கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் உட்பட 30 கருதுகோள்கள் குறித்து கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆலோசனைகள் வழங்கினார் (In a review meeting with education officials, the minister gave suggestions on 30 proposals, including giving holidays for local festivals, giving special casual leave to teachers who worked on holidays)...



>>> உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் உட்பட 30 கருதுகோள்கள் குறித்து கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆலோசனைகள் வழங்கினார் (In a review meeting with education officials, the minister gave suggestions on 30 proposals, including giving holidays for local festivals, giving special casual leave to teachers who worked on holidays)...


 கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எனது தலைமையில் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (27.06.2023) நடைபெற்றது.


உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் உட்பட 30 கருதுகோள்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினோம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்:தீவினையச்சம்


குறள் :203


அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.


விளக்கம்:


தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.



பழமொழி :

A little learning is a dangerous thing


அரை குறை படிப்பு ஆபத்தானது.


இரண்டொழுக்க பண்புகள் :


1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.



2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :


பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. தந்தை பெரியார்.


பொது அறிவு :


1. ”வெள்ளை யானைகளின் நாடு” என்று அழைக்கப்படும் நாடு எது?


விடை: தாய்லாந்து


2. உலகின் மிகப்பெரிய சூடான பாலைவனம் எது?


விடை: சஹாரா பாலைவனம்



English words & meanings :


 fragrance – a pleasant, sweet smell. noun. நறுமணம். பெயர்ச் சொல். gather - come together, bring together. noun. ஒன்றுச் சேர். திரட்டு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


பழங்கள்: தினம் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயநோய் ,இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.


ஜூன் 28


பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்தநாள்


பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.


நீதிக்கதை


நீதி - துஷ்டருக்கு அறிவுரை கூறக் கூடாது


ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.


அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.


மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல் · குரங்காரே.. என்னைப்பாரும் வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?...


இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.


பறவைக்கு அப்போதுதான் புரிந்தது அறிவுரைகளைக்கூட அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று


துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது. நாமும் ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று



புரித்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய செய்திகள்


28.06. 2023


*ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. 


*தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை- முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. 


*தமிழ்நாட்டிற்கு மூலதன முதலீட்டிற்காக ₹4079 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மத்திய அரசு.


*உலகக்கோப்பை தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.


*ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்: இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.


Today's Headlines


* Prime Minister Modi inaugurated 5 Vande Bharat trains in one day.


 *Action to create 6 new industrial estates in Tamilnadu- Chief Minister announced.


 *Allocation of ₹4079 crore for capital investment in Tamil Nadu - Central Govt.


 * The India-Pakistan match, which is considered to be the most important match in the World Cup series, is scheduled to be held on October 15 at the Narendra Modi Stadium in Gujarat.


 *ICC 50 Over World Cup Series: India's first match is scheduled to take place on October 8 against Australia at Chennai's Chepauk Stadium.

 

கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை - ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி வெளியீடு எண் : 1246, நாள்: 27-06-2023 (Press Release No : 1246 - From Department of Treasuries and Accounts - On mustering for pensioners)...

 

>>> கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை - ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி வெளியீடு எண் : 1246, நாள்: 27-06-2023 (Press Release No : 1246 - From Department of Treasuries and Accounts - On mustering for pensioners)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்து வழிகாட்டுதல் - பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்ந்தெடுக்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Higher Education Oriented Career Guidance for Class 9 and 10 Students – Proceedings of the State Project Director of Integrated School Education to select a Graduate Teacher for the School)...


>>> 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்து வழிகாட்டுதல் - பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்ந்தெடுக்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Higher Education Oriented Career Guidance for Class 9 and 10 Students – Proceedings of the State Project Director of Integrated School Education to select a Graduate Teacher for the School)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விடுக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெறுகிறது நிர்வாகம் (Periyar University administration withdraws notification that students should not wear black for graduation ceremony)...

 பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விடுக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெறுகிறது நிர்வாகம் (Periyar University administration withdraws notification that students should not wear black for graduation ceremony)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசாணை (நிலை) எண். 165, நாள்: 31-05-2023 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியர் நேர்காணல் (மஸ்டரிங்) செயல்முறையை எளிதாக்குதல் - தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம் தொடங்கும் மாதத்தில் வருடாந்தச் சேகரிப்பு - ஆணைகள் - வெளியிடப்பட்டது (G.O Ms. No. 165 Dt: May 31, 2023 - PENSION/ FAMILY PENSION – Simplification of mustering process - Tamil Nadu State Government Pensioners - Annual Mustering of Pensioners/Family Pensioners during the month of their retirement/commencement – Orders - issued)...


>>> அரசாணை (நிலை) எண். 165, நாள்: 31-05-2023 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியர் நேர்காணல் (மஸ்டரிங்) செயல்முறையை எளிதாக்குதல் - தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம் தொடங்கும் மாதத்தில் வருடாந்தச் சேகரிப்பு - ஆணைகள் - வெளியிடப்பட்டது (G.O Ms. No. 165 Dt: May 31, 2023  - PENSION/ FAMILY PENSION – Simplification of mustering process - Tamil Nadu State Government Pensioners - Annual Mustering of Pensioners/Family Pensioners during the month of their retirement/commencement – Orders - issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான - செய்தி வெளியீடு எண்: 1247, நாள்: 27-06-2023 (Regarding Amendment of Special Abbreviation System of Electoral Roll with Photograph - Press Release No: 1247, Dated: 27-06-2023)...


>>> புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான - செய்தி வெளியீடு எண்: 1247, நாள்: 27-06-2023 (Regarding Amendment of Special Abbreviation System of Electoral Roll with Photograph - Press Release No: 1247, Dated: 27-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம் ஜூலை 21ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.


அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான அட்டவணையை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


அதன்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 வரை, வீடு வீடாகச் சென்று, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடுவர்.


ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர 29 வரை, ஓட்டுச்சாவடிகளை திருத்தி அமைத்தல்; வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல்; வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் படத்தின் தரத்தை மேம்படுத்துதல்;

ஓட்டுச்சாவடிகளின் எல்லைகளை மறு சீரமைத்து ஒப்புதல் பெறுதல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.


அக்டோபர் 17ஆம் தேதி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


 அன்று முதல் நவம்பர் 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பம் அளிக்கலாம். அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


அலுவலக வேலை நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். சிறப்பு முகாம் நாட்களில், முகாமுக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.


பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...