கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...

 


பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...


பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...


நாகர்கோவில் கோட்டாறு நாராயண குரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: 


முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகப்பெரிய நிதி நெருக்கடி அரசுக்கு உள்ளது.


இந்த சுமையை தாண்டி மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு நிதியாக நாம் செலுத்துகின்ற வரிக்கு அவர்கள் திருப்பித் தருவது ஒரு ரூபாய்க்கு 29 காசு தான். நமக்கு சரியான நிதி பகிர்வு இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவித்து விடுவார். 


முதல்வர் நிச்சயமாக சொன்னதை செய்து விடுவார். ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் சந்தித்து அவர்களை அழைத்துப் பேசி ஒரு ஒரு உறுதியை கொடுத்துள்ளார். எனவே அளித்த வாக்குறுதியை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். இவ்வாறு அவர் பேசினார்.




ஏமாந்து விட்டோம் - தலைமைச் செயலக சங்கத் தலைவர் வேதனை...

 ஏமாந்து விட்டோம் - தலைமைச் செயலக சங்கத் தலைவர் வேதனை...



மின்சார வாரியம் EB தொடர்பான சேவைகளைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்கவும் வலைதளம் அறிமுகம்...


மின்சார வாரியம் EB தொடர்பான புகார்களை வீட்டில் இருந்தே தெரிவிக்க மின்சார வாரியம் வலைதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது...


தமிழ்நாடு முழுவதும் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின்சாரம் வழங்கி வருகிறது.


 அதுமட்டுமன்றி மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களையும் கண்காணித்து வருகிறது.


இதுவரை நேரில் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இதன் மூலமாக மின்சார வாரியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.


குறிப்பாக மின்சார கட்டணம், புதிய மின்சார இணைப்பு, ஏற்கனவே இருக்கும் மின் இணைப்பின் பெயரை மாற்றுவது, தற்காலிக மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு என அனைத்து வகையான சேவைகளையும் பொதுமக்கள் இந்த வலைதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பது, அதற்கான தொகையை செலுத்துவது மட்டுமன்றி நமது விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதையும் இந்த மூலம் அறிந்துக்கொள்ளலாம்,  எனவே மின்சார வாரியம் குறித்த தகவல்கள் அல்லது புகார் அளிக்க https://nsc.tnebltd.gov.in/nsconline/index.xhtml   லிங்கை கிளிக் செய்து  வலைத்தளத்தை பயன்படுத்தலாம். 



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - வினாக்களும் விடைகளும் - CPS ஒழிப்பு இயக்கம்...


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - வினாக்களும் விடைகளும் - CPS ஒழிப்பு இயக்கம்...


🙏🙏🙏🙏🙏🙏

*CPS ஒழிப்பு இயக்கம்*

*மாநில மையம்*


*CPS யை  இரத்து செய்யக் கோரி 26.02.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*சிபிஎஸ் இரத்து செய்ய முடியுமா ?*


*பதில் :*


*முடியும்..!*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*இந்தியாவில் சிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் உண்டா ?*


*பதில் :*


*உண்டு..!*


*மேற்கு வங்காளத்தில் இன்றுவரை CPS திட்டம் அமல்படுத்தப்பட வில்லை..!*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*Contributory Pension Scheme திட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க மாநிலங்களுக்கு சட்டபூர்வமான உரிமை உண்டா ?*


*பதில் :* 


*சட்டபூர்வ உரிமை உண்டு..!*


*மத்திய அரசு அமல்படுத்திய சிபிஎஸ் சட்டத்தில்.....*


*புதிய ஓய்வூதியத் திட்டத்தை.... அமல்படுத்துவதும் அமல்படுத்தாமல் இருப்பதும் ஒரு மாநிலத்தின் உரிமை என குறிப்பிடப்பட்டுள்ளது.*


*மாநில உரிமை என்ற அடிப்படையில் மேற்கு வங்க மாநில அரசு சிபிஎஸ் திட்டத்தை அம்மாநில அரசு ஊழியருக்கு அமல்படுத்தவில்லை..!*


*ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், சிக்கிம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*தமிழ்நாட்டில் அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் வித்தியாசம் உண்டா ?*


*பதில் :*


*வித்தியாசம் உண்டு.* 


*மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிபிஎஸ் திட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசு அமைத்துள்ள ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன்  (PFRDA ) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சிபிஎஸ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.* 


*தமிழ்நாடு அரசு 2003 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.*


*சிபிஎஸ் திட்டத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்கப்படுகிறது.*


*மத்திய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் தொகையில் கடன் வாங்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.*


*தமிழ்நாடு அரசு பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை.*


*CPS.. ஐ அமல்படுத்திய மாநிலங்களில்...*


*PFRDA வுடன் கையெழுத்து இடாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.*


 *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் பணிக்கொடை கிடையாது*


*செலுத்திய தொகையில் முன்பணம் கோர முடியாது என்ற நிலைமை உள்ளது.*


*தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால்  சிபிஎஸ் இரத்து செய்வதற்கு மத்திய அரசு மற்றும் PFRDA விடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*முன் தேதியிட்டு PFRDAவுடன் தமிழ்நாடு அரசு கையெழுத்து இட முடியுமா?*


