கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-10-2021 - வெள்ளி (School Morning Prayer Activities)...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கல்லாமை

குறள்:409

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் 
கற்றா ரனைத்திலர் பாடு.

பொருள்: கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டை போக்கிவிடும்.

பழமொழி :

Brevity is the soul of wit


சுருங்கச் சொல்லி விளங்க வை

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

என்னை விரும்புகிறவர் இவ்வுல உயிர்களையும் விரும்புபவர்களாக இருப்பர்.தானம் தான் பக்தியின் வழி என்றிருப்பார்... சீரடி சாய்பாபா

பொது அறிவு :

1.புது தில்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? 

1991.

2.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது? 

ஏப்ரல் 1,2010.

English words & meanings :

Storey - level of a building. கட்டிடத்தின் அடுக்கு. 

Story - tale. கதை.

ஆரோக்ய வாழ்வு :

நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

1)செரிமானக்கோளாறு

சாப்பிடும்போது நீங்கள் இருக்கும் நிலை உங்கள் செரிமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

2)அதிகமாக சாப்பிட தூண்டுதல்

மேலே கூறியதன் தொடர்ச்சியாக நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிகம் சாப்பிட நேரிடும். அதனால்தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. இது நிறைவான உணர்வை தருவதோடு கலோரிகளையும் எளிதாக எரிக்கும்.

3)பசி எடுத்தல்

நீங்கள் பசியாக உணருகிறீர்களா இல்லையா என்பதை எளிதில் கண்டறியும் வழி உங்கள் வயிற்றில் எவ்வளவு உணவு உள்ளது என்பதை கண்டறிவதுதான். மருத்துவரீதியாக நின்று கொண்டு சாப்பிடுவது உணவு செரிப்பதை 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் உங்களுக்கு பசி எடுக்க தொடங்கிவிடும்.

4)வீக்கம்

விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கணினி யுகம் :

Ctrl + 1 - Single -space lines. 

Ctrl + 2 - Double -space lines

அக்டோபர் 4

திருப்பூர் குமரன் அவர்களின்  பிறந்தநாள் 




திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran, அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சனவரி 11 இல் உயிர் துறந்தார்.இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

உலக விலங்கு நாள்




உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக விண்வெளி வாரம்


உலக விண்வெளி வாரம்(World Space Week (WSW) அக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாளில் முடிய,இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது.



நீதிக்கதை

 அன்பின் மதிப்பு


அக்பர் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்தப்படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். 

அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே சென்றான். அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அக்பர் அறிந்து கொண்டார்.

அவன் மன்னனிடம், அரசே உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான். 

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப்போயிருந்தது. அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அந்த விவசாயிக்கு பரிசாகக் கொடுத்து அனுப்பினான். 

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், அரசே, கெட்டுப்போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார். மன்னனோ, அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். 

அவனது அன்பு உண்மையானது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை கூட அவனது அன்புக்கு ஈடாகாது என்று கூறினான். 

நீதி :
நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

இன்றைய செய்திகள்

04.10.21

 ✒️வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✒️எம்.எட். படிப்பு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு.

✒️சென்னையில் மீண்டும் 100 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை.

✒️ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில்  மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


✒️இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக ஐ.நா. பொதுச்சபை தலைவர் அப்துலா சாஹீத் தெரிவித்துள்ளார்.

✒️உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

✒️உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

Today's Headlines

📃The Chennai Meteorological Department has forecast heavy rains in 11 districts due to the upper air circulation of the atmosphere. 

 📃M.Ed.  Course: Online application is available from today onwards - Notice by the Directorate of College Education.

 📃Petrol price in Chennai has crossed 100 rupees again.

 📃A moderate earthquake was felt in the Singhbhum district of Jharkhand.  The National Epicenter for Earthquake recorded, below 4.1 on the Richter scale.

 📃  General Assembly Speaker Abdullah Saheed said he was vaccinated with Indian make Covishield. 

📃India tops the World Sniper Championship Series

 📃India won silver at World Women's Chess Championship
Prepared by
Covai women ICT_போதிமரம்

இன்றைய (04-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 04, 2021



உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபிட்சமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடகிழக்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  இளம் மஞ்சள்


அஸ்வினி :  அறிமுகம் கிடைக்கும். 


பரணி :  சிக்கல்கள் குறையும்.


கிருத்திகை :  ஆசைகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 04, 2021



புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சிலரது சந்திப்பின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவுகளும் உண்டாகும். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு ஏற்படும். அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் நீலம்


கிருத்திகை :  மாற்றங்கள் உருவாகும். 


