கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET 2025 Paper 2 (Social Science) Results

 

 

 

  TAMILNADU TEACHERS ELIGIBILITY TEST – 03/2025


ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 2 - சமூக அறிவியல் - தேர்வு முடிவுகள் வெளியீடு


TN TET PAPER 2 RESULTS 2025


TET PAPER – II SOCIAL SCIENCE

TAMIL MEDIUM 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - Click Here to Download 



TNTET 2025 Paper II - சமூக அறிவியல்


 TET paper 2 -

 Social Science

தேர்வு எழுதியோர் =142861

தேர்ச்சி பெற்றோர் =32554 ( 22.8 %)

தேர்ச்சி பெறாதோர் =110307 ( 77.2 % )



TET Paper II – Social Science

Number of candidates appeared: 142,861

Number of candidates passed: 32,554 (22.8%)

Number of candidates not passed: 110,307 (77.2%)


TET 2025 Paper 2 (Maths & Science) Results

 

 

  TAMILNADU TEACHERS ELIGIBILITY TEST – 03/2025


ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 2 - கணக்கு & அறிவியல் - தேர்வு முடிவுகள் வெளியீடு


TN TET PAPER 2 RESULTS 2025


TET PAPER – II MATHEMATICS AND SCIENCE

TAMIL MEDIUM 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - Click Here to Download 



TNTET 2025 Paper II - கணக்கு & அறிவியல்


TET paper II -

கணக்கு மற்றும் அறிவியல்

தேர்வு எழுதியோர் =186878

தேர்ச்சி பெற்றோர் =71608 ( 38.3 %)

தேர்ச்சி பெறாதோர் =115270 ( 61.7 % )


TET Paper II – Mathematics & Science

Number of candidates appeared: 186,878

Number of candidates passed: 71,608 (38.3%)

Number of candidates not passed: 115,270 (61.7%)


TET 2025 Paper 1 Results

 

  TAMILNADU TEACHERS ELIGIBILITY TEST – 03/2025


ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 1 - தேர்வு முடிவுகள் வெளியீடு


TN TET PAPER 1 RESULT 2025


TET PAPER – I

TAMIL MEDIUM 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - Click Here to Download 



TET paper 1

தேர்வு எழுதியோர் = 91072

தேர்ச்சி பெற்றோர் = 44770 (49.16%)

தேர்ச்சி பெறாதோர் = 46032 (50.84%)


TET Paper I

Number of candidates appeared: 91,072

Number of candidates passed: 44,770 (49.16%)

Number of candidates not passed: 46,032 (50.54%)

Note: The total of passed and not passed candidates comes to 90,802. There is a difference of 270

candidates, which may be due to absentees, withheld results, or data discrepancy.


Pledge to eradicate untouchability

 

 

இன்று (30-01-2026) காலை 11 மணிக்கு மேற்கொள்ள வேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Pledge to be taken today (30-01-2026) at 11 am - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 30.01.2026

கிழமை:- வெள்ளி


 

திருக்குறள்: 


குறள் 373:

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

விளக்க உரை:

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.


பழமொழி :
Self control is the strongest power.

தன்னடக்கம் தான் மிகப் பெரிய சக்தி.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.


பொன்மொழி :

சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...

-------மார்க் ட்வைன்


பொது அறிவு :

1.பணத்திற்கு ரூப்யா' (Rupya) என்று பெயர் சூட்டியவர் யார்?

ஷெர்ஷா சூரி- Sher Shah Suri

02. இந்தியாவின் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் யார்?

திரு.ச. பொ. ராதாகிருஷ்ணன்
Thiru.C. P. Radhakrishnan


English words :

overwrought-very worried

inception-beginning of something



தமிழ் இலக்கணம்:

ஒருமை பன்மை குறித்து இன்று பார்ப்போம்
பேருந்து இதை பன்மையாக மாற்றும் போது பேருந்துகள் என்றும்  புறா இதை பன்மையாக மாற்றும் போது புறாக்கள் என்றும் எழுதுகிறோம். ஏன் புறா புறாக்களாக வல்லினம் மிகுந்து வருகிறது? ஒரு எழுத்து நெடிலில்  முடியும் போது அதை பன்மைக்கு மாற்றும் போது கள் விகுதி முன்னால் வல்லினம் மிகுந்து வரும்.
எ.கா –விழா –விழாக்கள்
பூ –பூக்கள்
கனா –கனாக்கள்
ஆ –ஆக்கள்



ஜனவரி 30

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள்

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை"  என்று அழைக்கப்படுகிறார்  .   சத்தியாக்கிரகம்  என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.


நீதிக்கதை

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

ஒரு நாள் ஒரு ஆந்தை அங்குள்ள ஒரு மரத்தின் மரப்பொந்தில் தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் சத்தத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆந்தை வெட்டுக்கிளியிடம் கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி கேட்டது. வெட்டுக்கிளி ஆந்தையைப் பார்த்து நீ ஒரு குருட்டு ஆந்தை. பகலில் வெளியே வராமல் இரவில் எல்லோரும் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய் நீ என்ன யோக்கியவானா என்று திட்டியது.

