கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (18-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

இன்றைய (18-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 18, 2022



எதிர்பாராத தனவரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளின் மூலம் லாபம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : ஆதரவான நாள்.


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.


கிருத்திகை : லாபம் உண்டாகும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 18, 2022



சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




கிருத்திகை : மாற்றம் உண்டாகும். 


ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 18, 2022



உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மை ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழல் அமையும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். எதிலும் அலட்சியமின்றி செயல்படவும். வாகன மாற்றம் முயற்சிகள் ஈடேறும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : மந்தமான நாள்.


திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும். 


புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 18, 2022



எந்தவொரு பணியையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்வீர்கள். குழந்தைகளின் உயர்கல்வியை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சகோதரர்களின் உதவியின் மூலம் வெளியூர் பயணங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளை பற்றி அறிந்து கொள்வீர்கள். பயனற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் 




புனர்பூசம் : தன்னம்பிக்கையான நாள்.


பூசம் : பயணங்கள் கைகூடும். 


ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 18, 2022



குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். விவசாய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவதன் மூலம் எண்ணியதை செய்து முடிப்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : பிரச்சனைகள் நீங்கும். 


பூரம் : ஆரோக்கியம் மேம்படும். 


உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 18, 2022



மனதில் ஒருவிதமான இறுக்கம் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் கோபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு மறையும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். நீண்ட தூர பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வேலையாட்களிடம் கனிவுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் லாபகரமான சூழல் அமையும். புரிதல் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திரம் : இறுக்கமான நாள்.


அஸ்தம் : அனுபவம் உண்டாகும். 


சித்திரை : காலதாமதம் ஏற்படும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 18, 2022



பழைய பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த விரயங்கள் ஏற்படும். அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்ளவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




சித்திரை : விரயங்கள் ஏற்படும்.


சுவாதி : நெருக்கடியான நாள்.


விசாகம் : முதலீடுகளை தவிர்க்கவும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 18, 2022



உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். இறை வழிபாடு நிமிர்த்தமான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். அன்பு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 18, 2022



எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக மாற்றம் பற்றிய சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 




மூலம் : உற்சாகமான நாள்.


பூராடம் : அனுசரித்து செல்லவும். 


உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 18, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். சில பணிகளை சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். இணையம் சார்ந்த பணிகளில் உயர்வான சூழல் அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திராடம் : சோர்வு குறையும். 


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 18, 2022



வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பழுதுகளை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் தன்னம்பிக்கை குறையும். உறவினர்களின் வழியில் செலவுகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : பிரச்சனைகள் நீங்கும்.


சதயம் : செலவுகள் அதிகரிக்கும். 


பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 18, 2022



நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். சுயத்தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் அலட்சியமின்றி செயல்படவும். கதை, கவிதை மற்றும் கட்டுரை போன்றவற்றில் ஆர்வம் உண்டாகும். மாமனாரின் வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும். 


உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.


ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------


TN SCERT - Assessment Cell - Curator Training Videos - Playlist...


>>> TN SCERT - Assessment Cell - Curator Training Videos - Playlist...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (17-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


 

இன்றைய (17-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

டிசம்பர் 17, 2022



போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எண்ணங்களில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.


பரணி : ஆதரவான நாள்.


கிருத்திகை : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 17, 2022



உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். பிள்ளைகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். சுயதொழிலில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ரோகிணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 17, 2022



பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேறும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. காதில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். தனவரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும். 


திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.


புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 17, 2022



மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் அமையும். மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கு ஏற்ப உயர்வு உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முடிவினை எடுப்பீர்கள். எந்தவொரு செயல்பாட்டிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.


பூசம் : உயர்வு உண்டாகும்.


ஆயில்யம் : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 17, 2022



சாதுரியமான பேச்சுக்களின் மூலம் லாபம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : லாபம் உண்டாகும்.


பூரம் : அறிமுகம் கிடைக்கும். 


உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 17, 2022



பொருள் வரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பழைய நினைவுகளால் அமைதியற்ற சூழல் ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். உதவி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும். 


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும். 


சித்திரை : இழுபறிகள் குறையும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 17, 2022



வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இழுபறியான தனவரவு கிடைக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். நம்பிக்கை மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




சித்திரை : அனுபவம் கிடைக்கும்.


சுவாதி : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 


விசாகம் : திருப்தியற்ற நாள்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 17, 2022



மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : லாபகரமான நாள்.


அனுஷம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


கேட்டை : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------



தனுசு

டிசம்பர் 17, 2022



மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சாதனை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மூலம் : உதவி கிடைக்கும்.


