கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெள்ளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நேபாள வெள்ளத்தில் வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் கொள்ளை

 


நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.


நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேபாளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு மத்தியிலும், திரிசூலி ஆற்றில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கர் ஒன்றை உடைத்து, அதற்குள் இருந்த பணத்தை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 29 பேரைப் பிடித்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 92 லட்சத்திற்கும் அதிகமான நேபாளி ரூபாயை மீட்டுள்ளது.


இந்தத் தொகை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 58 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவாவிலிருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்த வங்கி லாக்கர், தாடிங் மாவட்டத்தில் உள்ள பெல்குகோலா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.


பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு வருவதற்குள், உள்ளூர் வாசிகள் சிலர் அந்த லாக்கரை உடைத்து பணத்தைக் திருடிச் சென்றதாகக் போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நேபாள் போலீஸார் மற்றும் ஆயுதப் படைப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில் 29 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


விசாரணையின் போது அவர்களிடமிருந்து 92 லட்சத்திற்கும் அதிகமான நேபாளி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 29 பேரும் தாடிங் மாவட்டக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


லாக்கரில் எவ்வளவு பணம் இருந்தது என்பதை போலீஸார் இன்னும் உறுதி செய்யவில்லை. மேலும், அந்த லாக்கரின் உரிமையாளர் யார், அதிகாரிகள் வருவதற்கு முன்பு வேறு யாரேனும் பணத்தை எடுத்துச் சென்றார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது.


முன்னதாக வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த தங்க காதணியை திருடியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடலில் இருந்து நகையை அகற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


நேபாள வெள்ளம்: 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்



நேபாள வெள்ளம்: 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்


நேபாளத்தில் நேர்ந்த பெருவெள்ளத்தில் ஆசிரியர் ஒருவர் தனது சாதுர்யமான நடவடிக்கையால் 1643 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த பலரும் ஆசிரியரின் செயலை பாராட்டி வருகின்றனர்.


பள்ளியில் இருக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தானே முழு பொறுப்பு என்பதை உணர்ந்து வெள்ளத்தின் கோரத்தன்மையை உணர்ந்து விரைந்து செயல்பட்டதாக ஆசிரியர் கூறுகிறார்.


நேபாளத்தில் திரிசூலி பள்ளத்தாக்கில் திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் இருப்பவர் ராஜேந்திர தவாடி.


வெள்ளம் ஏற்பட்ட புதன்கிழமை காலை சுமார் 9.20 மணியளவில் ஆசிரியர் தவாடிக்கு அவரின் நண்பரிடம் இருந்து வெள்ளத்தின் கோரத்தன்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டி, களிமண், கலந்த வெள்ளநீர் மிகுந்த ஆக்ரோஷமாக நீர்வழித்தடத்தை உடைத்துக்கொண்டு வருவதாகவும் இதில் கட்டடங்கள், பாலங்கள், மின்நிலையங்கள் அடித்துச்செல்லப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து நொடியையும் வீணாக்காமல் சாதுர்யமாக செயல்பட்ட தவாடி, மற்ற இடங்களைக் காட்டிலும் பள்ளிக் கட்டடம் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தார்.


பள்ளியின் எச்சரிக்கை மணியை உடனடியாக அழுத்தி, மாணவர்களை பதட்டமடையச் செய்யாமல் பள்ளிக் கட்டடத்திற்கு மேலே அனைவரையும் அழைத்துச் செல்ல சக ஆசிரியர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.


ஏனெனில் அந்த மூன்று மாடி கான்கிரீட் கட்டடம் ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில், கிராமத்தை கிழக்குக் கரையுடன் இணைக்கும் இரும்புப் பாலத்தின் அதே மட்டத்தில் அமைந்திருந்தது.


ஆசிரியரின் இத்தகைய உடனடி செயலால் 1,643 பள்ளி மாணவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனினும் சமூகவியல் ஆசிரியர் உயிரிழந்தார். பள்ளியின் மற்றொரு ஆசிரியர் கதவுகளைப் பூட்டிவிட்டுத் திரும்பும் போதுவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.


