கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :288

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.

விளக்கம்:

உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.

பழமொழி :

Example is better than precept

சொல்வதை விட செய்வதே மேல்

இரண்டொழுக்க பண்புகள் :

1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.

2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.

பொன்மொழி :

ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!”

பொது அறிவு :

1. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?

விடை: இராமநாதபுரம் 

2. ”பச்சைக் கிளியே வா வா”- குழந்தைப் பாடலின் ஆசிரியர்?

விடை: கவிமணி 

English words & meanings :

nominate (v)- elect

ஆரோக்ய வாழ்வு : 

மாம் பூ: தொண்டையில் புண் ஏற்பட்டு  எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர்கள், மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்யவேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க  தொண்டை வலி குணமடையும்.

நீதிக்கதை

 ஒரு பள்ளி மாணவன் இருந்தான். நல்ல சுட்டி.. கொஞ்சம் மொரடு. அவனுக்கு எப்படியாச்சும் வகுப்பறையில் லீடராகனும்னு ஆசை. ஆனா ஸ்கூல்ல அவனை யாருக்குமே பிடிக்காது. பட்டு பட்டுனு கை நீட்டிருவான். சொல்லறத கேட்டு நடக்க மாட்டான். தனக்கு எல்லாமே தெரியும்னு இருப்பான். ஆனா வாத்தியார்களை கவர்வதுல கெட்டிக்காரன். அவன் நினைச்ச மாதிரியே வகுப்பறையில் லீடரும் ஆயிட்டான். இவன் சொல்றததான் யாருமே கேக்க மாட்டாங்களே. அதனால இவன யாருமே லீடரா ஏத்துக்கல. இவன் என்ன சொன்னாலும் பேசிகிட்டே இருந்தாங்க. ரொம்ப மனவேதனையோட அப்பாகிட்ட நடக்குறத சொல்லி அழுதான். அப்பாவோ, 'சரி சரி இதுக்கெல்லாம் அழலாமாடா?'னு சொன்னார். பிறகு, 'உனக்கு ஒன்னு சொல்றேன். மனசுல வெச்சு நடந்துக்கோ. எல்லாம் சரியா போயிரும்'னு ஒரு குறள் சொன்னாரு. 'கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவிணையும் மாண்ட தமைச்சு' நாம எவ்ளோ பெரிய தலைவரா இருந்தாலும எந்த முடிவை எடுக்குறதுக்கு முன்னாடியும் சுத்தி இருக்க எல்லாரையும் அவங்க சூழ்நிலையும் புரிஞ்சு எடுக்கணும். நாம மத்தவங்க நலனை மதிச்சு அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தா தான் மத்தவங்க நம்ம கருத்துக்கு மரியாதை கொடுத்து நம்மள தலைவரா ஏத்துப்பாங்க. மத்தவங்க நம்மள மதிச்சா தான் நாம தலைவர். இல்லாட்டி நாம ஒண்ணுமில்லன்னு சொன்னாரு. அடுத்த நாள்ல இருந்து எல்லார்கிட்டயும் அன்பா அவங்களை புரிஞ்சு மதிச்சு நடந்தான்.

இப்ப எல்லாரும் அவன் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து கேட்கிறாங்க.

இன்றைய செய்திகள்

01.11.2023

*மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்புவது போல் மர்ம நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதை பார்த்து பதட்டப்பட வேண்டாம். 1930 எண்ணில் புகார் அளிக்க மின்வாரியம் வேண்டுகோள்.

*இந்தியாவில் முதல் நவீன ரயில்; சென்னையில் தயாரிக்கப்படுகிறது. 

*தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு - சென்னை மாநகராட்சி

*தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

* உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான 'பலோன் டி' ஓர் விருது. 8வது முறை வென்று சாதனை படைத்த மெஸ்சி.

Today's Headlines

* Some  mysterious people sending SMS like the electricity board.  No need to panic. Complain to   1930 EB requested the public .

 *First modern train in India;  Made in Chennai.

 *Monitoring by drone to prevent flooding in  low-lying areas.

 * Chance of rain in Tamil Nadu for the next 3 days: Meteorological Department of TN announced.

