கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இந்தக்‌ கல்வியாண்டில்‌ செயல்படுத்த வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்விசாரா செயல்பாடுகள்‌ சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்‌ துறை மற்றும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறையின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2023, நாள்‌. 25.05.2023 (Activities to be done before the opening of schools in the academic year 2023-2024 and procedures to be followed depending on the academic Curricular activities, co-curricular activities and non-academic Extra Curricular activities to be implemented in this academic year - Tamil Nadu Department of School Education and Elementary Education Department's Joint Proceedings Rc.No. 019528/M/E1/2023, Dated: 25.05.2023)...


 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்‌ துறை மற்றும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறையின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌, சென்னை- 6.

https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2023, நாள்‌. 25.05.2023.

https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

பொருள்‌: பள்ளிக்கல்வி - 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இந்தக்‌ கல்வியாண்டில்‌ செயல்படுத்த வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்விசாரா செயல்பாடுகள்‌ சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (தொடக்க கல்வி) ஆகியோர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக.

https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

பார்வை: 1. அரசாணை (நிலை) எண்‌. 163/பள்ளிக்‌ கல்வி (ERT)த்‌ துறை, நாள்‌.10.07.2017https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

2. பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்க கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌.11.06.2022.https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

3. தொடக்க கல்வி இயக்குரின்‌ நேர்முக கடித எண்‌.007351/ஜெ2/2021, நாள்‌.08.10.2021https://kalvianjal.blogspot.com/2023/05/2023-2024-01952812023-25052023.html

2023-2024ம்‌ கல்வியாண்டில்‌ 6 முதல்‌ 12 வகுப்புகளுக்கு ஜூன்‌ 1 ஆம்‌ தேதியும்‌, 1 முதல்‌ 5 வகுப்புகளுக்கு ஜூன்‌ 5ஆம்‌ தேதியும்‌ பள்ளிகள்‌ திறக்கப்படும்‌ என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள்‌ திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள்‌ குறித்து கீழ்காணும்‌ அறிவுரைகள்‌ அனைத்து கல்வி அலுவலர்களுக்கும்‌ வழங்கப்படுகிறது.



>>> 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ திறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இந்தக்‌ கல்வியாண்டில்‌ செயல்படுத்த வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கல்விசாரா செயல்பாடுகள்‌ சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்‌ துறை மற்றும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறையின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2023, நாள்‌. 25.05.2023 (Activities to be done before the opening of schools in the academic year 2023-2024 and procedures to be followed depending on the academic Curricular activities, co-curricular activities and non-academic Extra Curricular activities to be implemented in this academic year - Tamil Nadu Department of School Education and Elementary Education Department's Joint Proceedings Rc.No. 019528/M/E1/2023, Dated: 25.05.2023)...






4 & 5ஆம் வகுப்புகள் - எண்ணும் எழுத்தும் - தமிழ் குறியீடுகள் படங்கள் (4th & 5th Standard - Tamil - Ennum Ezhuthum - Logos/ Pictures)...



>>> 4 & 5ஆம் வகுப்புகள் - எண்ணும் எழுத்தும் - தமிழ் குறியீடுகள் படங்கள் (4th & 5th Standard - Tamil - Ennum Ezhuthum - Logos/ Pictures)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

தமிழோடு விளையாடு

எளிய விளையாட்டுகள் மூலம் முன்கற்றதை நினைவுகூரும் பகுதி. குழந்தைகள் பங்கேற்று எழுத்துகளை அடையாளம் கண்டு சரியாக ஒலித்தும் சொற்களைப் படித்தும் இணையாக, குழுவாகக் கற்க இப்பகுதி வழிகாட்டும். https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.htmlஇக்கற்பித்தல் செயல்பாட்டினைத் தொடர்ந்து அரும்பு, மொட்டு, மலர் நிலையிலும் வகுப்புக்கேற்ற நிலையிலும் உள்ள குழந்தைகள் செய்வதற்கான செயல்பாடுகள் ஒவ்வொரு அலகின் தொடக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சிநூல் செயல்பாடுகளைச் செய்யும்போது எழுத்துகளை ஒலித்துக் கொண்டே சொற்களைப் படித்துக்கொண்டே செய்ய வழிகாட்டுங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

வாங்க பேசலாம்

பாடப்பொருள் சார்ந்த கலந்துரையாடல் பகுதி. வகுப்பில் உள்ள பேசத்தயங்கும் குழந்தைகளும் தன்னம்பிக்கையுடன் பேச வழிகாட்டுவதாக குழந்தைகள் எளிமையாகப் புரிந்துகொண்டு ஆர்வமாகப் பங்கேற்கும் தலைப்புகளை/கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடலைத் தொடங்குங்கள். கலந்துரையாடலின் நோக்கத்தை மனத்தில் நிறுத்தி சரியானபாதையில் கலந்துரையாடல் நிகழ்வதை உறுதிப்படுத்துங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