*பதில் :* 


*வாய்ப்பே இல்லை.*


*முன்தேதியிட்டு கையெழுத்திட விரும்பினால்...*


*1.4.2003 முதல் ஊழியர்கள் செலுத்திய பங்கீடு  10 % அரசு செலுத்த வேண்டிய 10%  என்று 20%*


*அதாவது Rs.42 ஆயிரம் கோடி தொகையை., தமிழ்நாடு அரசு PFRDA வில் செலுத்த வேண்டும்.*


*Rs 70,000 கோடியை PFRDA வில் செலுத்த இன்றும் சரி.. எதிர்காலத்திலும் சரி.. தமிழ்நாடு அரசுக்கு வாய்ப்பில்லை.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*ஒரு வேளை தமிழக அரசு, அவ்வளவு தொகையை செலுத்த விரும்பினால்...*


*PFRDA... அந்தத் தொகையை...ஏற்றுக் கொள்ளுமா..?*


*பதில் :*


*PFRDA.. தமிழ்நாடு அரசு எவ்வளவு செலுத்தினாலும், அந்தத் தொகையை ஏற்றுக் கொள்ளும்.*


*ஆனால்.. தமிழ்நாடு அரசு எந்தத் தேதியில் தொகையினை செலுத்துகிறதோ..*


*அந்தத் தேதியிலிருந்து தான்.. CPS.. ஐ அமுல்படுத்த முடியும்.*


*ஏனெனில், PFRDA அத்தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து..*


*அதில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் தான் ஓய்வூதியம் வழங்கும்.*


*முன் தேதியிட்டு தொகை செலுத்தப்பட்டாலும்..*


*முன்தேதியிட்டு முதலீடு செய்ய வாய்ப்பில்லை அல்லவா..?*


*எனவே, முன் தேதியிட்டு ஓய்வூதியம் வழங்க வாய்ப்பே இல்லை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*PFRDA வுடன் கையெழுத்து போட இயலாத சூழ்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன ?*


*பதில் :*


*1). இதே நிலையில் தொடர்வது.*


*2). CPS திட்டத்தை இரத்து செய்வது.*


*இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.*


*இதே நிலையில் தொடர்வதற்கு சட்ட ரீதியான உரிமை.. அதிகாரம் அரசுக்கு இல்லை.*


*தமிழ்நாடு அரசு அமுல்படுத்தி வரும் இத்திட்டமானது... "அரசியலமைப்புச் சட்டத்திற்கு " எதிரானதாகும்.*


*எனவே, CPS திட்டத்தை ரத்து செய்து விட்டு, இதுவரை அரசு ஊழியர்களிடமிருந்து இதற்கென பிடித்தம் செய்த பங்குத் தொகையினை GPF.. ல் போடுவதைத் தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தமான நிலை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*CPS.. ஐ ஆட்சியாளர்கள் தானாக இரத்து செய்வார்களா ?*


*பதில் :*


*தானாக இரத்து செய்ய மாட்டார்கள்.*


*இரத்து செய்வதற்கான நிர்பந்தத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*நிர்பந்தம் கொடுத்தால் CPS இரத்து செய்ய முடியுமா?*


*பதில் :*


*நிச்சயம் முடியும்..!*


*CPS.ஐ தமிழகத்தில் 2003ல் அமுல்படுத்திய பின்பு 2006 மற்றும் 2011  ல் இரண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.


*2006 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் CPS.ஐ இரத்து செய்வோம் என திமுக மற்றும் அதிமுக  வாக்குறுதி அளிக்கவில்லை.*


*2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற 10 நாள் வேலை நிறுத்தத்தின் விளைவால்...*


*2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக...*


*CPS.. ஐ இரத்து செய்வோம் என்று திமுக மற்றும் அதிமுக வாக்குறுதி அளித்தன.*


*2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நாம் போராடியதால்..*


*CPSஐ இரத்து செய்திட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.*


*"ஒன்றுபட்ட தொடர் போராட்டம் செய்தால் CPS.. ஐ நிச்சயம் இரத்து செய்ய முடியும்..!*


*CPS இரத்து செய்திட பங்கேற்பீர்.....*


*26.02.2024 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..*


🙏🙏🙏🙏🙏🙏


*CPS ஒழிப்பு இயக்கம்*


🙏🙏🙏🙏🙏🙏


எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 6 - மார்ச் முதல் வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 6 - March 1st Week - Tamil & English Medium Lesson Plan)...

 


>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 6 - மார்ச் முதல் வாரம் - தமிழ் வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 6 -  March 1st Week - Tamil  Medium Lesson Plan)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 6 - மார்ச் முதல் வாரம் - ஆங்கில வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 6 -  March 1st Week - English Medium Lesson Plan)...



பள்ளிக் கல்வி - 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவுகள் / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வை நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறை வெளியீடு - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 21-02-2024...

