கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சாலை விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியர் - குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு


 சாலை விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியர் - குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு


சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (57) கடந்த 21 ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (அக் 25) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.


காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.


ரூ.25 லட்சம் நிவாரணம்

காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.


Voter registration special camp in Tamil Nadu - Date change



 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்


தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி/ பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...


நவம்பர் மாதம் 9-10 மற்றும் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில்...


தற்போது, நவம்பர் மாதம் 16-17 மற்றும் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் *29*-ம் தேதி வெளியிடப்படும்.


வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் வரும் *29ஆம் தேதி முதல் நவம்பர் *28*-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்.


இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்படும்.


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், வாக்குச்சாவடி நிலை முகவர்களை *(BLA)* நியமித்துக் கொள்ளலாம்.


*- தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியீடு



>>> செய்தி வெளியீடு எண் 1770, நாள் : 24-10-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-10-2024

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் : பொருட்பால்

அதிகாரம்: மடியின்மை

குறள் எண்: 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
பொருள் : தாம் பிறந்த குடியை மேலும் சிறப்புடைய நற்குடியாக்க விரும்புகின்றவர், சோம்பலைக் கடிந்து முயற்சியுடையவராய் ஒழுக வேண்டும்.


பழமொழி :
கல்வியால் பரவும் நாகரிகம்.

Education is the transmission of civilization.


இரண்டொழுக்க பண்புகள் : 

1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள்.

2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை சரியாக செய்தால் வெற்றி,கடமைக்கு செய்தால் தோல்வி.


பொது அறிவு :

1. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?

விடை: மக்கள் பேசும் மொழி அடிப்படையில்

2. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர் யார்?

விடை : குடியரசுத் தலைவர்


English words & meanings :

Broom- துடைப்பம்

Clay Pot- களிமண் பானை


வேளாண்மையும் வாழ்வும் :

மலிவான விலையிலும், எளிதில் இட மாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்ததால் விவசாயிகள் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் அதிக நாட்டம் காட்டினார்கள்.


அக்டோபர் 25

பிகாசோ, 1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் நாள் ஸ்பெயின் நாட்டில் உள்ள மால்கா என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, ஜோச் ரூயிசு பால்சுகா. தாய், மரியா பிகாசோ. தந்தை ஓவிய ஆசிரியர். தன்னுடைய தாய் பெயரையே பிரதானப் பெயராக வைத்துக்கொண்டார். ஓவியத்துக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பிகாசோ, ஓவியம் வரைவதே தனி ஸ்டைல் என்றுதான் சொல்ல வேண்டும்.சிந்திக்கும் இடைவெளிகூட இல்லாமல் வேகமாக வரைவதில் பிகாசோவுக்கு இணை பிகாசோவே. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட 13,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். பிகாசோவின் மற்றொரு பிரபலமான ஓவியம், அவர் வரைந்த ஒற்றைப் புறா. இதுதான் உலக அமைதிக்கான சின்னமாக இன்றும் பறந்துகொண்டிருக்கிறது. ``ஓவியன், இருப்பதைப் பார்த்து அப்படியே வரைந்துவிட்டுப்போவதில் என்ன புதுமையான விஷயம் இருக்கிறது? பார்க்கும் காட்சி அவன் மனதினுள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத்தான் ஓவியன் ஓவியமாக வரையவேண்டும்” என்று கூறும் பிகாசோ தன்னுடைய ஒவ்வொரு படைப்பின் வழியாகவும் சமூக, தனிமனித உணர்வுகளை தன்னுடைய இறுதிக்காலம் வரை பிரதிபலித்துக்கொண்டே இருந்தார்.

இன்று (அக்டோபர் 25) இந்த மகத்தான ஓவியனின் பிறந்தநாள்!


நீதிக்கதை

இறைவன் பெற்றது.

செல்வந்தர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது தோட்டத்தில் இருந்த வாழை

குலை ஒன்றை கோவிலில் கொடுத்து வருமாறு தனது பணியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.

பணியாளர் எடுத்துச் செல்லும் வழியில் மிகவும் பசியாக இருந்ததால, அந்த வாழைக் குலையிலிருந்து  இரண்டு பழங்களை சாப்பிட்டு விட்டார்.

மீதியை கோவிலில் ஒப்படைத்தார்.

அன்று இரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார். கனவில் இறைவன் வந்து  "நீ கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தது" என்றார்.

செல்வந்தர் மிகவும் கோபம் கொண்டார். ஒரு வாழை குலை நிறைய பழங்களை கொடுத்து அனுப்பிய போதும் இறைவனுக்கு இரண்டு பழங்கள் மட்டுமே  சென்றடைந்துள்ளது மீதி பழங்கள் எங்கே? என்று   கோபத்துடன் மனதில் எண்ணினார்.

