கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...




மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...


 மயிலாடுதுறை: திருஇந்தளூரில் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் எம்பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா எம் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினர். 


தொடர்ந்து மயிலாடுதுறை திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் அதிகாரிகள் திட்டத்தை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் உணவு அருந்திவிட்டு, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த எம்எல்ஏ. ராஜகுமார் உள்ளிட்டோர் தாமதமாக திருஇந்தளூர் பள்ளிக்கு வந்தனர். 


அதுவரை ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறு குழந்தைகள் பசியில் காக்க வைக்கப்பட்டனர். அவர்களது பசி தெரியாமல் இருக்க சிறு சிறு விளையாட்டுகள் ஆசிரியர்கள் விளையாடச் சொல்லி நேரத்தை போக்கினர். தொடர்ந்து 9:45 நிமிடங்களுக்கு மிகவும் காலதாமதமாக உணவு பரிமாறப்பட்டது. இதனால் குழந்தைகள் பசியில் வாடினர். தொடர்ந்து பள்ளியும் தாமதமாக துவங்கப்பட்டது. இது குறித்த செய்தி தினமலர் வெப்சைட்டில் வெளியானது. 


இந்நிலையில் திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்ட தொடக்க விழாவில் அரசு நிர்ணயித்த கால அளவினை தாண்டி மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கி சிரமப்படுத்தியதாலும், காலை 9.45 மணியளவில் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்த திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியை குருபிரபாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.





இன்றைய சிறுகதை (Today's Short Story) - "நம்பலாமா, வேண்டாமா..?" ("Believe them or not..?")



இன்றைய சிறுகதை (Today's Short Story)

..................................................................

"நம்பலாமா, வேண்டாமா..?"
.....................................................

ஒருவரை நம்பலாமா, வேண்டாமா? என்பதைக் கண்டு பிடிப்பதற்குச் சிறந்த வழி அவரை நம்புவதுதான்’ என்று சொல்லியிருக்கிறார் எர்னெஸ்ட் ஹெம்ங்வே (Ernest Hemingway). என்ற மேல்நாட்டு அறிஞர்..

மனிதர்களை நம்புவதில் மட்டுமல்ல. எதன் பொருட்டாக இருந்தாலும், அது ஆழமானதாக இருக்க வேண்டியது அவசியம்..

அழுத்தமாக, தீவிரமாகக்கூட வேண்டாம்.ஒரே ஒரு கணம் ஒன்றில் நம்பிக்கை வைத்தால் கூட அது நமக்கு நன்மையைத் தரும்..அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த காலகட்டம். அமெரிக்காவின் கப்பற்படையைச் சேர்ந்த வீரன் ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலையில் தன் படைப் பிரிவில் இருந்து பிரிந்து விட்டான். ஒரு சின்னஞ்சிறிய தீவில் மாட்டிக் கொண்டான்.

படைப் பிரிவைத் தேடி, அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டுமே என்கிற ஏக்கம் ஒருபுறம். எதிரிகளிடம் மாட்டிக்கொண்டு விடக்கூடாதே’ என்கிற பயம் ஒருபுறம்.

அந்த கப்பற்படை வீரன் கடற்கரையோரமாக நடந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது… உணவும் கொஞ்சம் நீரும்கூட இருந்தது. ஆனால், எதிரிகள் குறித்த பயம் மட்டும் அவனைப் படுத்தியெடுத்தது.

கொஞ்சம் தூரம் நடந்திருப்பான். ஒரு சத்தம் அவனை உலுக்கியது. காதுகளைக் கூர்மை ஆக்கிக்கொண்டு சத்தத்தைக் கவனித்தான்.

செடிகளை விலக்கிக் கொண்டு, சருகுகளை மிதித்துக் கொண்டு சிலர் வேகமாக முன்னேறி வரும் சத்தம். அவனுக்குப் பயம் உறுதியாகி விட்டது.நிச்சயம் வருபவர்கள் எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும்.

என்ன செய்வது. ஒளிவதை தவிர வேறு வழியில்லை.
அவசர அவசரமாக ஒளிந்து கொள்ள ஏற்ற இடம் ஒன்றைத் தேடினான். அருகில் ஒரு குன்று இருந்தது.

அதன்மேல் வரிசையாகச் சில குகைகள் இருப்பது தெரிந்தது.விறுவிறுவென்று அந்தக் குன்றில் ஏறினான். நான்காவதாக இருந்த குகைக்குள் நுழைந்து உள்ளே போய் ஒடுங்கி, உட்கார்ந்துகொண்டான்.

கொஞ்சம் வசதியாக இருந்தது குகை; பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான்.இருந்தாலும் எதிரிகளிடம் இருந்து எப்படி பிடிபடாமல் இருப்பது,இங்கு இருந்து எப்படி தப்பி செல்வது என்ற சிந்தனையில் இருந்தான்.

இப்படி அவன் யோசித்துக் கொண்டு இருந்தபோதே  ஒரு சிறிய சிலந்தியை பார்த்தான். உள்ளே ஒரு மனிதன் இருக்கிறானே என்கிற பயமில்லாமல், அது தன் வேலையில் இறங்கியது.அந்தக் குகையின் வாசலில் ஒரு வலையைப் பின்ன ஆரம்பித்தது.

அந்த வீரனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.அந்தச் சிலந்தி வெளியே கேட்கும் ஆள் அரவம், உள்ளே அவன் இருப்பது எதையும் கண்டு கொள்ள வில்லை. அது வலை பின்னுவதில்லே குறியாக இருந்தது.

