கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Constitution of Union of India

 




இந்திய ஒன்றியத்தின் 75வது அரசமைப்புச் சட்ட தின வாழ்த்துகள்


Happy 75th Constitution Day of Union of India


இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட டாக்டர்.அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும், மேலும் இந்திய அரசமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும், அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யபட்டு அரசியல் நிர்ணய சபையின் தலைவரான இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்ற நாளான நவம்பர் 26-ஐ அரசமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாட இந்திய ஒன்றிய அரசால் 2015-ஆம் ஆண்டு அறிவித்தது.


பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்தே 1934-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியத் துணைக்கண்டத்திற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிறகு 1936 & 1939-ல் இருமுறை இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.


அதன்படி, 1942-ஆம் ஆண்டு மார்ச்சில் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்கப் பரிந்துரைத்தது. அதன்பின்பு 1946 மே-இல் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது. 11.12.1946-ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.


பிரித்தானியாவின் ஆளுகையின் கீழிருந்த இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்கள் 1947-ல் விடுதலை பெற்ற போது இந்தியா & பாக்கிஸ்தான் என்று இருவேறு பிராந்தியங்களாகப் பிரிந்ததால் சுதந்திர இந்தியப் பிராந்தியத்தின் அரசியலமைப்புச் சாசனத்தை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


இந்திய நாட்டிற்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று இந்திய அரசமைப்பு நிர்ணய சபையால் தொடங்கப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ.இரா.அம்பேத்கர் தலைமையில் ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது. கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.


இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபையிடம் ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று, 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தால் கையொப்பம் இடப்பட்டது.


இந்த அரசமைப்புச் சட்டமே 'இந்தியா' என்ற நாட்டை 'சமயச்சார்பற்ற இந்திய ஒன்றியம்' என்று வரையறுத்தது. பிரித்தானிய ஆளுகையின்கீழ் இருந்து விடுதலையான 500-க்கும் மேற்பட்ட தனி மன்னராட்சி நாடுகளை அதன்பின் ஒன்றிணைக்கப்பட்டு  தற்போதைய இந்திய ஒன்றியம் உருவானது. 


மேலும், இச்சட்டமானது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கி, இதுவரை உலக நாடுகளில் எழுதப்பட்டதிலேயே மிக நீண்ட அரசமைப்புச் சட்ட்டமாக உள்ளது.


இன்று இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழி பெயர்ப்பினையும் கொண்டுள்ளது.


உரிமைகளை உணர்வோம்!

கடமைதனைத் தவறோம்!!


நன்றி : விக்கி & கவுன்டர்வ்யூ


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2024

 

   

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

"பால் :பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:842

அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.

பொருள்: அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை;
அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்."


பழமொழி :
Learning is youth is an engraving on a rock.

இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து


இரண்டொழுக்க பண்புகள் : 

  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                      

  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.


பொன்மொழி :

உன்னால் முடியாது என பலர் என்னிடம் கூறிய வார்த்தைகளை என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது - ஜாக்கிசான்


பொது அறிவு :

1. அணிலின் அறிவியல் பெயர் என்ன ?

ரோடன்ஷியா ஸ்குயிரஸ்.

2. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு என்ன பெயர் ?

வெனம்.(Venom)


English words & meanings :

Happy - மகிழ்ச்சி

Hot -  சூடான


வேளாண்மையும் வாழ்வும் :

பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைத் தவிர்ப்பதற்கு, இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.


நவம்பர் 27

லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும். இவர்  ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர்கள், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.

 
நீதிக்கதை

முடிவு

ஒரு நாள் ஒரு சிறுத்தை பசியுடன் உணவை தேடியது. அப்போது ஒரு கருப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் ஒரு மலை அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகவும் கவனத்துடன் மலை அடிவாரத்திற்கு அருகே சென்றது.

ஆனால் எந்த மானை தாக்குவது என்று அது முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் சிறுத்தையை பார்த்த இரண்டு மான்களும் ஓட துவங்கின. பிறகு அவை இரண்டும் ஓர் இடத்தில் வலதும் இடதுமாக ஓடத் தொடங்கின.

சிறுத்தை அந்த இடத்திற்கு வந்ததும் எதை துரத்தலாம்? என்று யோசித்தது. பின்பு, "கருப்பு மானை துரத்தலாம் கருப்பு மானின் இறைச்சி தான் வெகு ருசியாக இருக்கும்" என்று கூறிக் கொண்டே கருப்பு மானை துரத்தியது.

