கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.E., B.Ed., Candidates Eligible to Teach 6th to 8th Standard in B.T. Assistant Post - G.O.Ms.No.16, Dated : 04-02-2025

 

பி.இ., பி.எட்., பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை வெளியீடு


இளம் பொறியியல் (எந்த துறையும்) உடன் இளம் கல்வியியல் (இயற்பியல் அறிவியல்) பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை (நிலை) எண்.16, நாள் : 04-02-2025 வெளியீடு


G.O.Ms.No.16, Dated : 04-02-2025 - B.E., ( Any discipline ) B.Ed.,  ( Physical Science).  Eligible to the post of B.T. Assistant Physics.  Eligible to teach class 6 to 8th



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பொறியியல் படிப்புடன் கூடிய பி.எட். (இயற் அறிவியல்) படிப்பு -  பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணிக்குத் தகுதி &  6-8 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க இணை அரசாணை வெளியீடு


பிஇ - பிஎட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயா்கல்வித் துறை அரசாணை வெளியீடு


 பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என்று உயா்கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.


இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பி.எட்., (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்களாவர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.


DMK will be cheated in 2026 if it cheats Teachers, Government Employees - JACTTO GEO

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஏமாற்றினால் 2026ல் திமுக ஏமாந்து விடும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்


DMK will be cheated in 2026 if it cheats Teachers, Government Employees - JACTTO GEO coordinator Mayavan





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



Student arrested for stabbing schoolgirl



 பள்ளி மாணவியை கத்தியால் குத்திய மாணவன் கைது


Student arrested for stabbing schoolgirl


கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் செம்பியாநத்தம் பஞ்., அண்ணாவி பூசாரிப்பட்டியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் 15 வயது மகள், தரகம்பட்டி மாதிரி பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடிச் சென்றபோது, சிறுமி கழுத்தில் ரத்தக் காயங்களுடன் நடந்து வந்தார். உடனே, அவரை மீட்டு, குஜிலியம்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


பெற்றோர் புகாரில், பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தில் அரசு பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


கரூர் எஸ்.பி., அலுவலகம் அளித்துள்ள விளக்கம்:


கரூர் மாவட்டம், கடவூர் அருகே, 15 வயது மாணவியை, அதே ஊரைச் சேர்ந்த உறவினரான, 17 வயது மாணவன், இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு, வீட்டுக்கு வெளியே வரவழைத்து, கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு, மாணவியின் ஒரு சவரன் செயினை பறித்துச் சென்றுள்ளார்.


விசாரித்த போது, மாணவி, அந்த மாணவனை இழிவாகப் பேசியதால், கோபத்தில் இச்செயலை மாணவன் செய்துள்ளதாக தெரிகிறது. மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்து கத்தியால் குத்தப்பட்டதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம்.


இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.




12 apps from EMIS to APPA - Teachers Suffering by Phone and Hand - Daily News



 எமிஸ் முதல் அப்பா வரை மொத்தம் 12 செயலிகள் - போனும், கையுமாக ஆசிரியர்கள் அவதி - நாளிதழ் செய்தி 


A total of 12 apps from EMIS to APPA - Teachers Suffering by Phone and Hand - Daily News


கல்வித்துறையில் கற்பித்தலை தவிர ஆசிரியர்களிடம் என்ன வேலை வாங்குவது, தனியார் நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து என்னென்ன ஒப்பந்தங்களை வாரி வழங்கி, ஒதுக்கப்பட்ட நிதியை கரைப்பது என்ற மனநிலை தான் தற்போது மேலோங்கி கிடக்கிறது. வேறு எந்த துறையிலும் இல்லாத அளவில் இத்துறையில் தான் தனியார்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் (ஸ்கீம்ஸ்) அதிக எண்ணிக்கையில் நடைமுறையில் உள்ளது.


குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் என இத்துறையின் ஒட்டுமொத்த தகவல்களும் இடம் பெற்றுள்ள 'எமிஸ்' சிஸ்டம் நடைமுறையில் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை உட்பட நாள் ஒன்றுக்கு 120க்கும் மேற்பட்ட பதிவேற்றங்கள் இத்தளத்தில் தினம் பதிவிடப்பட்டு வருகின்றன.


காலை வருகை பதிவை மேற்கொள்வதற்கு வசதியாக ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியில் 'டி.என்.எஸ்.இ.டி., வருகை பதிவு' ஆப் ஐ பதிவிறக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பின் டி.என்.எஸ்.இ.டி., ஸ்கூல், டி.என்.எஸ்.இ.டி., பேரன்ஸ், டி.என்.எஸ்.இ.டி., ஸ்டாப், எஸ்.எம்.சி., வருகை பதிவு, எஸ்.எம்.சி., உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி, டோபோக்கோ மானிட்டரிங், மதிய உணவு, காலை உணவு, மணற்கேணி என அடுத்தடுத்து 11 'ஆப்'களை ஆசிரியர்கள் தங்கள் அலைபேசிகளில் தற்போது வரை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.


இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த 'அப்பா' (அனைத்து பிள்ளைகள் பேரன்ட்ஸ் டிச்சர்ஸ் அசோசியேஷன்) என்ற 'ஆப்'ஐ 12வதாக அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ஆப்களையும் கண்காணிப்பதற்குள் ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர்.



இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:


கற்பித்தலை தாண்டி இதுபோன்ற டேட்டா கலெக் ஷன் வேலைகளை தான் ஆசிரியர்கள் பிரதானமாக செய்துகொண்டுள்ளோம். மிகச் சிலரே அட்வான்ஸ் மாடல் அலைபேசிகளை வைத்துள்ளனர். 80 சதவீதம் ஆசிரியர்கள் சுமார் ரகங்களை தான் வைத்துள்ளனர். ஏற்கனவே வாட்ஸ் ஆப், பேஸ்புக், வர்த்தக, வங்கி ரீதியாக பல சொந்த தேவைக்காக பல ஆப்கள் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளோம்.


அவற்றோடு கல்வித்துறை ஆப்களையும் பராமரிப்பது சவாலாக உள்ளது. தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு 1 ஜி.பி., ரேம் கொண்ட 'டேப்' வழங்கப்பட்டுள்ளது. 'ஸ்பேஸ்' பிரச்னையால் அதில் இதுபோன்ற ஆப்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. 'டேட்டா' தீர்ந்துவிடுவதால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. செலவு எங்கள் தலையில் விழுகிறது. மாணவர்களுக்கான கற்பித்தல் நேரம் பாதிக்காத வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



JACTTO GEO - இன்றைய 25.02.2025 போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய CL Form


JACTTO GEO - இன்றைய 25.02.2025 போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய CL Form Model


25-02-2025 ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய தற்செயல் விடுப்பு விண்ணப்பம் மாதிரி



25-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்:பெருமை

குறள் எண்:976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

பொருள்:
பெரியோரைப் போற்றி அவரை பின்பற்றி பெருந்தன்மை கொள்வோம்
எனும் கருத்து சிறியவர் அறிவிற்படுவதில்லை


பழமொழி :


அச்சத்திற்கு மருந்து இல்லை

There is no medicine for fear.


இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :

அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.

-- தத்துவஞானி கன்பூசியஸ்


பொது அறிவு :

1. மனித உடலில் எடை குறைந்த உடல் உறுப்பு எது?

விடை:   நுரையீரல்.       

2. மனித உடலில் மிக அதிகமாக அடங்கியுள்ள உலோகம் எது?

விடை : கால்சியம்


English words & meanings :

Hospital.   -      மருத்துவமனை

Hotel.        -       உணவகம்


வேளாண்மையும் வாழ்வும் :

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜீவ நதியாக ஓட வழிவகை செய்யும்...



நீதிக்கதை

பீர்பாலின் புத்திசாலித்தனம்

பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார் என்று கேள்விப்பட்ட காபூல்

அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து

அறிய ஆவல் ஏற்பட்டது.