வானவில் நேரம் & வானவில் மேடை

பாடம் சார்ந்த கலை, கைவினைப்பொருள்கள் செய்யவும் கதை, பாடலை நீட்டிக்கவும் மாற்றவும் உருவாக்கவும் கூறவும் நடிக்கவும் எழுதவும் இன்னபிற படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தவும் உதவும் பகுதி. எல்லாக் குழந்தைகளும் எல்லாத் திறன்களிலும் ஆர்வமானவர் அல்லர். அவரவர்க்கு விருப்பமான செயல்பாடுகளைச் செய்து ஏற்ற திறன்பெற வழிகாட்டுங்கள். https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.htmlநமது குழந்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் பேச்சாளர்களை, பாடகர்களை, இசைக்கலைஞர்களை, கவிஞர்களை, கதைசொல்லிகளை, நடனமணிகளை அடையாளங்கண்டு வளர்த்தெடுக்கும் களமே வானவில் மேடை.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

சொல்லக்கேட்டு எழுதுவோம்

ஆசிரியர் சொல்லச் சொல்லக் குழந்தைகள் எழுதி முடித்தவுடன் எழுதிய பகுதியை ஒவ்வொரு குழந்தையும் அருகில் உள்ள குழந்தையிடம் கொடுத்துக் கரும்பலகையில் உள்ள சரியான சொல், தொடருடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்து கொள்ளலாம்; அல்லது இணையாக, குழுவாகச் சேர்ந்து ஆசிரியர் வழிகாட்டுதலுடன் எழுதியதைத் திருத்திக்கொள்ளலாம். https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.htmlபிழைகளின்றி எழுதுவதற்கும் சரியாக ஒலிப்பதற்கும் இப்பயிற்சி உதவும். குழந்தைகளின் தேவைக்கேற்ப பயிற்சிநூலிலும் குறிப்பேட்டிலும் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மெதுவாக எழுதும் குழந்தைக்கு உரிய நேரம் வழங்குவதிலும் பிழைகளைக் களைய கரும்பலகை, குறிப்பேட்டில் எழுதும் பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

திறவுகோல்

செயல்பாடுகள் மூலம் பாடக்கருத்தை உணரச்செய்யும் பகுதி. செயல்பாடுகளைச் செய்ய முன்வராது ஒதுங்கி தயங்கி இருக்கும் குழந்தைகளும் வகுப்பறைகளில் இருப்பர். செயல்பாடுகளில் குழந்தைகள் மாறிமாறிப் பங்கேற்கும் வகையில் தாள்களில் எழுதிச் சுருட்டி வைக்கப்பட்ட பெயர்சீட்டுகள் அல்லது குச்சிகளில்/ பொம்மைகளில் ஒட்டப்பட்ட பெயர்களைப் பயன்படுத்துங்கள். அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

வானம் வசப்படும்

பாடக்கருத்தைக் கற்றபின் குழந்தைகள் மேற்கொள்ளும் பயிற்சிப் பகுதி. இது பயிற்சிநூலிலும் பாடநூலிலும் மேற்கொள்ளப்படும். அதற்கான பக்க எண், பயிற்சித் தலைப்பு போன்றவை ஆசிரியர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html4,5ஆம் வகுப்புகளில் வகுப்புக்கு ஏற்ற கற்றல்நிலையில் இல்லாத குழந்தைகள், அடிப்படையில் இருந்து செய்து கற்பதற்குரிய செயல்பாடுகள், வண்ணங்களில் வேறுபடுத்தி அளிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செய்த குழந்தைகள், படிப்படியாகத் தங்கள் வகுப்புநிலைக்கேற்ற செயல்பாடுகளைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

4 & 5ஆம் வகுப்புகள் - எண்ணும் எழுத்தும் குறியீடுகள் (4th & 5th Standard - Ennum Ezhuthum Logos / Symbols)...



>>> 4 & 5ஆம் வகுப்புகள் - எண்ணும் எழுத்தும் குறியீடுகள் (4th & 5th Standard - Ennum Ezhuthum Logos / Symbols)...


படைப்பாற்றல் களஞ்சியம்

மொழித்திறன்களை வளர்ப்பதற்கும் வெளிப்படுத்துவதற்குமான களம்.


செயல்பாட்டுக் களஞ்சியம்

கணக்குகளை உருவாக்கித் தீர்வு காணவும் கணிதச் சிந்தனையைத் தூண்டி வெளிப்படுத்துவதற்குமான களம்.


