கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2023 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: செய்நன்றி அறிதல்


குறள் : 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.


பொருள்:

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது


பழமொழி :

Without wisdom,wealth is worthless.


விவேகம் இல்லாச் செல்வம் வீணே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன்.


 2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :


நமது மேலாதிக்க எண்ணங்களின் விளைவுகளையே நமது வாழ்க்கை எப்போதும் பிரதிபலிக்கின்றது.


பொது அறிவு :


1. பறவை முட்டையில் எத்தனை சவ்வுகள் உள்ளன? 


 ஐந்து சவ்வுகள்


2 . உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது? 


கியூபா.


English words & meanings :


pail - bucket, noun. நீர் எடுக்கும் வாளி. பெயர்ச் சொல். pale - light in colour. adjective. வெளிறிய வண்ணம். பெயரடை


ஆரோக்ய வாழ்வு :


கொப்பரை தேங்காய் உடன் கசகசா அரைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். 2. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து காய்ச்சி நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்


NMMS Q


ஓர் இணைகரத்தின் உயரம் 8 சென்டிமீட்டர் மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தை போல் மூன்று மடங்கு எனில் அதன் பரப்பளவு___________சதுர சென்டிமீ்ட்டர் 


விடை: 192. 


விளக்கம் : b x h= 24 x 8 = 192


ஜனவரி 23


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்


நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா,


நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!  




நீதிக்கதை


நல்ல நண்பன் வேண்டும்



ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.


விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.


அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.


நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.


இன்றைய செய்திகள்


23.01.2023


* குடியரசு தின விழா பாதுகாப்பு: டெல்லி செல்லும் ரயில்களில் ஜனவரி-26 வரை பார்சல் சேவை நிறுத்தம்.


* வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.


* தமிழகத்தில் 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்.


* அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை  இன்று சூட்டுகிறார் பிரதமர் நரேத்திர மோடி.


* சீன எல்லையில் இந்தியா பிரம்மாண்ட போர் பயிற்சி - இந்திய விமானங்கள், ஏவுகணைகள் குவிப்பு.


* முடிவெடுக்க தயங்கும் மேற்குலக நாடுகளால் தங்கள் நாட்டு மக்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


* இந்திய ஓபன் பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீரர் குன்லவுட் மற்றும்  பெண்கள் ஒற்றையர் பிரிவில் கொரியா வீராங்கனை அன் சியாங் ஆகியோர் பட்டம் வென்றனர்.


* ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்.


Today's Headlines


* Republic Day Security: Parcel service suspended on Delhi-bound trains till Jan-26


*  In Eruthu Vidum vizha Vellore District Collector impose new restrictions. 


* 1.14 lakh people are employed through 71 private employment camps in Tamil Nadu: Minister CV Ganesan informs.


 * Prime Minister Narendra Modi today named Paramveer Chakra awardees for 21 unnamed islands in the Andaman and Nicobar Islands.


 * India's massive war drills on Chinese border - Indian aircraft, missile build-up


 * Ukraine says its people are being killed by the West, which hesitates to make decisions.


*  India Open Badminton: Thailand's Kun Laut and Korea's Anh Xiang won the men's singles title.


 * Hockey World Cup: Spain beat Malaysia to reach quarter-finals.


TNSED Schools App - Version 0.0.53 - Download Link - Updated on 22-01-2023...

 

 

 


🛑🛑🛑🛑🛑🛑

*_TNSED schools App


*_What's is new..?


*🎯🎯  Ennum Ezhuthum Module Updated - Term -2, Summative Assessment student report card updated...


*_UPDATED ON 22 JANUARY- 2023


*_Version: Now 0.0.53


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



IFHRMS வலைதளத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் முன்மொழிவுகளுக்கான படிநிலைகள் (Pension & Retirement Benefits Proposal Steps in IFHRMS Website)...



>>> IFHRMS வலைதளத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் முன்மொழிவுகளுக்கான படிநிலைகள் (Pension & Retirement Benefits Proposal Steps in IFHRMS Website)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


காவலர் பணிநியமனம் - பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O. (Ms) No: 67, Dated: 22-01-2010 - 10% percent Reservation provided in "Ward cum Dependent Quota" granted to the dependents of Serving / Retired/ Deceased/ Medically invalidated Police Personnel including Ministerial staff of police department)...


>>> காவலர் பணிநியமனம் - பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O. (Ms) No: 67, Dated: 22-01-2010 - 10% percent Reservation provided in "Ward cum Dependent Quota" granted to the dependents of Serving / Retired/ Deceased/ Medically invalidated Police Personnel including Ministerial staff of police department)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


NMMS (MAT) - ONLINE GOOGLE FORM TEST - 36 தலைப்புகளுக்கும் தனித்தனியே மாதிரி தேர்வுகள் (in 36 Topics)...