 * Ballon d'Or Award for the best football player in the world.  Messi won the record for the 8th time.

TNSED Schools App New Version: 0.0.89 - Updated on 30-10-2023 - Staff Grievance Module Added & Bug Fixes & Performance Improvements...

TNSED schools App

What's is new..?

*🎯  Staff Grievance Module Added.

*🎯 Bug Fixing and Performance Improvements...

*_UPDATED ON  30 OCTOBER - 2023

*_Version: Now 0.0.89

Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழ்நாடு அரசு வெளியீடு...

அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழ்நாடு அரசு வெளியீடு...

ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2024ஆம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி

01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- திங்கள்

02. தைப்பொங்கல் (ஜன.,15) -திங்கள்

03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.16) - செவ்வாய்

04. உழவர் திருநாள்(ஜன.,17) - புதன்

05. தைப்பூசம்(ஜன.,25) - வியாழன்

06. குடியரசு தினம் (ஜன.,26)- வெள்ளி

07. புனிதவெள்ளி(மார்ச் 29)- வெள்ளி

08. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- திங்கள்

09. தெலுங்கு வருட பிறப்பு( ஏப்.,09)- செவ்வாய்

10. ரம்ஜான் பண்டிகை(ஏப்., 11)- வியாழன்

11. தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - ஞாயிறு

12. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,21)- ஞாயிறு

13. தொழிலாளர் தினம்( மே1) -புதன்

14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 17) -திங்கள்

15. மொஹரம் பண்டிகை( ஜூலை 17) -புதன்

16. சுதந்திர தினம்( ஆக.,15)- வியாழன்

17. கோகிலாஷ்டமி( ஆக.,26) - திங்கள்

18. விநாயகர் சதுர்த்தி( செப்.,07) -சனி

19. மீலாடி நபி( செப்.,16) - திங்கள்

20. காந்தி ஜெயந்தி( அக்.,02) - புதன்

21. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,11)- வெள்ளி

22. விஜயதசமி( அக்.,12) - சனி

23. தீபாவளி ( அக்.,31) - வியாழன்

24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - புதன்

24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது.

இந்த உத்தரவு மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அக்டோபர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் - October Month School Children's Movie - The Jungle Gang - Download link...

அக்டோபர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் - October Month School Children's Movie - The Jungle Gang - Download link...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நவம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி (School Calendar - November 2023)...

நவம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி (School Calendar - November 2023)...

01-11-2023 -புதன் - உள்ளாட்சி தினம் / கிராம சபைக் கூட்டம்..

03-11-2023 -வெள்ளி - SEAS தேர்வு.

04-11-2023 - சனி - குறைதீர் நாள்

12-11-2023 -ஞாயிறு - தீபாவளி - அரசு விடுமுறை.*

14-11-2023 - செவ்வாய் - குழந்தைகள் தினம்.

📒CRC (CPD)

18-11-2023 - சனி - CRC ( 1-3 வகுப்பு ஆசிரியர்கள் )

25-11-2023 -சனி - CRC (4,5 வகுப்பு ஆசிரியர்கள்)...

27-11-2023 to 29-11-2023 --  9,10  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC

2023 ஆம் ஆண்டின் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட RH விடுமுறை நாட்கள்:

*02.11.2023 வியாழன் - கல்லறை திருநாள்.*

*13.11.2023 திங்கள் - தீபாவளி நோன்பு.*

*27.11.2023 திங்கள் - குருநானக் ஜெயந்தி*

>>> நவம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி (School Calendar - November 2023) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள் (State Educational Achievement Survey (SEAS) for Class 9 - Model Question Paper)...

 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள் (State Educational Achievement Survey (SEAS) for Class 9 - Model Question Paper)...

>>> Click Here to Download...

>>> SEAS தேர்வு - ஆய்வாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் & பள்ளிகளுக்கான கேள்விகள் மற்றும் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான OMR தாள்கள் - மாதிரி...

>>> 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...

>>> 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...

