கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:315


அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.


விளக்கம்:


 அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.



பழமொழி :

Well began is half done


நல்ல தொடக்கம் பாதி வெற்றி



இரண்டொழுக்க பண்புகள் :


1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 


2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.



பொன்மொழி :


ஐந்துக்கு எழுந்திரு ஒன்பதுக்கு உணவருந்து ஐந்துக்கு சாப்பிடு ஒன்பதுக்கு உறங்கு – பின்லாந்து



பொது அறிவு :


1. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்?


விடை: தொல்காப்பியம் 


2. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது?


விடை: கருவிழி 



English words & meanings :


 legacy - a gift of personal property by will பரம்பரைச் சொத்து. 

lexicographer - a compiler or writer of a dictionaryஅகராதி தயாரிப்பவர்


ஆரோக்ய வாழ்வு : 


பாரிஜாத பூக்கள்: நான்கு முதல் ஐந்து பாரிஜாத பூக்கள், இரண்டு முதல் மூன்று பாரிஜாத மரத்தின் இலைகள் மற்றும் 2 முதல் 3 துளசி இலைகளை சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி தேநீராக குடிக்கவும் இனிப்பு தேவை என்றால் தேன் சேர்த்து குடிக்கலாம்.



டிசம்பர் 07


கொடி நாள் (இந்தியா) 


கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.



நீதிக்கதை


 The Fox & the Lion – சிங்கமும் குட்டி நரியும் :- ஒரு குட்டி நரி ஒன்னு காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சு.பிறந்ததுல இருந்து அந்த நரி சிங்கத்தை பார்த்ததே இல்ல.அதனால சிங்கத்தை நினச்சு அதுக்கு பயம் எப்பவும் இருந்தது இல்லை.


ஒருநாள் காட்டுப்பகுதியில் தண்ணி குடிக்க போன நரி, சிங்கத்தை நேருல சந்திச்சுச்சு.உடனே அதுக்குள்ள பயம் வந்துடுச்சு ,ஓடி வீட்டுக்கு போய்டுச்சு அந்த நரி.


வீட்டுக்கு வந்த நரி பயந்து போய் வீட்டுக்கு ஓடி வந்தத நினைச்சு வருத்த பட்டுச்சு ,இனிமே அந்த சிங்கத்த பார்த்தா பயப்பட கூடாதுனு முடிவு பண்ணுச்சு.ஆனா மறுநாளும் அந்த சிங்கத்தை பார்த்ததும் பயத்துல வீட்டுக்கு ஓடி வந்துடுச்சு அந்த நரி.


அத பார்த்த தாத்தா நரி ஏன் ஓடி வர்றன்னு கேட்டுச்சு ,அதுக்கு அந்த குட்டி நரி நடந்தத சொல்லுச்சு.அதுக்கு அந்த தாத்தா நரி சொல்லுச்சு பயப்படுகிறது  கடவுள் நமக்கு கொடுத்த முன்னெச்சரிக்கை செய்தி .பயம் வந்ததும் அந்த இடத்துல இருக்குற ஆபத்தை முதல்ல உணர்ந்து ஓடி வந்த நீ ரொம்ப கெட்டிக்காரன்.


உனக்கு எப்ப எல்லாம் பயம் வருதோ அப்ப எல்லாம் தெளிவா யோசிச்சு ,அந்த பயத்தை எதிர்கொள்ளணும்னு சொல்லுச்சு, அந்த தாத்தா நரி.அதுக்கு அந்த குட்டி நரி கேட்டுச்சு, அப்ப நாளைக்கு அந்த சிங்கத்தை நேருல பார்த்தா பயப்படாம நிக்கணுமான்னு கேட்டுச்சு.


அதுக்கு அந்த தாத்தா நரி சொல்லுச்சு, அப்படி இல்ல எப்ப எல்லாம் உனக்கு பயம் வருதோ, அந்த சூழ்நிலைய உணரனும் .தேவையில்லாத பயமா இருந்தா அத விட்டுடனும் . அதே நேரத்துல உனக்கு எதாவது ஆபத்து வரும்னு நிலைமை இருந்தா ஓடி வந்துடவேண்டும் என்று தெளிவா சொல்லுச்சு.



இன்றைய செய்திகள்


07.12.2023


*சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் அமைச்சர் தங்கம் தென்னரசு.


*மிச்சாங் புயல் பாதிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு தாலுகாக்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.


*11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வில் நத்தமேடு அரசு பள்ளி மாணவிகள் சாதனை.


*காஞ்சிபுரத்தில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு.


*T20 பந்துவீச்சாளர் தரவரிசை: ரஷீத்கானை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்த பிஷ்னோய்.


Today's Headlines


*The last date to pay electricity bills in four districts including Chennai is extended –Minister Thangam Thennarasu 


 * Due to Cyclone Michong's  impact: Schools and colleges are closed today in six taluks of Chengalpattu district.


 *Nathamedu  Govt. School Girls Achieved top rank in Aptitude Test for 11th std


 *Thousands of acres of agricultural land affected in Kanchipuram.


