கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.12.2022 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.12.2022 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: இனியவை கூறல்


குறள் : 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.


பொருள்:

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.


பழமொழி :

A true friend is the best possession

உண்மையான நண்பனே உன்னதச் சொத்து


இரண்டொழுக்க பண்புகள் :


1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.


 2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "


பொன்மொழி :


ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் படி அது இருப்பதை அடையாளம் காணுவதாகும். --ஜிக் ஜிக்லர்.


பொது அறிவு :


1. மிகப்பெரிய நீர் பறவை எது ? 


அன்னம்.


 2. பின்னோக்கி பறக்கும் பறவை எது?


ஹம்மிங் பறவை.


English words & meanings :


flea - a biting insect. noun. உண்ணி பூச்சி. பெயர்ச் சொல். flee - run away, verb ஓடிப் போதல். வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தச் செய்யும்.


NMMS Q


0.5,. 0.55, 0.65, 0.80, _______. 


a) 0.82 b) 0.9 c) 0.95 d) 1 


விடை: 1


நீதிக்கதை


உருவத்தை பார்த்து பழகாதே


ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.


அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...


ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.


உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.


மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன


இன்றைய செய்திகள்


23.12.22


* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும், இதனை ஜன.2-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


* காப்புக் காடுகளுக்கு அருகில் செயல்படும் குவாரிகள் மூடப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தெரிவித்தார்.


* சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.


* நாகையில் இருந்து 600 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டிச.25, 26-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


* சீனாவில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


* 1.11 லட்சம் சைபர் கிரைம் வழக்கில் ரூ.188 கோடி மீட்பு: மத்திய அமைச்சர் தகவல்.


* ஆப்கன் பல்கலை.களில் பெண்கள் படிக்க தடை: தலிபான் உத்தரவுக்கு ஐ.நா. எதிர்ப்பு.


* எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.


* சென்னை பல்கலைக்கழக தடகளம்: பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீராங்கனை ஷெரின் தங்கம் வென்றார்.


* பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.


* இந்தியாவில் முதன்முறையாக உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடரை நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


Today's Headlines


* On the occasion of the Pongal festival, the Tamil Nadu government has announced that Rs.1000 Pongal gift will be given to rice family card holders and this will be inaugurated by Chief Minister Stalin on January 2.


 * Environment Minister Siva V Meiyanathan said that quarries operating near reserve forests will be closed.


 * The consultation for Siddha, Ayurveda, Unani, and Homeopathy courses will start on 27th in Chennai.


 * Depression 600 km from Nagai: Chance of heavy rain in delta districts on Dec 25, 26.


 * A mutated Omicron virus that is spreading rapidly in China has been confirmed in 4 people in India.  Accordingly, intensive inspection has been ordered at international airports.


 * 1.11 lakh cybercrime case recovery of Rs 188 crore: Union Minister informs.


 * Ban on women studying in Afghan universities: Taliban orders UN  Resistance.


* Tedros Adhanom Ghebreyesus, the head of the World Health Organization, said that the unexpected increase in the spread of corona in China is worrying.


 * Chennai University Athletics: Loyola College's Sherin wins gold in women's 100m.


* The 7th 20-over cricket tournament for school teams will start on 26th in Tamil Nadu.


* For the first time India has been given permission to host the World Table Tennis Tournament.


இன்றைய (23-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (23-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

டிசம்பர் 23, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். பணிகளில் உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : அலைச்சல்கள் குறையும்.


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 23, 2022



கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் இனம்புரியாத கவலைகள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : அலைச்சல்கள் மேம்படும். 


ரோகிணி : படபடப்பான நாள்.


மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 23, 2022



விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சவாலான பணிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஆதரவு மேம்படும். சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : ஆதரவு மேம்படும்.


புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 23, 2022



வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்கள் சார்ந்த விஷயங்களில் அனுபவம் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இழுபறியான பொருட்களை விற்று லாபம் அடைவீர்கள். உங்களின் கருத்துக்களுக்கு வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். லாபம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : தீர்ப்பு கிடைக்கும். 


பூசம் : அனுபவம் உண்டாகும்.


ஆயில்யம் : மதிப்பு அதிகரிக்கும். 

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 23, 2022



குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். புதிய வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : செலவுகளை குறைப்பீர்கள். 


பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரம் : விழிப்புணர்வு ஏற்படும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 23, 2022



பயணங்களில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மாற்றத்தை உருவாக்கும். வெளியூரில் இருந்து வர வேண்டிய தனவரவு கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 




உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.


அஸ்தம் : மாற்றமான நாள்.


சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 23, 2022



சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். விவேகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




சித்திரை : மாற்றம் உண்டாகும். 


சுவாதி : திறமைகள் வெளிப்படும்.