>>> 3, 6 & 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளிகள் & மாணவர்களின் விவரம்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பேச்சுவார்த்தையில்‌ உறுதி அளிக்கப்பட்டபடி 01.11.2023 முதல்‌ ஆசிரியர்கள்‌ ஆசிரியர்‌, மாணவர்‌ வருகைப்பதிவு தவிர கற்பித்தல்‌ பணியினைப்‌ பாதிக்கும்‌ பிற எவ்வித பதிவேற்றப்‌ பணிகளையும்‌ மேற்கொள்ளாமல்‌ தங்களை விடுவித்துக்கொள்வது எனவும்‌, எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டத்தில்‌ மாணவர்‌ மதிப்பீடு, தேர்வு உள்ளிட்ட இணையவழிப்‌ பதிவேற்றங்களை மேற்கொள்வதில்லை எனவும்‌ டிட்டோஜாக் பேரமைப்பு ஒருமனதாக முடிவுசெய்து அறிவிக்கிறது (As promised in the negotiation, from 01.11.2023 onwards, TETOJAC Association unanimously decides and declares that the teachers will not carry out any other uploading work that affects the teaching work except teacher and student attendance registration, and will not carry out online uploads including student assessment and examination in the ennum ezhuthum program)...

01-11-2023 (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 30-10-2023 (Special Grama Sabha meeting to be held on 01-11-2023 (Wednesday) HeadMasters, Teachers, Head of School Management Committee and all members to be present - State Project Director Proceedings RC.No: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated : 30-10-2023)...

>>> மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 30-10-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :287

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்

விளக்கம்:

உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது..

பழமொழி :

Every poor man is counted a fool

ஏழையின் சொல் சபை ஏறாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.

2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.

பொன்மொழி :

ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம் என்ற வலிமையான காரணம் வேண்டும்.. அப்போது தான் நம் லட்சிய பாதையில் இருந்து விலகி செல்ல மாட்டோம்.!”

பொது அறிவு :

1. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? 

மேற்கு வங்காளம்

'2. "சோழன் நெடுமுடிக் கிள்ளி'',''சோழன் நலங்கிள்ளி'' இவர்கள் யார்?

 கரிகாலச்சோழனின் மகன்கள்.

English words & meanings :

 modest - limited மிதமான. 

maculate - stained, impure கறைபடிந்த, தூய்மையற்ற

ஆரோக்ய வாழ்வு : 

மாம் பூ: பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச் சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன 

அக்டோபர் 31

இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாள்

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.

பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

நீதிக்கதை

 ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன.

ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும். தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்.நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!" முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.

"என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!" குரங்கு சொல்லியது.

"ஆமாம்... ஆமாம்...!" ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.

"நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக  ஏற்றுக் கொள்ள முடியும்"அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!" என்றது எலி.மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!" பெருமிதம் பொங்கக் வெட்டுக்கிளி. கூறியது.நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!" சொல்லியது குரங்கு.

"எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன?" கேட்டது வெட்டுக்கிளி

"போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?" சந்தேகம் எழுப்பியது எலி.நடுவராக நானிருக்கிறேன்!" திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது. 

"நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன்.  முயலையும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!" என்று காகம் தன் முகவரி கூறியது.அப்படியே அனைத்தும் சரி என்றது.

மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி கொண்டு இருந்தன. போய்க்கொண்டிருந்த பொழுது குருவி ஒன்றுவலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.

"எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!" குருவி பலகீனமாக உதவி கேட்டது.

“நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!" கடுமையாக கூறியது. குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.

அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.

"அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண்கள் போட்டு விட்டேன்.   உதவும் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான்   மதிப்பெண்கள் ஒதுக்கிஇருக்கிறேன்!" என்றது.காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.

அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.

முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! முயல் நண்பன்தான்! ஆபத்திலிருந்து  காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! 

 ஆபத்திலிருந்து ஒரு முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. 

நீதி : நாம் யாருக்காவது உதவி செய்தால் அது ஒருநாள் நமக்கு எதிர்பாராத பயனைத்தரும்.

இன்றைய செய்திகள்

31.10.2023

*மின்சார ரயில் நிறுத்தம் சென்னையில் இன்று மெட்ரோ சேவை நீட்டிப்பு.