 *T20 bowler rankings: Bishnoi overtook Rashid Khan and topped the list


பவானிசாகர் அரசு அலுவலர்‌ பயிற்சி நிலையம்‌ - 175 இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள்‌ கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி - 59வது அணி - பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைமுறைப்படுத்துதல்‌ - பணியாளர்களைப்‌ பயிற்சிக்கு அனுப்புதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ ந.௧. எண்‌. 76598 / அ4 / இ4 / 2023, நாள்‌: 06.12.2023(Bhavanisagar Government Officers Training Center - Implementation of 41 Working Days Condensed Basic Training for 175 Junior Assistants / Assistants - 59th Batch - Bhavanisagar Training Center (Both) from 13.12.2023 to 05.02.2024 - Sending Personnel for Training - Regarding - Tamil Nadu Joint Director of School Education (Staff Block) Proceedings Rc. No. 76598 / A4 / E4 / 2023, Dated: 06.12.2023)...

 

 பவானிசாகர் அரசு அலுவலர்‌ பயிற்சி நிலையம்‌ - 175 இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள்‌ கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி - 59வது அணி - பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைமுறைப்படுத்துதல்‌ - பணியாளர்களைப்‌ பயிற்சிக்கு அனுப்புதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ ந.௧. எண்‌. 76598 / அ4 / இ4 / 2023, நாள்‌: 06.12.2023(Bhavanisagar Government Officers Training Center - Implementation of 41 Working Days Condensed Basic Training for 175 Junior Assistants / Assistants - 59th Batch - Bhavanisagar Training Center (Both) from 13.12.2023 to 05.02.2024 - Sending Personnel for Training - Regarding - Tamil Nadu Joint Director of School Education (Staff Block) Proceedings Rc. No. 76598 / A4 / E4 / 2023, Dated: 06.12.2023)...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌

ந.௧. எண்‌. 76598 / அ4 / இ4 / 2023, 

நாள்‌: 06.12.2023.


பொருள்‌: பயிற்சி - அரசு அலுவலர்‌ பயிற்சி நிலையம்‌ - இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள்‌ கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி - 59வது அணி - பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைமுறைப்படுத்துதல்‌ - பணியாளர்களைப்‌ பயிற்சிக்கு அனுப்புதல்‌ - தொடர்பாக.


பார்வை : பவானிசாகர்‌, அரசு அலுவலர்‌ பயிற்சி நிலைய மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ / முதல்வரின்‌ கடிதம்‌ ந.க.எண்‌.அ3/4737/2023, நாள்‌. 24.11.2023.


பார்வையில்‌ காணும்‌ கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதற்கிணங்க, இணைப்பில்‌ குறிப்பிட்டுள்ள இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி 59ஆம்‌ அணி பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைபெறவுள்ள பயிற்சியில்‌ கலந்து கொள்ள கீழ்க்காணும்‌ எண்ணிக்கையில்‌ பணியாளர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்‌.




>>> பவானிசாகர் அரசு அலுவலர்‌ பயிற்சி நிலையம்‌ - 175 இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள்‌ கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி - 59வது அணி - பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைமுறைப்படுத்துதல்‌ - பணியாளர்களைப்‌ பயிற்சிக்கு அனுப்புதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ ந.௧. எண்‌. 76598 / அ4 / இ4 / 2023, நாள்‌: 06.12.2023...

 


>>> பயிற்சி பெற வேண்டிய 175 பணியாளர்கள் பட்டியல்...



>>> பேருந்து வழித்தடங்கள், பயிற்சியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், கொண்டு வர வேண்டிய பொருட்கள்...



>>> அழைப்பாணை (Call Letter)...


மிக்ஜாம் புயல் பாதிப்பு - 09-12-2023 அன்று அறிவிக்கப்பட்ட ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு (Michaung Cyclone Impact - JACTTO GEO Picket announced on 09-12-2023 temporarily postponed)...


 மிக்ஜாம் புயல் பாதிப்பு - 09-12-2023 அன்று அறிவிக்கப்பட்ட ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு (Michaung Cyclone Impact - JACTTO GEO Picket announced on 09-12-2023 temporarily postponed)...



>>> ஜாக்டோ ஜியோ அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மழை வெள்ள நீரால் உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டால் அதற்கான காப்பீடு பெறும் முறை (How to get insurance if your vehicle gets damaged by rainwater)...



 மழை வெள்ள நீரால் உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டால் அதற்கான காப்பீடு பெறும் முறை (How to get insurance if your vehicle gets damaged by rainwater)...



மழை வெள்ளத்தில் கார் மூழ்கியதா? 

கவலைய விடுங்க! 

வெள்ள நீரால் உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்.



>>> மழை வெள்ள நீரால் உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டால் அதற்கான காப்பீடு பெறும் முறை...


தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு (Change in half-yearly exams Timetable across Tamil Nadu - Revised press release)...


 தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் - திருத்திய செய்திக் குறிப்பு வெளியீடு (Change in half-yearly exams Timetable across Tamil Nadu - Revised press release)...


தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!


11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!


ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும்.


>>> திருத்திய செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


4 மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு (Half-yearly examination will be held as scheduled in all districts except 4 districts - Press release from Director of School Education)...


 4 மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு (Half-yearly examination will be held as scheduled in all districts except 4 districts - Press release from Director of School Education)...



>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



செய்திக்குறிப்பு

➖➖➖➖➖➖➖➖➖

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க மேற்கண்ட அறிவிக்கை வெளியிடப்படுகிறது.


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.


இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது.


பள்ளிக்கல்வி இயக்ககம்

➖➖➖➖➖➖➖➖


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...