாகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வேலையாட்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : குழப்பங்கள் அகலும்.


அனுஷம் : ஆதரவான நாள்.


கேட்டை : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட எண்ணங்களினால் சோர்வு ஏற்பட்டு நீங்கும். பழைய வேலையாட்களை மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : சோர்வு நீங்கும்.


பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.


உத்திராடம் : ஈடுபாடு அதிகரிக்கும். 

---------------------------------------




மகரம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். கனிவான பேச்சுக்களின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் செயல்பாடுகளில் புரிதல் உண்டாகும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்



உத்திராடம் : தடைகள் அகலும்.


திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள். 


சதயம் : மகிழ்ச்சி உண்டாகும். 


பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 07, 2021


மாசி 23 - ஞாயிறு

தொழிலில் கூட்டாளிகளால் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் திறமைகள் வெளிப்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், உதவிகளும் கிடைக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த மறைமுகமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : ஆதாயமான நாள்.


உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


ரேவதி : துணிச்சல் பிறக்கும்.

---------------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...