>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of District Education Officer (Elementary Education))...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,
பணிப் பதிவேட்டில் விடுதல் பதிவுகள் இருப்பின் அதற்குரிய சான்றுகளின் நகல்களுடன் வட்டாரக் கல்வி அலுவலருக்கு கடிதம் அளிக்க வேண்டும். (சான்றுகளின் நகல்களில் வட்டாரக் கல்வி அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்)
பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, மறு மதிப்பீடு , இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளைதல் போன்றவற்றிற்கு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பும் போது முதன்மையாக கீழ்க்கண்ட பதிவுகள் இல்லை எனில், பணிப்பதிவேடு மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு திருப்பப்படும் சூழல் உருவாகும்.
பணிப்பதிவேட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய பதிவுகள்:
1. உயர் கல்வி துறை அனுமதி விவரங்கள்
2. உயர் கல்வி பட்டப் படிப்பு விவரங்கள் (பட்டச் சான்று விவரம்)
3. உண்மைத்தன்மை சான்றுகள் விவரம் (10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஆசிரியர் கல்வி மற்றும் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) , இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள், இளம் கல்வியியல், முதுநிலை கல்வியியல், மெய்மவியல் , ஆய்வியல் உள்ளிட்டவை)
4. குடும்ப விவரங்கள்
5. வாரிசு நியமனம்
6. மகப்பேறு விடுப்பு விவரம்
7. இடமாறுதல் பெற்ற விவரம்
8. ஊதியமில்லா விடுப்பு / அரைச் சம்மள விடுப்பு விவரம்
9. பதவி உயர்வு பெற்ற விவரம்
10. ஊதிய நிர்ணய விவரம் (ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு)
11. பணிவரன்முறை விவரம்
12 .தகுதிகாண் பருவம் முடித்த விவரம்
13. ஊதிய குழு நடைமுறைபடுத்தும்போது புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட விவரம்
14. போராட்டக்காலம்
15. போராட்டக் காலத்தை வரன்முறைப் படுத்திய விவரம்
16 . அயல் மாநிலப் பட்டப் படிப்புயெனில் மறுமதிப்பீட்டு ஆணை விவரம்
17. ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு கணக்கீடு விவரம்
18. தணிக்கைத் தடையினால் கருவூலக்கணக்கிற்கு பணப் பயன் திரும்ப செலுத்தப்பட்ட விவரம் (கருவூல செலுத்துச் சீட்டு ஒட்டப்பட வேண்டும் )
19. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரம்
20. பணி முறிவு காலங்கள் ( உரிய ஆணைகளின் விவரங்கள்)
21. பதவி இறக்கம் செய்யப்பட்ட விவரம்
22. தொகுப்பு ஊதியத்தில் (மதிப்பு ஊதியம்) இருந்து காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட ஆணை விவரம்
💁🏻♂️தேர்வு நிலை / சிறப்பு நிலை / பணிவரன்முறை கருத்துருவுடன் இணைக்கபட வேண்டியன:
அ) ஆணைகளின் நகல்கள் (2):
1. முதல் பணி நியமன ஆணை நகல்
(மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள் )
2. பணிவரன்முறை ஆணை நகல்
3. தகுதி காண் பருவ ஆணை நகல்
4. ஊக்க ஊதிய உயர்வு ஆணை நகல்
5. தேர்வு நிலை ஆணை நகல்
6. ஊதிய நிர்ணய ஆணைகள் நகல் (தேர்வு நிலை / பதவி உயர்வு)
7. இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் ஆணை நகல் (செய்யப்பட்டிருப்பின்)
8. பதவி உயர்வு ஆணை நகல்
9.பதவி உயர்வு பணிவரன்முறை ஆணை நகல்
10. இடமாறுதல் ஆணை நகல் (விருப்ப மாறுதல் / நிர்வாக மாறுதல் / மனமொத்த மாறுதல்)
11. அயல் மாநில கல்விச்சான்று எனில் மறுமதிப்பீடு ஆணை நகல்
12. பதவி உயர்வு பெற்று பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கான ஆணை நகல் மற்றும் மீள் ஊதிய நிர்ணய ஆணை நகல் (அனைவருக்கும் பொருந்தாது)
ஆ) கல்விச்சான்றுகளின் நகல்கள் (2) :
1. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்
2. 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்
3. ஆசிரியர் கல்வி மற்றும் பட்டயப் படிப்பு (DTEd) முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்
4. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி சான்றின் நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்
5. உயர் கல்வி துறை முன் அனுமதி ஆணை நகல் (இளநிலை)
6. மதிப்பெண் பட்டியல்கள் நகல் (இளநிலை)
7. பட்டச் சான்றின் நகல் (இளநிலை)
8. உண்மைத்தன்மை சான்றின் நகல் (இளநிலை)
9. உயர் கல்வி துறை முன் அனுமதி ஆணை நகல் (இளங் கல்வியியல் - பி.எட்)
10. மதிப்பெண் பட்டியல்கள் நகல் (பி.எட்)
11.பட்டச் சான்றின் நகல்(பி.எட்)
12. உண்மைத்தன்மை சான்றின் நகல்(பி.எட்)
13. முன் அனுமதி ஆணை நகல் (முதுநிலை )
14. மதிப்பெண் பட்டியல் நகல் (முதுநிலை )
15. பட்டச் சான்றின் நகல் (முதுநிலை )
16. உண்மைத்தன்மை சான்றின் நகல் (முதுநிலை )
இ) பணிப் பதிவேட்டின் நகல்கள் (2) :
1. தன் விவரம் (3, 4 ஆம் பக்கம் )
2. பணி நியமன விவரம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்
3. தகுதி காண் பருவம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்
4. பதவி உயர்வு விவரம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்
5. பதவி உயர்வு பணிவரன்முறை செய்யப்பட்ட பக்க நகல்
ஈ) கருவூல செலுத்துச் சீட்டு நகல் (கருவூல கணக்கில் பணம் செலுத்தியிருப்பின்)
இன்றைய (28-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
நவம்பர் 28, 2022
