கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் காணொளி வாயிலாக, நடத்திய கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்...



💥 பள்ளி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.


💥 பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் EMIS  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


💥 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் .


💥 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பினை அனைத்து மாணவர்களும் பார்ப்பதற்கு ,  அனைத்து ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொண்டு, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து அனைத்து மாணவர்களுடனும் ஆசிரியர்கள் தினசரி உரையாட வேண்டும்.  


💥 உரையாடிய  விவரத்தினை தினசரி குறிப்பேடுகளில் ஆசிரியர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


💥 கல்வி ஒளிபரப்பு குறித்து மாணவர்களுக்கு சிறுசிறு ஒப்படைவு, சிறுசிறு பயிற்சிகளை வழங்கி அதனை ஆசிரியர்கள் இணைய வழியாகவோ அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சி தாள்களை சரிபார்த்து திருத்தி ,மீள்பயிற்சியும், வலுவூட்டுதல் பயிற்சியும்  வழங்கிட வேண்டும். 


💥 கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் எந்தவிதமான இடையூறும் இன்றி பேரிடர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு, ஆசிரியர்கள் அனைவரும் முன் வரவேண்டும்.


💥 அரசின் அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும், 


 💥 மேற்கண்டவாறு  இயக்குனர் அவர்களுடைய அறிவுரைகளை, சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியரிடமும்  கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும் 


 💥 மேலும், இயக்குனர் அவர்களுடைய  அறிவுரையை முழுமையாக தங்கள் பள்ளியில் கடைப்பிடிப்பதற்கு, நடைமுறைப் படுத்துவதற்கு அனைத்து ஆசிரியர்களும், உடனே தொடர் நடவடிக்கைகள்  மேற்கொள்ள வேண்டுமென மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய நடைமுறைகள் – ஆணையர் சுற்றறிக்கை...

 


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், மாணவர்களின் கல்விக்கென புதிய திட்டங்களை வகுத்து அவற்றை அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றுமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். 



பள்ளிகள் திறப்பு:

கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா 3 ஆம் அலைக்கான அறிகுறிகள் இருப்பதால் தேவையான ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகளை குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


இந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட தகவல்களை, கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (EMIS) யின் இணையதளம் வழியாக கையாளப்பட வேண்டும். அதாவது, அரசு பள்ளி மாணவர்கள் எந்தவொரு நேரத்திலும் பாடங்களை கற்றுக்கொள்ளும் படி, TN-DIKSHA என்ற டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பெறுதல், கற்பித்தல் தகவல்கள், அரசு பள்ளிகளை மேம்படுத்த தேவையான பங்களிப்புகள், பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆசிரியர்களுக்கான பேஸ்புக் ஒர்க்பிளேஸ், கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 



அதனால் அரசு அறிவுரையின் படி, EMIS இணையதளத்தை அனைத்து மாவட்ட கல்வித்துறைகளும் புதுப்பிக்க வேண்டும். வரும் நாட்களில் பள்ளிகள் குறித்த ஏதேனும் புகார்கள், தகவல்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் நேரடி விவரங்கள் கோருவதை தவிர்த்து அவற்றை EMIS இணையதளத்தில் தெரிவிக்கலாம். மேலும் துறை சார்ந்த வழிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கல்வியின் முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக்கல்வி அதிகாரிகள் செயல்பட வேண்டும். அது போல நடப்பு 2021-22 கல்வியாண்டில், 1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2 ஆம் பருவ பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான தரவுகளை அனுப்பி வைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


>>> கல்வியியல்  மேலாண்மை தகவல் முறைமை தரவுகள் (EMIS) புதுப்பித்தல்,  2021-2022 -ஆம் கல்வியாண்டிற்கு 1-7 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகம் தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம்...


அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுகள் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...



 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு ஆங்கில வழி பிரிவுகள் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:030942/W4/இ1/2021,  நாள்: 07.07.2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:030942/W4/இ1/2021,  நாள்: 07.07.2021...




