கற்பனையில் மிதக்கும் தொடக்கக்கல்வித்துறை...
*AIFETO.*
*நாள்: 05.10.2024.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.*
*தேசிய கல்விக் கொள்கையினை எதிர்ப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் தொடக்கக் கல்வித் துறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடத்திய முதல் பருவ தேர்வு முறையும் மதிப்பெண்களை பதிவு செய்யும் நடைமுறையும் ஏற்றுக்ஸகொள்ளவே முடியாத செயல்பாடாக உள்ளது.*
*தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறிவு மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலியில் உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறை கடிதம் ந.க.எண் 018919/ஜெ2/2024 நாள் 03.10.2024 அன்று வெளியிட்டுள்ளார்கள்.*
*தொகுத்தறி மதிப்பெண்கள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை 10 கேள்விகளுக்கும் ஒரு கேள்விக்கு 6 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும், 4 ,5 வகுப்புகளுக்கு 12 கேள்விகளுக்கும் ஒரு கேள்விக்கு 5 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும் அதுவும் 09.10.2024 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளே 07.10.2024 ஆகும்.*
*எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இருத்தல் கூடாது. தொடக்கக்கல்வித்துறையில் ஒன்றியம் வாரியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? எத்தனை?. ஓராசிரியர் பள்ளிகள் எத்தனை? மூன்று ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? ஐந்து ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? வகுப்பிற்கு 30 மாணவர்கள் 40 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் எத்தனை? இதெல்லாம் புள்ளி விவரத்தினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.*
*தொடக்கக் கல்வித் துறையில் பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் முறையினை ஏதும் அறியாத தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு நடைமுறைப் படுத்த வேண்டுமா? அப்படி நடைமுறைப் படுத்துவது ஏற்புடையதாக ஒரு போதும் அமையாது.*
*எமிஸ் பணிகளை மேற்கொள்வதற்கு பணியாளரை நியமனம் செய்தும் ஆசிரியர்களை இப்பணியினை மேற்கொள்ள சொல்வது ஏற்புடையதாகுமா..?*
*மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மாவட்ட ஆட்சியாளர்கள் பள்ளிகளில் பார்வையிட்டு வெளியிட்டு வருகிற கருத்தொற்றுமை நமக்கு ஒருபோதும் அமைய வேண்டாம்.*
*தொடக்க கல்வி இயக்குனர் அவர்களும், இணை இயக்குனர் அவர்களும் ஒரு கடிதத்தினை அனுப்புவதற்கு முன்னர் நாம் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றுகிறோம் என்பதனை நினைவில் கொண்டு செயல்படுத்த பெரிதும் கேட்டுக் கொள்கிறோம்.*
*பள்ளி தொடங்கி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இம்மாணவர்களுக்கு இவ்வளவு பெரிய சோதனையா..?*
*மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். வாய்ப்பு இல்லை எனில் எக்ஸ் தளத்திலும், மீடியாக்கள் மத்தியிலும், பொது வெளியிலும் இந்த நிலைமையினை வெளியிடுவதை தவிர வேறு வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. யதார்த்த நடைமுறையினை பகிர்ந்து கொள்கிறோம்.*
*வரவேற்க வேண்டியதை வரவேற்று சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் பார்வைக்கு கொண்டு வருகின்ற நிலைப்பாட்டை உடைய இயக்கத்தின் மூத்த தலைவர்,*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*
பெற்றோரின் தியாகம் - இன்றைய சிறுகதை - Sacrifice of Parents - Today's Short Story...
தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?
இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,
சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் – என்றாள்.
மகனுக்கு ஒரே சந்தோஷம்.
அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,
ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.
அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.
தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,
என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.
அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:
மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்
மகன் திகைத்து நின்றான்.
இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய்.
நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.
எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.
நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்
பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்..
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்: நட்பு ஆராய்தல்
குறள் எண்:796
பொருள்:கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
Perseverance kills the game.
இரண்டொழுக்க பண்புகள் :
*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.
*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.
பொன்மொழி :
கல்வி என்றால் ஏதோவொரு சான்றிதழைப் பெறுவது அல்ல, உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வது.
பொது அறிவு :
1. மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதத்தின் அளவு
விடை: நியூரான்
English words & meanings :
curt-வெடுக்கென்று,
risk- விறுவிறுப்பான
வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.
அக்டோபர் 07
நீல்ஸ்போர் அவர்களின் பிறந்தநாள்
நீல்ஸ் என்றிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr, IPA: [/nels ˈb̥oɐ̯ˀ/], அக்டோபர் 7, 1885 - நவம்பர் 18, 1962) இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர்.அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். இவர் இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்ஸ்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்.