 


📝📝📝📝✏️ NMMS (MAT) - ONLINE GOOGLE FORM TEST - 36 தலைப்புகளுக்கும் தனித்தனியே மாதிரி தேர்வுகள் (in 36 Topics)...

எந்த தலைப்பில் தேர்வு எழுத வேண்டுமோ அதற்கு கீழே உள்ள நீல கலர் linkஐ touch செய்து, தேர்வு எழுதி, *Submit* கொடுத்தவுடன் மதிப்பெண் தெரிந்துக்கொள்ளலாம்.


*1)  எண் தொடரை நிரப்புதல்*

*(MISSING NUMBER IN THE NUMBER SERIES)*

https://forms.gle/tPmvqq8J7WyLKeJt6


*2) எழுத்து தொடரை நிரப்புதல்*

*(MISSING LETTER IN THE LETTER SERIES)*

https://forms.gle/bYYFsx7ECHVkavV19


*3) ஒப்புமை- எண்கள்*

*(ANALOGY-NUMBER)*

https://forms.gle/TjMfbyiaYFL5Zux1A


*4) ஒப்புமை -எழுத்துகள்/வார்த்தைகள்*

*(ANALOGY-LETTERS/WORDS)*

https://forms.gle/Su4TiV34452eB4o98


*5) மாறுபட்ட எண்/ இணை எண்ணைத் தேர்ந்தெடுத்தல்*

*(ODD ONE OUT - NUMBER/ PAIR OF NUMBERS)*

https://forms.gle/9fTKzeQK9ZmKcWY36


*6) மாறுபட்ட எழுத்து / வார்த்தையைத் தேர்ந்தெடுத்தல்*

*(ODD ONE OUT- LETTERS/WORDS)*

https://forms.gle/u5Q5cW2Py9EV7ahg9


*7) வடிவியல் உருவங்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல்*

*(COUNTING THE GEOMETRICAL FIGURES)*

https://forms.gle/Re9LnQW91NeqReVJ8


*8) வென் படங்கள்*

*(VENN DIAGRAMS)*

https://forms.gle/qtRdnbFW9ULWfuhk8


*9) எண்/எழுத்து குறியிடல்*

*( NUMBER/LETTER COUNTING)*

https://forms.gle/AfDKsnvxBFHbUETF8


*10) குறியீட்டின் பொருள் அறிதல்*

*(DECODING)*

https://forms.gle/E38kQi8yxGDbd8FG8


*11) படங்களில் விடுபட்ட எண்ணை நிரப்புதல்*

*(MISSING NUMBER IN THE FIGURE)*

https://forms.gle/F8dE9vP9VsRr35yKA


*12) படங்களில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல்*

*(MISSING LETTER IN THE FIGURE)*

https://forms.gle/ZKQPjGXSycWUJna3A


*13) செருகப்பட்ட படங்கள்-எண் / எழுத்து விபரங்கள்*

*(INSERTED FIGURES -NUMBER/LETTER DETAILS*

https://forms.gle/QhvhcPoDYzfmmuVLA


*14) வார்த்தைக்குள் அமைந்த வார்த்தை*

*(WORD WITHIN THE WORD)*

https://forms.gle/FCxvfsszEWeMqPva8


*15) வார்த்தைக்குள் அமையாத வார்த்தை*

*(WORD CANNOT BE FORMED IN THE WORD)*

https://forms.gle/FhGeqdK9aaTaJbs37


*16) ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல்*

*(ARRANGEMENT OF LETTERS AS IN ENGLISH DICTIONARY)*

https://forms.gle/Gk6eHTMfPYUcnLzF6


*17) எண் அணிகள்*

*(NUMBER MATRIX)*

https://forms.gle/BXg4ZMX7fpTqnRzZ8


*18) எண்கள், குறிகள் மற்றும் குறியீடுகள்*

*(NUMBER, SIGNS AND SYMBOLS)*

https://forms.gle/ZmXkK3jmUyE4pC2v6


*19) எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல்*

*(FINDING THE WRONG NUMBER IN THE NUMBER SERIES)*

https://forms.gle/C7ZAx3r6ec7AyYv48


*20) எண்ணியல் கணக்குகள்*

*( NUMERICAL PROBLEMS)*

https://forms.gle/dUW3jpzSCGceqji67


*21) சூழ்நிலைக் கணக்குகள்*

*(SITUATION RELATED PROBLEMS)*

*i) பொதுவானவை*

*( GENERAL)*

https://forms.gle/TqTA4vpHiFyJFHDA9


*ii) இருக்கை அமைப்பு கணக்குகள்*

*(SEATING ARRANGEMENT PROBLEMS)*

https://forms.gle/C66s7fCDCWLJ2u2t9


*iii) வயது கணக்குகள்*

*(AGE RELATED PROBLEMS)*

https://forms.gle/Vmsj8Afs4rQrhbXb7


*22) உறவுமுறை கணக்குகள்*

*(BLOOD RELATIONSHIP PROBLEMS)*

https://forms.gle/GG6fhKgNmEtRVBvQA


*23) திசைகள் சார்ந்த கணக்குகள்*

*( DIRECTIONS RELATED PROBLEMS)*

https://forms.gle/kDUdLp97y1iAKkMB6


*24) காலம் சார்ந்த  கணக்குகள்*

*(TIME RELATED PROBLEMS)*

https://forms.gle/7WffesLaPqKJw8xQ6