*29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வானிலை ஆய்வு மையம் தகவல்.

*தமிழகத்திற்கு 2600 கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் கர்நாடக அரசுக்கு பரிந்துரை.

*கேரளா குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு.

*புள்ளிகள் பட்டியல் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா.

*வங்காளதேசத்துடன் இன்று மோதல்... தோல்வி பாதையில் இருந்து பாகிஸ்தான் அணி மீளுமா?

Today's Headlines

*Extension of Metro service today in Chennai with electric train stop.

 *Thunderstorm in 29 districts Meteorological Center information.

 *Recommendation to Karnataka Government to release 2600 cubic feet of Cauvery water to Tamil Nadu.

 *Kerala blast reverberations: Security beefed up in Tamil Nadu.

 *India has once again moved to the top of the points table.

 * Today's clash with Bangladesh... Will the Pakistan team recover from the defeat?

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தலைமையாசிரியர் கையேடு (உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள்) 2023 - 2024 - தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களின் பணிகளும் கடமைகளும், பள்ளிகளில் மன்ற செயல்பாடுகள் - பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியீடு (HeadMaster's Handbook (High / Higher Secondary Schools) 2023 - 2024 - Works, Duties & Responsibilities of Head Masters, Post Graduate Teachers, Graduate Teachers, Secondary Grade Teachers and Special Teachers, Forum Activities in Schools - Directorate of School Education Released)...

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை - கரூர் மாவட்டம் (Second Mid Term Exam Syllabus and Time Table)...

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் கோரிக்கை குறித்து 01.11.2023 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடத்துதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - 5 ஆசிரியர் சங்கங்களுக்கு அழைப்பு (Proceedings of the Director of Elementary Education, TamilNadu Regarding on conducting a meeting of teachers union representatives on 01.11.2023 at 3.30 pm regarding the salary demand of Secondary Grade Teachers - invitation to 5 teachers federations)...

>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - ந.க.எண்: 000523/ எஃப் 1/ 2023, நாள்: 28.10.2023, மாநிலக் கருத்தாளர்கள் மற்றும் மாவட்ட வாரியான பங்கேற்பாளர்கள் பட்டியல் (1st to 5th Std - CRC Training for the month of November 2023 - SCERT Proceedings, State RPs & District wise Participants List)...

1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - ந.க.எண்: 000523/ எஃப் 1/ 2023, நாள்: 28.10.2023, மாநிலக் கருத்தாளர்கள் மற்றும் மாவட்ட வாரியான பங்கேற்பாளர்கள் பட்டியல் (1st to 5th Std - CRC Training for the month of November 2023 - SCERT Proceedings, State RPs & District wise Participants List)...

>>> SCERT இயக்குநரின் செயல்முறைகள் - ந.க.எண்: 000523/ எஃப் 1/ 2023, நாள்: 28.10.2023, மாநிலக் கருத்தாளர்கள் மற்றும் மாவட்ட வாரியான பங்கேற்பாளர்கள் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அக்டோபர் 2023 மாத சிறார் திரைப்படம் "தி ஜங்கிள் கேங்" திரையிடுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/ எம்/ மன்றம்/ 2023, நாள்: 30-10-2023 மற்றும் கதைச்சுருக்கம் (October 2023 Juvenile Movie "The Jungle Gang" Screening - Proceedings of Director of School Education Rc.No: 34785/ M/ Mandram/ 2023, Dated: 30-10-2023 and Synopsis)...

 அக்டோபர் 2023 மாத சிறார் திரைப்படம் "தி ஜங்கிள் கேங்" திரையிடுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/ எம்/ மன்றம்/ 2023, நாள்: 30-10-2023 மற்றும் கதைச்சுருக்கம் (October 2023 Children Film "The Jungle Gang" Screening - Proceedings of Director of School Education Rc.No: 34785/ M/ Mandram/ 2023, Dated: 30-10-2023 and Synopsis)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :286

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்.

விளக்கம்:

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.

பழமொழி :

Every pleasure has a pain.

