கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நவம்பர் 2022 - பள்ளி நாட்குறிப்பு (November Dairy)...



நவம்பர் 2022 - பள்ளி நாட்குறிப்பு (November Dairy)...


01.11.22, செவ்வாய்:

சிறப்பு கிராம சபா கூட்டம்


02.11.22, புதன்:

கல்லறைத் திருநாள் (RL) 


05.11.22, சனிக்கிழமை :

குறைதீர் நாள்


08.11.22, செவ்வாய்:

குருநானக் ஜெயந்தி (RL) 


12.11.22, சனிக்கிழமை:

CRC பயிற்சி


19.11.22, சனிக்கிழமை:

ஈடு செய்யும் வேலைநாள்


முக்கிய தினங்கள்:


11.11.22, வெள்ளி:

தேசிய கல்வி தினம்


14.11.22, திங்கள்:

குழந்தைகள் தினம்


21.11.22, திங்கள்:

உலக மீன்வள தினம்


22.11.22, செவ்வாய்:

தேசிய மாணவர் படை தினம்


வாக்காளர் சேர்ப்பு - சிறப்பு முகாம் நாள்கள்:


12.11.22, சனிக்கிழமை 

13.11.22, ஞாயிறு

26.11.22, சனிக்கிழமை

27.11.22, ஞாயிறு






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (Minority Scholarship Extended Upto 15.11.2022)...




📢 அரசு மற்றும் தனியார்  கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (Minority Scholarship Extended Upto 15.11.2022)...


🔊இதற்கு முன் இன்று 31-10-2022 கடைசி நாளாக இருந்தது..








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள் : 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.


சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.


பழமொழி :

A double charge will break even a cannon


அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 


2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 


பொன்மொழி :


தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள் தான் வெற்றிகளைக் குவிப்பார்கள்.


பொது அறிவு :


1.காமராஜர் எப்போது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்? 


1963ஆம் ஆண்டு. 


2. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ? 


ஆறுகள்.


English words & meanings :


Neo-na-to-lo-gy - study of new born babies. Noun. பிறந்த குழந்தைகள் குறித்த மருத்துவ அறிவியல்.


ஆரோக்ய வாழ்வு :


பொதுவாக இளநீர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அந்த இளநீருடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது புதினாவை சேர்த்து கலந்து குடித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படுவதோடு, உடல் நீண்ட நேரம் நீரேற்றத்துடன் இருக்கும்.


NMMS Q :


12 பசுக்கள் ஒரு புல்தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய ______________நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. விடை: 6 நாள்கள். 


விளக்கம்: 12 x 10 = 20 x Y; Y = (12 x 10)/20 = 6 நாள்கள்


அக்டோபர் 31


இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாள்


இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.

பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.



நீதிக்கதை


கிணற்றில் விழுந்த நரி


ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீர்ருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே... மே...ன்னு கத்திக்கொண்டே வந்தது. 


உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே... தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே... சே... நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. 


உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே... இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே... உன்னை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்... கையை கொடு... என்னைச் சீக்கிரமா காப்பாத்து... என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.


இன்றைய செய்திகள்


31.10.22


* தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் 45 குழுக்கள் கண்காணிப்பு.


* உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஒதுக்கீட்டை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.


* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு: குஜராத் அமைச்சரவை ஒப்புதல்.


* சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.


* சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.


* உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


* தேசிய கைப்பந்து போட்டி - தமிழக பெண்கள் அணி சாம்பியன்.


* சர்வதேச ஜூனியர் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது. 


Today's Headlines


* Chennai Metrology Department predicted mild rain in 20 districts of TN

In reflection of bird flu in Kerala 45 teams are formed in Namakkal


* In order to regularise the commercial shopping complexes and shops allotment by Local bodies a guidance team is set under the leader ship of internal affairs Secretary. 


* To execute common civil law Gujrat approved the formation of a team for the purpose. 


* In the capital of Somalia there is an explosion. More than 100 people were killed. 


* The Indians who wanted to work as Engineers in South Arabia should get the approval certificate AICTE implies and stresses this point. 


* In World Cup Junior Badminton TN player qualified for the finals. 


* In National Volleyball league TN women's team won the match. 


