கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது" - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

 💥பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்


💥மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்


💥முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தர பரிசீலனை


💥 நீட் தேர்வு குறித்து இதுவரை பேச்சு ஏதும் தொடங்கவில்லை


💥நாளையும் நாளை மறுநாளும் ஆலோசனை நடைபெறும்


- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி




ஆன்லைன் தேர்வு முடிவுகள் முறைகேடு குறித்து முதல்வர் இன்று மாலை அறிவிப்பு - அமைச்சர் பொன்முடி...

 


கல்லூரி மாணவர்களின் ஆன்லைன் தேர்வு, அரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் தொடர்ந்து 100க்கு மேற்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் இன்று மாலை முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவு எட்டப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


 

கொரோனா காலமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த 2 வருடங்களாக கல்லூரி மாணவர்களுக்கான பருவ தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் தேர்தலுக்கு முன் நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகளில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு புகார் வந்துள்ளது.



இந்நிலையில் புதிதாக உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் நடைபெற்று முடிந்த கல்லூரி தேர்வுகள் பிரச்சினை தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளில் பலவித பிரச்சனைகள், பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து மாணவர்கள் தரப்பில் புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து துணைவேந்தர்கள் மற்றும் தேர்வு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.



தொடர்ந்து மாணவர்கள் தரப்பிடம் அவர்களது கருத்துக்களை கேட்டறியப் பெற்று இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பதவி உயர்வு பெறும் பொருட்டு எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் விவரம் - அரசிதழ் எண் 36, நாள் : 30.01.2020ன் படி...



 >>> அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பதவி உயர்வு பெறும் பொருட்டு எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் (Departmental Examinations) விவரம் - அரசிதழ் எண் 36, நாள் : 30.01.2020ன் படி...


10-05-2021 முதல் 24-05-2021 வரையிலான ஊரடங்கின் பொழுது அனுமதிக்கப்படுபவையும், அனுமதி இல்லாதவையும்...




>>> 10-05-2021 முதல் 24-05-2021 வரையிலான ஊரடங்கின் பொழுது அனுமதிக்கப் படுபவையும், அனுமதி இல்லாதவையும்...


முதலமைச்சர் காப்பீடு திட்டம் - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புவோர் அரசு வழங்கியுள்ள பேக்கேஜுகள் குறித்து அறிய...




முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பும் கரோனா தொற்றாளர்கள், கொரோனா சிகிச்சைக்காக அரசு வழங்கியுள்ள  பேக்கேஜுகள் குறித்த விவரங்களைக் காண:

https://www.cmchistn.com/covidPackage.php


மே 24ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் ஸ்டாலின் பதில்...



மே 24ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் ஸ்டாலின் பதில்...


*தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அடுத்து மே 24-ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீடிக்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது.


*இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மே 24-ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படாது என்று தெரிவித்தார். நேற்று தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பேசியபோது தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை ஊரடங்கு ஏற்படாது, அவ்வாறு ஒருவேளை முழு ஊரடங்கு அமல் படுத்தும் நிலை வந்தால் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.


*மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர் உங்களிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார். எனவே இன்று தொடங்கும் ஊரடங்கு மே 24-ஆம் தேதிக்கு முடிவுக்கு வந்துவிடும் என்றும் அதன் பின்னரும் ஊரடங்கு ஏற்பட அதிக வாய்ப்பு இல்லை என்றும் கருதப்படுகிறது.

பொதுமுடக்கத்தையொட்டி, சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை...



*பொதுமுடக்க காலகட்டத்தில் போலீஸாரின் கடமைகள், பொறுப்புகளை அதிகாரிகள் எடுத்துக் கூற வேண்டும், 50 வயதை கடந்த காவலா்கள், கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலா்கள் ஆகியோருக்கு எளிதான பணி வழங்க வேண்டும், பெண் காவலா்களுக்கு வாகன சோதனை உள்ளிட்ட கடினமான பணி வழங்கக் கூடாது, காவலா்களை 5 மணி நேர ஷிப்ட் முறையில் பணியாற்ற வைக்க வேண்டும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போலீஸாரை மட்டுமே கூட்டம் திரளும் இடங்களுக்கு பணியமா்த்த வேண்டும், பணியின்போது அனைத்து காவலா்களும் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும்*.