எல்லா இன்பத்துக்குப் பின் ஒரு துன்பம் உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.

2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.

பொன்மொழி :

மெதுவாக வளரும் மரங்களே, சிறந்த பழங்களைத் தருகின்றன. --மோலியர்

பொது அறிவு :

1. கோஹினூர் வைரம் தற்போது எங்குள்ளது? 

லண்டன் மியூசியம்

2. பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ? 

1956

English words & meanings :

 lachrymose - showing sorrow ,அவதியான. 

lacerate - tear irregularly ,வெட்டு

ஆரோக்ய வாழ்வு : 

மாம் பூ: மாம்பழத்தைப் போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன.வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ளது. 

அக்டோபர் 30

மாரடோனா அவர்களின் பிறந்தநாள்

1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது. வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது. 

நீதிக்கதை

 குரு ஒருவர் சீடர்களோடு நடை பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஒரு நாய் தாகத்தில் மயக்கமாகி மூச்சிரைத்துக் கிடந்தது. ஒரு சொட்டு நீரை யாராவது அதன் வாயில் ஊற்றி விட மாட்டார்களா என்று காத்துக் கிடந்தது.

அதைப் பார்த்த குரு தன் சீடர்களிடம், ‘‘அருகில் ஒரு கிணறு இருக்கிறது. அதிலிருந்து யாராவது நீர் எடுத்துவந்து அதன் தாகம் தணியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டார்.

கிணற்றில் நீர் எடுக்கப் போன சீடர்கள், அந்த இடத்தில் ஏதோ விவாதித்துவிட்டுத் திரும்பினார்கள்.

‘‘என்ன?’’ குரு கேட்டார்.

‘‘அங்கே கிணறு இருக்கிறது. ஆனால் அதில் நீரை எடுக்க வாளி இல்லை. அதனால்...’’

‘‘அதனால்?’’

‘‘நாயின் தாகத்தைத் தீர்க்க முடியவில்லை’’ என்றார்கள்.

‘‘நீங்கள் அனைவரும் அங்கே பாருங்கள்’’ என்றார் குரு.

அங்கே ஒரே ஒரு சீடன் மட்டும் நாயின் நிலையைக் கண்டு அதிகம் உணர்ச்சிவசப்பட்டான். நாயை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். எப்படியாவது அதன் தாகத்தை தணித்துவிட வேண்டும் என்ற ஆவேசம் அவன் நடவடிக்கைகளில் தெரிந்தது.

திடீரென்று யோசனை வந்தவனாக, காட்டுக்கொடிகளைப் பறித்து இணைத்தான். இணைத்த கொடியில் தன் மேலாடையைக் கழற்றிக் கட்டினான். அதை அப்படியே கிணற்றில் தூக்கிப் போட்டான். கொடியை மேலே இழுத்து, நனைந்த ஆடையை எடுத்து நாயின் வாயருகே பிழிந்தான். நீர் பரவி நாயின் தாகம் அடங்கிற்று. நாய் எழுந்து சுறுசுறுப்பானது. நாய் வாலை ஆட்டிக் கொண்டு அவனோடு வந்தது.

‘‘நீங்கள் அனைவரும் நாய்க்கு உதவி செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைத்தீர்கள். ஆனால், அவன் நாயின் இடத்தில் தன்னை வைத்து அதன் தவிப்பைப் புரிந்து கொண்டான். அதனாலேயே அவனுக்கு தண்ணீரை எடுக்கும் யுத்தி தெரிந்தது’’ என்றார் குரு.

‘உயிர்களை மனதிலிருந்து நேசிக்க வேண்டும்’ என்பதைத் தெரிந்து கொண்ட சீடர்கள், குருவுக்கு நன்றி சொன்னார்கள்.

இன்றைய செய்திகள்

30.10.2023

*இன்று உலக சிக்கன நாள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.

*10000 காய்ச்சல் முகாம்கள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

*இந்தியாவில் தெரிந்தது 2023 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம். நேற்று அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2. 24 மணி வரை ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடித்தது.

*உலகக்கோப்பையில் முதன்முறையாக டக் அவுட் ஆன விராத் கோலி.