ரோகிணி :  பொறுப்புகள் மேம்படும். 


மிருகசீரிஷம் :  ஆதரவுகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 04, 2021



புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பொன், பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  7


அதிர்ஷ்ட நிறம்  :  காவி நிறம்


மிருகசீரிஷம் :  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


திருவாதிரை :  இன்னல்கள் குறையும்.


புனர்பூசம் :  வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 04, 2021



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். சுயதொழிலில் லாபங்கள் மேம்படும். தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஒத்துழைப்புகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட எண்  :  8


அதிர்ஷ்ட நிறம்  :  சந்தன நிறம்


புனர்பூசம் :  முயற்சிகள் அதிகரிக்கும். 


பூசம் :  ஆரோக்கியம் மேம்படும்.


ஆயில்யம் :  முன்னேற்றமான நாள்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 04, 2021



வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். குழப்பமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  கருஞ்சிவப்பு 


மகம் :  ஒத்துழைப்பு மேம்படும்.


பூரம் :  மாற்றங்கள் ஏற்படும்.


உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 04, 2021



உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சுதந்திரமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  நீலநிறம்


உத்திரம் :  ஆதரவுகள் கிடைக்கும்.


அஸ்தம் :  திறமைகள் வெளிப்படும்.


சித்திரை :  ஈர்ப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 04, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள்  சாதகமாக அமையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களின் நட்பும் மாற்றத்தை ஏற்படுத்தும். புரிதல் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  6


அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை நிறம்


சித்திரை :  சாதகமான நாள். 


சுவாதி :  உதவிகள் கிடைக்கும். 


விசாகம் :  பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 04, 2021



கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். சந்திப்புகள் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  2


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் மஞ்சள்


விசாகம் :  முன்னேற்றமான நாள். 


அனுஷம் :  சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை :  மதிப்புகள் மேம்படும்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 04, 2021



நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  பொன் நிறம்


மூலம் :  ஒற்றுமை அதிகரிக்கும்.


பூராடம் :  பொருட்சேர்க்கை உண்டாகும்.


உத்திராடம் :  எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 04, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  7


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் பச்சை


உத்திராடம் :  நிதானம் வேண்டும்.


திருவோணம் :  தலையீட்டை தவிர்க்கவும். 


அவிட்டம் :  ஞாபக மறதி ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 04, 2021



எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவுகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். புத்துணர்ச்சியான நாள். 



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  6


அதிர்ஷ்ட நிறம்  :  அடர் நீலம்



அவிட்டம் :  சுறுசுறுப்பான நாள். 


சதயம் :  முயற்சிகள் ஈடேறும்.


பூரட்டாதி :  அனுகூலமான நாள்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 04, 2021



பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். இழுபறிகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  இளம் மஞ்சள்



பூரட்டாதி :  பிரச்சனைகள் குறையும்.


உத்திரட்டாதி :  லாபம் மேம்படும்.


ரேவதி :  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------


பேரிடர் மேலாண்மை - மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்(Disaster Management - Precautions to be taken during monsoons)...

 பேரிடர் மேலாண்மை - மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்(Disaster Management - Precautions to be taken during monsoons)...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

இன்றைய (03-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 03, 2021



கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆதாயம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட எண்  :  4


அதிர்ஷ்ட நிறம்  :  பொன் நிறம்



அஸ்வினி :  லாபம் உண்டாகும்.


பரணி :  சிந்தனைகள் அதிகரிக்கும். 


கிருத்திகை :  ஆதரவான நாள்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 03, 2021



எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் விரயங்கள் ஏற்பட்டாலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சுகங்கள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  6


அதிர்ஷ்ட நிறம்  :  இளநீலம்



கிருத்திகை :  உற்சாகமான நாள். 


ரோகிணி :  பொறுமையை கையாளவும்.


மிருகசீரிஷம் :  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 03, 2021



உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான சூழல் ஏற்படும்.  சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். வழக்குகள் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  கருஞ்சிவப்பு



மிருகசீரிஷம் :  சாதகமான நாள். 


திருவாதிரை :  வரவுகள் மேம்படும்.


புனர்பூசம் :  வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 03, 2021



தனவரவுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  அடர் மஞ்சள்



புனர்பூசம் :  இலக்குகள் பிறக்கும்.


பூசம் :  அனுகூலமான நாள். 


ஆயில்யம் :  எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 03, 2021



இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட்டால் லாபங்கள் மேம்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். காலதாமதமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தெற்கு 


அதிர்ஷ்ட எண்  :  5


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் சிவப்பு



மகம் :  பிரச்சனைகள் குறையும். 


