கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அகவிலைப்படி(Dearness Allowance) குறித்த கேள்விக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பதில்...

சட்டமன்ற அவையில்  பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள் எழுப்பிய பள்ளிக்கல்வித்துறை  சார்ந்த கேள்விகள் - மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் கூறிய நிதி சார்ந்த, அகவிலைப்படி சார்ந்த பதிலுரைகள்...



>>> அகவிலைப்படி குறித்த கேள்விக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பதில்(காணொளி)...


செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக இருக்கிறது‌ - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்(Schools will be Reopen from September 1)...


செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக இருக்கிறது‌ - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல்...





சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை(Minorities Scholarship) குறித்த தகவல்கள்...


சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பற்றி அறிந்து கொள்வோம்...


 சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் இனத்தைச் சார்ந்த மாணவ -  மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


அனைத்து செயல்பாடுகளும் NSP எனப்படும் National Scholarship Portal மூலம்  Online வழியாகத்தான் நடைபெறும்.. ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பாலின பேதமின்றி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.


👉🏻 'Pre-Matric' உதவித்தொகை


1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 


6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை


விண்ணப்பிக்கத் தகுதிகள்:


1.ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்


குறிப்பு: நடைமுறையில் ரூ.72,000 மிகாது இருக்குமாறு வாங்கிக் கொள்ளவும்.


2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள்  எடுத்திருக்க வேண்டும்


 👉🏻 'Post Matric' உதவித்தொகை


11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ.6000 


இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்கு ரூ.6000 முதல் 12000 


விண்ணப்பிக்கத் தகுதிகள்:


1.ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்


2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்


  👉🏻 'Merit Cum Means' உதவித்தொகை

 

தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்கு ரூ .25000 / 30000 


விண்ணப்பிக்கத் தகுதிகள்:


1.ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்


2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்


www.scholarships.gov.in

 (தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம்)


 ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம்/ நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.

  

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...

 

1.ஆதார் அட்டை

 

2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை 

 

3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்

 

4.இருப்பிடச் சான்று

 

5.வருமான சான்றிதழ்

 

6.ஜாதி சான்றிதழ்

 

7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.


>>> இந்த தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


LKG & UKGக்கு மாற்றுப்பணியில்(Deputation) நியமிக்கப்பட்டவர்கள் முன்பு பணியாற்றிய பள்ளியில் போதுமான மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள் எனில் அதற்கான விவரம் கோருதல் - CEO Proceedings ந.க.எண்: 6768/இ1/2021, நாள்: 16-08-2021...


 LKG & UKGக்கு மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டவர்கள் முன்பு பணியாற்றிய பள்ளியில் போதுமான மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள் எனில் அதற்கான விவரம் கோருதல் - திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 6768/இ1/2021, நாள்: 16-08-2021...


>>> திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 6768/இ1/2021, நாள்: 16-08-2021...



01.03.1993க்கு முன்னர் பகுதி நேரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட அடிப்படைப் பணியாளர்களை பணிவரன்முறை செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 056693/அ5/இ1/2017, நாள்: 13-08-2021...



 01.03.1993க்கு முன்னர் பகுதி நேரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட அடிப்படைப் பணியாளர்களை பணிவரன்முறை செய்தல்....


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 056693/அ5/இ1/2017, நாள்: 13-08-2021...

பழைய ஓய்வூதியத்துக்கு வாய்ப்பு இல்லை : சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...

 


பழைய ஓய்வூதியத்துக்கு வாய்ப்பு இல்லை : சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...


எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்கினால் அரசு திவாலாகிவிடும். மாநிலத்தின் நிதி சூழ்நிலை இக்கட்டான நிலையில் இருப்பதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


சட்டப்பேரவையில், 2021-22 நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம்கடந்த 16ஆம் தேதி தொடங்கி  நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:


திராவிட இயக்க கொள்கைகளை பின்பற்றி, முதல்வர், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று கூறியுள்ளார். அதை கொஞ்சம் திருத்திக் கூற விரும்புகிறேன். சமூக, பொருளாதார நீதிக்கு ஏற்ப. எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்க முடியாது. அப்படி செய்தால் அரசு திவாலாகிவிடும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சி, இந்த கொள்கையில் இருந்து விலகி, யாரெல்லாம் எதையெல்லாம் கைப்பற்ற முடியுமோ அதை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற அடிப்படையில் நடந்துள்ளது. இது எங்கள் கருத்துக்கு விரோதமானது. இதை மாற்றியே ஆக வேண்டும்.


இன்றைய சூழலில், மாநிலத்துக்கான பல அதிகாரங்கள், மாநிலங்களிடம் இல்லை. எனவே, நம்மிடம் இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தை கட்டமைக்க வேண்டும்.


5 திருத்தங்கள் அவசியம்

இதற்காக, 5 திருத்தங்களை சுட்டிக்காட்டியுள்ளோம். தகவல் அடிப்படையில் நிர்வாகம் என்பது முதலாவது. ஆக.13-ல் பேரவையில் பெட்ரோல் குறைப்பு அறிவிக்கப்பட்டது. உடனடியாக தகவல் திரட்ட தொடங்கினோம். இந்த தகவல்கள் மத்திய அரசிடம் உள்ளன.


பெட்ரோல் விற்பனையைப் பொருத்தவரை, ஆக.1 முதல் 13 வரை 91 லட்சம்லிட்டர் விற்பனையான நிலையில்,வரியை குறைத்த பிறகு 14 முதல் 16-ம்தேதி வரை 1.03 கோடி லிட்டர் விற்பனைஆனது. மக்கள் அதிக அளவில் பெட்ரோலை பயன்படுத்தியதால் விற்பனைஅதிகரித்துள்ளது. இந்த அளவுக்கு தகவல் இருந்தால் அரசை சிறப்பாக நடத்த முடியும்.


