கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாடகை சட்டங்களில் திருத்தம்; வாடகை மற்றும் குத்தகை முறையில் புதிய திருத்தங்கள் - மத்திய அரசு...



வாடகை சட்டங்களில் திருத்தம்; வாடகை மற்றும் குத்தகை முறையில் புதிய திருத்தங்கள் - மத்திய அரசு


வாடகை சட்டங்களில் திருத்தும் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி அவர்களது தலைமையில் நேற்று (ஜூன் 2) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் வாடகை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சட்டத்தின் 10 முக்கிய அம்சங்களை இப்பதிவில் காணலாம்.


வாடகை ஒப்பந்த சட்டம் 10 அம்சங்கள்:

1. காலியாக இருக்கும் வீடுகளை வாடகைக்கு விட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும்.

2. வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு.

3. வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாணையம் அமைக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

4. ஒப்பந்தம் போடாத நிலையில், வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்தை நாட புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

5. புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

6. ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால் நிவாரணம் கோரி இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது.

7. முந்தைய காலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்.

8. வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் பாதுகாப்பு வைப்புத்தொகை (அட்வான்ஸ்) வாங்க முடியாது.

9. வாடகை ஒப்பந்த நகலை மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

10. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டமும் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



கொரோனா காரணமாக தமிழ்நாடு மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு - மின்துறை அமைச்சர்...

 மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி அவர்கள் தகவல் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது, பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள்/தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


கடந்த டிசம்பர் 2020 முதல் ஆறுமாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்பு பணிகள் எவ்வித தொய்வின்றி விரைந்து எடுத்துக் கொள்ளப்படும் என மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.




காவலர்களுக்கு ₹5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

 





>>> செய்தி வெளியீடு எண்: 213, நாள்: 03-06-2021...


கலைஞரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 6 அறிவிப்புகள்...

கலைஞரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு 6 அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


1.தென் சென்னையில் ரூ.250 கோடியில் 500 படுக்கைகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனை கிங் நிறுவன வளாகத்தில் தொடங்கப்படும்.


2.சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல், மதுரையில் ரூ.70 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்.


3.தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது ஆண்டுதோறும் மூன்று பேருக்கு வழங்கப்படும்.பரிசுத்தொகை ரூ.5 லட்சம்.


4.ஞானபீடம், சாகித்ய அகடாமி போன்ற தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச அளவிலான விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வீடு வழங்கும்.


5.திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள், உலர் களங்கள்.


6.திருநங்கைகள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை - தமிழ்நாடு அரசு



>>> செய்தி வெளியீடு எண்: 214, நாள்: 03-06-2021...




கோவிட் 19 - பத்திரிகை ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டது - சலுகைகள் வழங்கி - அரசாணை வெளியீடு...

 


கோவிட் 19 - பத்திரிகை ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டது - சலுகைகள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது...


>>> அரசாணை (நிலை) எண்: 258, நாள்: 31-05-2021...



+2 தேர்வு குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி...

 +2 தேர்வு குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி...





ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு...

📌ஆசிரியர் தகுதித் தேர்வு  தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் வரை (From the Year 2011) நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.


📌 ஏற்கனவே வழங்கிய TET சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்து புதிய சான்றிதழ் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்.


📌 ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teacher Eligibility Test) தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு. 


📌கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...