அவனிருந்த குகை வாசலில் சிலர் நிற்பதும், நிச்சயம் இதுக்குள்ள யாரும் இருக்க மாட்டாங்க’ என்று ஒருவன் சொல்வதும் கேட்டது. அவர்கள் குகைக்குள் தேடாமலேயே அங்கிருந்து நகர்ந்து போனார்கள். அன்றைக்கு அந்த வீரன் உயிர் பிழைத்தே விட்டான்.

இப்போது அவனுக்குக் காரணம் புரிந்து விட்டது. குகை வாசலில் கூடுகட்டிக் கொண்டு இருந்தது.ஒரு சிலந்தி.
அப்படியானால், சிறிது நேரத்துக்கு முன்னால் யாரும் அதற்குள் நுழைந்திருக்க வாய்ப்பு இல்லை. இப்படி நினைத்துத்தான் எதிரிகள் உள்ளே நுழையாமல் சென்று விட்டார்கள்.

அவன் மனதிற்குள் இப்படி சொல்லிக் கொண்டான்.
ஒரு கல் சுவரைவிட சிலந்தியின் வலை வலுவானது என்பதை நான் மறந்து விட்டேனே.

ஆம்.,நண்பர்களே...!

*நீங்கள் பெரிய திறமைசாலியாக இருந்தாலும், மற்றவர்களை கொஞ்சமாவது நம்புங்கள்...

*பிறரை நம்பும் போதுதான் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும், உங்கள் பணிச்சுமையை குறைத்துக் கொள்ளவும் முடியும்.

*பிறரின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறவது கடினம்...



வட்டாரக் கல்வி அலுவலரின் பணிகள் - 08-05-2018ல் வெளியான அரசாணை எண்: 101 மற்றும் 09-09-2022ல் வெளியான அரசாணை எண்: 151 - ஒரு ஒப்பீடு (Duties and Responsibilities of Block Educational Officer - G.O.Ms.No: 101, Dated: 08-05-2018 and G.O.Ms.No: 151, Dated: 09-09-2022 - A Comparison)...

 



>>> வட்டாரக் கல்வி அலுவலரின் பணிகள் - 08-05-2018ல் வெளியான அரசாணை எண்: 101 மற்றும் 09-09-2022ல் வெளியான அரசாணை எண்: 151 - ஒரு ஒப்பீடு (Duties and Responsibilities of Block Educational Officer - G.O.Ms.No: 101, Dated: 08-05-2018 and G.O.Ms.No: 151, Dated: 09-09-2022 - A Comparison)...



வட்டாரக்கல்வி அலுவலரின் பணிகளில் 17(அ), (ஆ) ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எடுக்கப்பட்டு, உயர்கல்வி பயில அனுமதி அளிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.











தமிழ்நாட்டில் இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை - பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை - அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் (Influenza fever in Tamil Nadu is not high - No need to give holidays to schools - Minister Mr. M.Subramanian)...



*தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை.


*அதேசமயம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


 *மேலும், இன்புளுயன்ஸா காய்ச்சல்  இதுவரை 995 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும், 10 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.





Today's (18-09-2022) Wordle Answer...

                                                                        

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (18-09-2022) Wordle Answer: STICK







 

இன்றைய (18-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 18, 2022



மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். விற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


பரணி : ஒத்துழைப்பு மேம்படும்.


கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 18, 2022



வெளியூர் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவரின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : புரிதல் மேம்படும்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 18, 2022



தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான வாய்ப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும். 


திருவாதிரை : செல்வாக்கு அதிகரிக்கும். 


புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 18, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். புத்திரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும். 


பூசம் : அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும். 

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 18, 2022



அரசு சார்ந்த பணிகளில் அனுகூலமான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆன்மிகம் மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மகம் : அனுகூலமான நாள். 


பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 18, 2022



சகோதரர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். கவனக்குறைவினால் சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய முடிவினை எடுப்பீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




உத்திரம் : ஆதாயம் உண்டாகும். 


அஸ்தம் : முன்னேற்றமான நாள்.


சித்திரை : வெற்றி கொள்வீர்கள்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 18, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். சிலருக்கு குழப்பமான கனவுகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் நிமிர்த்தமாக வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.


சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும். 


விசாகம் : மதிப்பு மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 18, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். கோபமின்றி பொறுமையுடன் செயல்பட்டால் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கை துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


அனுஷம் : மாற்றமான நாள்.


கேட்டை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 18, 2022



குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : தெளிவு கிடைக்கும். 


பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 18, 2022



வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடைகளின் மூலம் லாபம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கலை பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அவிட்டம் : தேவைகள் நிறைவேறும். 

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 18, 2022



விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். எந்தவொரு செயலையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். ஆலய வழிபாடு மனஅமைதியை ஏற்படுத்தும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




அவிட்டம் : லாபம் அதிகரிக்கும்.


சதயம் : சிந்தனைகள் உண்டாகும்.


பூரட்டாதி : மனஅமைதி ஏற்படும். 

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 18, 2022



புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் அடைவீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 




பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.


உத்திரட்டாதி : ஆதாயம் அடைவீர்கள். 


ரேவதி : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------




வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு - இயக்குநர் (BEOs adjustments and promotion counselling postponed to next week - Director)...



Dear CEOs,

Due some administrative issues, The BEOs adjustments and promotion counselling postponed to next week. Please don't send any BEOs on Monday. Please acknowledge the same.


Don't send any Middle school HM for BEO promotion counselling. The counselling is postponed.


- Director


------

அன்புள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களே,


சில நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. திங்கட்கிழமை எந்த வட்டாரக் கல்வி அலுவலர்களையும் அனுப்ப வேண்டாம். ஒப்புதல் அளிக்கவும். 


வட்டாரக் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு எந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அனுப்ப வேண்டாம். கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. 


- இயக்குநர்




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...