 


பள்ளிக் கல்வி - 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவுகள் / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வை - Learning Outcomes (LOs) & Competency Based  Assessment Exam - நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறை வெளியீடு - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 21-02-2024...



>>> SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 21-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23-02-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 71:


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.


விளக்கம்:

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.



பழமொழி : 


Strike while the iron is hot. Make hay while the sun shins.


அலை மோதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்


பொன்மொழி:


Without continual growth and progress, such words as improvement, achievement, and success have no meaning. 


 தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாமல், முன்னேற்றம், சாதனை, வெற்றி போன்ற வார்த்தைகளுக்குப் பொருள் இல்லை.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா

பின்னுகொடி தாவரம் - அவரை

ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை

பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்

டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Enough - போதும்

Enquire - விசாரணை

Enthusiasm - தெம்பு

Entire - முழுமை

Envy - பொறாமை


ஆரோக்கியம்


துளசி: 

சிறந்த பூச்சி விரட்டியாகத் திகழும் இது ஜுரம், சளித் தொந்தரவு, குழந்தைகளுக்கு வரும் நோய்கள் போன்றவற்றை குணமாக்கப் பயன்படுகிறது.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 23


1947 – சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.


1954 – போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


குடியரசு நாள் (கயானா)



நீதிக்கதை


உழைத்தால் மட்டும் போதுமா? 


 நாள் முழுக்க வேலை தேடி அலைந்தார் ஒருவர். மாலையில் மரக்கடை ஒன்றை கண்டார். ஐயா நான் கடின உழைப்பாளி எந்த வேலை கொடுத்தாலும் நன்றாக செய்வேன் என முதலாளியிடம் உறுதி அளித்தார்.


மரம் வெட்டும் வேலை கிடைத்தது. முதல் நாள் அக்கறையுடன் வேலை செய்தார். மற்ற தொழிலாளிகளை விட வேகமாக மரம் வெட்டும் பணியை செய்து முடித்தார். புதியவரின் திறமையை கண்டு அனைவரும் வியந்தனர்.


ஆனால் விதி சதி செய்தது. அடுத்தடுத்த நாட்களில் அவரால் முதல் நாளைப் போல வேகமாக வேலை செய்ய முடியவில்லை. மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஆளானார். ஒரு வாரம் கடந்த பின்,” என்ன ஆச்சு முதல்நாள் ஆர்வமாக மரம் வெட்டினிர்களே இப்போது ஏன் முடியவில்லை வேகம் குறைந்துவிட்டது” என்று கேட்டார் முதலாளி.



ஏன் என்று தெரியவில்லை முதல் நாளைப் போல் அக்கறையுடன் தான் வேலை செய்கிறேன் என்றார் அவர். “அப்படியானால் கோடாரியை காட்டுங்கள் அதை எப்படி கூர்மை செய்துள்ளீர்கள் என்று பார்க்கட்டும்” என்றார் முதலாளி. கூர்மையா இதுவரை பட்டை  தீட்டவே இல்லை என்றார் அவர்.



“முதல்நாளில் பட்டை தீட்டி கொடுத்தேனே அதை வைத்தே வெட்டிக் கொண்டு இருக்கிறீர்களா” என்றார் முதலாளி. அவரும் “ஆமாம்” என்றார். இதுதான் பிரச்சனை பட்டை தீட்டாமல் வெட்டினால் கோடாரி மட்டுபட்டு விடும். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காது என்றார் முதலாளி. அதன்பின் கோடாரியை கூர்மை படுத்துவதை தன் முதல் வேலையாக கொண்டார் மரம் வெட்டுபவர்.


 நீதி : உழைத்தால் மட்டும் போதுமா வெற்றிபெற புத்திசாலித்தனமும் அவசியம்.




இன்றைய முக்கிய செய்திகள் 


23-02-2024 


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை  முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் என அறிவிப்பு...


 நோயாளிகளின் மருந்துச் சீட்டில் ‘CAPITAL’ எழுத்துகளில் எழுத மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது தமிழ்நாடு அரசு...


தமிழ்நாடு ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்...


கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்...


மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை.. பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு.. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்புகள்...


2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் - விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு...



Today's Headlines:

23-02-2024


Individual candidates who are going to write the 10th general examination will be notified to download the admit cards from tomorrow... 


Tamilnadu govt orders doctors to write 'CAPITAL' letters on patients' prescriptions... 


Dam cannot be built in Meghadatu without Tamil Nadu's approval: Minister Durai Murugan's Speech in the Assembly...


The Cabinet meeting chaired by Prime Minister Modi approved the increase in sugarcane procurement price from Rs.315 to Rs.340 per quintal... 


Color ID card for students.. Child protection committee in schools.. Announcements in Chennai Corporation Budget... 


Agriculture budget presentation for the financial year 2024-2025 - Rs 16,500 crore crop loan for farmers: Minister MRK Panneerselvam Announcement...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS Model QP regarding - State SLAS team information

 மாநில அடைவு தேர்வு மாதிரி வினாத்தாள் தொடர்பாக மாநில SLAS குழுவின் தகவல்  SLAS  Model  Question Paper regarding - State SLAS team informatio...