பூராடம் : கவலைகள் நீங்கும்.


உத்திராடம் : தாமதங்கள் குறையும். 

---------------------------------------



மகரம்

டிசம்பர் 17, 2022



சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு மேம்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திராடம் : வெற்றிகரமான நாள்.


திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


அவிட்டம் : அனுபவம் உண்டாகும். 

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 17, 2022



ஞாபகமறதியால் சில பிரச்சனைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பிறரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். மனதில் அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அவிட்டம் : கவனம் வேண்டும்.


சதயம் : மந்தமான நாள்.


பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 17, 2022



பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். 


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் - ₹.115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை (G.O.Ms.No.173, Dated: 08-12-2022) வெளியீடு (10 New Bus Stands in Tamil Nadu - ₹.115 Crore Fund Sanction)...

 


>>> தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் -  ₹.115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை (G.O.Ms.No.173, Dated: 08-12-2022) வெளியீடு (10 New Bus Stands in Tamil Nadu - ₹.115 Crore Fund Sanction)...


2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை.


திரூப்பூரில் ₹.26 கோடி மற்றும் ஓசூரில் ₹.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு.


அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு...


ஜார்கண்டில், பள்ளி வளாகத்தில் இருந்து மட்டுமே ஆசிரியர்கள் வருகையைக் குறிக்க அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பம் (In Jharkhand, new technology allows teachers to mark attendance only from school premises)...



ஜார்கண்டில், பள்ளி வளாகத்தில் இருந்து மட்டுமே ஆசிரியர்கள் வருகையைக் குறிக்க அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பம் (In Jharkhand, new technology allows teachers to mark attendance only from school premises)...


ராஞ்சி: மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்களும் 2023 ஜனவரி முதல் "ஜியோஃபென்சிங்" என்ற தலைப்பில் அந்தந்த பள்ளி வளாகத்திற்குள் 100 மீட்டர் வரம்பிற்குள் தங்கள் வருகையைக் குறிக்க வேண்டும் என்று மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை தெரிவித்துள்ளது. 

புதிய தொழில்நுட்பம் ஆசிரியர்களின் இருப்பை பச்சை விளக்கு மற்றும் அவர்கள் இல்லாதது அந்தந்த ஸ்மார்ட்போன்களில் சிவப்பு ஒளியாகக் குறிக்கும் மற்றும் அவர்கள் சரியான நேரத்தில் வருகை மற்றும் வெளியேறுவதை உறுதி செய்யும். 

தற்போது, ​​ஆசிரியர்கள் தங்கள் தொலைபேசியில் நிறுவப்பட்ட இ-வித்யா வாஹினி செயலி மூலம் தங்கள் வருகையைக் குறிக்கின்றனர். ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வருகைத் தரவை ஆப்ஸ் கைப்பற்ற முடியும், ஆனால் ஆசிரியர்கள் இணையம் மூலம் மட்டுமே தரவைப் புதுப்பிக்க முடியும். 

மொபைல் போன்களின் இருப்பிடத்தையும் ஆப்ஸ் கண்டறிய முடியாது. இப்போது, ​​இ-வித்யா வாஹினி செயலியானது "ஜியோஃபென்சிங்" மூலம் புதுப்பிக்கப்படும், ஆசிரியர்கள் உள்நுழையும் போது அல்லது வெளியேறும் போது அவர்கள் வளாகத்தில் இருப்பதை உறுதிசெய்யும். 

சில ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வராமலோ அல்லது அவர்கள் வராத நேரத்திலோ கூட தற்போது குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் நடைமுறையாக இருக்கலாம். 

இந்த சிக்கலை சரிசெய்ய அல்லது நடைமுறையைச் சரிபார்க்க, திணைக்களம் ஜியோஃபென்சிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) அல்லது ரேடியோ அதிர்வெண் அடையாளத்தை (ஆர்எஃப்ஐடி) பயன்படுத்தி அவர்களின் தொலைபேசிகள் ஒரு மெய்நிகர் புவியியல் எல்லையை உருவாக்குகிறது. 

