கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சமூக வலைதளங்களுக்கு அரசு வகுத்த புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன? - ஒரு பார்வை...

 


யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி வலைதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன? - இதோ ஒரு பார்வை...


சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் என பெயரிட்டு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசாணையாக வெளியிட்டது.


அதன்படி ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகின்றன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆபாச புகைப்படங்கள் குறித்து புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் அவற்றை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். புகார்கள் தொடர்பாக 36 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.



தவறான தகவலை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் அரசோ, நீதிமன்றமோ தகவல்களை கேட்கும்போது கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.



வாட்ஸ்அப் வழக்கு...

மத்திய அரசின் இந்த புதிய ஒழுங்கு விதிமுறைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி வளைதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.



இந்தப் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள சமூக வலைதளங்களுக்கு வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



புதிய விதிமுறைகள் தனிநபர் ரகசிய காப்பு உரிமையில் தலையிடும் வகையில் இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் ஃபேஸ்புக் நிர்வாகமும் அரசின் சில விதிமுறைகளில் உடன்படுவதாகவும், ஆனால் சில விதிமுறைகளை ஏற்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.


மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை காலஅவகாசம் - தமிழ்நாடு மின்துறை அமைச்சர்...

 மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை காலஅவகாசம் - தமிழ்நாடு மின்துறை அமைச்சர்...




CPS தொகைக்கு 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு வட்டி நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...

 


CPS தொகைக்கு 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No.132, Dated: 24-05-2021) வெளியீடு...



ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள்...


 ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள்...


பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம்  - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 160, நாள்: 26-05-2021...

 

பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை.


ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளின் நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவுகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இருவர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.


ஆன்லைன்  வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை...


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 160, நாள்: 26-05-2021...

 

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு எடுத்து நடத்த நடவடிக்கை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...



 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருவதால் அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.



நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.



கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வள்ளியூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடந்தது. கூடங்குளத்தில் உள்ள 130 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவு உள்ளிட்டவை குறித்து காணொலி வாயிலாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``தமிழகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 2,53,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தமிழகத்தில் 75 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.



18 முதல் 44 வயது உடையவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காகத் தமிழக அரசின் சார்பில் 85.47 கோடி செலவில் 25 லட்சம் டோஸ் தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. அதனால் கிராமப்புறங்களில் உள்ள மக்களும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன். இது தவிர, அடுத்த 6 மாதங்களில் 3.5 கோடி தடுப்பூசிகள் பெறுவதற்கான டெண்டர் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு விட்டன. இன்னும் ஆறு மாத காலத்தில் தடுப்பூசி போடாதவர்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகும்.



சுகாதாரத் துறையில் கடந்த பத்து வருடங்களில் இல்லாத வகையில், மருத்துவர்கள் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாகக் கலந்தாய்வு நடத்தி மருத்துவர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு வருவதற்கு மருத்துவத் துறையினர் வரவேற்புத் தெரிவித்து வருகிறார்கள். முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் இதே முறையில் இடமாறுதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.



கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு ஏற்கெனவே செயல்பட்ட மகப்பேறு சேவைப் பிரிவு வேறொரு கிராமத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அதனால் தங்களுக்கு மகப்பேறு சேவை தேவை என்றும் மக்கள் தெரிவித்தனர். அதனால் கூடங்குளம் மருத்துவமனையில் மகப்பேறு சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கூடங்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது 86 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் பேரிடர் கால சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் கூடுதல் படுக்கை வசதி மட்டுமல்லாமல் மருத்துவமனையிலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான வசதியும் உருவாக்கப்படும்.



ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம் தற்போது தென்காசி மாவட்டத்துக்குச் சென்றுவிட்டதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கொரோனா பாதித்த மாவட்டங்களுக்கு கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் தொடர் நடவடிக்கைகள், தடுப்பூசி மற்றும் தளர்வில்லா ஊரடங்கு காரணமாக நோய்த் தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது.



செங்கல்பட்டில் செயல்பட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 10 வருடங்களாக சட்டச் சிக்கல் காரணமாக மூடப்பட்டுக் கிடந்தது. அதை முதல்வர் நேரில் ஆய்வு செய்து சட்டப் பிரச்னைகளை தீர்த்து தமிழக அரசே அதை கையில் எடுத்து மத்திய அரசின் அனுமதியுடன் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறுமானால் தமிழகத்துக்கு கூடுதல் வரப்பிரசாதமாக அமையும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே கொரோனா தடுப்புப் பணிக்கு நியமிக்க வேண்டும் என்பதற்கான அரசுக் கடிதம்.விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே கொரோனா தடுப்புப் பணிக்கு நியமிக்க வேண்டும் என்பதற்கான அரசுக் கடிதம்.



School Education Department Principal Secretary Letter No.1/PS(SE)/2020, Dated: 02-05-2020...


COVID-19 தன்னார்வலர்களாக விருப்பம் உள்ள ஆசிரியர்கள் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களை மட்டும் மருத்துவம் சாராத பணியில்  ஈடுபடுத்த வேண்டும்- GOVT. LETTER...


>>> Click here to Download School Education Department Principal Secretary Letter No.1/PS(SE)/2020, Dated: 02-05-2020...


இன்றைய (27-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 27, 2021



மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு காது தொடர்பான உபாதைகள் உண்டாகும். முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : கவனம் வேண்டும்.


பரணி : கோபத்தை குறைத்து கொள்ளவும்.


கிருத்திகை : உபாதைகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

மே 27, 2021



குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



கிருத்திகை : ஒற்றுமை உண்டாகும்.


ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் ஏற்படும். 

---------------------------------------




மிதுனம்

மே 27, 2021



எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல்நலம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை : செலவுகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




கடகம்

மே 27, 2021



குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் உண்டாகும். எண்ணெய் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.


ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




சிம்மம்

மே 27, 2021



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமையான சூழ்நிலைகளும், தனவரவுகளும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : வெற்றி கிடைக்கும்.


பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.


உத்திரம் : தனவரவுகள் ஏற்படும்.

---------------------------------------




கன்னி

மே 27, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திரம் : தடைகள் குறையும்.


அஸ்தம் : சாதகமான நாள்.


சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

மே 27, 2021



உணவு பொருள் சார்ந்த வியாபாரிகளுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபம் உண்டாகும். அறிவியல் சார்ந்த விஷயங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் உண்டாகும். சுயதொழில் சார்ந்த செயல்பாடுகளில் பண நெருக்கடிகள் ஏற்பட்டு அகலும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : லாபம் உண்டாகும்.


சுவாதி : ஆதரவு கிடைக்கும்.


விசாகம் : நெருக்கடிகள் அகலும்.

---------------------------------------




விருச்சகம்

மே 27, 2021



எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதங்கள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். இணையம் சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்கள் முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : தனவரவுகள் உண்டாகும்.


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : இழுபறிகள் அகலும்.

---------------------------------------




தனுசு

மே 27, 2021



எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூராடம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




மகரம்

மே 27, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பாராத உதவிகளின் மூலம் சமாளிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


திருவோணம் : சாதகமான நாள்.


அவிட்டம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

---------------------------------------




கும்பம்

மே 27, 2021



சுயதொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். மனை மற்றும் வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் ஏற்படும். உடல் அசதிகளின் மூலம் சோர்வு உண்டாகும். உயர்நிலை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே எண்ண ஒற்றுமைகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : முன்னேற்றமான நாள்.


சதயம் : சோர்வு உண்டாகும்.


பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

மே 27, 2021



உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவும், அறிமுகமும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : ஆதாயமான நாள்.


உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.


ரேவதி : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...