மத்திய அரசின் முக்கியமான துறை அமைச்சர்கள் பதவி விலகல் - அமைச்சர்களாக புதிதாக பதவி ஏற்பவர்கள் பட்டியல்...

 முக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத், ரமேஷ் போக்ரியால், ஹர்ஷ் வர்தன், சந்தோஷ் கங்வார் மற்றும் பலர் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஐந்து மாநிலங்களுக்கான முக்கியமான தேர்தல்களுக்கு முன்னதாக தனது அரசாங்கத்தில் மாற்றியமைக்கப் போவதால் பல மத்திய அமைச்சர்கள் புதிய மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள். கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் உடல்நலக் காரணங்களால் தனது பதவியில் தொடர விருப்பமில்லை என்று தெரிவித்தார். அவர் ராஜினாமா செய்துள்ளார், இனி அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளனர். மோடி கேபினட் மறுசீரமைப்பில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மந்திரி டெபஸ்ரீ சவுத்ரிக்கு மேற்கு வங்கத்தில் ஒரு முக்கியமான நிறுவன பதவி வழங்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த பா.ஜ.க அமைச்சரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம், கிராமப் புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார்.


மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த், ‘சட்டம் மற்றும் நீதி, தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளார். அதேபோல, ஹர்ஷவர்த்தன், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோரும் மூன்று துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளனர். அதேபோல, மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷிம்ரத் கவுர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, அனைத்து அமைச்சர்களும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.


கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்துவருகிறது. எனவே, மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய ஆளுநர்கள் நியமனம் இருந்தது.


இந்தநிலையில், இன்று மாலை 6 மணிக்கு புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. புதிய மற்றும் ஏற்கெனவே மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் என 43 பேர் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், சந்தோஷ் காங்வர், டேபாஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


அமைச்சரவையிலிருந்து விலகியவர்கள்:


 ஹர்ஷ் வர்தன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் 


ரவிசங்கர் பிரசாத், தகவல் தொழில்நுட்ப அமைச்சர்


 ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், கல்வி அமைச்சர்


 பிரகாஷ் ஜவடேகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்


 சந்தோஷ் கங்வார், தொழிலாளர் அமைச்சர் 


சதானந்த கவுடா, வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சர் 


பாபுல் சுப்ரியோ, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் கல்வி, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் 


சஞ்சய் தோத்ரே சாஹேப் பாட்டீல் டான்வே, மாநில நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் 


ரத்தன் லால் கட்டாரியா, ஜல் சக்தி மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்


 பிரதாப் சாரங்கி, கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் எம்.எஸ்.எம்.இ. 


டெபஸ்ரீ சதுரி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சின் மாநில அமைச்சர் 


தவர்சந்த் கெஹ்லோட், மத்திய அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்


 பிரதமர் நரேந்திர மோடி, 2019 ல் பாஜகவின் வெற்றியின் பின்னர் புதன்கிழமை முதல் பெரிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் புதிய அமைச்சர்கள் குழுவைப் பெற உள்ளார்.


அமைச்சர்களாக புதிதாக பதவி ஏற்பவர்கள் பட்டியல்...


43 அமைச்சர்களின் பெயர் பட்டியல்..