குழந்தைகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். பலவிதமான குழப்பங்களுக்கு முடிவு எடுப்பீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. நுணுக்கமான விஷயங்களை கற்று கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அஸ்வினி : முடிவு எடுப்பீர்கள்.
பரணி : சிந்தித்து செயல்படவும்.
கிருத்திகை : போட்டிகள் குறையும்.
---------------------------------------
ரிஷபம்
நவம்பர் 28, 2022
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய துறைகள் சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : முடிவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : தேடல் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
நவம்பர் 28, 2022
முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. மனதில் நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : ஆர்வமின்மை உண்டாகும்.
---------------------------------------
கடகம்
நவம்பர் 28, 2022
உடல் தோற்றப்பொலிவு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். வியாபாரம் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபகரமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : லாபகரமான நாள்.
---------------------------------------
சிம்மம்
நவம்பர் 28, 2022
உத்தியோகத்தில் சக ஊழியர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : உதவி கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
நவம்பர் 28, 2022
புதிய முயற்சிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவுபெறும். செய்கின்ற செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூக வலைதளங்களில் புதிய வாய்ப்பும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திரம் : இழுபறிகள் குறையும்.
அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்
நவம்பர் 28, 2022
உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கற்றலில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். வெளியிலிருந்து வர வேண்டிய தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தனம் சார்ந்த செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
சுவாதி : தனவரவு கிடைக்கும்.
விசாகம் : திருப்திகரமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
நவம்பர் 28, 2022
தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். சாதுர்யமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து முடிவெடுப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோகத்தில் உள்ள சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : நம்பிக்கை மேம்படும்.
கேட்டை : விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------
தனுசு
நவம்பர் 28, 2022
அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வெளிநாடு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உங்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நிறைவான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மூலம் : மந்தத்தன்மை குறையும்.
பூராடம் : ஆதாயம் அடைவீர்கள்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மகரம்
நவம்பர் 28, 2022
உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மனதில் எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : துரிதம் உண்டாகும்.
திருவோணம் : பிரச்சனைகள் நீங்கும்.
அவிட்டம் : சோர்வு உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
நவம்பர் 28, 2022
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் கைகூடும்.
சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
நவம்பர் 28, 2022
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.
----
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2022 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: மக்கட்பேறு
குறள்: 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
பொருள்:
தன்மகன் ' சான்றோன் 'என பிறரால் பாராட்டப்படும் போது அவனை பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட கூடுதலான மகிழ்ச்சியை அந்தத்தாய் அடைவாள்.
பழமொழி :
chew your food well and live a long life.
நொறுங்க தின்றால் நூறு வயது வாழலாம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.
2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது. --நெல்சன் மண்டேலா.
பொது அறிவு :
1. வெண்மை புரட்சி எதைக் குறித்து உருவானது?
பால் வளத்தைப் பெருக்குதல்.
2. நீலப் புரட்சி எதைக் குறித்து உருவானது?
கடல் வளத்தைப் பெருக்குதல்.
English words & meanings :
buy - purchase. verb. வாங்குவது. வினைச் சொல். by - through. preposition.மூலமாக. முன்னிடை சொல். bye - goodbye. noun. விடை பெறுவது. all homonyms
ஆரோக்ய வாழ்வு :
ஆரஞ்சு வைட்டமின் சி இன் மிகவும் வளமான மூலமாகும். மேலும் இது இயற்கையாகவே கொழுப்பை எரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. வைட்டமின் சி உடலின் வளர்சிதை மாற்றம் நன்றாக செயல்பட உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கான சிறந்த பழமாக உள்ளது. அவை நீர்ச்சத்து அதிகம் மற்றும் உங்கள் ஒழுங்கற்ற பசி உணர்வை குறைக்க உதவும்.