பள்ளிக்கு மாணவர்களை அனுப்பிவிட்ட பெற்றோர்கள் பரிதவிப்பில் இருக்கையில், சுயநலமாகச் செயல்படாமல் மாணவர்களின் உயிரைக் காக்கும் வகையில் செயல்பட்ட ஆசிரியர் தவாடியை உள்ளூர் மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.


காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை



 காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு


Flood warning issued to people living along the Cauvery River




People living in low-lying areas are advised to stay safe as flooding is possible


வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்


People living in low-lying areas are advised to stay safe as flooding is possible



மேற்கூறிய மாவட்டத்தில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும். எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.


Level 3 flood warning at Kudakanar dam



வெள்ள அபாய எச்சரிக்கை - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அழகாபுரி குடகனாறு அணையில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை



ஆனைவாரி அருவி வெள்ளத்தில் சிக்கிய தாயும் குழந்தையும் மீட்பு - மனிதநேயத்துடன் பிறர் உயிர் காக்கத் துணிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு (Chief Minister M.K.Stalin praises those who dared to save the lives of others with humanity - Rescue of mother and child trapped in Anaiwari waterfall floods)...

 ஆனைவாரி அருவி வெள்ளத்தில் சிக்கிய தாயும் குழந்தையும் மீட்பு - மனிதநேயத்துடன் பிறர் உயிர் காக்கத் துணிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு (Chief Minister M.K.Stalin praises those who dared to save the lives of others with humanity - Rescue of mother and child trapped in Anaiwari waterfall floods)...



ஆனைவாரி அருவியில் வெள்ளத்தில் சிக்கிய தாயையும், சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆத்தூரை அடுத்துள்ள ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலம் வனத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தின் குற்றாலம் எனப்படும் இந்த அருவி, கல்வராயன் மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சுற்றுலாத் தலத்துக்கு, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படாமல் உள்ளதால், இந்தச் சுற்றுலாத் தலத்துக்கு ஏராளமானோர் வருகின்றனர்.

இதனிடையே, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் தினந்தோறும் ஆங்காங்கே மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்கிறது. கல்வராயன் மலைப் பகுதிகளிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், ஆனைவாரி அருவியில், தற்போது வழக்கத்தை விட அதிகமாக நீர் கொட்டுகிறது.

அருவியில் அக்டோபர் 24ஆம் தேதி மாலையில் பலர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், செந்நிறத்தில் நீர் கொட்ட ஆரம்பித்தது. இதனைக் கவனித்த வனத்துறையினர், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தினர்.

ஆனால், திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் உள்பட 5 பேர் அருவியின் மறு கரையில் ஒதுங்கினர். வெள்ளம் அதிகரித்ததால், அவர்களில் இருவர் அங்கிருந்த பாறை மீது ஏறி, குழந்தை, பெண் ஆகியோரை மீட்டனர். மற்ற இருவர் பாறை மீது ஏற முயன்றபோது, தவறி வெள்ளத்தில் விழுந்தனர். சிறிது தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் சற்று தூரத்தில் கரை ஒதுங்கித் தப்பித்தனர்.


இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை சிலர் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்கத் துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்" எனப் பதிவிட்டுள்ளார்.












கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - அதிக இடங்களில் சாலைகள் துண்டிப்பு - காணொளிகள் (In Kerala Terrible Rain Flooding - Cutting off Roads in many places - Videos)...



கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - அதிக இடங்களில் சாலைகள் துண்டிப்பு - காணொளிகள் (In Kerala Terrible Rain Flooding - Cutting off Roads in many places - Videos)...


>>> Kerala Flood 2021 - Terrible Rain - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - Video 1...


>>> Kerala Flood 2021 - Terrible Rain - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - Video 2...


>>> Kerala Flood 2021 - Terrible Rain - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - Video 3...



>>> Kerala Flood 2021 - Flood in Sabarimala Pamba River - கேரளாவில் சபரிமலை பம்பை நதியில் வெள்ளம் - Video 4...


>>> Kerala Flood 2021 - Landslide - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம், நிலச்சரிவு - சாலைகள் துண்டிப்பு - Video 5...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Path to Update Club Incharge Teacher & Student Ambassador

  📢 * Path to Update Club Incharge Teacher & Student Ambassador 🏫 *Applicable Schools:* Pure Government Schools having Classes 6–9 onl...