அடுத்த நாள் காலை அந்த பணியாளரை அழைத்து  அதைப்பற்றி விசாரித்தார். அப்போது அந்தப் பணியாளர் "ஐயா நான்  பசியாக இருந்ததால் இரண்டு பழங்களை மட்டும் சாப்பிட்டு விட்டேன். மீதியை கோவிலில் ஒப்படைத்தேன்"என்று கூறினார்.அப்பொழுதுதான்  அவர் பசியுடன் சாப்பிட்ட இரண்டு பழங்கள் மட்டுமே இறைவனுக்கு கொடுத்ததாக அர்த்தம் என்று செல்வந்தருக்கு புரிந்தது.

நீதி:   தேவைப்படுபவருக்கு கொடுப்பதே, இறைவனுக்குக் கொடுத்ததற்கு சமம்.


இன்றைய செய்திகள்

25.10.2024

* புதுடில்லி: டில்லியில், 2025 ஜன. 1ம் தேதி வரை பட்டாசு விற்க தடை விதிக்கவும், பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்கவும், டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

• டானா' புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

• 20 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ரோபோவான் என்ற பெரிய தானியங்கி டாக்சியை எலான்மஸ்க் அறிமுகப் படுத்தினார்.

• சென்னை:முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கும் போது  '' விளையாட்டு துறையில் இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் புகழ்பெற்றுள்ளது,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

• தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள்: மத்திய அரசு ஏற்பாடு.

• வியன்னா ஓபன் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* New Delhi: In Delhi, 2025 Jan. The Delhi court has ordered that the sale of firecrackers be banned and that firecracker warehouses be sealed until the 1st.

* Extreme precautionary measures have been taken in Odisha and West Bengal as Cyclone Dana approaches the coast.

* Elanmusk introduced RoboVan, a large automated taxi capable of carrying 20 people.

.• Chennai: "Tamil Nadu is renowned as a state that attracts the attention of not only India but also the world in the field of sports," said Chief Minister Stalin while handing over the trophies to the players who won the sports competition for the Chief Minister's Cup.

* 7,000 special trains across the country for Diwali festival: Central Govt.

* Vienna Open Tennis; Alexander Zverev advances to quarterfinals



Prepared by

Covai women ICT_போதிமரம்


கனமழை காரணமாக 25-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

   


கனமழை காரணமாக 25-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 25-10-2024 due to heavy rain) விவரம்...


கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி. ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2024) மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அறிவித்துள்ளார்கள்.



3% அகவிலைப்படி உயர்வுக்கு அரசு அலுவலர்கள் & ஆசிரியர்கள் சங்கங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு...

 அகவிலைப்படி 3% உயர்வுக்கு அரசு அலுவலர்கள் & ஆசிரியர்கள் சங்கங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்...




Ministerial employees can't directly get 2% promotion even if they pass the TET...

 


அமைச்சுப் பணியாளர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நேரடியாக 2% பதவி உயர்வை அடைய முடியாது...


Ministerial Staff can't directly get 2% promotion even if they pass the Teacher Eligibility Test...


W.P.Nos. 9011 & 32351 of 2022 and W.P.Nos. 16897 & 25645 of 2024


அமைச்சுப் பணியாளர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நேரடியாக 2% பதவி உயர்வை அடைய முடியாது


அமைச்சுப் பணியாளர்களின் இரண்டு சதவீத பதவி உயர்வு வழக்கில் இனிமேல் எந்த ஒரு அமைச்சுப் பணியாளரும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நேரடியாக BT அல்லது PG ஆக பதவி உயர்வு அடைய முடியாது .


மாறாக அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு நியமன தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க முடியும் என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது .


மேலும் அதற்கான திருத்தங்களை விதிகளில் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது .

இது சார்ந்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்பது இதன் மூலம் தெளிவாக புலனாகிறது .


It is respectfully submitted that as observed above by the Hon'ble Division Bench of Madras High Court, the Government has deemed it fit and proposed to conduct a competitive examination for the eligible ministerial staff under 2% reservation among themselves, so as to enable them for being promoted as BT Assistants in order to ensure the academic excellence of the students in the Government Schools. Hence, for the above said purpose, the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service, need to be amended suitably. For the completion of the said amendment process, some more time is required.


Under these circumstances it is therefore most humbly prayed that this Hon'ble Court may be pleased to accept the Affidavit filed by the respondents and grant 3 (Three) months' time for making suitable amendments to the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service, and pass such other orders as this Hon'ble court deems fit in the circumstances of the case and thus render justice.



