கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100 Days Challenge - Appreciation certificate ceremony to the Teachers and HMs of 4552 schools - DEE Proceedings

 

 

100 நாள் வாசிப்பு அறைகூவலில் பங்கேற்ற 4552 பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் / விருது வழங்கும் விழா - மாவட்டம் வாரியாக ஆசிரியர்கள் விவரம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Appreciation certificate / award ceremony by the Minister of School Education to the Teachers and HeadMasters of 4552 schools who participated in the 100 days reading Challenge - District wise details of teachers - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு



அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு


திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில்  கேஸ் சிலிண்டர் வெடித்தது.


அதிர்ஷ்டவசமாக இந்த சிலிண்டர் வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை


திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சிலிண்டர் வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சத்துணவு மையக் கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.


பாலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு மையக் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல், சத்துணவு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், திடீரென சத்துணவு மையக் கட்டிடத்தில் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.


சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டதும், பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். சிலிண்டர் வெடித்ததால், சத்துணவு மையக் கட்டிடத்தில் தீ பரவத் தொடங்கியது.


சம்பவம் குறித்து உடனடியாகக் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


தீயணைப்பு வீரர்கள் வேகமாகச் செயல்பட்டு,  சத்துணவு மையக் கட்டிடத்தில் பரவிய தீயை அணைத்தனர். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


இந்தச் சிலிண்டர் வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சிலிண்டர் வெடித்த நேரத்தில் மாணவர்கள் யாரும் அருகில் இல்லாததும், சத்துணவு மைய ஊழியர்கள் பாதுகாப்பான தூரத்தில் இருந்ததும் பெரும் விபத்தைத் தவிர்த்தது.


சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து வேடசந்தூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு, சமையல் வாயு அழுத்தத்தில் ஏற்பட்ட கோளாறு அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.


இந்தச் சம்பவம், பள்ளி சத்துணவு மையங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் மற்றும் சமையல் உபகரணங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



மின் கட்டண உயர்வு குறித்த செய்தி - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு



மின் கட்டண உயர்வு குறித்த செய்தி - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு


வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்ட  தகவல்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாழ்தல் இனிது

 


வாழ்தல் இனிது


பசியறிந்து சோறு போட 

ஒருவர் இருக்கும் வரை..


சாப்பிட்டாயா எனக் கேட்க 

ஒருவர் இருக்கும் வரை..


தாமதமாகும் இரவுகளில் 

எங்கிருக்கிறாய் என விசாரிக்க

ஒருவர் இருக்கும் வரை..


நோய் வந்தால் இரவுகளில் 

கண் விழித்துப் பார்த்துக் கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை..


குரல் மாறுபாட்டில் மன 

நிலையைக் கணிக்க

ஒருவர் இருக்கும் வரை..


போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு என 

வழியனுப்ப 

ஒருவர் இருக்கும் வரை..


 எத்தனை படி ஆனாலும் வீட்டில்  கதவைத் திறந்து விட

ஒருவர் இருக்கும் வரை..


தோற்றுப் போய் திரும்புகையில் 

தோள் சாய்த்துக்கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை..


போ என்றாலும் விட்டுப் போகாது

சண்டை போட்டுக் கொண்டேனும் 

உடனிருக்க 

ஒருவர் இருக்கும் வரை..


மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து 

கொள்ள  ஒருவர் இருக்கும் வரை..


நம் கனவுகளை தம் கனவுகளாகத் 

தோள்களில் தூக்கி சுமக்க 

ஒருவர் இருக்கும் வரை..


எதற்காகவும் எவரிடமும் 

நம்மை விட்டுக் கொடுக்காத

ஒருவர் இருக்கும் வரை..


கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி 

நானிருக்கிறேனென உணர்த்த

ஒருவர் இருக்கும் வரை..


தவறுகளைத் தவறென 

சுட்டிக் காட்டித் திருத்தும் 

ஒருவர் இருக்கும் வரை..


துயர் அழுத்தும் கணங்களில் 

அருகிருந்து கண்ணீர்த் துடைக்க

ஒருவர் இருக்கும் வரை..


மனக் குறைகளைப் புலம்பித் 

தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க 

ஒருவர் இருக்கும் வரை



 *வாழ்தல் இனிது.