ஆசிரியர்களின் வருகைக்கு ஜியோஃபென்சிங் பயன்படுத்துவது குறித்து விளக்கமளித்த துறையின் இணைச் செயலர் அபிஜீத் சின்ஹா, 

“மொபைலில் உள்ள இ-வித்யா வாஹினி செயலியை ‘ஜியோஃபென்சிங்’ மூலம் புதுப்பித்தவுடன், அனைத்து வருகைப் பதிவுகளும் பதிவு செய்யப்படும். ஒரு ஆசிரியர் பள்ளி வளாகத்தில் 100 மீ. வரம்பிற்கு வெளியே அவரது வருகையைக் குறித்தால், தரவு பதிவு செய்யப்படாது மற்றும் அவர்கள் இல்லாததாகக் குறிக்கப்படும். வருகையைக் குறிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் வளாகத்தில் உள்ள தொலைபேசிகளின் இருப்பிடத்தை தொழில்நுட்பம் கண்காணித்து, தொழில்நுட்பத் துறைக்கு தகவல்களை அனுப்புகிறது என்றும் அவர் கூறினார். 

சின்ஹா ​​மேலும் கூறுகையில், “புதிய, புதுப்பிக்கப்பட்ட முயற்சியானது சோதனைக்கு உட்பட்டு வருகிறது, மேலும் ஆசிரியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய ஜியோஃபென்சிங் முறையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி முதல், குறிப்பிட்ட பகுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட செயலி மூலம் அவர்களின் வருகையைக் குறிக்க வேண்டியது கட்டாயமாகும்.


இணைய இணைப்பு வேகம் வருகைப் பதிவேடுகளைப் பாதிக்காது என்று அவர் மேலும் கூறினார், “ஆசிரியர்கள் இணைய இணைப்பு இல்லாமல் தங்கள் வருகையைக் குறிக்கலாம், ஆனால் பதிவைப் புதுப்பிக்க அவர்கள் அலைபேசி இணையத்துடன் ஒரு கட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். இதுவரை, முன்னோடி திட்டத்தின் போது இணைய இணைப்பு அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. எங்களுக்கு ஏதேனும் புகார்கள் வந்தால், அவற்றை விரைவில் சரி செய்ய முயற்சிப்போம்,'' என்றார். 

இதற்கிடையில், ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை வரவேற்றனர், ஆனால் பயன்பாட்டை ஆதரிக்க கல்வித் துறை இணைய செலவுகளை ஈடுகட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அகில் ஜார்கண்ட் பிராத்மிக் சிக்ஷக் சங்கத்தின் பொதுச் செயலர் ராம் மூர்த்தி தாக்கூர் கூறுகையில், “ வருகைப் பதிவுகள் உட்பட அறிக்கையிடல் நோக்கங்களுக்காக, இணைய இணைப்பு தேவை. கணினி மூலம் ஒவ்வொரு அறிக்கையிடல் பணிக்கும் இணைப்பிற்கான செலவினங்களை நாங்கள் ஏற்க வேண்டியுள்ளது. இந்த புதிய முயற்சிக்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் இணைய இணைப்புக்கான செலவை துறை ஏற்க வேண்டும் என்றார்.



In Jharkhand, new tech to allow teachers to mark attendance from school campus only


RANCHI: All government teachers in the state will have to mark their attendance within the 100-meter range inside their respective school campus from January 2023 under an initiative titled “geofencing”, the state school education and literacy department has said.

The new technology will mark teachers’ presence with green light and their absence as a red glow on their respective smartphones and will ensure their timely arrival and exit. Currently, the teachers mark their attendance through the e-Vidya Vahini app installed on their phones.


The app can capture both offline and online attendance data but the teachers can only update the data through the internet. The app also cannot detect the location of mobile phones.


Now, the e-Vidya Vahini app will be updated with “geofencing” to ensure that the teachers were on the campus when they were signing in or out. Sources said some teachers have been marked present without coming to school on time or even when they are absent.

It could be either due to a technical glitch or a practice done purposely. To rectify this snag or check the practice, the department has introduced geofencing technology which uses the Global Positioning System (GPS) or Radio Frequency Identification (RFID) to create a virtual geographical boundary within which the exit and entry of a teacher will be done through their phones.


Explaining the use of geofencing for teachers’ attendance, the department’s joint secretary, Abhijeet Sinha, said, “Once the e-Vidya Vahini app on a mobile device is updated with ‘geofencing’, all attendance markings will be registered if done only within the 100-m range on the school campus.


If a teacher marks his or her attendance outside of the range, the data would not be registered and he or she would be marked absent.” He also said the technology monitors the location of phones on the campus at the particular time of marking attendance and relays the information to the technical department.

Sinha further said, “The new, updated initiative is undergoing pilot testing and the teachers have been instructed to use the geofencing system to record their attendance. From January, it will be compulsory to mark their attendance through the updated app within the specified area.”


Stating that the internet connection speed will not affect the attendance records, he added, “The teachers can mark their attendance without an internet connection, but they must be connected at some point to update the record.