>>> உயர்நீதிமன்ற வழக்கு விவரங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



DEO Enquiry - Federation Complaint against BEO Office Assistant for asking bribe - Proceedings, Date : 23-10-2024...

 



தேர்வு நிலை நிலுவை ஊதியம் வழங்கிட கையூட்டு கேட்டதாக ஆனைமலை வட்டாரக் கல்வி அலுவலக உதவியாளர் மீதான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புகார் - பத்திரிக்கை செய்தி வெளியீடு - நேரடி விசாரணை மேற்கொள்ளல் - பொள்ளாச்சி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள், நாள் : 23-10-2024...



Tamil Nadu Teachers' Fedaration Complaint against BEO Office Assistant for asking bribe to Selection Grade arrears - Press release - Conduct of direct inquiry - Proceedings of District Education Officer (Elementary Education), Dated : 23-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கல்வி அலுவலகத்தில் எழுத்தர்கள் லஞ்சம் கேட்கின்றனர் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பு பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். 


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை தொகுதியில் உள்ள பிளாக் கல்வி அலுவலகத்தில், தேர்வு நிலை ஊதியம் பெற, ஆசிரியர்களிடம் லஞ்சம் கேட்பதாக, தமிழ்நாடு  ஆசிரியர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலரிடம் (டி.இ.ஓ.,) கூட்டமைப்பு மனு அளித்தது. 

இதுகுறித்து கூட்டமைப்பின் கோயம்புத்தூர் பிரிவைச் சேர்ந்த ஏ.தங்கபாசு கூறியதாவது: வட்டாரக் கல்வி அலுவலகத்தில் எழுத்தர் ஊழியர்கள் சம்பளப் பலன்களைப் பெற ஆசிரியர்களிடம் லஞ்சம் கேட்கும் வழக்கம் தொடர்கிறது. "உதாரணமாக, அதே அலுவலகத்தைச் சேர்ந்த எழுத்தர் பணியாளர், அதே பிளாக்கில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை  ஆசிரியரிடம், மூன்று மாத தேர்வு நிலைக்கான நிலுவைத் தொகையை, கருவூல அலுவலகத்தில் இருந்து வழங்க, 3,000 ரூபாய் கேட்டார். ஆசிரியர் கடிதத்தை கருவூல அலுவலகத்திற்கு அனுப்ப, எழுத்தர் பணியாளர்கள் காலதாமதம் செய்ததால், ஆசிரியர், கடந்த வாரம், ஊழியர்களின் கணக்கில், 3,000 ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. .

இது தொடர்பான ஆடியோ ஒன்று கசிந்து பல்வேறு ஆசிரியர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பரவியது. இதேபோல், மற்றொரு ஆசிரியர் அதே அலுவலகத்தில் தேர்வு ஊதிய செயல்முறைக்கு ரூ.15,000 கொடுத்தார். தகவல் கசிவு ஏற்பட்டதையடுத்து, எழுத்தர் ஊழியர் ஆசிரியரிடம் ரூ.3,000 திருப்பிச் செலுத்தினர். 


பொள்ளாச்சி டிஇஓ (பொறுப்பு) கே.சாந்தகுமாரிடம் விசாரித்தபோது, ​​எழுத்தர் ஊழியர்களுக்குக் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.



Tamil Nadu Teachers’ association says clerks in educational office demand bribe


The Tamil Nadu Primary School Teachers’ Federation filed a petition with the Pollachi District Educational Officer (DEO) seeking action.


COIMBATORE: The Tamil Nadu Primary School Teachers’ Federation (TNPSTF) alleged that the clerical staff of the Block Education Office at Anaimalai block of Pollachi demands bribes from teachers to get increment benefits for the selection grade. Regarding this, the federation filed a petition with the Pollachi District Educational Officer (DEO) seeking action.


A functionary A Thangabasu from the federation’s Coimbatore wing told that the practice of asking for bribes from teachers to get their salary benefits by clerical staff continues at the Block Education Office.


“For instance, a clerical staff from the same office asked Rs 3,000 from a secondary grade teacher working at the Panchayat Union Middle School in the same block to disburse three months’ arrears for selection grade, from the treasury office.


As clerical staff delayed sending the teacher’s letter to the treasury office, the teacher was forced to transfer Rs 3,000 to the staff’s account last week. An audio about this leaked and spread across various teachers’ Whatsapp groups. Similarly, another teacher gave Rs 15,000 to the same office for the selection grade process.”


Sources said, after the leak, the clerical staff repaid Rs 3,000 to the teacher. When enquired, Pollachi DEO for primary (in charge) K Shanthakumari told that she issued a show-cause notice to the clerical staff and further inquiry is on.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...