பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-12-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
"பால்: பொருட்பால்
அதிகாரம்: சூது
குறள் எண்:934
சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்.
பொருள்: ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை."
பழமொழி :
Humility often gains more than pride
அடக்கம் ஆயிரம் பொன் தரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
*நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.
*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.
பொன்மொழி :
உலக வரலாற்றை படிப்பதை விட, உலகில் வரலாறு படைப்பதை இனிமை -- ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
1. வெள்ளை நிற ரத்தம் உள்ள உயிரினம் எது?
விடை: கரப்பான் பூச்சி.
2. எலும்புக்கூடு இல்லாத உயிரினம் எது?
விடை: ஜெல்லி மீன்
English words & meanings :
Bowling. - பந்து வீச்சு
Chess. - சதுரங்கம்
டிசம்பர் 13
நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவுநாள்
நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.
நீதிக்கதை
பாட முயன்ற கழுதை
ஒரு காலத்தில் ஒரு காட்டில் முரட்டுக் கழுதை ஒன்று வசித்து வந்தது. அதற்கு நண்பர்கள் இல்லாததால் அது தனியே அலைந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த வழியே ஒரு நரி வந்தது.
கழுதையைக் கண்டவுடன் அதன் அருகே சென்று, “என்ன செய்தி ? ஏன் கவலையாய் இருக்கிறாய், தோழனே ?” என்று கேட்டது.
“எனக்கு நண்பர்களே கிடையாது. நான் தனியாக வாழ்ந்து வருகிறேன், ” என்று வருத்தத்தோடு கழுதை பதிலளித்தது.
” நல்லது, கவலைப்படாதே. இன்றிலிருந்து நான் உனக்கு நண்பனாக இருப்பேன், ” என்று கழுதைக்கு ஆறுதல் கூறியது நரி. அன்றிலிருந்து கழுதையும் நரியும் நல்ல நண்பர்களானார்கள்.ஒரு பின்மாலைப் பொழுதில், நடந்து காட்டின் எல்லையை அடைந்தனர்.
அங்கு, ஒரு கிராமப் பகுதி காணப்பட்டது. மரங்கள் நிறைந்த ஒரு தோட்டம் தென்பட்டது. அதில் பழங்கள் கொத்துக் கொத்தாகப் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தன.
ஆகா! அருமையான ருசியுள்ள பழங்கள் அவை! அவற்றில் சிலவற்றை நாம் சாப்பிடலாமா ? ” என்று கழுதை கேட்டது.
“சரி, நாம் பழங்களைச் சாப்பிடலாம். ஆனால், நாம் சிறிதும் சத்தம் செய்யாமல் இந்த வேலையைச் செய்ய வேண்டும்,” என்று எச்சரித்தது நரி. அவை தோட்டத்திற்குள் சென்றன; சிறிதும் சத்தம் செய்யாமல் பழங்களை உண்ணத் தொடங்கின.
இரண்டும் தேவையான அளவு திருப்தியாக உண்டதற்குப் பிறகு, மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தன.
“மிகவும் சுவையான பழங்களை உண்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால், இந்த இனிமையான சூழலில் இப்போது ஒரே ஒரு குறைதான் உள்ளது என்றது கழுதை.
“அது என்ன ?” என்று நரி கேட்டது. “இசை இல்லாததுதான் குறையாக உள்ளது. ஏன், அதை நீ உணரவில்லையா ? ” என்று சற்று வியப்புடன் கேட்டது கழுதை.
“நமக்கு எங்கிருந்து இசை கிடைக்கப் போகிறது ?,” என்று கேட்ட நரிக்கு, “நான் ஒரு சிறந்த பாடகன் என்று உனக்குத் தெரியாதா ?” என்று கழுதை கேட்டது.
இதைக் கேட்ட நரி மிகவும் கவலை அடைந்தது. “மறந்து விடாதே, நண்பா ! நாம் இப்போது ஒரு தோட்டத்தில் இருக்கிறோம்.
தோட்டக்காரன் நம் குரலைக் கேட்டால் நமக்குப் பிரச்சினை ஏற்படும். ,” என்று நரி கழுதைக்கு அறிவுரை கூறியது.
தன்னுடைய நல்ல அறிவுரையை அந்தக் கழுதை ஏற்க மறுப்பதை உணர்ந்து கொண்ட நரி அங்கிருந்து நகர்ந்தது.
கழுதை, தலையை உயர்த்தி, அண்ணாந்து பார்த்தவாறு பெரிய குரலில் கத்தத் தொடங்கியது. இந்தச் சத்தத்தைக் கேட்டுத் தோட்டக்காரனும் மற்ற விவசாயிகளும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். கழிகளால் அக்கழுதையை அடித்தனர்.
அப்போது அங்கே வந்த நரி
“உண்மையான நண்பனின் நல்ல அறிவுரையைக் கேட்காவிட்டால் இப்படித்தான் நடக்கும்,"என்று கூறியது.
நீதி : நல்லதை கேட்டால் நன்மை; மறுத்தால் தீமை.
இன்றைய செய்திகள்
13.12.2024
* வரலாறு படைத்த தமிழக வீரர் குகேஷ்: டிங் லிரனை வீழ்த்தி இளம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
* டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
* வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
* ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து விடும், ஆனாலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
Today's Headlines
* Tamil Nadu player Kukesh creates history: Defeats Ding Liran to win the Young World Chess Championship title.
* TNPSC Group 2, 2A exam results have been released.
* Chief Minister Stalin inaugurated the renovated Periyar Memorial in Vaikom yesterday.
* The deep depression will weaken in the next 12 hours, but the Meteorological Department has announced that the rain will continue.
Covai women ICT_போதிமரம்