NMMS Q
மஞ்சு 29 2 1984 இல் பிறந்துள்ளார் எனில் அவர் 2020 வரை எத்தனை பிறந்த நாள்களை கொண்டாடி இருப்பார்?
விடை : 9
விளக்கம்: 1984 முதல் 2020 வரை உள்ள லீப் வருடங்களை கணக்கில் கொண்டு கணக்கிடலாம்.
நீதிக்கதை
பொய்
மேட்டுக்குப்பம் என்ற ஊரில் சுதன் என்பவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள். தினந்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் அளிக்கிறேன் என்று பொய் சொல்லி காசுகளை வாங்குவான் சுதன்.
ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறு கூட போட மாட்டான். அன்னதானம் வாங்குவதற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஐயா! இப்பத்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள் வயிறார சாப்பிடலாம், என்று இனிமையாகப் பேசி அனுப்பிவிடுவான்.
பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். இவன் யாரையும் ஏமாற்றி விடுவான். சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன். சுதன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்று மகேன் சுதன் வீட்டிற்கு சென்றான். ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன், என்றான்.
ஆமாம், உண்மைதான். தினந்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர். ஆனால், உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை, நாளை வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் சென்ற சுதனிடம், யார் வந்தது? என்று மனைவி கேட்டாள்.
நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். நாளை வா! என்று சொல்லி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான், என்று சொல்லிச் சிரித்தான் சுதன்.
மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், கதவை திறந்தான். ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள், என்று சொல்லி அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான் மகேன்.
உள்ளே வந்த சுதன், மனைவியிடம், நேற்று வந்த வெளியூர்காரன் இன்று விடிகாலையிலேயே வந்து நம் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது, என்று கவலையுடன் சொன்னான்.
கவலை வேண்டாம், அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, என்று சொல்லி அனுப்பி வையுங்கள், என்றாள் அவள். மனைவி சொல்படி, பொழுது விடிந்ததும் மகேனிடம் சோகமான முகத்துடன் வந்த சுதன், என் மனைவிக்குக் காய்ச்சல் படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் சமைக்க முடியாது. நாளை வாருங்கள் கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம், என்றான்.
மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன், என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்று, சமைக்கத் தொடங்கினான். இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர்.
சிறிது நேரம் சென்றது. சுதனுக்கும், மனைவிக்கும் ஒரு யோசனை வந்தது அதன்படி, மகேன் சமையலை முடித்தான். அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழை இலைகளை அரிந்து எடுத்து வாரும், என்றான் சுதன்.
அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான். அவன் வருவதை இருவரும் பார்த்தனர். உரத்த குரலில் அவள், வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது என்று கோபத்துடன் கத்தினாள். நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன், என்று கத்தினான் சுதன்.
இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே பார்த்தனர். இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் அங்கே அவனைக் காணவில்லை. இவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம், என்றாள் சுதனின் மனைவி.
இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், அவர்கள் முன் குதித்தான். தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்து, அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர்.
நீதி :
ஏமாற்றுபவர்கள் ஒருநாள் ஏமாறுவார்கள்.
இன்றைய செய்திகள்
28.11.22
* கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலையில் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
* தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* அறிவியல் மனப்பான்மையை 6 முதல் 8 வரை உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் மேம்படுத்த 'வானவில் மன்றம்' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
* மெரினாவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன நிரந்தர நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
* ரயில் வேகத்தை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பம்: 2025-ல் அறிமுகம்- இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
* புரோ கபடி லீக்கில் இன்று நடைபெறும் முக்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Today's Headlines
* Kanyakumari is crowded with tourists during the Sabarimala season. In the morning they gathered on the beach and enjoyed the sunrise.
* Chennai Meteorological Center has said that light to moderate rain may occur at a few places in Tamil Nadu from today for the next 3 days.
* Rainbow forum' to develop scientific attitude among students in 6th to 8th government schools: Chief Minister M.K.Stalin inaugurates.
* A permanent footpath for the disabled is coming into use today Developed under the 'Singara Chennai 2.0' project at the Marina.
* New technology to increase train speed: Introduction by 2025- Indian Railways has announced.
* Tamil Thalaivas will face Gujarat Giants in today's main match of the Pro Kabaddi League.