 *இந்த வாழ்க்கையும் இனிது.

💖💖💖💖💖💖💖💖💖💖


இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு


 இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு


சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 

ஜூலை 19ல் ஒரு நாள் உண்ணாவிரதம். 

ஆகஸ்ட் 2,9,23,30 தேதிகளில் 4 மண்டலங்களில் போராட்ட ஆயத்த கூட்டம்,  

செப்டம்பர் மாத இறுதியில் சிறை நிரப்பும்  போராட்டம் 

நடத்த திருச்சியில் நடந்த பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.





திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் சார்பில் எழுச்சியோடு நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றோம்.


“மதயானை நூலை எழுதி வெளியிட்டதற்காக பாராட்டு விழா, நல்லாசிரியர் மற்றும் பொதுத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் சாதனைப் படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா” என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.


“உங்கள் குடும்பத்தின் ஒருவராக இங்கு வந்துள்ளேன். எப்போதும் உங்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பேன்” என உரையாற்றி மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கினோம்.


எழுச்சிமிகு இவ்விழாவை ஒருங்கிணைத்த அனைவருக்கும் அன்பும். நன்றியும்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 74:

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம்: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.


பழமொழி :
" Learning is a journey,not a race."

கற்றல் என்பது ஓட்டப்போட்டி அல்ல, ஒரு பயணம்."


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

மக்கள் சமுதாயத்தில் புரட்சிகள் உண்டாகும் போது, அந்தச் சமுதாயம் பழையன களைந்து புது வாழ்வு தொடங்க ஏதுவாகிறது - ரூசோ


பொது அறிவு :

01. தஞ்சை பெரிய கோயில் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு எது?       

               1987 ஆம் ஆண்டு

02. இந்தியாவில்  உப்பு நீர் அதிகம் ஏரிகள் உள்ள மாநிலம் எது?               

               ராஜஸ்தான் (Rajasthan)


English words :

economy.    -    பொருளாதாரம்

genuine      -     நேர்மையான


அறிவியல் களஞ்சியம் :

"முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது.

மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது."


ஜூன் 30

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.



நீதிக்கதை

மனத்திருப்தி

ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.

ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.

அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், “ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.

கல்தச்சர் சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது.“ ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்”.

வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் “எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே”.

தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் “அந்தச்சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது.” என்றார்.

“இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.

“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” என்றார் கல்தச்சர்.

அதற்கு “ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என்றார் வழிப்போக்கர்.

தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர், சொன்னார் “யார் கவனிக்கப் போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள். வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிறியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”.

நீதி: உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.


இன்றைய செய்திகள்

30.06.2025

⭐ பேருந்துகளில் படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்பவர்கள் (மாணவர்கள்) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

⭐10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு.

⭐இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் டஜன் கணக்கான உயிர்களைக் கொன்றன. காசாவில் சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்  பொதுமக்களை இழந்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀விம்பிள்டன் டென்னிஸில் 25வது ஸ்லாம் பட்டத்தை வெல்ல நோவக் ஜோகோவிச் இலக்கு.

🏀 கிரிகெட்-
செயின்ட் லூயிஸ் கார்டினல்ஸ் அணி 1-6 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில், கிளீவ்லேண்டை 9-6 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


Today's Headlines

✏️The Madurai bench of the High Court has ordered the police to register case and take action against those (students) who travel by standing on the stairs of bus or hanging on the  buses.

✏️ Public exams for class 10 students to be held twice a year from now on. CBSE announcement.

✏️ Israeli airstrikes kill dozens. Recent Israeli airstrikes in Gaza have claimed the lives of civilians
.
SPORTS NEWS

🏀Novak Djokovic aims for 25th Slam title at Wimbledon.

🏀 Cricket- St. Louis Cardinals came from 1-6 down to beat Cleveland 9-6.

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Marriage Advance G.O.Ms.No.148, Dated : 27-06-2025

  அரசுப் பணியாளர்களுக்கு திருமண முன்பணம் உயர்த்தி (Fifteen Months Basic Pay or Rupees Five Lakh, whichever is less) அரசாணை வெளியீடு G.O.Ms.N...