கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர் விடுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவர் விடுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விடுதி பணிகள் - விடுதியில் ஒரு நபருக்கு மாதத்திற்கான நுகர்வு செய்யக்கூடிய மளிகை பொருட்களின் அளவு மற்றும் விலை விவரம் கணக்கீட்டு வழங்குதல் - நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் - தொடர்பாக - ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் கடிதம், நாள்: 19-03-2024...



 விடுதி பணிகள் - விடுதியில் ஒரு நபருக்கு மாதத்திற்கான நுகர்வு செய்யக்கூடிய மளிகை பொருட்களின் அளவு மற்றும் விலை விவரம் கணக்கீட்டு வழங்குதல் - நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் - தொடர்பாக - ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் கடிதம், நாள்: 19-03-2024...



Hostel Works - Calculation of quantity and price details of per person per month consumption of grocery items in hostels - Instructions for implementation - Regarding - Letter from Director of Adi Dravidar Welfare Department, dated: 19-03-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


50 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள 512 ஆதிதிராவிடர் நல பள்ளி / கல்லூரி விடுதிகள் - 2021 – 2022-ஆம் ஆண்டு ரூ.46.08 இலட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான் (மிக்ஸி) வழங்குதல் - அரசாணை (நிலை) எண்: 81, நாள்: 28-10-2021 வெளியீடு (512 AdhiDravidar Welfare School / College Hostels with less than 50 students - 2021 - Provision of Electric Grinder (Mixie) at an estimated cost of Rs. 46.08 lakhs for the year 2022 - G.O.(Ms)No: 81, Dated: 28-10-2021 - Issued)...

 


50 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள 512 ஆதிதிராவிடர் நல பள்ளி / கல்லூரி விடுதிகள் - 2021 – 2022-ஆம் ஆண்டு ரூ.46.08 இலட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான் (மிக்ஸி) வழங்குதல் - அரசாணை (நிலை) எண்: 81, நாள்: 28-10-2021 வெளியீடு (512 AdhiDravidar Welfare School / College Hostels with less than 50 students - 2021 - Provision of Electric Grinder (Mixer) at an estimated cost of Rs. 46.08 lakhs for the year 2022 - G.O.(Ms)No: 81, Dated: 28-10-2021 - Issued)...


>>> அரசாணை (நிலை) எண்: 81, நாள்: 28-10-2021...


10 ஆண்டுகளுக்கு மேலான 80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - அரசாணை வெளியீடு...

 


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற விதி 110ன் கீழான அறிவிப்பு - 10 ஆண்டுகளுக்கு மேலான 80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ.14,73,80,605/-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது...

>>> அரசாணை எண்: 24, நாள்: 26-02-2021 மற்றும் ஆதி திராவிடர் நல விடுதிகள் விவரம்...


அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு - சிசிடிவி கண்காணிப்பு...


 அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் (Biometric) முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின்கீழ் 1,354 அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதிகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகின்றன.


இந்த விடுதிகளில் சேர பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதன்படி கடந்த கல்வியாண்டில் (2019-20) விடுதிகளில் 85,914 மாணவ, மாணவிகள் தங்கினர்.


இதற்கிடையே மாணவர்களின் நலன் கருதி விடுதிகளில் கட்டமைப்பு வசதிகளின் தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் விடுதிகளில் நிதி செலவினத்தை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் நோக்கில் பயோமெட்ரிக் வருகைப்பதிவை அமல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.


இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:


அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதியை பெரும்பாலான விடுதிகள்முறையாகப் பயன்படுத்துவதில்லை. உணவுக்கான செலவினங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதையடுத்து முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் கைவிரல் ரேகைப் பதிவுடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த பயோமெட்ரிக் முறை என்பதால் அவை இணையவழியில் மாவட்ட அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். பயோமெட்ரிக் கருவியில் பதிவாகும் தகவல்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும் வந்துவிடும். இதனால் வருகைப்பதிவு, திட்டசெலவின அறிக்கை, நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாவட்டஅலுவலகங்கள் மூலம் கண்காணிக்க முடியும்.


இதுதவிர வருகை அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்படும். இதன்மூலம் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான மாணவர்களுக்கு முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும். மேலும், வெளிப்புற மாணவர்கள் விடுதிகளில் தங்குவதும் தவிர்க்கப்படும்.


வருகை பதிவைக் கொண்டு தினசரி செலவினங்கள் கணக்கிடப்பட்டு விடுதிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். இதனால் கூடுதல் மற்றும்தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படுவதுடன், முறைகேடுகளுக்கான வாய்ப்புகளும் குறையும்.


அதேபோல், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...