கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

படுக்கை வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் - உள்ள வசதிகள் குறித்த தகவல்கள் - காணொளி...



படுக்கை வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள் குறித்த தகவல்கள் - காணொளி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் புகைப்படம் மற்றும் வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.


*வசதிகள் என்னென்ன?*


*800 முதல் 1,200 கி.மீ., தூரம் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.


*16 பெட்டிகள் இருக்கும். அதில் ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட 11 பெட்டிகள்,


*இரண்டு அடுக்கு படுக்கை வசதிகொண்ட நான்கு பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டி 1 உடன் 823 பேர் பயணிக்க முடியும்.


*மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்.


*மொபைல் போன் சார்ஜிங் வசதி, பாதுகாப்புக்காக கேமரா, பொது அறிவிப்பை வெளியிட ஸ்பீக்கர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி ஆகியவை இடம்பெறும்.


*முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிகள் சுடு தண்ணீரில் குளிக்கும் வசதி உள்ளது.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02-09-2024...

 

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02-09-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:624

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து .

பொருள் :தடைபட்ட இடங்களில் எல்லாம் ,(வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.


பழமொழி :
உள்ளங்கை நெல்லிக்கனி போல .

As clear as a bell.


இரண்டொழுக்க பண்புகள் : 

*எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.      

*ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு  பாடுபடுவேன்.


பொன்மொழி :

வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு ஏறினீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் எப்படி உலகிற்கு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்."என்பதாகும். – ராய் டி. பென்னட்


பொது அறிவு :

1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?

விடை: 27

2. இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?

விடை: பாரதிதாசன்


English words & meanings :

huge-பெரும்,

colossal-மாபெரும்


வேளாண்மையும் வாழ்வும் :

மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.


செப்டம்பர் 02

உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.[1] 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.[2]

வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது.


நீதிக்கதை

தன்னம்பிக்கை உள்ள தவளை 

ஒரு அழகிய குளத்தின் அருகில் இரண்டு தவளைகள் வசித்து வந்தன. அவர்கள் நல்ல நண்பர்களாக ஒன்றாக வளர்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் வயலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது மழை வந்தது. அப்போது பெரிய தவளை, “நண்பா மிகவும் மழை பெய்கிறது எனவே எங்கேயாவது ஒதுங்குவதற்கு இடம் தேடலாம்” என்றது.

அடுத்த தவளை அதற்கு சம்மதித்தது. மழையில் இருந்து ஒதுங்க, அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் நுழைந்தன. அந்த வீட்டின்

சமையல் அறைக்குள் நுழைந்தனர். புது இடம் மிகவும் குழப்பமாக இருந்ததால் இரு தவளைகளும் அங்கேயும் இங்கேயும் குதித்துக்கொண்டு இருந்தன.

திடீரென்று நிலைதடுமாறி  நிறைய பால் இருந்த பெரிய பாத்திரத்திற்குள் இரு தவளைகளும் விழுந்தன.  எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் அந்த பாத்திரத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.

முயற்சியிலிருந்து தோல்வியடைந்த ஒரு தவளை இனி வெளியே வர முடியும் என்னும் நம்பிக்கையை இழந்தது.

இறுதியில் அந்த தவளை பாலில் மூழ்கி இறந்து விட்டது. மற்றோர் தவளை தன்னம்பிக்கையை இழக்காமல் பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. பாலில் விடாமல் குதித்துக் கொண்டு  மீண்டும் முயற்சியை தொடர்ந்தது.

தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து தப்பியது.

நீதி : முயற்சி திருவினையாக்கும்.


இன்றைய செய்திகள்

02.09.2024

* ரூ.400 கோடி முதலீடு; 500 பேருக்கு வேலைவாய்ப்பு: அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.

* தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகளவிலான நபர்கள் இந்தி மொழியை கற்றுக் கொள்வதாக இந்தி பிரச்சார சபா தகவல் தெரிவித்துள்ளது.

* சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி  மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

* ஆந்திரா, தெலங்கானாவில் கனமழையால் கடும் பாதிப்பு: 8 பேர் பலி; ரயில்கள் ரத்து.

* சூரியனை விட 5 லட்சம் கோடி மடங்கு அதிக பிரகாசத்துடன் ஒளிரும் தன்மை கொண்ட பெரிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

* துரந்த் கோப்பை கால்பந்து: மோகன் பகானை வீழ்த்தி நார்த்ஈஸ்ட் யுனைடெட் சாம்பியன்.

* டி20 கிரிக்கெட் வரலாற்றில் 19 சிக்சர்கள் அடித்து 165 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்த ஆயுஷ் பதோனி.


Today's Headlines

* 400 crore investment;  Employment for 500 people: Agreement signed in presence of CM Stalin in USA.

* The Hindi Prachara Sabha has reported that Tamil Nadu has the highest number of people learning Hindi among the South Indian states.

* Following the warning from Chennai Meteorological Centre, storm warning flag  number 1 has been hoisted at Thoothukudi and Pampan port.

* Heavy rains hit Andhra, Telangana: 8 dead;  Trains were cancelled.