விசாகம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 23, 2022



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் தோற்றப்பொலிவு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தொலை தூர உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் தனவரவு மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


அனுஷம் : ஆதாயம் உண்டாகும். 


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 23, 2022



எளிதாக முடியக்கூடிய சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகளை பற்றிய நினைவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். இணையம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 




மூலம் : காலதாமதமான நாள்.


பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 23, 2022



வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில உயர் பொறுப்புகள் பல தடைகளுக்கு பின்பு கிடைக்கப் பெறுவீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். இன்பமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திராடம் : புரிதல் உண்டாகும்.


திருவோணம் : அனுசரித்து செல்லவும்.


அவிட்டம் : கவனம் வேண்டும். 

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 23, 2022



கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபாரம் ரீதியாக முக்கியமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 


சதயம் : முடிவு கிடைக்கும். 


பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 23, 2022



மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்வீர்கள். அரசு சார்ந்த உதவி சாதகமாக அமையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தீர்வு உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். திடீர் திருப்பங்களின் மூலம் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். சிரமம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 




பூரட்டாதி : சாதகமான நாள்.


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------


புதிய வகை கொரோனா நோய்த் தொற்று - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை - செய்தி வெளியீடு (New Type of Corona Disease - Advice by Chief Minister Mr. M. K. Stalin - Press Release)...

 


>>> புதிய வகை கொரோனா நோய்த் தொற்று - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை - செய்தி வெளியீடு (New Type of Corona Disease - Advice by Chief Minister Mr. M. K. Stalin - Press Release)...



இரண்டாம் பருவத் தேர்வு - 4 மற்றும் 5ஆம் வகுப்பு - அறிவியல் (தமிழ் & ஆங்கில வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th & 5th Standard - Science (Tamil & English Medium) - Answer Key - EMIS Website)...

 

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - அறிவியல் (தமிழ் வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th Standard - Science (Tamil Medium) - Answer Key - EMIS Website)...



>>> இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - அறிவியல் (ஆங்கில வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th Standard - Science (English Medium) - Answer Key - EMIS Website)...




>>> இரண்டாம் பருவத் தேர்வு - 5ஆம் வகுப்பு - அறிவியல் (தமிழ் வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 5th Standard - Science (Tamil Medium) - Answer Key - EMIS Website)...




>>> இரண்டாம் பருவத் தேர்வு - 5ஆம் வகுப்பு - அறிவியல் (ஆங்கில வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 5th Standard - Science (English Medium) - Answer Key - EMIS Website)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



TNSED MONITORING OOSC MANUAL - USER MANUAL - App Version 2.0 - Manual Version 1.0 - TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT - Essential Steps for BRTE, Teachers & HM (TNSED பள்ளி செல்லாக் குழந்தைகள் கையேடு - பயனர் கையேடு - செயலி பதிப்பு 2.0 - கையேடு பதிப்பு 1.0 - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை - ஆசிரியப் பயிற்றுனர், ஆசிரியர்கள் & தலைமை ஆசிரியர்களுக்கான அத்தியாவசிய படிகள்)...



>>> TNSED பள்ளி செல்லாக் குழந்தைகள் கையேடு - பயனர் கையேடு - செயலி பதிப்பு 2.0 - கையேடு பதிப்பு 1.0 - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை - ஆசிரியப் பயிற்றுனர், ஆசிரியர்கள் & தலைமை ஆசிரியர்களுக்கான அத்தியாவசிய படிகள் (TNSED MONITORING OOSC MANUAL - USER MANUAL - App Version 2.0 - Manual Version 1.0 - TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT - Essential Steps for BRTE, Teachers & HM)...




ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் (TET Paper)-1ல் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் (22.12.2022) சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TRB அறிவிப்பு(Candidates who have cleared Teacher Eligibility Test Paper-1 can download certificate from today (22.12.2022) - TRB Notification)...

 

>>> ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் (TET Paper)-1ல் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் (22.12.2022) சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TRB அறிவிப்பு(Candidates who have cleared Teacher Eligibility Test Paper-1 can download certificate from today (22.12.2022) - TRB Notification)...



பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Presenting Pongal Gift Package - Government of Tamil Nadu Press Release) எண்: 2327, நாள்: 22-12-2022 - பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு (Chief Minister M.K.Stalin Announced that ₹1,000 will be given to family cardholders on the occasion of Pongal)...

 


>>> பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Presenting Pongal Gift Package - Government of Tamil Nadu Press Release) எண்: 2327, நாள்: 22-12-2022...


பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு (Chief Minister M.K.Stalin Announced that ₹1,000 will be given to family cardholders on the occasion of Pongal)...


2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000/-  ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

  மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...