So far, we have not received any complaints regarding the internet connection or technical glitches during the pilot project. If we receive any complaints, we will try to rectify them at the earliest.”

Meanwhile, the teachers welcomed the new technology but want the education department to cover the internet costs to support the app.

The general secretary of the Akhil Jharkhand Prathmik Sikshak Sangh, Ram Murti Thakur, said, “For reporting purposes, including attendance updates, an internet connection is required. We have to bear the expenses of the connection for every reporting work through the system. We have no objections to this new initiative, but the department should cover the cost of the internet connection.”


 ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியரின் வருகையை பதிவு செய்ய புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில் ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பது தானாகவே பதிவிடப்படுகிறது. தங்கள் ஸ்மாட் போன்கள் மூலம் ஆசிரியர்கள் இதனை அறியலாம்.


 மாணவர் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு தினசரி ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆசிரியர்களின் வருகை ஆன்லைன் வாயிலாக அப்டேட் செய்யப்பட்டு வந்தது. பிறகு மாநிலம் வாரியாக செயலிகளை உருவாக்கி அதன் வாயிலாக தங்களது வருகையை பதிவு செய்து  ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆசிரியர் உரிய நேரத்தில் தனது கைரேகையை அந்த இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். அதே போல பள்ளியை விட்டு வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். 


இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கென்று புதிய வருகை பதிவேடு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் இ- வித்யா வாஹினி செயலி மூலம் தங்களது வருகை பதிவு செய்து வந்தனர்.


அதற்கு பதிலாக தற்போது ஜியோ பென்சிங் என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் 100 மீட்டர் வரம்புக்குள் இருந்தால் தானாகவே அவர்களின் வருகை பதிவு செய்யப்படும். அப்போது பச்சை நிறத்தில் ஸ்மார்ட் போனில் ஒளி தென்படும். அதே போல் அவர்கள் பள்ளியில் இல்லாத போது ஸ்மார்ட் போன்களில் சிவப்பு நிற ஒளி தோன்றும். இந்த புதிய வருகை பதிவு முறை 2023 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் - சீமான் கோரிக்கை (Old Pension Scheme for Government Employees should be implemented immediately - Seaman demands)...


 பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்கள் வயிற்றில் அடிக்கிறது திமுக அரசு: சீமான் சாடல்...


 "எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றுகூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் நிறைவேற்ற மறுத்து அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.


கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்துவந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் தொடக்கம் முதலே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர். அரசு ஊழியர்களின் 13 ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016 ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். அக்குழு அமைக்கப்பட்ட 4 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு வல்லுநர் குழு தனது ஆய்வு அறிக்கையை 2018 ஆம் ஆண்டுதான் தமிழ்நாடு அரசிடம் அளித்தது.


ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அன்றைய அதிமுக அரசு, வல்லுநர் குழு அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டது. அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வல்லுநர் குழு அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டதையடுத்து வேறு வழியின்றி, 2019 ஜனவரி மாதம் அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது. இதனால் அரசு ஊழியர்களின் கண்ணீர்ப் போராட்டம் மீண்டும் தொடர்கதையானது.

 


இதற்கிடையில் கடந்த 2021 ஆம் ஆண்டுச் சட்டப்பேரவை தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று கடந்த மே மாதம் சட்டப்பேரவையிலேயே அறிவித்து, நம்ப வைத்து கழுத்தை அறுத்தது திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு. எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றுகூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.


இந்தியாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்டன. அந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே இமாசலப் பிரதேச புதிய அரசு தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒன்றரை லட்சம் பேர் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய முறையைக் கோரிப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிட அரசுகளும் ஆட்சி, அதிகார பலம் கொண்டு அவர்களை அடக்கி ஒடுக்கியும், பணியிடைநீக்கம் என அச்சுறுத்தியும் அவர்களது போராட்டத்தை, நீர்த்துப்போகச் செய்துவருவது பெருங்கொடுமையாகும்.

 


ஆகவே, திமுக அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக் காலமாகப் போராடிவரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மனிதம் மலரட்டும் - இன்றைய சிறுகதை (Let Humanity Bloom - Today's Short Story)...


மனிதம் மலரட்டும் - இன்றைய சிறுகதை (Let Humanity Bloom - Today's Short Story)...


போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விடப்பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன். 


அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. 


எனக்கும் ஆர்வம், அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்கதான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு".


அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே இருந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். 


தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது. "பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க" என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.


என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தை கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டு தான் இருந்திருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி.


மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம், "அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?"


மனித நேயம் சாகவில்லை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal

 பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் Madurai MP S. Venkatesan's...