* Scientists have discovered a supermassive black hole with a luminosity of 5 trillion times that of the Sun.

*  US Open Tennis: Bopanna pair advanced to quarterfinals

* Durant Cup Football: Northeast United thrash Mohan Baghan and bags championship.

* Ayush Badoni has created a new world record in the history of T20 cricket by hitting 19 sixes and scoring 165 runs.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - இன்றைய சிறுகதை...



தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - இன்று ஒரு சீன நாட்டு சிறு தத்துவக் கதை...


சீன அதிபருக்கு அப்பா சொன்ன 3 வாழ்க்கை பாடங்கள் - நம்பிக்கை கதை - Motivation Story...


``என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன." சீன அதிபர் ஜி ஜின்பிங் சொன்ன குட்டிக் கதை...


`மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் ஒரு நல்ல உதாரணமாக நான் இருக்கலாம்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பிரபல அமெரிக்க பேஸ்கெட் பால் பயிற்சியாளர் பேட் சம்மிட் (Pat Summitt). `நல்லது நினைத்தால், செய்தால் நமக்கும் நன்மையே விளையும்’ என்பது மூதுரை. இவை வெறும் சொற்களல்ல. அனுபவபூர்வமான உண்மை. நேர்மறை எண்ணம், நல்ல சிந்தனை, பிறரின் மேல் அக்கறைகொள்ளும் இயல்பு... இவையெல்லாம் நமக்கு நல்ல பலன்களையே பெற்றுத்தரும். இந்த உண்மையை உறக்கச் சொல்கிறது இந்தக் கதை... தவறு... உண்மைச் சம்பவம். சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping), ஒரு பத்திரிகையில் தனக்கு தன் அப்பாவிடமிருந்து கிடைத்த மூன்று பாடங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வார்த்தைகளிலேயே அந்தப் பாடங்களைக் கேட்போமா?   


``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. 


ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில் வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’ 


அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’ 


மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன. 


அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’ 


அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்...’’


நான் முதல்வன் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம்...



கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் கல்வியில் சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் நான் முதல்வன் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம் மற்றும் மாவட்ட வாரியான கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிப்பார்வை TNSED Admininstrators செயலி - கேட்கப்படும் வினாக்கள் - ஆய்வுப்படிவம் (தமிழில்)...



 பள்ளிப்பார்வை TNSED Admininstrators செயலி - கேட்கப்படும் வினாக்கள் - ஆய்வுப்படிவம் (தமிழில்)...



Palli Paarvai TNSED Admininstrators School Visit App - Asked Questions - Visit Inspection Sheet (Tamil)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




  தலைமையாசிரியர்கள்  மற்றும்  ஆசிரியர்கள்  அனைவருக்கும்  வணக்கம்...

     

ஆய்வு  அலுவலர்கள்  பள்ளிப்பார்வைக்கு  வரும்  பொழுது TNSED Admininstrators செயலியில்  கேட்கப்படும்  வினாக்கள்  அனைவருக்கும்  தெரிந்திருக்க  வேண்டியது  அவசியம். தங்கள் பள்ளி  ஆசிரியர்களுக்கு  தெரிவிக்க  கேட்டுக் கொள்ளப்படுகிறது.



மீண்டும் வருமா பழைய ஓய்வூதியத் திட்டம்? - திரு.வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர்...


 மீண்டும் வருமா பழைய ஓய்வூதியத் திட்டம்? - திரு.வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர்...


Will the old pension scheme come back? - Mr. Vaigaichelvan, Former Minister...



அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு காலமாக நீடிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். அது எப்போது என்பதுதான் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கேள்வி.


பழைய ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூ​தியத் திட்டத்​தின்படி, ஓர் ஊழியர் கடைசி​யாகப் பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூ​தி​ய​மாகத் தரப்படு​கிறது. அதில் 40% தொகை 12 ஆண்டு​களுக்குக் குறிப்​பிட்ட வட்டி சதவீதத்​துடன் கணக்கிடப்​பட்டு, ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ரொக்கத் தொகையாக வழங்கப்​படு​கிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TNSED Schools App New Version: 0.1.9 - Updated on 30-08-2024 - Bug Fixes and Performance Improvement...

 

 

TNSED schools App


What's is new..?



*🎯Bug Fixes and Performance Improvement....


*_UPDATED ON  30 August 2024


*_Version: Now 0.1.9


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis



*TNSED SCHOOLS APP NEW  UPDATE VERSION - 0.1.9


*வாசிப்பு இயக்கம் ICON ENABLE செய்யப்பட்டுள்ளது*


*தங்கள் வகுப்பு மாணவர்கள் முதல் பருவத்தில் ஒவ்வொருவரும் வாசிப்பு இயக்கம் சார்ந்து*


 👉👉  நுழை


 👉👉  நட 


  👉👉  ஓடு


  👉👉  பற


ஆகியவற்றில் எந்த நிலையில் உள்ளார் என்பதையும் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையும்..

படிக்க விரும்பும் 3 புத்தகங்களையும் தேர்வு செய்துகொள்ள  Update   Option  Enable செய்யப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பு...