* In international Junior hockey match India won by defeated Australian team.


ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் 19.09.2022 அன்று நேரில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் மனிதவள மேலாண்மைத் துறை துணைச்செயலாளர் அவர்கள் கடிதம் (Letter from Deputy Secretary Human Resource Management to all Department Secretaries to take appropriate action on the petitions containing demands submitted in person on 19.09.2022 to the Hon'ble Chief Minister who participated in the conference organized by JACTTO-GEO)...


>>> ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் 19.09.2022 அன்று நேரில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் மனிதவள மேலாண்மைத் துறை துணைச்செயலாளர்  அவர்கள் கடிதம் (Letter from Deputy Secretary Human Resource Management to all Department Secretaries to take appropriate action on the petitions containing demands submitted in person on 19.09.2022 to the Hon'ble Chief Minister who participated in the conference organized by JACTTO-GEO)...




இன்றைய (31-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 31, 2022



அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.  வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 31, 2022



வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூர் பயணங்கள் செல்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிலும் வேகத்தை காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிக்கல் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரோகிணி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.


மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 31, 2022



புதிய அனுபவத்தின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.


திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும். 


புனர்பூசம் : குழப்பம் நீங்கும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 31, 2022



கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : தனவரவு கிடைக்கும்.


பூசம் : புரிதல் மேம்படும். 


ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும். 

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 31, 2022



உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்தவொரு செயலையும் மேற்கொள்வீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : மகிழ்ச்சி ஏற்படும்.


பூரம் : தன்னம்பிக்கையான நாள்.


உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 31, 2022



பயணங்கள் சார்ந்த புதுமையான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பரிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : புதுமையான நாள்.


அஸ்தம் : சிந்தித்து செயல்படவும். 


சித்திரை : நம்பிக்கை ஏற்படும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 31, 2022



உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கடையை அபிவிருத்தி செய்வதற்கான உதவி கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : நெருக்கடிகள் குறையும். 


விசாகம் : உதவி கிடைக்கும். 

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 31, 2022



ஆடம்பர பொருட்களை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய கருவிகளை வாங்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அனுஷம் : அனுபவம் உண்டாகும்.


கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 31, 2022



தொழிலில் வெளியூர் நபர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஈடுபாடு உண்டாகும். பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : அனுகூலமான நாள்.


பூராடம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 31, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




உத்திராடம் : நெருக்கடியான நாள்.


திருவோணம் : குழப்பம் உண்டாகும்.


அவிட்டம் : உதவி கிடைக்கும். 

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 31, 2022



வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாலின மக்களிடம் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகம் சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : மகிழ்ச்சி ஏற்படும்.


சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------




மீனம்

அக்டோபர் 31, 2022



எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




பூரட்டாதி : மாற்றம் உண்டாகும். 


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


ரேவதி : கவலைகள் குறையும்.

---------------------------------------


நிக் வாயிச்சஸ் (NICK VUJICIC) - உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளரின் வாழ்க்கை பயணம் (Life Travel of World famous Self Confidence Speaker)...



நிக் வாயிச்சஸ் (NICK VUJICIC) வாழ்க்கை பயணம் (Life Travel)...


உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் Nick Vujicic இன் வலி நிறைந்த வாழ்க்கை வரலாறு.


உலகில் பலநூறு தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் இருந்தாலும் அவர்களில் Nick Vujicic தனித்துவமானவர். பல உலகத் தலைவர்களுக்கும் தன்னம்பிக்கை சொல்லிக்கொடுப்பவர். பல்லாயிரம் மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றியமைத்தவர்.


இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உரையாற்றியுள்ளார். 


இவ்வாறு பல்வேறு புகழிற்குச் சொந்தமான Nick இன் கடந்தகால வாழ்க்கை மிக வேதனை மிகுந்ததாகவே அமைந்தது. தங்கள் வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் இவரின் வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டால் தாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்ந்துகொள்வார்கள்.


1982 இல் ஆஸ்ட்ரேலியாவின் மெல்பன் நகரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அதன் தந்தை வாந்தியெடுத்துவிட்டார். தாய் "இது என் குழந்தையே அல்ல.." எனக் கத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கெல்லாம் காரணம் அக்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகளும், இரண்டு கால்களும் அற்ற நிலையில் வெறும் தலையும், உடலும் கொண்ட உருவமாகப் பிறந்தது.