பூரம் :  மாற்றமான நாள். 


உத்திரம் :  ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 03, 2021



பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். முதலீடுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடமேற்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  வெண் மஞ்சள் 



உத்திரம் : முன்னேற்றமான நாள். 


அஸ்தம் :  தெளிவுகள் பிறக்கும். 


சித்திரை :  நெருக்கடியான நாள்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 03, 2021



பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். புத்துணர்ச்சியான நாள். 



அதிர்ஷ்ட திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு நிறம்



சித்திரை :  தடைகள் நீங்கும். 


சுவாதி :  உதவிகள் சாதகமாகும்.


விசாகம் :  அபிவிருத்தியான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 03, 2021



வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த துணிகளை வாங்கி மகிழ்வீர்கள். காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சுறுசுறுப்பான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட எண்  :  3 


அதிர்ஷ்ட நிறம்  :  ஊதா நிறம்



விசாகம் :  தடைகளை அறிவீர்கள்.


அனுஷம் :  முன்னேற்றமான நாள். 


கேட்டை : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 03, 2021



தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உருவாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தெற்கு 


அதிர்ஷ்ட எண்  :  5


அதிர்ஷ்ட நிறம்  :  சில்வர் நிறம்



மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.


பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 03, 2021



உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த துறைகளில் இழுபறியான சூழல் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  8


அதிர்ஷ்ட நிறம்  :  சந்தன நிறம்



உத்திராடம் : பொறுமை வேண்டும்.


திருவோணம் :  குழப்பங்கள் உண்டாகும். 


அவிட்டம் :  அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 03, 2021



மருத்துவ பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் உருவாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  7


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் நீலம்



அவிட்டம் :  லாபங்கள் உண்டாகும்.


சதயம் :  தடைகள் குறையும். 


பூரட்டாதி :  சாதகமான நாள். 

---------------------------------------




மீனம்

அக்டோபர் 03, 2021



இழுபறியாக இருந்துவந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சஞ்சலமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  6


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் பச்சை



பூரட்டாதி :  தீர்வு கிடைக்கும். 


உத்திரட்டாதி :  அதிர்ஷ்டகரமான நாள்.


ரேவதி : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------


செயல்முறை ஆணைகளில் பயன்படுத்தப்பட வேண்டிய சொற்கள் - தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்...

 



>>> செயல்முறை ஆணைகளில் பயன்படுத்தப்பட வேண்டிய சொற்கள் - தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்...


All India Radio - Audio Lesson Schedule for Classes X and XII for the month of October-2021...



 >>> Click here to Download All India Radio - Audio Lesson Schedule for Classes X and XII for the month of October-2021...

சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை (Anti-corruption Department raids Chidambaram District Education Office)...



 சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை (Anti-corruption Department raids Chidambaram District Education Office)...


சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ரெயிலடி ) வளாகத்தில் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் இ பி எஃப், பி எஃப் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் வாங்கபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகம் தலைமையில் 5 லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உதவியாளர் சந்திரசேகர் மற்றும் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோரிடம் கணக்கில் வராத 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை கூறியுள்ளனர்.

"மக்கள் பள்ளி திட்டம் (Makkal Palli Scheme)" முதல் கட்டமாக விழுப்புரம் & காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி & நீலகிரி, கடலூர் & தஞ்சாவூர், திருச்சி & திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் 18-10-2021 முதல் தொடக்கம் - மாநிலத் திட்ட இயக்குநர்(SPD) அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு (CEO) கடிதம்...



 "மக்கள் பள்ளி திட்டம் (Makkal Palli Scheme)" முதல் கட்டமாக விழுப்புரம் & காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி & நீலகிரி, கடலூர் & தஞ்சாவூர்,  திருச்சி & திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் 18-10-2021 முதல் தொடக்கம் - மாநிலத் திட்ட இயக்குநர்(SPD) அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு (CEO) கடிதம்...


>>> மாநிலத் திட்ட இயக்குநர்(SPD) கடிதம்...

இன்றைய (02-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 02, 2021



குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான விஷயத்தில் நிதானம் வேண்டும். ஏற்ற, இறக்கமான நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பரணி : தீர்வு கிடைக்கும்.


கிருத்திகை : நிதானம் வேண்டும்.




ரிஷபம்

அக்டோபர் 02, 2021



தாய் பற்றிய கவலைகள் மனதில் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் கீர்த்தி உண்டாகும். பூமி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபங்கள் மேம்படும். காது சம்பந்தமான இன்னல்கள் குறையும். மனதிற்கு விரும்பிய புதிய அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒத்துழைப்புகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.


