Std 5 to 8 - English - Composition Topics
Composition topics (V - VIII)
ENGLISH - COMPOSITION TOPICS - STANDARD –V to VIII - Samagra Shiksha, Erode District
Std 5 to 8 - English - Composition Topics
Composition topics (V - VIII)
ENGLISH - COMPOSITION TOPICS - STANDARD –V to VIII - Samagra Shiksha, Erode District
வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய நிர்ணயம் - தணிக்கைத் தடை & கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்த விவரம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 09-06-2025
BEO Pay Fixation Clarification by DEE
Salary Fixation to promoted Block Education Officers - Audit Objection & details of deduction of excess salary fixation - DEE Proceedings, Dated: 09-06-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்தல் சார்ந்து அரசின் தெளிவுரைக் கடிதம் - Pay Fixation to BEOs - Clarification Letter from School Education Secretary
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு 2025 ஒத்திவைப்பு
Police Sub Inspector Exam 2025 Postponement
தேதி குறிப்பிடாமல் உதவி ஆய்வாளர் 2025 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - 7 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் - ஒரு ஆசிரியர் பணியிடைநீக்கம்
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-06-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
குறள் 2:
விளக்கம்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
துணிந்தாலன்றி எதுவும் கிட்டாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.
2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.
பொன்மொழி :
ஒரு குழந்தையின் பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே கல்வியறிவு பயன்பட வேண்டும் - அறிஞர் பிளேட்டோ
பொது அறிவு :
01.இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் இது
பொக்ரான் (ராஜஸ்தான்)
Pokhran(Rajasthan)
02. இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருது எது?
ஞானபீட விருது
(Jnanpith Award)
English words :
Grammar tips :
Whenever vowel ' O' appears near wh word ' w' is silent
Whenever vowel e, i, u ,a appears near wh word 'h' is silent
அறிவியல் களஞ்சியம் :
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதீத தொலைவில் உள்ள புதிய கோள்கள், நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து வருகிறது. தற்போது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் மூன்று கேலக்ஸிகளை இது படமெடுத்துள்ளது. இது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், வானியல் ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் துாண்டியுள்ளது.
ஜூன் 10
சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்
நடப்பது எல்லாம் நன்மைக்கே!
காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.
சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.
ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.
நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.
சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.
“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.
சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.
இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.
உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.
சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.
வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.
தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.
கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.
இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.
“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.
உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.
இன்றைய செய்திகள்
10.06.2025
⭐தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
🏀விளையாட்டுச் செய்திகள்
🏀"வருங்கால இந்தியாவின் செஸ்-ன் அடையாளம்" குகேஷ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
🏀FIH புரோ லீக்கில் இந்திய ஹாக்கி அணி நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.
Today's Headlines
*TODAY'S HEADLINES*
✏️A new procedure is being introduced this year in online registration for(NAS) National Aptitude Test Scholarship.
✏️ UGC has now issued revised guidelines regarding students pursuing two different courses simultaneously in higher education.
✏️ Presidential Election 2026- Colombian Presidential Candidate Uribe Darbe was attacked by gun shooting. He is in critical condition and is undergoing treatment.
✏️ Ukraine reported that Russian forces launched 479 drones overnight.
*SPORTS NEWS*
🏀Tamilnadu Chief Minister MK.Stalin congratulated the chess champion Kukesh and said he is "The symbol of India's future chess"
Covai women ICT_போதிமரம்
Namma School, Namma Ooru Palli நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - Palli Chalararam பள்ளிச் சாளரம் பக்கத்தில் தோன்ற வேண்டிய தகவல்கள் - TNSED Parents செயலியில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக NSNOP உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள் Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உயர் கல்வியில் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகள் - UGCன் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்
UGC Guidelines Pursuing Two Academic Programmes
உயர் கல்வியில் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகள்:
பல்கலைக்கழக மானியக் குழுவின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்!!!
உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை UGC தற்போது வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு பட்டம், பட்டயப் படிப்புகளைப் பயில்வது தொடர்பாக UGC சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது..
அதன்படி ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாகப் பயில முடியும். அந்த படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இல்லாதவாறு அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணைய வழியில் பயிற்றுவிக்கப்படலாம். UGC-யின் அங்கீகாரத்தைப் பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.
இந்த வழிகாட்டுதல்கள் P.hd., தவிர்த்துப் பிற படிப்புகளுக்குப் பொருந்தும். இவற்றைக் கருத்தில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளைப் பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...