ஆனால் அதற்குள் கருப்புமான்  வெகு தூரம் ஓடிவிட்டது. பின்பு சிறுத்தை, "இது வேகமாக ஓடக்கூடிய மான் இதை நாம் நம்மால் பிடிக்க இயலாது. எனவே, நாம் புள்ளிமானை துரத்துவோம்" என்று திரும்பி வந்து,

எதிர்பாதையில் ஓடத் தொடங்கியது. ஆனால்

புள்ளிமானோ ஏற்கனவே வெகு தூரம் ஓடிவிட்டது.

சிறுத்தை, முடிவெடுப்பதில் சிறிது  தயக்கம் காட்டியதால் எந்த மானையும் பிடிக்க இயலவில்லை.

நீதி : எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டாமல்,  விரைந்து முடிவெடுத்து,எடுத்த முடிவில் நிலையாக இருக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்

27.11.2024

* நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு. இன்று 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்.

* சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய உலகின் முதல் இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4-ம் தேதி  விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ.

* மியான்மரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.

* ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கஜகஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

* ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அல்-நாசர் அணி வெற்றி.


Today's Headlines

* Rajiv Gandhi Government General Hospital, Chennai has been awarded the ‘Eat Right Campus’ certificate by the Food Safety Department for providing quality food to patients.

* Deep depression likely to turn into a cyclone. Very heavy rain warning for 10 districts today: Meteorological Department information.

* ISRO will launch the world’s first co-satellites developed by the European Space Agency to study the Sun on December 4 using PSLV rocket.

* Mild earthquake in Myanmar: 4.4 on the Richter scale.

* Asian Cup basketball qualifiers: India defeats Kazakhstan.

* Al-Nassr team wins today’s match of the Asian Champions League football tournament.



Prepared by

Covai women ICT_போதிமரம்


Literary Club Block Level Competition - Instructions for Entry in the EMIS Portal - Reg - DSE Joint Director Letter



பள்ளிக் கல்வி - 2024-25 - இலக்கிய மன்றம் - வட்டார அளவிலான இலக்கிய மன்றப் போட்டியை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் EMIS போர்ட்டலில் நுழைவதற்கான வழிமுறைகள் - தொடர்பாக - பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநரின் கடிதம்


School Education - 2024-25 - Literary Club Block Level Competition - Instructions for Completion of the Literacy Competition and entry in the EMIS Portal - Reg - School Education Department Joint Director Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 27.11.2024

 

கனமழை காரணமாக 27-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 27-11-2024 due to heavy rain) விவரம்...


Leave Update: ..


கனமழை 


 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்  - பள்ளிகளுக்கு மட்டும் இன்று (;27.11.2024 ) விடுமுறை



அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 27) விடுமுறை


கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.11.2024) விடுமுறை அறிவிப்பு





ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 27) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு




திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 27) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு






*கனமழை விடுமுறை :*


🌧️ கனமழை காரணமாக இன்று (27.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

*அரியலூர்* (பள்ளிகள்) 
*சென்னை* (பள்ளிகள்) 
*செங்கல்பட்டு* (பள்ளிகள்) 
*காஞ்சிபுரம்* (பள்ளிகள்) 
*புதுக்கோட்டை* (பள்ளிகள்) 
*சிவகங்கை* (பள்ளிகள்) 
*கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*தஞ்சாவூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*திருவள்ளூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*திருவாரூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*மயிலாடுதுறை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*நாகப்பட்டினம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*திருச்சிராப்பள்ளி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*இராமநாதபுரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 






பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

1. திருவாரூர்

2. நாகப்பட்டினம் 

3. மயிலாடுதுறை

4. கடலூர்

5. புதுச்சேரி

6. காரைக்கால் 

7. தஞ்சாவூர் 

8. திருவள்ளூர் 

9. விழுப்புரம் 

10. திருச்சி





 

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அறிவிப்பு

 1. சென்னை

 2. செங்கல்பட்டு

3. காஞ்சிபுரம்

4. புதுக்கோட்டை

5. சிவகங்கை

 




Standard 3 - Learning Outcomes / Competency Based Test - November 2024 - Answers

 

  

வகுப்பு 3 - கற்றல் விளைவுகள் மதிப்பீட்டுத் தேர்வு LO CBT - நவம்பர் 2024 - விடைகள்


Class 3 - Learning Outcomes / Competency Based Test - November 2024 - Answers




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Kalai Thiruvizha - Dates & Venues of State Level Competitions

 


 கலைத் திருவிழா - மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் நாள்கள் & இடங்கள் 👇🏻👇🏻👇🏻


Kalai Thiruvizha - Dates & Venues of State Level Competitions


 1 - 5 std ---- Coimbatore 

Date : 06.12.2024


6 - 8 Std ---- Tiruppur 

Date : 05.12.2024 or 06.12.2024


9,10 std ---- Erode

Date : 05.12.2024 or 06.12.2024


11,12 std ---- Namakkal

11 std Govt schools - 05.12.2024

Aided Schools - 06.12.2024



மாற்றியமைக்கப்பட்ட மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளின் தேதிகள் மற்றும் இடங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள் : 20-11-2024...