1) ஜோதிராதித்ய சிந்தியா


2)சோனோவால்


3) நாராயண் தாட்டு ரானே


4) கிஷன் ரெட்டி


5) ராமச்சந்திர பிரசாத் சிங்


6) அஸ்வினி வைஷ்ணவ்


7) கிரண் ரிஜிஜூ


8) பசுபதி குமார் பாரஸ்


9) ராஜ்குமார் சிங்


10) ஹர்தீப்சிங் புரி


11) மன்சுக் மாண்டாவியா


12) பூபேந்தர்


13) புருஷோத்தம் ரூபாலா


14) அனுராக் தாக்கூர்


15) பங்கஜ் சவுத்ரி


16) அனுப்ரியா சிங் படேல்


17) சத்யபால்சிங் பாகல்


18) ராஜீவ் சந்திரசேகர்


19) சோபா


20) பானுபிரதாப் சிங் வர்மா


21) தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்


23) எல்.முருகன்


24) மீனாட்சி லேகி


25) அன்னபூர்ணாதேவி


26) நாராயணசுவாமி


27) கவுசல் கிஷோர்


28) அஜய் பட்


29) பி.எல்.வர்மா


30) அஜய்குமார்


31) சவுகான் தேவ்சிங்


32) பக்வந்த் கவுபா


33) கபில் மோரேஷ்வர் படேல்


34) பிரதிமா பவுதிக்


35) சுப்ஹஸ் சர்கார்


36) பக்வத் கிஷன்ராவ் காரத்


37) ராஜ்குமார் ரஞ்சன் சிங்


38) பாரதி பிரவின் பவார்


39) பிஷ்வேஸ்வர்


40) சாந்தனு தாக்கூர்


41) முஞ்சப்பரா மகேந்திர பாய்


42) ஜான் பர்லா


43) நிதிஷ் பிரமானிக்









தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியினை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

 


தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.


இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களை நியமித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஐ.லியோனி மேடைப் பேச்சாளராகவும், நகைச்சுவை பட்டிமன்ற  நடுவராக அறியப்பட்டுவராவார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டிற்கான  கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி வெளியீடு எண்: 400, நாள்: 07-07-2021...



2021 - 22ஆம் கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு - CBSE- திட்டம்...

 


கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020 - 21 கல்வியாண்டில் பெரும்பாலான நாட்கள் மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. அதே நேரத்தில் இரண்டாவது அலையின் தாக்கத்தினால் சிபிஎஸ்இ உட்பட பெரும்பாலான மாநிலங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.


இந்நிலையில் 2021 - 22 கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக பிரத்யேக திட்டத்தை சிபிஎஸ்இ ம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.


அதன்படி இரண்டு பருவங்களாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நவம்பர் - டிசம்பரில் முதல் பருவமும், மார்ச் - ஏப்ரலில் இரண்டாவது பருவத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டத்தை இரண்டு பருவங்களுக்கு 50 - 50 சதவிகிதமாக பிரித்து வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்வை நடத்துவதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தவே இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது.


CPS ரத்து - பென்சனுடன் பழைய ஓய்வூதியத்திட்டம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

 


கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி  பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  


    மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் கோரிக்கைக்கு உரிய மரியாதை வழங்கி நிபுணர் குழு அமைத்தார். அந்தக்குழுவும் காலம் கடத்தும் பணியை மட்டுமே செய்து வந்ததாக விமர்சனமும் எழுந்தது.  


அதனைத்தொடர்ந்து வந்த அதிமுக அரசும் சசிகலாவின் ஆசியால் முதல்வரான முன்னாள் முதல்வர் பழனிச்சாமியும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.  அது போதாது என பென்சன் கேட்கிறார்கள் என நாகரிகமற்ற வார்த்தைகளால் காயப்படுத்தியதோடு நடவடிக்கை எடுத்து தேர்தல் யுக்தியாக பொய்ப் பிரச்சாரமாகவும் அதனைப் பயன்படுத்தியது.  


  அப்போதைய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் அரசூழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.  முக்கியமாக பழைய ஓய்வூதியத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தது. 


   கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றது.  அதில் அரசூழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக பேசப்பட்டது. 


    தற்போது  CPS ரத்து குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில்  . தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலக உயர்மட்ட அதிகாரிகள் தரப்பின்  தகவல் படி  தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் அதிகாரப்பூர்வமாக நடைபெறுவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. 


      தற்போது நடைமுறையில் உள்ள  பழைய ஓய்வூதிய திட்டத்தில்  பணி ஓய்வுக்குப்பின் இறுதி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது .


வரும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Education Minister Anbil Mahes paid tribute to murdered teacher Ramani and condoled with her family.

  தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது க...