சில மணி நேரங்களில் மனதை அமைதிப்படுத்திக்கொண்ட அத்தம்பதியினர் கடவுள் தங்களுக்களித்த அக்குழந்தையை மனமாற ஏற்றுக்கொண்டனர். மற்ற குழந்தைகள் போலவே இவனையும் வளர்க்கவேண்டும் என முடிவு செய்தனர். Nicholas James Vujicic என பெயர் சூட்டி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தனர்.

பிற்காலத்தில் அந்தப் பெயர் சுருக்கமாக Nick Vujicic என மாறிவிட்டது.


அக்காலத்தில் Nick போன்ற குறையுள்ள குழந்தைகள் சாதாரண பாடசாலைகளில் கல்வி கற்பது தடை செய்யப்பட்டிருந்தது. குறைபாடு உள்ள குழந்தைகளுக்கென தனியான பாடசாலைகள் இயங்கிவந்தன. இருப்பினும் Nick பள்ளிப்பருவத்தை அடைந்தபோது இந்த சட்டம் மாற்றப்பட்டு அனைத்து குழந்தைகளும் ஒன்றாக கல்விகற்கமுடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.


Nick தனது குறையை உணரக்கூடாது என விரும்பிய அவரது பெற்றோர்கள் சாதாரண மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையிலேயே Nick ஐயும் சேர்த்தனர். அந்த மாநிலத்திலேயே சாதாரண பள்ளியில் சேர்ந்த குறைபாடுள்ள முதல் மாணவர் Nick தான்.


ஆனால் நடந்தது மிக்க கொடுமையானது. Nickஇனை பள்ளியிலுள்ள சக மாணவர்களால் ஏற்கமுடியவில்லை. அவரை ஒரு தீண்டத்தகாத பொருளாக அனைவரும் நடத்த ஆரம்பித்துவிட்டனர். அவருடன் யாரும் பேசமாட்டார்கள். எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து பகடிவதை செய்வார்கள். ஏன் அடிக்கவும் செய்தார்கள். இது Nickஇன் 6 வயதிலேயே நடந்துவிட்டது. இதனால் சிறுவயதிலேயே மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.


தனது 8 வயதில் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் பாடசாலையில் அமர்ந்திருந்தார் Nick. சக மாணவி ஒருவர் சோகத்தில் அமர்ந்திருந்த அவரிடம் வந்து "Nick நீயும் அழகானவன்தான் ஆனால் உன் அழகை மற்றவர்களால் உணர முடியாது, ஆனால் அதை நான் உணர்கின்றேன்" எனக் கூறிவிட்டுச் சென்றார். அந்தக் கணம் இவனினுள் தன்னம்பிக்கை பிறந்தது. தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு பாடல்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


காலங்கள் கடந்தன. இருப்பினும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நச்சு வார்த்தைகளால் மனமுடைந்துபோனார் Nick. தனது 10 வயதில் தற்கொலை முயற்சி செய்தார். ஆனால் எப்படியோ பெற்றோர்கள் இவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிர் தப்பித்தாலும் 2 வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். கண் திறந்தவர் தன் செயலால் தனது தாய் படும் வேதனையைக் கண்டு மனமுடைந்துபோனார். இனி வாழ்க்கையில் தற்கொலை பற்றி எண்ணப்போவதில்லை என முடிவெடுத்தார். சாதாரண ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வானோ அதேபோலவே தானும் வாழவேண்டும் என வைராக்கியம் கொண்டார்.


இரு கைகள், இரு கால்கள் இல்லாமல் நீச்சல் கற்றுக்கொண்டார், உதைப் பந்து விளையாடினார், கோல்ப் விளையாடினார், இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொண்டார், நீர்ச்சறுக்கு விளையாட்டைக் கற்றுக்கொண்டார் ஏன் கணினியில் மிக வேகமாக type செய்யவும் கற்றுக்கொண்டார். இவை அனைத்தையும் தனது கால் இருக்கவேண்டிய இடத்தில் இருந்த சிறு பாதத் துண்டை வைத்து செய்தார்.