*உலகக் கோப்பை கிரிக்கெட்:  இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

* Today is World Austerity Day  M.K.  Greetings from Chief Minister M.K.Stalin.

 * 10000 fever camps Minister Ma.  Subramanian initiated.

 *The last lunar visible eclipse in India for 2023 was seen yesterday early morning. The lunar eclipse lasted for one hour and 19 minutes from 1.05 a.m. to 2.24 a.m.

 * Virat Kohli ducked out for the first time in the World Cup.

 *Cricket World Cup: The team India won the match against England by 100 runs.

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - 30-10-2023 முதல் 03-11-2023 முடிய - நவம்பர் 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - Unit 4 - November 1st Week - Tamil & English Medium Lesson Plan)...

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - நவம்பர் 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - November 1st Week - Tamil & English Medium Lesson Plan)...

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - நவம்பர் 1வது வாரம் - தமிழ் வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - November 1st Week - Tamil Medium Lesson Plan)...

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - நவம்பர் 1வது வாரம் - ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - November 1st Week - English Medium Lesson Plan)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – 30-10-2023 முதல் 03-11-2023 முடிய - தமிழ் & ஆங்கில வழி (Term 2 - November 1st Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium)...

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – 30-10-2023 முதல் 03-11-2023 முடிய - தமிழ் & ஆங்கில வழி (Term 2 - November 1st Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium)... 

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

SEAS தேர்வு - ஆய்வாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் & பள்ளிகளுக்கான கேள்விகள் மற்றும் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான OMR தாள்கள் - மாதிரி (SEAS Exam - Invigilator Questionnaire, Teachers Questionnaire, Pupils Questionnaire & School Questionnaire and School, Teachers & Students OMR Sheets - Model)...

 November 3rd SEAS Exam will be held on all selected Schools.. Classes - 3std, 6std and 9th std

Model Questionary download from following below links.....

>>> Click Here to Download Invigilator Questionary (Field Note)...

>>> Click Here to Download Teachers Questionnaire...

>>> Click Here to Download Pupils Questionnaire...

>>> Click Here to Download School Questionnaire...

>>> Click Here to Download School OMR Sheet...

>>> Click Here to Download Teachers OMR Sheet...

>>> Click Here to Download Students OMR Sheet...

>>> மாநில கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS 2023) - நடைபெறும் பள்ளிகள் பட்டியல் - அனைத்து மாவட்டங்கள்...

>>> SEAS அடைவுத்தேர்வு நடைபெறும் பள்ளி தலைமையாசிரியர்களின் பணிகளும், பொறுப்புகளும் - CEO Proceedings...

>>> 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...

>>> மாநிலக் கல்வி அடைவு ஆய்வு 2023 - SEAS பள்ளிகள், பிரிவு தேர்வு செய்தல் மற்றும் கள ஆய்வாளர்கள் செய்ய வேண்டியவை - முழுமையான விவரங்கள்...

>>> 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...

>>> 3, 6 & 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளிகள் & மாணவர்களின் விவரம்...

>>> மாநிலக் கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS Exam) குறித்த விவரங்கள்...

>>> SEAS EXAM SYLLABUS FOR 3,6 & 9 STD...

மாநிலக் கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS Exam) குறித்த விவரங்கள்...

மாநிலக் கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS Exam) குறித்த விவரங்கள்...

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 3-ம் தேதி SEAS  தேர்வு நடைபெறும்

 பள்ளிகளில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது

     * தேர்வு நடத்தும் அலுவலர்

 வெளி block ல் இருந்து வருவார்.

    *3ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளில் தேர்வு நடைபெறும்.

    *எந்த பள்ளியில் எந்த மீடியத்தில் எந்த வகுப்புக்கு தேர்வு என்ற விபரம் மேலே உள்ளது.

  * வகுப்பில் 5 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் (EMIS ENROLLMENTன் அடிப்படையில்) இருந்தால் அப்பள்ளியில் தேர்வு நடைபெறாது. வேறு பள்ளி விரைவில் தேர்வு செய்யப்பட்டு NCERTஆல் அறிவிக்கப்படும்.