Revised Dates and Venues of State Level Kalai Thiruvizha Competitions - State Project Director's letter dated : 20-11-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



School Education - Retirement of teachers - Fixation of pay for re-appointment extension period - Clarification - Treasury Letter


 பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் ஓய்வு - மறுநியமன காலத்திற்கான ஊதியம் நிர்ணயித்தல் - தெளிவுரை - கருவூல அலுவலர் கடிதம் ந.க. எண். 898256/2024/ஜி1, நாள்‌:04.10.2024


School Education - Retirement of teachers - Fixation of pay for re-appointment extension period - Clarification - Treasury Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்துறை

அனுப்புநர்‌:

திருமதி ந.நாகராணி., பி.எஸ்‌.சி., 

கருவூல அலுவலர்‌ (மு.கூ.பொ.,)

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,

மாவட்டக்‌ கருவூலம்‌,


பெறுநர் 

ஆணையர், 

கருவூலம் மற்றும் கணக்கு துறை,

நிதித்துறை, ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவமனை வளாகம், 

அண்ணா சாலை, 

நந்தனம், 

சென்னை - 600035


ந.க. எண். 898256/2024/ஜி1, நாள்‌:04.10.2024.


பொருள்‌: பள்ளிக்கல்வி - மறு நியமனம்‌ - அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசு பணியாளர்கள்‌. - கல்வியாண்டின்‌ இடையில்‌ வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும்‌ நாள்‌ - மறுநியமன காலத்திற்குகான ஊதியம்‌ நிர்ணயித்தல்‌ - தக்க தெளிவுரை வேண்டி பணிந்தனுப்புதல்‌ - சார்பாக.


பார்வை: 1. அரசாணை என்‌. 16 (நிதித்துறை) நாள்‌: 28-01-2020


2. அரசாணை (நிலை) என்‌. 115 பள்ளிக்‌ கல்வித்‌(பக5(2)) துறை, நாள்‌: 28.06.2022.


3. Govt. Lr.No. 22851/Fin(Pension)/2018. Dt: 13.08.2018.


4. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌, பதிவு எண்‌. 83/2022, சேலம்‌ மாவட்டம்‌, விண்ணப்பம்‌ நாள்‌: 30.09.2024.


*****


பார்வை 4-ல்‌ காணும்‌ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌ விண்ணப்ப கடிதத்தில்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ கல்வியாண்டின்‌ இடையில்‌, வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும்‌ ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில்‌ கடைசி வேலை நாள்‌ வரை (Upto the end of Academic Session) மறுநியமனம்‌ வழங்கப்படுகிறது. அப்பணிக்காலத்திற்கான ஊதியம்‌ பங்களிப்பு ஒய்வூதியத்தில்‌ உள்ளோருக்கு பார்வை 2-ல்‌ குறிப்பிட்டுள்ள ஒய்வு பெறுவதற்கு முன்னர்‌ கடைசியாக பெற்ற ஊதியமே மறுநியமன காலத்திற்கான ஊதியமாக வழங்க வேண்டும்‌ என விண்ணப்பித்துள்ளனர்‌.


பார்வை 1-ல்‌ குறிப்பிட்டுள்ள அரசாணையின்படி பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தில்‌ ஒய்வுபெற்றவர்கள்‌ கடைசியாக பெற்ற ஊதியத்தில்‌ (அரசின்‌ பங்களிப்பு 10% -*- பணியாளர்‌ பங்களிப்பு 10%) பிடித்தம்‌ செய்து மீதமுள்ள தொகையை மறுநியமன கால ஊதியமாக நிர்ணயம்‌ செய்ய ஆணை வெளியிட்டுள்ளது. இவ்வலுவலகத்தில்‌ முன்னிலைபடுத்தப்பட்ட மறுநியமன ஊதியத்திற்கான பட்டியல்‌ அரசாணை 16 (நிதி) நாள்‌: 28.01.2020-ஐ சுட்டிகாட்டி தணிக்கை மேற்கொண்டு பட்டியல்‌ திருப்பப்பட்டது என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌..


இந்நேர்வில்‌ மறுநியமன கால ஊதியம்‌ அனுமதித்தல்‌ தொடர்பாக தக்க தெளிவுரை வழங்கிட வேண்டி இக்கடிதம்‌ பணிவுடன்‌ சமர்ப்பிக்கப்படுகிறது. 


கருவூல அலுவலர்‌,

மாவட்ட கருவூலம்‌, சேலம்‌.

நகல்‌:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌, சேலம்‌ மாவட்டம்‌ அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. (திரு T.A. கமலக்கண்ணன், மாநிலச் செயலாளர், அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி, எடப்பாடி, சேலம்‌ - 637105)


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...