Nick அதிகம் கடவுள் நம்பிக்கை கொண்டவர். தனது இளமைப் பருவம்வரை தனக்கு எப்படியாவது கைகளும் கால்களும் முளைத்துவிடவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் பத்திரிக்கையில் மிகக் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் படிக்க நேரிட்டது. அப்போதே தன்னைவிட மோசமான வாழ்க்கை கொண்ட பலர் இருப்பதை அறிந்தார். இவ்வாறான மனிதர்களுக்கு உதவி செய்வதே தான் படைக்கப்பட்ட நோக்கம் என உணர்ந்தார் Nick. இதுவே Nickஇனை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாற்றியது.


பல மேடைகளில் பேசினார், இரு கைகளும், கால்களும் இல்லாத ஒருவர் தன்னம்பிக்கையையும் வாழ்க்கையையும் பற்றிப் பேசுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. Nick இன் புகழ் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்து இன்று உலகெங்கும் பரவி விட்டது. 



2012 இல் Kanae Miyahara என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தனர்.



இன்று உலகெங்கும் பலரால் விரும்பப்படும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்றால் அது Nick தான். ஆனால் தனது இன்றைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது 8 வயதில் சக மாணவி கூறிய "நீயும் அழகானவன்தான் Nick" என்ற வார்த்தைகள்தான் என இவர் அடிக்கடி குறிப்பிடுவார்.


.


வாழ்வின் வெற்றிக்கு Nick Vujicic கூறும் டாப் 8 அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்...


1. உங்கள் வாழ்வில் எந்த அதிசயமும் நடக்கவில்லை எனில், இன்னொருவரது வாழ்வின் அதிசயமாக நீங்கள் மாறுங்கள்.


2. "நீங்கள் எவ்விதத்திலும் சிறந்தவரல்ல, உங்களால் எதுவும் முடியாது" இவை இரண்டுமே உங்கள் வாழ்வில் நீங்கள் கேட்கும் மிகப்பெரும் பொய்கள்.


3. இறந்தகால வலிகளில் உங்கள் வாழ்க்கையைச் சிக்கவைக்காதீர்கள். அது உங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இல்லாமல் செய்துவிடும்.


4. முயற்சிசெய்யுங்கள். முயற்சி வாழ்வின் ஒரு பகுதியல்ல. முயற்சியே வாழ்க்கை. பயத்திற்கும் கனவிற்கு இடையிலேயே உங்கள் வாழ்க்கை இருக்கின்றது.


5. பயமே ஒருவனின் மிகப்பெரிய இயலாமை. அது பக்கவாதத்தைவிட மோசமாக அவனை முடக்கிவிடும்.


6. மாற்றங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பும்படி அமையாது. சிலவேளை நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.


7. உங்கள் குறைகளைப் பயன்படுத்தி வாழாதீர்கள். மாறாக திறமைகளைப் பயன்படுத்தி வாழுங்கள்.


8. எனது நம்பிக்கையை இழக்காதவரை நான் ஊனமுற்றவனாகமாட்டேன்.


நூலின் பெயர் : நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)


நூலாசிரியர் : சேவியர்


பதிப்பகம் : தோழமை வெளியீடு


மொழி : தமிழ்


வருடம் : 2012


நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்




ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)...



ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம்   பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)...


வங்கிக் கணக்கில் மோசடி; வாடிக்கையாளர் பணத்தை மீட்க ‘155260’ ஹெல்ப் லைன் அறிமுகம்: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை...



வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘‘வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலாவதியாகப் போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்’’ என்று கூறி, வாடிக்கையாளர்களின் கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்வார்கள்.


பிறகு, போலி கார்டு தயாரித்து,வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை சுருட்டி விடுவார்கள். இதுகுறித்துபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தாலும், இழந்த பணத்தை திரும்ப பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது.


இதை தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ‘155260’ என்ற உதவி எண் (ஹெல்ப்லைன்) சைபர் க்ரைம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து சைபர் க்ரைம்காவல் ஆய்வாளர் கார்த்திகேயன்கூறும்போது, "வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள்ஹெல்ப் லைன் எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு விடலாம்" என்றார்.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...