    * தமிழ் மீடியம் என்றால் தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் தேர்வு நடைபெறும் (ஒரே Question paper)

  * ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்வு நடைபெறும்.

   * 3 ஆம் வகுப்பு தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 20 Question Maths 20 Question. 1 மணி நேரம் .

  * 6 ஆம் வகுப்பு

தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 25 Questions

Maths 25 Questions.

1 மணி 15 நிமிடங்கள்.

     * 9 ஆம் வகுப்பு

தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 30 Questions கணிதம் 30 Questions

1 மணி 30 நிமிடங்கள்.

     * 3 ஆம் வகுப்பு தேர்வு  2 ஆம் வகுப்பு 3 ஆம் வகுப்பு LO (Learning out Comes) அடிப்படையிலும்

6 ஆம் வகுப்பு தேர்வு

5 மற்றும் 6ம் வகுப்பு LO அடிப்படையிலும்

9ஆம் வகுப்பு Questions 8 மற்றும் 9 வகுப்பு LO அடிப்படையிலும் கேட்கப்படும். 

    * தேர்வு அலுவலர் 2 ஆம் தேதியே சீலிடப்பட்ட Question papers கொண்டு வந்து விடுவார். சீல் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் 3ஆம் தேதி  தான் தேர்வு நடத்தும் அலுவலரால் மட்டுமே open செய்யப்படும்.

>>> SEAS தேர்வு - ஆய்வாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் & பள்ளிகளுக்கான கேள்விகள் மற்றும் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான OMR தாள்கள் - மாதிரி...

>>> SEAS அடைவுத்தேர்வு நடைபெறும் பள்ளி தலைமையாசிரியர்களின் பணிகளும், பொறுப்புகளும் - CEO Proceedings...

>>> 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...

>>> மாநிலக் கல்வி அடைவு ஆய்வு 2023 - SEAS பள்ளிகள், பிரிவு தேர்வு செய்தல் மற்றும் கள ஆய்வாளர்கள் செய்ய வேண்டியவை - முழுமையான விவரங்கள்...

>>> 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...

>>> 3, 6 & 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளிகள் & மாணவர்களின் விவரம்...

>>> SEAS EXAM SYLLABUS FOR 3,6 & 9 STD...

>>> மாநில கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS 2023) - நடைபெறும் பள்ளிகள் பட்டியல் - அனைத்து மாவட்டங்கள்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

SEAS EXAM SYLLABUS FOR 3,6 & 9 STD...

SEAS EXAM SYLLABUS FOR 3,6 & 9 STD...

ஆசிரியர்கள் கவனத்திற்கு...

மாநில கல்வி அடைவு ஆய்வு 3,6 மற்றும் 9 ம் வகுப்புகளுக்கு மட்டும் நடைபெறும்.

தமிழ் வழி எனில் தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும். ஆங்கில வழி எனில் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும்.

3 ம் வகுப்பிற்கு 1-2 ம் வகுப்பு பாடத்திட்டம்,

6-ம் வகுப்பிற்கு 1- 5 ம் வகுப்பு பாடத்திட்டம்,

9-ம் வகுப்பிற்கு 1- 8ம் வகுப்பு பாடத்திட்டம்

>>> SEAS அடைவுத்தேர்வு நடைபெறும் பள்ளி தலைமையாசிரியர்களின் பணிகளும், பொறுப்புகளும் - CEO Proceedings...

>>> 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...

>>> மாநிலக் கல்வி அடைவு ஆய்வு 2023 - SEAS பள்ளிகள், பிரிவு தேர்வு செய்தல் மற்றும் கள ஆய்வாளர்கள் செய்ய வேண்டியவை - முழுமையான விவரங்கள்...

>>> 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...

>>> 3, 6 & 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளிகள் & மாணவர்களின் விவரம்...

>>> மாநிலக் கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS Exam) குறித்த விவரங்கள்...

>>> மாநில கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS 2023) - நடைபெறும் பள்ளிகள் பட்டியல் - அனைத்து மாவட்டங்கள்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Husband should be given leave to look after wife during maternity - High Court

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் Husband should be given leave to look after wife durin...