இரண்டாவது மத்திய - மாநில அரசு உறவு. இதை பயன்படுத்தி, மத்திய அரசிடம் இருந்து முதல்வர் மூலம், தரவு சேமிப்பை செய்யப் போகிறாம். அதாவது, வருமான வரி, பெட்ரோல் டீசல் பயன்பாடு, விற்பனை, தடுப்பூசி போடப்பட்ட விவரம் இவற்றைகேட்டுப் பெற சட்டம், விதிமுறைகள்உருவாக்கி முயற்சி எடுக்கப் போகிறோம். மக்களின் நலன், நிலம், பணத்தைபாதுகாப்பது, இடர் மேலாண்மை என்பது அடுத்த முக்கிய அம்சம். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மொழிபெயர்த்து, திட்டத்தின் தன்மை, பயன்களை மக்களிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இது சீர்திருத்தத்தின் முதல்கட்டம் ஆகும். இன்னும் பல நடவடிக்கைகள் வர உள்ளன. ஆண்டு பொருளாதாரக் கணக்கெடுப்பு கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட்டுக்கு முன்னால் வெளியிடப்படவில்லை. இது அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படும்.


110 விதியின் கீழ் அறிவிப்பு விவரம்

கடந்த 10 ஆண்டுகளில் 110 விதியின்கீழ் எத்தனை அறிவிப்புகள் வந்தன. எவை செயல்படுத்தப்பட்டன. கைவிடப்பட்டவை, நிதி பெற்ற விவரம், பட்ஜெட்டுக்கு உட்படாத நிதி எங்கிருந்து வந்தது,திட்டமிடப்படாத அறிவிப்புகள் அரசை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்துஆய்வு செய்து, இந்த கூட்டத் தொடரிலேயே அவையில் சமர்ப்பிக்கப்படும்.


இன்னும் பல துறைகளில் பல காரணங்களுக்காக பல ஆய்வுகள் நடக்கஉள்ளன. இதை பழிவாங்கும் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.


நாம் இக்கட்டான சூழலில் உள்ளோம். அனைவருடைய ஒத்துழைப்புடன்தான் முன்னேற முடியும். அரசின் நிதிச்சூழலை மேம்படுத்தாமல், இன்று இருக்கும் அளவைவிட சிறப்பாக குடிநீர்,சாலை, மருத்துவமனை, வீடுகள் ஆகியவற்றை கட்டித் தர முடியாது. எனவே,இன்று உள்ள சூழலை திருத்தியே ஆக வேண்டும்.


கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய், மத்திய அரசின் நிதி என ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் எல்லா அரசுகளும் வேறு வழியின்றி, சில செலவுகளை ஒத்திவைக்கின்றன.


ஊதியக் குழு பரிந்துரைகள் தள்ளி அமல்படுத்தப்பட்டன, அகவிலைப்படி உயர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. நிதி இல்லாதபோது, திறமை இருந்தாலும் சமாளிக்க முடியாது. தேவைஉள்ள நேரத்தில் வரியை அதிகரிக்காவிட்டால், அரசை நடத்த முடியாது. முன்பு, மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த வணிக வரி உயர்த்தப்பட்டது.


மிக கடினமான சில பிரச்சினைகளை ஒத்திவைத்துக் கொண்டே வருகிறோம்.பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதுபற்றி முடிவெடுக்காமல் 3, 4 முறைஅரசுகள் ஆட்சிக்கு வந்து சென்றுவிட்டன. நிதி சூழ்நிலை இக்கட்டான நிலையில் இருப்பதால், அதற்கானமுடிவை எடுக்க முடியவில்லை.


சில செலவுகள் பண வீக்கத்துக்கு ஏற்ப அதிகரிக்கப்படுகிறது. பொருட்கள் விலை அதிகரிப்பால் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வின்போது, ஓய்வூதியம் அதிகரிக்கப்படுகிறது. ஆனால், விதவைகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படுவது இல்லை. வரி உயர்த்தப்படுவது இல்லை. இதை மாற்றியாக வேண்டும்.


இவ்வாறு அமைச்சர் தனது பதில் உரையில் தெரிவித்தார்.


>>> நிதிநிலை மந்தம் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை:  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...





Update TN EMIS App & Teacher Self Registration for ICT Teacher training module added In TN EMIS App...



Teacher self Registration for ICT Teacher training module added In TN EMIS App - Update And Register Now....


இதுவரை ICT பயிற்சி பெறாத முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு  23/8/ 2021 முதல் 27/8/2021 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ள TN-EMIS App - ல் தாங்களே சுயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும். இப்பதிவுவை தங்களுக்கு வழங்கப்பட்ட 8 இலக்க எண்ணைப் பயன்படுத்தி நாளை மதியம் 2 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நமது பள்ளிக்கு உட்பட்ட Block -ல் உள்ள அனைத்து பள்ளிகளும்  காண்பிக்கும். மேல்நிலைப்பள்ளியிலிருந்து 18 ஆசிரியர்களும் உயர்நிலை பள்ளியில் 8 ஆசிரியர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் அவரவர் பள்ளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை தங்களது பள்ளியில் உள்ள எண்ணிக்கை நிறைவடைந்து விட்டால், நமது Blockல் உள்ள வேறு பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 


TN-EMIS Appஐ Update செய்துக் கொள்ளவும்.


 TN EMIS APP has a New Updation as 0.0.45.


DATE 19-08-2021


App Link - Update here...

https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...