*காவலா்கள் அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும், காவலா்கள் கூட்டமாக நிற்பதைத் தவிா்க்க வேண்டும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு கரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கப்பட வேண்டும்*.


*பொதுமுடக்கத்தின்போது காவல் நிலையங்கள் மற்றும் போலீஸாரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என திரிபாதி வகுத்துள்ள விதிமுறைகள்:*


*காவல் நிலையங்களில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும். வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட டிஎஸ்பி, எஸ்பி ஆகியோரிடம் முன் அனுமதி பெற வேண்டும், காவல் நிலையத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிக்கு ஆய்வாளா் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், பொதுமக்களிடம் காவல் நிலையத்துக்கு வெளியே வைத்து புகாா் மனுக்களை பெற வேண்டும், இதற்காக காவல் நிலையத்துக்கு வெளியே பந்தல் அமைத்திருக்க வேண்டும், பந்தலில் கிருமிநாசினி, முகக்கவசம் தேவையானளவு வைத்திருக்க வேண்டும், காவல் நிலையத்துக்குள் பொதுமக்கள் வருவதை தவிா்க்க வேண்டும்.*


*மேலும், பொதுமுடக்க விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிய வேண்டும், பொதுமுடக்க மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றக் கூடாது, வாகனத்தை கைப்பற்றினாலும் சில மணி நேரத்திலேயே அவற்றை விடுவிக்க வேண்டும்,சோதனைச் சாவடிகளில் வாகன பரிசோதனை மேற்கொள்ளும்போது அதற்கென தனியாக ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் வைத்து அப் பணியை செய்ய வேண்டும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது, காவல் நிலையத்தின் அருகே உள்ள ஒரு மைதானத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்,*


*சட்டம் மற்றும் ஒழுங்கு:


*பொதுமுடக்க காலகட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும், சட்டப்பேரவைத் கூட்டத் தொடா், ரமலான் பண்டிகை ஆகியவை வருவதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வண்ணம் உறுதி செய்ய வேண்டும். உளவுப்பிரிவு போலீஸாா், ரகசிய தகவல்களை திறம்பட சேகரிக்க வேண்டும்*.


*காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தொடா்பு கொண்டு காவல்துறைக்கு தொடா்பு இல்லாத புகாா்களை தெரிவித்தாலும், போலீஸாா் அதை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.*


*பொதுமக்களிடம் கனிவு:


*பொதுமக்களிடம் காவல்துறையினா் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ளக் கூடாது, பிற அரசு துறைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், வருவாய்த்துறையினா், உள்ளாட்சி, நகராட்சி துறையினா்,தூய்மைப் பணியாளா்கள் போன்றவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிா்க்க வேண்டும், ஒலி பெருக்கி மூலம் பேசி மாா்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அவா்களை கலைந்து போகச் செய்ய வேண்டும், பொதுமக்களிடம் கண்ணியமான முறையிலேயே அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடுகிறாா்களா என்பதை கண்காணிக்க ஆளில்லாத கண்காணிப்பு கேமரா விமானங்களை பயன்படுத்த வேண்டும்.*


*வியாபாரிகளிடம் கண்ணியம்:


*வணிகா்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும், அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்னா் வியாபாரத்தை முடித்துக் கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளிடம் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும், அவா்களிடம் கடுமையான முறையில் நடந்துகொள்ளக் கூடாது, மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள் போன்றவற்றில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிா்க்க வேண்டும், கடைகளின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தேவையான வட்டங்கள் வரைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.*


*மேலும், பால், மளிகை பொருள்கள், காய்கறிகள், நாளிதழ்கள், மருத்துவ பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும், அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் மாா்க்கெட் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளுக்குள் செல்வதை தவிா்க்க வேண்டும்.*


>>> பொதுமுடக்கத்தையொட்டி, சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Essay competitions for 6th to 11th class students

6 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  கட்டுரைப் போட்டிகள்... அனைத்துப் பள்ளி 6 முதல் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 & 11 வகுப்பு பய...