அதனால் ஒரு கடிதத்தில் , "மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு

நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள் "என்று எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமாக அக்பருக்கு அனுப்பினார் காபூல் அரசர்.

கடிதத்தைப் படித்த அக்பர் திகைத்து போய் , ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையே என்று குழம்பி, பீர்பாலிடம் கடிதத்தை காட்டினார்.

பீர்பால் சிறிது நேரம் யோசித்தார் .பின்பு , அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு கூறினார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினார்.

பின்பு அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்கள்?   என்று விசாரித்தார் .

அதற்கு பீர்பால், 'மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்" என்று கூறினார் .

பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காய்த்திருந்த  பூசணிப்பிஞ்சு ஒன்றை கொடியோடு மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்தை மூடினார் .

நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.

பின்பு,அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்? என்று கேட்டார் . பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம் என்று எழுதி அனுப்பினார்.

அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தார்


இன்றைய செய்திகள்

25.02.2025

* கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 எனும் விண்கல், பூமி மீது மோத இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். ஆனால் இதற்கான வாய்ப்பு குறைவு என்றும், நிலவு மீது மோத வாய்ப்பு அதிகம் எனவும் தற்போது கூறியிருக்கின்றனர்.

* தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள். சந்தையில் கிடைப்பதை விட 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு மருந்துகளை இங்கு வாங்கலாம்.

* சென்னைக்கான முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

* கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்டை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

* ரியோ ஓபன் டென்னிஸ் தொடரில் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.


Today's Headlines

* Scientists have warned that the 2024 YR4 meteorite, which was discovered last year, will clash on the earth. But they are now said that this is less likely and that the moon is more likely to collide.

* CM pharmacies opened in 1000 places across Tamil Nadu. Drugs can be purchased at a lower price of 50 percent to 75 per cent than in the market.

* The main drinking water source for Chennai, Sembarambakkam Lake is reaching full capacity, is likely to open water for drinking water.

* Wildfire has occurred in the Western Ghats of Sungandi near Eraniyal in Kanyakumari district.

* In the Rio Open Tennis Series, Argentina's Sebastian Base won the championship title.


Covai women ICT_போதிமரம்


Information about the talks held with the Chief Minister and Ministers and protests

 

 முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் போராட்டம் குறித்த தகவல்கள் 


JACTTO GEO Information about the talks held with the Chief Minister and Ministers and protests



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம் 


இன்று மாலை எட்டு முப்பது முதல் ஒன்பது மணி வரை நடைபெற்ற மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில்


 அமைச்சர்கள், முதல்வர் மற்றும் நிதித்துறை செயலாளர் , அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனையின் பின்பு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் அவர்கள்  ஜாக்டோ ஜியோ  சார்பாக இன்றைய கூட்டு தலைமை பொறுப்பை ஏற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கே பி ரக் ஷித், தமிழக தமிழாசிரியர் கழக கௌரவத் தலைவர் புலவர் ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோரை அழைத்து அரசின் நிலைப்பாடு குறித்து தமது நிலையை விளக்கினார்கள் 


அரசு கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நான்கு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியிடுவதாக, அரசுக்கு நான்கு வார காலம் கால அவகாசம் கேட்டு போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் 


அதன் பின்பு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் 


அரசு நான்கு வருட காலம் அவகாசம் எடுத்துக் கொண்டதாலும், மேலும் கால அவகாசம் அளிப்பதை அடிமட்ட தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்ற நிலையில்  நாளைய போராட்டத்தை தொடர்வது என்றும், மதுரை உயர்நீதிமன்ற தடையாணைக்கு இணங்க மறியல் போராட்டத்தை மாற்றி அமைத்து 


ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு போராட்டம் மற்றும் காலை 11 மணிக்கு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏகமனதாக தீர்மானித்து ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது 


அதன் அடிப்படையில் செயல்பட மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் நன்றி


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-03-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம்: பெருமை குறள் எண்...