புத்திசாலி சேவல்
ஒரு கிராமத்தில் சேவல் ஒன்று மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. அது காலையில் தன் குரலில் கூவி எல்லாரையும் எழுப்பி விட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நரி மரத்தின் அருகில் வந்து அந்த சேவல் இடம், “ஹலோ, நண்பா எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டது.
சேவல் குனிந்து கீழே பார்த்தபோது அந்த நரி மரத்தின் அருகில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த சேவல் நினைத்தது, “நான் இவனிடம் கவனமாக இருக்க வேண்டும் இவன் தந்திரமான நரி என்னுடைய நண்பர்கள் பலரையும் கொன்று சாப்பிட்டுள்ளான். எனவே நான் தான் என்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று எண்ணியது.
சேவல் அந்த நரியை கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் அந்த நரி சேவலிடம் மீண்டும் பேச முயற்சித்தது. நரி சேவலிடம் சொன்னது, “நான் உனக்கு நல்ல விஷயம் ஒன்றை சொல்ல தான் வந்துள்ளேன். நம் காட்டில் ராஜாவாகிய சிங்கம் ஒரு புது கட்டளை பிறப்பித்துள்ளது”.
நரி சொன்னதை அந்த சேவல் நம்பவில்லை ஆனாலும் அது என்னவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அப்போது சேவல் நரியிடம், “சரி மகராஜா என்ன கட்டளை தான் பிறப்பித்துள்ளார்? ” என்று கேட்டது. அதற்கு நரி சொன்னது, “இந்த காட்டில் உள்ள நாம் அனைவரும் ஒன்றாக நண்பர்களாக பழக வேண்டும். எந்த ஒரு சண்டையும் வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் நண்பர்களாக இருக்க வேண்டும்”. இதுதான் சிங்கராஜாவின் கட்டளை என்றது அந்த நரி.
அதற்கு சேவல், “அப்படியா இது உண்மையா” என்று கேட்டது. நரியும், “ஆமாம் உண்மைதான்” என்றது. அதுமட்டுமல்ல சிங்கராஜா இன்று நமக்காக அவருடைய குகை அருகில் உணவு ஏற்பாடு செய்துள்ளார். எனவே நாம் சேர்ந்து சென்று நம் உணவை அருந்திவிட்டு வரலாம்,என்றது நரி.
அப்போது அங்கே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது .அந்த சத்தம் கேட்டதும் நரியின் முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. அதைப்பார்த்த சேவலுக்கு நரிக்கு நாய்கள் என்றால் பயம் என்று புரிந்தது. நாய்கள் எப்போதும் நரியை பார்த்தால் விரட்டி கொண்டே இருக்கும். அதனால் நரிக்கு நாய் என்றால் பயம்.
நரி சேவலிடம் சொன்னது, “நண்பா நீ மரத்தின் கிளையில் தானே இருக்கிறாய் அருகில் ஏதாவது நாய் தென்படுகிறதா?” என்று கேட்டது. சேவல் சுத்திமுத்தி பார்த்தது அங்கே எந்த நாயும் இல்லை. ஆனால் நரிக்கு ஒரு பயம் காட்ட வேண்டும் என்று எண்ணிய சேவல், “ஒரு கூட்டமாக நாய்கள் இங்கேதான் ஓடி வந்து கொண்டிருக்கின்றன” என்றது.
அதைக்கேட்ட நரியோ அப்படியா, “அப்போது நான் இங்கே இனிமேல் இருப்பது சரியில்லை” என்று பயத்தில் ஓட ஆரம்பித்துவிட்டது. நரி மிகவும் வேகமாக பயந்து ரொம்ப தூரம் ஓடி விட்டது. அப்போது சேவல் நரி ஓடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது.
நீதி : அடுத்தவருக்கு தீமை நினைத்தால் அது நமக்கே தீமையாக வந்து முடியும்.
இன்றைய செய்திகள்
07.10.2024
* தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதற்காக 4 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரித்துள்ளார்.
* விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
* பொக்ரானில் குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கும் 3 ஏவுகணைகள் சோதனை வெற்றி.
* ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ்.
* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர், மோகன் பகான் அணிகள் வெற்றி.
Today's Headlines
* Health Minister M. Subramanian has announced that 4 new programs have been launched to bring the maternal and child mortality to zero in Tamil Nadu.
* On the occasion of Air Force Day, the biggest air adventure event at Marina Beach in Chennai ended on a grand scale yesterday. This event is also included in the Limca Book of Records.