2021-22ஆம் ஆண்டுக்காக புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்குத் (INSPIRE MANAK AWARD) தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சிகள் இணைய வழியில் MANAK Competition APP மூலம் நடைபெறுதல் - செயல் இயக்குநர் அறிவிப்பு (District level exhibitions for students selected for INSPIRE MANAK AWARD for the year 2021-22 will be held online through MANAK Competition APP - Announcement by Executive Director)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம், சென்னை-25
2021-22ஆம் ஆண்டுக்காக புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்குத் (INSPIRE MANAK AWARD) தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான மாவட்ட அளவிலான கண்காட்சிகள் (DISTRICT LEVEL EXHIBITION AND PROJECT COMPETITION) நடத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. அது குறித்து ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology) மற்றும் தேசிய புத்தாக்க நிறுவனம்(NIF INDIA) ஆகியவை அனுப்பிய சுற்றறிக்கையின்படி மாவட்ட அளவிலான கண்காட்சிகள் இணைய வழியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான கண்காட்சிகளை இணைய வழியில் நடத்த தனிப்பட்ட கணினி அல்லது செல்பேசி மென்பொருள் இப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. MANAK Competition APP என்ற இதனை Google Play Store மூலம் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் (1506) மட்டுமே தங்களது அறிவியல் காட்சிப்பொருள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். அவர்கள் விருதுக்கான குறியீட்டு எண் (Award Code Number (எடு 2171713104433) ஒவ்வொரு மாணவருக்கான Used ID(Reference Code) ஆகும். இந்த எண்ணைப் பதிவிட்டு Get Password என்பதை அழுத்தினால் அவர்கள் முன்னரே பதிவு செய்துள்ள செல்பேசி எண்ணுக்கு OTP வாயிலாகக் கடவுச்சொல் அனுப்பப்படும்.
இதற்கான வழிமுறைகள் www.youtube.com/watch?v=vlleWTYBe8o என்ற காணொளி இணைப்பில் வழங்கப்பட்டுள்ள. இணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய அறிவியல் செயல்முறைகளை ஒளி, ஒலி காட்சிகள் மூலம் தயாரித்து செல்பேசி அல்லது இணையதளம் மூலமாக அனுப்ப வேண்டும். காட்சிப்பொருள் குறித்த விளக்கக் குறிப்பையும் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இணைக்க வேண்டும்.
இம்முறையில் தமிழகத்திற்கான பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு 2022, டிசம்பர் 4- ந்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் இணையம் பதிவுகளை ஏற்காது. எனவே டிசம்பர் 4-ந்தேதிக்குள் பதிவுகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
23-11-2022 செயல் இயக்குநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள வானவில் மன்றம் (STEM ON WHEELS - Vaanavil Mandram) தொடக்க விழாவினை நேரலையில்(Live) காண Link(Link to watch the opening ceremony of STEM ON WHEELS to be inaugurated by Hon'ble Chief Minister of Tamil Nadu)...
வானவில் மன்றம் தொடக்க விழா...
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில் இணையுங்கள்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த link-ஐ பகிருங்கள்.
https://linktr.ee/tnsedtraining
நாள் : 28.11.2022 | நேரம் : காலை 10.20 மணி | இடம் : திருச்சி
>>> எளிய வழி அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் - 30 சோதனைகள் - PDF...
>>> வானவில் மன்றம் காணொளிகள் - அறிவியல் & கணிதம் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே சரிபார்க்கலாம் - சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் மாணவர்கள்/கல்வி நிறுவனங்கள்/ நோடல் அதிகாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு (9th & 10th Standard Students only eligible under Pre Matric Scholarship Scheme - Important Notice for Students/institutes/Nodal Officers on Pre Matric Scheme of Ministry of Minority Affairs)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அறிவிப்பு
கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) சட்டம், ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை) வழங்குவதை அரசு கட்டாயமாக்குகிறது. அதன்படி ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் மெட்ரிக்-க்கு முந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். அதேபோல் 2022-23 முதல், சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கவரேஜ் IX மற்றும் X வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை பெற இயலும். சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் IX மற்றும் X வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை மட்டும் இன்ஸ்டிடியூட் நோடல் அதிகாரி (INO)/மாவட்ட நோடல் அதிகாரி (DNO)/மாநில நோடல் அதிகாரி (SNO) சரிபார்க்கலாம்.
***
Important Notice for Students/institutes/Nodal Officers on Pre Matric Scheme of Ministry of Minority Affairs
N O T I C E
The Right to Education (RTE) Act, 2009 makes it obligatory for the Government to provide free and compulsory elementary education (classes I to VIII) to each and every child. Accordingly only students studying in classes IX and X are covered under the Pre-Matric Scholarship Scheme of Ministry of Social Justice & Empowerment and Ministry of Tribal Affairs. Likewise from 2022-23, the coverage under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs shall also be for classes IX and X only. The Institute Nodal Officer (INO)/District Nodal Officer (DNO)/State Nodal Officer (SNO) may accordingly verify applications only for classes IX and X under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs.
***
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings
EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...