ரோகிணி :  லாபங்கள் மேம்படும்.


மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.




---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 02, 2021



குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்ப பெரியோர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உருவாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அறிமுகங்களால் நன்மைகள் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் :  நம்பிக்கை மேம்படும்.


திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


புனர்பூசம் : மேன்மையான நாள்.




---------------------------------------





கடகம்

அக்டோபர் 02, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். கற்பனைத் திறன் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.


பூசம் : அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.




---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 02, 2021



பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் முதலீடுகள் மேம்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அலைச்சல்கள் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : முதலீடுகள் மேம்படும்.


பூரம் : வாய்ப்புகள் அமையும்.


உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.




---------------------------------------




கன்னி

அக்டோபர் 02, 2021



நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப சில மாற்றங்களை செய்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டுகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். தெளிவுகள் பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



உத்திரம் : தீர்வு கிடைக்கும்.


அஸ்தம் :  நெருக்கடிகள் குறையும்.


சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.




---------------------------------------




துலாம்

அக்டோபர் 02, 2021



நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். தந்தையின் ஆரோக்கியம் நிமிர்த்தமான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் படிப்படியாக குறையும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். கனவுகள் பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



சித்திரை : நிதானம் வேண்டும்.


சுவாதி : மந்தத்தன்மை குறையும்.


விசாகம் : புதுமையான நாள்.




---------------------------------------





விருச்சிகம்

அக்டோபர் 02, 2021



திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் பெரியோர்களின் கருத்துக்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், மாற்றமான சூழ்நிலைகளும் உருவாகும். எண்ணியவை ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


அனுஷம் : லாபங்கள் மேம்படும்.


கேட்டை : மாற்றமான நாள்.




---------------------------------------




தனுசு

அக்டோபர் 02, 2021



முக்கியமான பணிகளை மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் அவசர முடிவுகளை விட சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் பகிர்வதை குறைப்பது நல்லது. காரியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



மூலம் : பொறுமை வேண்டும்.


பூராடம் : சிந்தித்து செயல்படவும்.


உத்திராடம் : கருத்துக்கள் பகிர்வதை குறைக்கவும்.



---------------------------------------




மகரம்

அக்டோபர் 02, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறைந்து மேன்மையான சூழ்நிலைகள் உருவாகும். உற்சாகம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் : மேன்மை உண்டாகும்.




---------------------------------------




கும்பம்

அக்டோபர் 02, 2021



கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் சில சூட்சமங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத மாற்றங்கள் பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 



அவிட்டம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


சதயம் :  சூட்சமங்களை அறிவீர்கள்.


பூரட்டாதி : நிதானம் வேண்டும்.




---------------------------------------




மீனம்

அக்டோபர் 02, 2021



சுறுசுறுப்புடன் செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். குழந்தைகள் குடும்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் சாமர்த்தியமாக செயல்பட்டு லாபத்தை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மதிப்புகள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 



பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : மாற்றமான நாள்.


ரேவதி : ஆதரவு கிடைக்கும். 




---------------------------------------


அக்டோபர் மாத பள்ளி நாட்குறிப்பு(October Diary) 2021...

 


அக்டோபர் மாத பள்ளி நாட்குறிப்பு(October Diary) 2021...


R.L. நாட்கள்:


06.10.2021, புதன்கிழமை

-மஹாளய அமாவாசை


அரசு விடுமுறை நாட்கள்:


👉🏼2.10.2021  சனிக்கிழமை -காந்தி ஜெயந்தி


👉🏼14.10.2021 வியாழன் -ஆயுத பூஜை


👉🏼15.10.2021 வெள்ளி-விஜயதசமி


 👉🏼19.10.2021- செவ்வாய் - மிலாடி நபி



ஊரக உள்ளாட்சி தேர்தல்

( 9 மாவட்டங்கள்) 


👉🏼06.10.2021 - முதற்கட்ட வாக்குப்பதிவு


👉🏼09.10.2021 - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு


👉🏼12.10.2021 வாக்கு எண்ணிக்கை



அலுவலக குறைதீர் நாள்


முதல் மற்றும இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால் BEO அலுவலகத்தை பொறுத்து தேதி மாறுபடும்..


 


FESTIVAL ADVANCE


*FESTIVAL ADVANCE - தீபாவளிப் பண்டிகை முன்பணம் விண்ணப்பிக்கலாம்


>>> CLICK HERE TO DOWNLOAD - FESTIVAL ADVANCE APPLICATION-PDF...



>>> October Diary - PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்