* 3 missiles hit short-range air targets successfully tested in Pokhran.
* Shanghai Masters Tennis Series: Russian Daniil Medvedev advances to 4th round.
* Jamshedpur and Mohan Baghan won today's ISL football match.
Prepared by
Covai women ICT_போதிமரம்
பறக்கும் ரயில் சேவையை தினசரி 55 ஆயிரம் பேர் பயன்படுத்துவார்கள்.
ஆனால், இன்று (06-10-2024) மதியம் 4.30 மணி வரை சுமார் 3 லட்சம் பேர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்...
IAF Air Show 2024 - இன்று (06-10-2024) மதியம் 4.30 மணி வரை சுமார் 3 லட்சம் பேர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்...
பதவி உயர்வு தொடர்பான வழக்கில் அக்டோபர் 15அன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள்...
On October 15th, we expect good news from the Supreme Court in the promotion case - Hon'ble Minister for School Education, Mr. Anbil Mahesh...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
இலக்கிய மன்றம் & வினாடி வினா மன்றம் - மன்ற செயல்பாடுகள் மற்றும் போட்டிகள் - தொடர்பாக - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் R.C.No. 066737 / M1 / S1 / 2024, நாள் : 04-10-2024...
Literary Club & Quiz Club - Club activities and competitions - regarding - DSE Proceedings, Dated : 04-10-2024...
>>> இயக்குநரின் செயல்முறைகள்- தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Literary Club & Quiz Club - DSE Proceedings!!!
In the reference letter cited above , it has been stated that the Club activities at the school level for classes 6 to 9 shall be carried out as per the academic calendar for the year 2024-25 in the periods allotted for the club activities up to the month of April 2025 .
DSE - Literacy Club & Quiz Club
From
Dr.S.Kannappan.
Director of School Education
College Road,
Chennai-06
To
All Chief Educational officer.
All Districts.
R.C.No.066737/M1/S1/2024. Dated. 04.10.2024
Sub: School Education - 2024-25 - Literary Club and Quiz Club - Club activities and competitions - regarding.
Ref: Director School Education Proceedings Letter Rc.No.19528/M1/E1/2024 dated 20.08.2024
In the reference letter cited above, it has been stated that the Club activities at the school level for classes 6 to 9 shall be carried out as per the academic calendar for the year 2024-25 in the periods allotted for the club activities up to the month of April 2025.
Accordingly, the guidelines for conducting the activities and competition under Literary club and Quiz Club are as follows:
Literary Club
For the year 2024-25, every month one activity shall be conducted in the classroom as part of the literary club from September onwards. During the month of October, school-level literary competition shall be conducted.
The teachers shall conduct the literary activity in any one week of the month, in the respective period allocated for clubs.
The designated club In-charge teacher shall ensure that the teachers conduct these activities in all classes from 6 to 9, and that the school level literary competition is conducted in October, selecting totally 8 winners from the school for the literary club. The competition shall be conducted as per the dates given in the table below. The club in-charge teacher shall also ensure that the details of activities and competitions are entered in EMIS. The guidelines for EMIS entry is also given below.
Quiz Club
Each month, one quiz activity shall be conducted in the classroom as part of the quiz club from September onwards. During the month of November, schoo-level Quiz competition shall be conducted.
Children are to read "Thenchitu' magazine and newspaper regularly. The teachers shall create Quiz questions from Thenchittu magazine, general knowledge and current affairs from newspaper. For conducting the quiz activity in the classroom, the teacher shall divide the class into groups. The scoring format shall be as given below:
Suggested format for Quiz activity
Topic No:of Questions. Marks Allotted
General Knowledge & Current Affairs from newspaper. 20. 20
Magazines. 20. 20
Total. 40. 40
Teachers shall prepare questions based on the given format and conduct the quiz activity in any one week of the month, in the respective period allocated for clubs. The designated club in-charge teacher shall ensure that the teachers conduct these activities in all classes from 6 to 9, and that the school level quiz competition is conducted in November,selecting totally 8 winners from the school for the quiz club. The school level competition shall be conducted as per the dates given in the table below. The club in-charge teacher shall also ensure the details of activities and competitions are entered in EMIS. The guidelines for EMIS entry are provided below.
List of suggested activities that shall be conducted as part of literary club activities have been outlined below. The club in-charge teacher shall modify, supplement or replicate the activities and the details of the activities shall be entered in EMIS.
The topics for the literary club competitions have been outlined below. The competitions shall be conducted based on the topics provided and the URL link of the PDF/video as mentioned in the table below to be uploaded in EMIS.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...