ஆந்தை தன்னுடையத் தந்திரத்தினால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று நினைத்து உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. அது இன்னும் தேவகானம் போல் ஒலிப்பதற்கு என்னிடம் ஒரு அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும், உன் குரலும் அமிர்தமாய் மாறிவிடும். மேலே வந்தால் உனக்கு நான் தருகிறேன் என்றது. ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் பக்கத்தில் சென்றது. வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.

நீதி :

பிறருக்கு தொந்தரவு செய்தல் கூடாது.



இன்றைய செய்திகள்

30.01.2026

⭐சென்னையில் ரூ.822.70 கோடி செலவில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம்-முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

⭐SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.

⭐மோதலுக்கு அமெரிக்கா-ஈரான் தயாராகி வருகின்றன: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரைபகினா முன்னேற்றம்.



Today's Headlines

⭐Chief Minister laid the foundation stone of the new integrated bus stand at Broadway-Chennai for Rs. 822.70 crore.

⭐ The Supreme Court has granted 10 more days to add names to the SIR voter list.

⭐Tensions continue to rise in the Middle East as the US and Iran prepare for conflict.

SPORTS NEWS

🏀The Australian Open tennis tournament, one of the Grand Slam tournaments, is being held in Melbourne.

🏀 Australian Open tennis: Rybakina advances to the final after defeating Pegula.




வருமான வரி (IT) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief)

 

நிதியாண்டு 2025-26 வருமான வரி (Income Tax) புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief)


₹12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான விளிம்புநிலை நிவாரணம் குறித்த விளக்கம்.



வரி விகிதங்கள் (New Tax Regime - FY 2025-2026):


₹0 - ₹4,00,000: வரி இல்லை (Nil).


₹4,00,001 - ₹8,00,000: 5% வரி (₹20,000 வரை).


₹8,00,001 - ₹12,00,000: 10% வரி (₹40,000 வரை).


₹12,00,001 - ₹16,00,000: 15% வரி.


₹12,00,000 வரையிலான மொத்த வரி ₹60,000 ஆகும்.



 விளிம்புநிலை நிவாரணம் என்றால் என்ன? 


வருமானம் ₹12,00,000-ஐ விடச் சிறிதளவு அதிகரிக்கும் போது, ஈட்டிய கூடுதல் வருமானத்தை விடச் செலுத்த வேண்டிய வரி அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.



 முக்கிய விதிகள்:


நிவாரண வரம்பு: ₹12,70,580 வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தும்


அதிகபட்ச வருமானம்: ₹12,70,590 மற்றும் அதற்கு மேல் வருமானம் இருந்தால், விளிம்புநிலை நிவாரணம் கிடைக்காது.



 வருமான வரி கணக்கீடு உதாரணங்கள் (Marginal Relief-உடன்):


₹12,00,100 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹100 மட்டுமே (₹59,915 நிவாரணம்).



>>> Income Tax Calculation Statement 2025-2026 (PDF)...



IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்



கும்பகோணம் IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 


1. வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் ரூ.5000 ஆக உயர்வு.


2. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய 10 உருது மொழி ஆசிரியர் காலிப் பணியிடம் நிரப்பப்படும்.


3. சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் வக்ஃப் வாரியம் அமைக்கப்படும்.


4. உலமாக்களில் முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.50 ஆயிரம் ஆக உயர்வு


5. கல்லறைத் தோட்டம், கபரஸ்தான் தோட்டம் இல்லாத இடங்களில் அரசு நிலம் தேர்வு செய்து அமைக்கப்படும்.


முனைவர் பட்டம் பெற்றதை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்



முனைவர் பட்டம் பெற்றதை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்


PHYSICAL ACTIVITIES FOR SKILL DEVELOPMENT AMONG SCHOOL CHILDREN USING MACHINE LEARNING TECHNOLOGY என்ற தலைப்பில் ஆய்வினை நிறைவு செய்ததற்காக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட "முனைவர்" பட்ட சான்றிதழை என்னுடைய வாழ்வியலின் வழிகாட்டி - அரசியல் ஆசான் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் காண்பித்து, வாழ்த்துப் பெற்றுக்கொண்டேன்.



ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி - அமைச்சர் அவர்களின் பதிவு



ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் நலன்காக்கும் அரசாகச் செயல்படும் #திராவிடமாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையாக,



பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும்,


பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது.


இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நம் முதலமைச்சர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.


ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி!


Non Teaching Staffs to Art Master பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் விவரம்

 

01.01.2026 நிலவரப்படி Non Teaching Staffs to Art Master பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.4034/சி5/இ2/2026, நாள்: 20.01.2026


பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணி மாறுதல் வழங்குதல் 01.01.2026 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் விவரங்கள் கோருவது - சார்ந்து


பார்வை


1. அரசாணை(நிலை)எண் 283 பள்ளிக் கல்வித் (எம்1) துறை 03.11.2009.


2. அரசாணை (நிலை)எண் 76 பள்ளிக் கல்வித் (ப.க.3(1))துறை 10.04.2015.


3. தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகள் அரசாணை (நிலை) எண்.13 பள்ளிக்கல்வி (ப.சு.3(1))த் துறை, நாள்: 30.01.2020


4. அரசாணை (நிலை) எண்.20. மாற்றுத்திறனாளிகள் (DAP-32) நலத்துறை, நாள்: 20.06.2018


5. அரசாணை (நிலை) எண்.06, மாற்றுத்திறனாளிகள் (DAP-32) நலத்துறை, நாள்: 21.06.2025


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் 20% கலையாசிரியராக பணிநியமனம் வழங்க பார்வையில் காணும் அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரல்லாப் பணியாளர்களில் பதவி வாரியாக கீழ்க்காணுமாறு பணிமாறுதல் மூலம் பணிநியமனம் வழங்க பார்வை (3)இல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1. உதவியாளர்

4% சதவிதம்


2. இளநிலை உதவியாளர்

4% சதவிதம்


3. ஆய்வக உதவியாளர்

3% சதவிதம்


4. பதிவறை எழுத்தர்

2% சதவிதம்


5. அலுவலக உதவியாளர்

2% சதவிதம்


6. காவலர்

2% சதவிதம்


7. நூலகர்

3% சதவிதம்


மொத்தம்

20% சதவிதம்


மேலும், பார்வை 4 மற்றும் 5 இல் காணும் அரசாணையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 இன்படி பதவி உயர்வில் கீழ்க்காணும் விவரப்படி இட ஒதுக்கீடு (Reservation) வழங்கவும் வகைசெய்யப்பட்டுள்ளது.


DISABILITY       PERCENTAGE OF RESERVATION


a) Blindness and Low vision - 1%

b) Deaf and Hard of Hearing  - 1% 

c) Locomotor Disability including Cerebral palsy, Leprosy Cured, Dwarfism, Acid Attack victims and Muscular Dystrophy  - 1%

d) Autism, Intellectual Disability. Specific Learning Disability, mental illness.  &

e) Multiple disabilities from amongst persons under clauses (a) to (d) including deaf-blindness - 1%


மேற்குறித்த மாற்றுத்திறனாளி பிரிவினர் எவரும் கீழ்க்காணும் கல்வித் தகுதியினை பெற்றிருப்பின் அவர்கள் சார்பான விவரத்தினை படிவம் 2இல் பதிவு செய்து அதற்கான அத்தாட்சி சான்றின் நகலினை முதன்மைக்கல்வி அலுவலர் சான்றொப்பமிட்டு அனுப்பிவைக்க வேண்டும்.


பார்வை (3) காணும் அரசாணையில் கலையாசிரியருக்கான


கல்வித்தகுதிகள் கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


1. General Qualification:-


A Pass in +2 under 10+2 Pattem


2. Technical Quailfication


Degree with Drawing and Painting of a recognised University in the State approved by UGC or its equivalent or Diploma in Painting or Diploma in Drawing of Annamalai University or A Diploma in Paintings or Commercial Arts or Modelling of the Govemment College of Arts and Crafts or Government Technical Examinations (Higher Grade) in Free Hand Outline and Model Drawing or Government Diploma in Drawing or a Certificate issued by the Tamil Nadu Institute of Architecture and Sculpture, Mamallapuram; and Technical Teachers Certificate:


or


A Diploma in Fine Arts, awarded by the Director of Technical Education or a Degree in Fine Arts awarded by the Madras University or the Bharathiyar University or any other equivalent Diploma/Degree in Fine Arts issued by other Universities and boards recognised by University Grants Commission


Provided that the educational qualification 10+2 prescribed shall not apply to the candidates passed SSLC prior to 2005 and successfully undergone the Technical Teachers Certificate examination conducted by the Director of Government Examinations. Tamilnadu


பணிமாறுதல் மூலம் கலையாசிரியர் பணிநியமனம் வழங்க 01.01.2026 நிலவரப்படி மேற்காண் கல்வித்தகுதிகளை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியரல்லாத பணியாளர்களின் (உதவியாளர். இளநிலை உதவியாளர். ஆய்வக உதவியாளர் பதிவறை எழுத்தர். அலுவலக உதவியாளர், காவலர், நூலகர்) விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிகம் 1 மற்றும் படிவம் 2இல் (தமிழில் மட்டும்) பூர்த்தி செய்து 20/02/2026-க்குள் அனுப்புமாறு அனைத்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மை கல்வி அலுவலர்கள்


இணைப்பு படிவம் 1 மற்றும் 2


பெறுநர்:


(பணியாளர் தொகுதி) 20121


1. அனைத்து முதன்மை கல்வி அலுவ


2. இவ்வலுவலக அ2" பிரிவு


(நகல் கீழ்க்காணும் அலுவலர்களுக்கு பணிந்தனுப்படுகிறது)


1. மாநில திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை- 6.


2 இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை -6.


3. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை 6.


5. இயக்குநர், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-6.


4. செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6.


6.இயக்குநர்.பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்.சென்னை-6.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Member Registration – Important Update

  Sir / Madam  📢 **SMC Member Registration – Important Update** The following changes are being implemented in the SMC Member Registration ...