அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பகுதி இறுதித் தொகை பெறும் விண்ணப்பப் படிவம் (TPF Part Final Application Format - Government Aided School Teachers)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பகுதி இறுதித் தொகை பெறும் விண்ணப்பப் படிவம் (TPF Part Final Application Format - Government Aided School Teachers)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கனவு ஆசிரியர் 2023 - விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு (Kanavu Aasiriyar 2023 – Awardee List Released)...
>>> கனவு ஆசிரியர் 2023 - விருது பெறுவோர் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கனவு ஆசிரியர் 2023 - திட்டம் குறித்த அறிக்கை...
கனவு ஆசிரியர் 2023
மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கனவு ஆசிரியர் 2023 தெரிவானது பின்வரும் மூன்று படிநிலைகளில் நடத்தப்பெற்றது.
நிலை -1
இணையவழி MCQ (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிலை - 2
மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்பு.
நிலை 3
ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் - இரண்டாம்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு.
இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள். பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.
மேற்கண்டுள்ள மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 % க்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தெரிவு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள். 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
9.15 மணிக்கு பள்ளிக்கு வராத இரண்டு ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு (Two teachers who did not come to school by 9.15 am will be transferred - District Collector's order)...
*🔹🔸விழுப்புரம் அருகே கோவிந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் பழனி...
*காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திவிட்டு 2 ஆசிரியர்களையும் இடம் மாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவு...
>>> செய்தி காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
>>> ஆசிரியர்கள் பணிக்கு வர தாமதம் - பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் (காணொளி)...
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டின் ரிக் நிறுவனத் தொழில்நுட்பம் (Tamil Nadu's Rig Company technology to help rescue 41 workers trapped in Uttarakhand tunnel landslide accident)...
உத்தரகாண்ட்: உத்தரகாசி சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஆர்டி ரிக் நிறுவனம்.
பாறை, மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவியுள்ளது தமிழ்நாட்டின் ரிக் தொழில்நுட்பம்.
12வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் முடிந்து, தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு..
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
திருச்சி புத்தகத் திருவிழா 2023-2024 அழைப்பிதழ் - நவம்பர் 23 முதல் டிசம்பர் 04 வரை - நாள்வாரியான நிகழ்ச்சி நிரல் (Trichy Book Festival 2023-2024 Invitation – November 23 to December 04 – Day by Day Agenda)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.11.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள்:305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
விளக்கம்:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
பழமொழி :
Good clothes open all door
ஆடை இல்லாதவன் அரை மனிதன்.
இரண்டொழுக்க பண்புகள் :
1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
உன் இலக்கை
அடையும் வரை..
வெற்றியோ..
தோல்வியோ.. எதையும்
எதிர்பார்க்காமல்
ஓடிக் கொண்டே இரு.
பொது அறிவு :
1. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
விடை: 20 வருடங்கள்
2. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
விடை: மலேசியா
English words & meanings :
breeches (noun) ப்ரீச்சிஸ்- short trousers அரைக்கால் சட்டை.
bribery (noun) ப்ரைபெரி- act of giving or taking bribes லஞ்ச ஊழல்
ஆரோக்ய வாழ்வு :
செம்பருத்தி பூ : செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும்.
நவம்பர் 24
அருந்ததி ராய் அவர்களின் பிறந்தநாள்
சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.
இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார்.
1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர்[7] என்பது குறிப்பிடத்தக்கது.
2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்[8].
மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.[9]
2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.
நீதிக்கதை
பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஊர்மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல்நின்று கொண்டு தங்கநாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்தமக்கள் வீது அள்ளி வீசினான்.அங்கு நின்று கொண்டு இருந்தகடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்வரை வீசி கொண்டே இருந்தான். அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.
மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார், மன்னர் ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார்,என்று சொன்னபோது மன்னன் குறுக்கிட்டு சொன்னான், இல்லை இல்லை எனக்கு ஆண் குழந்தை பிறந்ததற்காக நான் தங்ககாசு கொடுக்கவில்லை எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான்.
அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளி தூவினான். மன்னன் சொன்னபடி பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக உருவெடுத்து வந்தவன் தான் பின்னாளில் பார் போற்றிய மாவீரன் அலெக்சாண்டர்
ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிக சிறந்த மனிதனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான்.ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் அவன் நம்பிக்கையை காப்பாற்றினார். AlwaysTeachers are Wondeful in the world. குரு அறிவுரை கேட்டு நடத்தும் வாழ்க்கை ராஜ வாழ்க்கையே........
இன்றைய செய்திகள்
24.11.2023
*தமிழகத்திற்கு டிசம்பர் இறுதி வரை தினமும் 2700 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்; காவிரி ஒழுங்காற்று குழு.
* நீலகிரிக்கு வராதீங்க சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்.
* தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்.
* ஐ ஆர் சி டி சி இணையதளம் நேற்று காலை 11 மணியிலிருந்து செயல்படவில்லை- பயணிகள் பாதிப்பு.
*கோயம்பேடு மார்க்கெட்டில் குளிர் பதன கிடங்கை நவீனப்படுத்த திட்டம்.
*சர்வதேச பீடே செஸ் போட்டி தமிழக வீரர் ஆயூஸ் ரவிக்குமார் சாம்பியன்.
Today's Headlines
* 2700 cubic feet of water should be released daily till the end of December to Tamil Nadu; Cauvery Management Committee.
* Collector requests tourists not to visit Nilgiris.
* Former Tamil Nadu Governor Fatima Bivi passed away.
* The IRCTC website was down since 11 am yesterday - passengers affected.
*Project for Modernization of Cold Storage in Koyambedu Market.
* Tamil Nadu player Ayus Ravikumar is the champion of the International Pede Chess Tournament.
உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கி அரசாணை (நிலை) எண்: 169, நாள்: 03-10-2023 வெளியீடு (Tuition fee for children of teachers studying higher education increased up to Rs.50,000/- G.O.(Ms) No: 169, Dated: 03-10-2023 Issued)...
>>> அரசாணை (நிலை) எண்: 169, நாள்: 03-10-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...