அறிவியல் களஞ்சியம்

சிறுசிறு சோதனைகளைச் செய்துபார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான களம்.


வரலாற்றுக் களஞ்சியம்

வரலாற்று உண்மைகளை அறிவதற்கும் சமூகச் சிந்தனையை வளர்ப்பதற்குமான களம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



>>> 4 & 5ஆம் வகுப்புகள் - எண்ணும் எழுத்தும் குறியீடுகள் - மாதிரி 2 (4th & 5th Standard - Ennum Ezhuthum Logos / Symbols - Model 2)...

பட்டதாரி ஆசிரியர் - மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை பட்டியல் வெளியீடு (B.T. Assistant - District to District Transfer Counseling - Priority List - With Filter Option)...


>>> பட்டதாரி ஆசிரியர் - மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை பட்டியல் வெளியீடு (B.T. Assistant - District to District Transfer Counseling - Priority List - Excel Sheet With Filter Option)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

6, 7 & 8ஆம் வகுப்புகள் - கால அட்டவணைகள் - மாதிரி (6th, 7th & 8th Standard - Time Tables - Model)...

 


>>> 6ஆம் வகுப்பு - கால அட்டவணை - மாதிரி (6th Standard - Time Table - Model)...



>>> 7ஆம் வகுப்பு - கால அட்டவணை - மாதிரி (7th Standard - Time Table - Model)...



>>> 8ஆம் வகுப்பு - கால அட்டவணை - மாதிரி (8th Standard - Time Table - Model)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Ennum Ezhuthum 4 & 5 - Term I - 2023-24 - Block Level Training Timetable - 01.06.2023 - 03.06.2023 - எண்ணும் எழுத்தும் - 4 மற்றும் 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் நடைபெறும் பயிற்சியின் கால அட்டவணை...

 

>>> Ennum Ezhuthum 4 & 5 - Term I - 2023-24 - Block Level Training Timetable - 01.06.2023 - 03.06.2023 - எண்ணும் எழுத்தும் - 4 மற்றும் 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் நடைபெறும் பயிற்சியின் கால அட்டவணை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு (Extension of time to apply for 10th and 11th Standard supplementary examination)...

 10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு (Extension of time to apply for 10th and 11th Standard supplementary examination)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிகள் திறப்பதற்கு முன் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் விவரம் (Details of tasks to be done by HeadMasters before opening of Schools)....


>>> பள்ளிகள் திறப்பதற்கு முன் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் விவரம் (Details of tasks to be done by HeadMasters before opening of Schools)....






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் (Arisikomban) யானை - மீண்டும் தனது வாழ்விடத்தை (மூணாறு) நோக்கிச் செல்ல ஆயத்தமா? (Rice Kompan elephant that entered the city of Kambam; Ready to go back to his habitat (Munnar))?

 

கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் (Arisikomban) யானை - மீண்டும் தனது வாழ்விடத்தை (மூணாறு) நோக்கிச் செல்ல ஆயத்தமா? (Rice Kompan elephant that entered the city of Kambam; Ready to go back to his habitat (Munnar))?


``அரிசி கொம்பன் யானை அது வாழ்விடமான மூணாறு சின்னக்கானல் பகுதியை நோக்கி செல்லவே மேகமலையில் இருந்து இறங்கி லோயர்கேம்ப் வந்து கம்பம் பகுதிக்குள் புகுந்துள்ளது. விரைவில் வனப்பகுதியில் சென்றுவிடும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" - வனத்துறை அறிவிப்பு



அரிசி கொம்பன் யானை



இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 12 உயிர்களை காவு வாங்கிய அரிசி கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கழுத்தில்  சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக - கேரள எல்லை பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்ப பகுதியில் விடப்பட்டது. 


முதலில் அரிசி கொம்பனை பிடித்து பாலக்காடு பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மங்கள தேவி கண்ணகி கோயில் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் யானை விடப்பட்டது. 


இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்து  அங்கிருந்து மேகமலை ஹைவேஸ் பகுதியில் கடந்த 2 வாரங்களாக சுற்றித்திரிந்தது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில் அரிசி கொம்பன் யானை மேகமலையின் வடக்குப் பகுதியில் இறங்கி இரவோடு இரவாக லோயர்கேம்ப் பகுதிக்கு வந்தது. நேற்று காலை லோயர்கேம்ப்பில் இருந்து கம்பம் நகர் பகுதிக்குள் வந்தது. கம்பம் கூலத்தேவர் தெரு பகுதியில் வந்த யானையை கண்டு அப்பகுதியினர் கூச்சலிட்டவாறு ஓடிச் சென்றனர். 



