ஒரே கோப்பில் ஆசிரியர்களுக்கான Revised Pay Matrix (Cell 45வரை), HRA Slab, DA Percentage அனைத்தும்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாட்டில், 12-07-2021வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
* தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு.
*அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி.
*தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து
*அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
*பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.
*டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி
*அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி
*மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
*அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி
*உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி
*பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி
*அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி
*கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை
*நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும்
*அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
*வணிக நிறுவனங்கள் இரவு 8மணிவரை செயல்படஅனுமதி.
* தேநீர்கடைகள் உணவகங்களில் 50%பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி
>>> செய்தி வெளியீடு எண்: 370, நாள்: 02-07-2021...
12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு அடிப்படையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி...
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு...
* 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
* ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்
தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணி தட்டச்சர்கள் - தற்காலிக பணி - பணியிடை முறிவு வழங்கி மீண்டும் பணியமர்த்துதல் - மனித வள மேலாண்மை அரசு செயலாளர் கடிதம்...
மனித வள மேலாண்மை அரசு செயலாளர் கடித எண் 18527/யு-சிறப்பு/2021, நாள்: 30-06-2021 - பணியாளர் - தமிழ்நாடு அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணி தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் நிலை (III) - தற்காலிக பணி - பணியிடை முறிவு வழங்கி மீண்டும் தற்காலிகமாக பணியமர்த்துதல் - குறித்து கடிதம்...
>>> மனித வள மேலாண்மை அரசு செயலாளர் கடித எண் 18527/யு-சிறப்பு/2021, நாள்: 30-06-2021...
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் எம்.பில் படிப்பு தொடர்ந்து நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர், உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அத்துடன் இந்த ஆலோசனையில் 13 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறை மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் குறித்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “துணைவேந்தர் மற்றும் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளிப்படையான தன்மையை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும். அதேபோல் பல்கலைக்கழகங்களில் உள்ள முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்கப்படும். ஒற்றை சாளர முறையில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலமாக பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆகஸ்ட் 1- முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும். ஆகஸ்ட் 1க்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் எம்.ஃபில். படிப்பை தொடர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
M.Phil., படிப்பு கூடாது என்ற தேசிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கத்துக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு பயிற்றுவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
*ஏற்கனவே 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு உள்ளிட்ட உள்ளடக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்று அரசு கூறிவரும் நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியீடு...
ஆசிரியர்களின் முயற்சியால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் தகவல்...
ஆசிரியர்களின் முயற்சியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு பெரியார் வீதி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் இலவச பாடநூல் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடந்தது.
வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்து, இலவச பாடநூல்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பெரியார் நகர் தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு 369 மாணவர்கள் படித்தனர். தற்போது 69 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்த நிலையில், 436 ஆக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது போன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமாக உள்ள ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து நாளை (2-ம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. கடந்தகாலங்களை விட தற்போது கூடுதலாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி மையத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது.
மாவட்டத்தில் வீட்டு வசதிக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து புதிய திட்டங்கள் நடைமுறைபபடுத்தப்படும். கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில் மாவட்ட ஆட்சியர் முறையான நடவடிக்கை எடுப்பார். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு
கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...