*25) புதிர் கணக்குகள்*

*(PUZZLE PROBLEMS)*

https://forms.gle/VHhRhn1fimPDZLzF7


*26) தரம் சார்ந்த கணக்குகள் மற்றும் எண்/எழுத்து அறிவைச் சோதித்தல்*

*(RANKING TEST AND NUMBER/LETTER TEST)*

https://forms.gle/LwRrK1T6W45ZKUbV6


*27) வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல்*

*(LOGICAL SEQUENCE OF WORDS)*

https://forms.gle/CUwSTNd5DegBCggH9


*28) பகடைக் கணக்குகள்*

*(DICE PROBLEMS)*

https://forms.gle/AWmE2Hz6ubkvr41XA


*29) கன சதுரக் கணக்குகள்*

*(CUBE PROBLEMS)*

https://forms.gle/JnKrBneWabP3U7Jq6


*30) உருவ/பட வரிசையை நிரப்புதல்*

*(COMPLETING THE FIGURAL SERIES)*

https://forms.gle/oJNkBLGMCaEbBPKo7


*31) ஒப்புமை- படங்கள்*

*(ANALOGY- FIGURES)*

https://forms.gle/7aoGwkYhsACWRKBD9


*32)மாறுபட்ட படத்தைத் தேர்ந்தெடுத்தல்*

*(ODD ONE OUT- FIGURES)*

https://forms.gle/994cE12ptX9xqZbeA


*33) கண்ணாடி பிம்பங்கள்*

*(MIRROR IMAGES)*

https://forms.gle/fs1Ge9ecbf7sQGT59


*34) நீர் பிம்பங்கள்*

*(WATER IMAGES)*

https://forms.gle/62fSH17TLFTSRq6a9


*35) மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டறிதல்*

*(HIDDEN/EMBEDDED FIGURES)*

https://forms.gle/kebKjuszsMSz1T6CA


*36) படத்தில் உள்ள விடுபட்ட பகுதியை நிரப்புதல்*

*( COMPLETE THE MISSING PART OF THE IMAGE)*

https://forms.gle/mQiM9ghC6cpX6FAs6



தயாரிப்பு :- *திருமதி. சீ.நாகலக்ஷ்மி*,

*பட்டதாரி ஆசிரியை( கணிதம்)*  ஊ.ஒ.ந.நி.பள்ளி, மொழையூர்,

திருப்பனந்தாள் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம்.


💐💐👍👍💐💐

🌻🌸ALL THE BEST🌸🌻






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் - அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...



 காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் -  அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...


போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.


சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருப்போரின் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O.Ms.No.67, Dated: 22-01-2010) அன்று பிறப்பிக்கப்பட்டது.


உயர்நீதிமன்றம் தடை


இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது.


அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, சீருடைப் பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லாது, சட்டவிரோதமானது என்றும், எதிர்காலத்தில் இந்த அரசாணையை செயல்படுத்தக்கூடாது என்றும் தடை விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.


மேல்முறையீடு


சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 119 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ். ஓகா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


அரசாணை செல்லும்


மனுதாரர்களின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் எனவும், ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த ஆண்டில் சீருடைப் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் உத்தரவிட்டது.



>>>  காவலர் பணிநியமனம் -  பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு - அரசாணை...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)...


>>> பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS Model QP regarding - State SLAS team information

 மாநில அடைவு தேர்வு மாதிரி வினாத்தாள் தொடர்பாக மாநில SLAS குழுவின் தகவல்  SLAS  Model  Question Paper regarding - State SLAS team informatio...