>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 1)...


மேலும் பலர் யானையை பார்த்து கூச்சலிட்டனர். இதனால் வேகமாக ஓடிய யானை சாலையில் நின்றிருந்த சேர் ஆட்டோவை இடித்து தள்ளிவிட்டு ஓடியது.  ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேனி மாவட்ட வனத்துறையினர் யானையை கம்பம், கம்பம் மெட்டு இடையே வனப்பகுதியில் விரட்ட முயன்றனர்.  யானை மலை அடிவாரப்பகுதியில் புளியந்தோப்பில் முகாமிட்டு இருந்தது.



>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 2)...




இதுகுறித்து வனத்துறையினரிடம் பேசியபோது, “யானையை விரட்டக் கூடாது, அதன்போக்கிலேயே விட வேண்டும். குறிப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. 



>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 3)...


அரிசி கொம்பன் யானை அது வாழ்விடமான மூணாறு சின்னக்கானல் பகுதியை நோக்கி செல்லவே மேகமலையில் இருந்து இறங்கி லோயர்கேம்ப் வந்து கம்பம் பகுதிக்குள் புகுந்துள்ளது. விரைவில் வனப்பகுதியில் சென்றுவிடும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை “என்றனர்.



>>> நாராயணதேவன்பட்டியில் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 4)...


கம்பம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த அந்த யானை அங்கிருந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பிற்குள் சுற்றித் திரிகிறது.



இந்த யானையை 3 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து சுயம்பு என்ற கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முதுமலையில் இருந்து 2 யானைகள் வரவழைக்கப்படுகின்றன.


இந்த நிலையில், கம்பம் நகரை விட்டு, சுருளிப்பட்டி கிராமத்தில் 'அரிசி கொம்பன்' புகுந்துள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுருளிப்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


கம்பம் நகரில் இன்று 2-வது நாளாக 144 தடை உத்தரவு தொடர்கிறது. மேலும் சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 6 கி.மீ தொலைவுக்கு முன்பே வனத்துறையினர் மற்றும் போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.




பொதுமக்கள் அரிசி கொம்பன் யானைக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். படம் பிடிப்பது மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.


யானையை காட்டுக்குள் அனுப்பும் வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.


லோயர்கேம்பில் இருந்து கம்பம் நகர் பகுதிக்குள் வந்த யானை நேற்று ஒரு நாள் முழுவதும் கெஞ்சியகுளம் அருகேயுள்ள புளியந்தோப்பில் 7 மணி நேரம் இருந்தது.



>>> கம்பம் நகருக்குள் அரிசிக் கொம்பன் யானையின் நகர்வலம் (காணொளி 5)...


இதையடுத்து இளைஞர் ஒருவர் ட்ரோன் மூலம் வீடியோ எடுக்க முயன்றபோது பதற்றமடைந்த யானை அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாழைதோப்பில் புகுந்தது.


இரவு முழுவதும் அங்கேயே இருக்கும் என வனத்துறையினர் கணித்திருந்த வேளையில், நேற்று இரவு 12 மணி அளவில் சுமார் 15 கிலோ மீட்டர் நடந்தே பயணித்து சுருளி அருவி செல்லும் சாலையில் தனியார் தோட்டத்திற்கு சென்றது.  இதற்கிடையே பொள்ளாச்சி அருகே டாப் சிலிப்பில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை, அரிசி கொம்பனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக அழைத்துவரப்பட்டுள்ளது.


“சூழலை பொருத்து மேலும் இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்படும் எனவும், மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்த யானை திசை மாறி 15 கிலோ மீட்டர் பயணப்பட்டுள்ளதால், மீண்டும் மேகமலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது “ என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இலவச ஆஞ்சியோபிளாஸ்டி முகாம் - 2023 ஜூன் 12 முதல் 18 வரை - 200 ஏழை நோயாளிகளுக்கு இலவச ஸ்டென்ட் (Free Angioplasty workshop at Sri Jayadeva institute of cardiovascular sciences and research - From 12th to 18th June 2023 - Free medicated Stents for 200 Poor Patients)...

 



>>> ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இலவச ஆஞ்சியோபிளாஸ்டி முகாம் - 2023 ஜூன் 12 முதல் 18 வரை - 200 ஏழை நோயாளிகளுக்கு இலவச ஸ்டென்ட் குறித்த செய்தி வெளியீடு (Free Angioplasty workshop at Sri Jayadeva institute of cardiovascular sciences and research - From 12th to 18th June 2023 - Free medicated Stents for 200 Poor Patients - Press Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்